தமிழ் அரங்கம்

Thursday, December 11, 2008

வாசகர்களும் நாங்களும்

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். மார்க்சிசமானது உழைக்கும் மக்களின் தத்துவமானது வென்றே தீரும். அதை நாம் உறுதியாக நம்புவோம். ஏனெனில் அது விஞ்ஞான பூர்வமானது. இன்றைய உலகின் ஆக முன்னேறிய தத்துவம் அதுவேயாகும்.

சி. கணேசமூர்த்தி -ஜெர்மனி

நாட்டுச் சூழலிருந்து அந்நியப்பட்டு இருந்து கொண்டு கற்பனையில் போராட்டம் நடத்துவதா என்று தான் தோன்றுகின்றது. அந்தச் சூழலில் இப்போதும் இருந்து கொண்டு இது பற்றி சிந்திப்பவர்கள் ஏதாவது யோசனைகள் சொன்னால் இதைப்பற்றி நாங்களும் சிந்திக்கலாம். நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கும். எல்லோரும் புத்தகங்களில் விடுதலைப்புலிகளைக் கண்டிக்கின்றார்கள். இதற்கெதிராக போராடவேண்டும், மக்களை விழித்தெழுங்கள் என்று எல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எப்படி நாங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அங்கு நடைமுறையில் என்ன நடக்கின்றது, கேட்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர்களே கோசங்களை வைக்கின்றார்கள். எனக்கென்றால் இவையெல்லாம் நாங்கள் போராட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை ஏதோ செய்கிறோம் என்று எமது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்வதற்காக செய்வது போல் இருக்கிறது.

இங்கு இப்போது ஒரு சிலரை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலையை உண்மையான விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் நேர்மையானவர்கள். ஆனால் இவர்கள் த-வி-பு- ஆதரவாக இருக்கிறார்கள். சாதாரணமாக கதைக்கும் போது அவர்கள் செய்வது சரியா? ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் தொடங்கிய போராட்டத்தை கைவிடுவதா? மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் ஏதோ செய்கிறார்கள் உதவிசெய்கிறோம் என்று விட்டு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்.(தற்போதைய நிலைமைக்கு) அதாவது த-வி-பு விட்டால் அடுத்து( )என்ன என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்ன மாதிரி பதில் சொல்வீர்கள். மேற்குறிப்பிட்ட த-வி-பு- பிழைகளையும் விளங்கிக் கொள்கிறார்கள். பிழை விட்டாலும் அவர்களை விட்டால் வேறு இல்லை தானே என்று கதைப்பார்கள். உங்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

No comments: