Saturday, October 10, 2009

புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் சிந்தனைக்கு

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

தமிழ் தேசிய விடுதலையின் பேரில் புலிகள் தமிழ் மக்களின் அனைத்து ஐனநாயக உரிமைகளையும் மறுத்து அச்சுறுத்தி தேசத்தை விட்டு வெளியேற்றி படுகொலைகள் செய்து மக்களின் மீது கொரத்தாண்டபம் ஆடினர்.

புலிகளின் அராஜகத்தினால் நாங்கள் நண்பர்கள் உறவினர் மற்றும் விடுதலைக்காய் அனைத்தையும் துறந்து போராட வந்த பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்துள்ளோம்

No comments: