Sunday, September 13, 2009

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது.

இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் ப+சுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

No comments: