தமிழ் அரங்கம்

Saturday, June 5, 2010

வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன?


இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.

வினவின் அரசியல் என்ன? சாதியை எதிர்க்கின்றது. பார்ப்பனியத்தை எதிர்க்கின்றது. ஆணாதிக்கத்தை எதிர்க்கின்றது. சுரண்டலை எதிர்க்கின்றது. இனவெறியை எதிர்க்கின்றது. மதவாதத்தை எதிர்க்கின்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றது. இதன் அடிப்படையில் ஒரு சமூக மாற்றத்தைக் கோருகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக வினவுவின் அரசியல் இருக்கின்றது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான, எம் அனைவரினதும் குரலாகவும் அது இருக்கின்றது. அதுதான் எமது அரசியல்.


மேலதிகமாக இதைப் புரிந்துகொள்ள
1.ஆணாதிக்கமும் பெண்ணியமும்

2 comments:

Anonymous said...

அவர்கள் சரியான தருனத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அம்பலப்பட்ட்தென்னவோ அவர்கள்தான்

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மையான பதிவு