ஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.
சுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. "ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார்கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார்.
பெற்றோராலும், பின்னர் வளர்ப்பு பெற்றோராலும் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் தஞ்சம் புகுந்து இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட ....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments:
Post a Comment