தமிழ் அரங்கம்

Friday, February 20, 2009

சத்யம் மோசடி: தனியார்மயத்தின் மகிமை!

ஜனவரி 7, 2009 அன்று இந்தியாவை ஒரு பெரும் பூகம்பம் உலுக்கியதைப் போன்று சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, தனது நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், இந்தியப் பங்குச் சந்தை பரிமாற்ற வாரியத்திற்கும் எழுதிய கடிதத்தில், "கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுவனத்தின் ஆண்டு வரவுசெலவு கணக்குகளில் 7,106 கோடி ரூபாய் அளவிற்குத் தில்லுமுல்லுகள் செய்திருப்பதாக''த் தானே வலிய வந்து ஒத்துக் கொண்ட செய்தி அன்று வெளியாகியது.

"சத்யம் நிறுவனத்திற்குப் பல்வேறு வங்கிகளில் 5,040 கோடி ரூபாய் ரொக்கச் சேமிப்பாக இருப்பதாகவும், அதன் மூலம் 376 கோடி ரூபாய் வட்டி கிடைத்திருப்பதாகவும், 1,230 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், 490 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வர வேண்டிய கடனாகவும் காட்டப்பட்டிருப்பது அனைத்தும் பொய்க் கணக்கு'' என்ற உண்மையை அக்கடிதத்தில் போட்டு உடைத்து இருந்தார், ராஜு. அவர் இந்தப் பொய்க்கணக்குகளின் மூலம் தம்மாத்துண்டு சத்யத்தைப் பன்னாட்டு நிறுவனம் ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கினாரா அல்லது சத்யத்தின் இலாபத்தை உறிஞ்சித் திவாலாக்கினாரா என்பதுதான் இம்மோசடியின் பின் மறைந்துள்ள மர்மம்.

No comments: