தமிழ் அரங்கம்

Monday, March 30, 2009

வகுப்புவாத பாறாங்கல்லும், அதன் கோளாறு அரசியலும்..(2)

(3)
சிறுபான்மை
மக்களின் விடுதலைப் போரடாட்டத்தைப் பொறுத்த வரையில், தரகு முதலாளிய அரசின் இன ஒடுக்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்ற பிரச்சினையே இன்றும் முதன்மை பெற்றிருக்கிறது. இன்று இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்ககடிகளால், மக்களிடம் இருந்து எழுந்து வரும் ஜனநாயகக் கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் கிடப்பில் போட்டு வரும் இவ் அரசு, இதை மூடி மறைப்பதற்காக இனமுரன்பாட்டை முன்தள்ளி வருகிறது. இவ்வாறு இனமுரண்பாட்டை முன்தள்ளி, சிறுபான்மை தேசிய இனங்கள் மீது இன அழித் தொழிப்பாக இதை இலகுவாக நடத்தி வருகிறது. பெருகிவரும் அரசின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராக மக்கள் போராடாமல் தடுப்பதற்கும், மறுபுறத்தே சிறுபான்மை தேசிய இனங்களின் தேசிய அடையாளங்களை அழித் தொழித்து அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக்குவன் ஊடாக, அவர்கள் ஒரு பலமான தேசிய புரட்சியை நடத்தி விடாதபடியும், இவ் ஏகாதிபத்திய மூலதனத்தைப் பாதுகாக்க இவ்வரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழ்தேசிய புரட்சி, இலங்கையில் வர்க்கப் புரட்சியின் வெளிப்பாடு என்பதை அரசு தெளிவாகவே உணர்ந்துள்ளதுடன், இது ஏகாதிபத்தியத்தின் மையத்தை தாக்கி அழிக்கும் முனைப்பைக் கொண்டது என்பதையும் அது அறியும்.

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி! ஆகவே இவ் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அவ்வர்க்கம், சிறுபான்மை இனத்துக்குள் இல்லையா? என்ற கேள்வியும் உண்டு. நிச்சயமாக சிறுபான்மை இனங்களுக்குள்ளும் உண்டு. அவ்வாறானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களும் அவ்வாறே இருப்பர். இருக்கின்றனர்.( நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: