மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரனையில் வெளிபடுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகர. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகரவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர் குற்றம் மிகப் பாரியது.
சட்டத்துக்கு புறம்பான குற்றக் கும்பல் ஒன்றைக் கொண்டு, ஆயிரக்காணக்கான தமிழர்களை படுகொலை செய்தது மகிந்த குடும்பம். இதை வெளிபடுத்தத் தயார் என்ற அறிவித்தைத் தொடர்ந்து, கொலைகாரக் கும்பல் முன்னாள் இராணுவ தளபதியையும் எதிர்கட்சி வேட்பளரையும் கைது செய்து கொட்டமடிக்கின்றது.
இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. க்கு எதிராக இரண்டு அழித்தொழிப்பை நடத்திய இலங்கை அரசு, பல பாத்தாயிரம் பேரை படுகொலை செய்தது. இந்த படுகொலைக்காக யாரையும், எந்த நீதிமன்றமும் விசாரித்தது கிடையாது, தண்டித்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இனங்களைப் பிளந்தவர்கள், இனவழிப்பு போரை அரசு நடத்திவந்தது. பல பாத்தாயிரம் மக்களை இனத்தின் பேரால் கொன்றனர். இறுதி யுத்தம் என்ற பெயரில் இன அழித்தொழிப்பை நடத்தியவர்கள், மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர்.
இது பற்றி பொது சமூக அக்கறை இன்றி, குறுகிய தளத்தில் இக் குற்றங்கள் அர்த்ததமற்று போனது. ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய இ.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment