தமிழ் அரங்கம்

Wednesday, September 9, 2009

சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!


படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாகச் சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்க மாட்டார் என்றாலும் அப்படித்தான் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட் ராமன் துயிலெழும் முகூர்த்தமும் சொல்லிவைத்தது போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வார நாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்து விடுபவர், விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்கு மூட்டையைக் கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியைப் பக்கத்து வீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு முடித்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் .. எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன்.

ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பது போல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன் சிந்தனையில் அவர் அறி....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: