தமிழ் அரங்கம்

Tuesday, November 3, 2009

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.

நாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.

ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: