தமிழ் அரங்கம்

Friday, September 2, 2005

சூறாவாளி உலகுக்கு சொல்லும்...

சூறாவாளி உலகுக்கு சொல்லும் மற்றயை செய்தி என்ன?

உன்னதமான உலகமயமாதல் என்ற நவீனத்துவத்தின் பின் கட்டமைக்கப்படும் நகரமயமாதல், மனிதன் உயிர்வாழ்வதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்துள்ளது என்ற செய்தியை தெளிவாகவே எடுத்தக் கூறுகின்றது. இன்றைய நகரமயமாக்கலில் எற்படும் ஒரு நெருக்கடி, எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும் என்ற கேள்வியை தெட்டத் தெளிவாக எழுப்பியுள்ளது. இந்த நெருக்கடி சர்வதேச ரீதியாக எற்படும் போது என்னதான் நடக்கும். இந்த நெருக்கடி நீடிக்கும் ஒரு சூழல அல்லது புறச்சூழல் கோடிக்கான மக்களின் உயிரையே கொன்று ஒழிக்கும் என்பதையே, இந்த சூறாவளி சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளது.

ஒரு நகரம் குடிக்கும் நீரை உடனடியாக இழந்துவிடும் போது என்ன நடக்கும். குடிக்கும் நீரை எந்தவிதத்திலும் நகரங்களில் இன்று பெறமுடியாது. இதேபோல் வெளியில் இருந்துவரும் உணவையும், தங்குமிட வசதிகள் என அனைத்தையும் ஒரு நகரம் இழந்து எத்தனை நாட்கள் தான் உயிருடன் நீடிக்கமுடியும். குளிர் எற்படும் போது எற்படும் மனித துயரங்கள் இழப்புகள் எதையும் இன்றைய உலகமயமாதல் நகரப்புறம் இழந்து நிற்கின்றன.

ஒரு ஏகாதிபத்திய யுத்தம் வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சூறாவளியும், அதன் பின்பான நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டாகவே உள்ளது. ஏகாதிபத்திய யுத்தத்தில் உலகின் நகரங்கள் அனைத்தும் செயலற்ற தன்மையை உடனடியாகவே அடைந்துவிடும் நிலையில், மனிதன் உயிர் வாழமுடியாது இயற்கையாக மரணிக்கும் அவலமே மிக பெரிய ஒரு மனித அழிவாக மாறும். இதை நீங்கள் உங்கள் வீட்டில் தண்ணிர் குழாயில் நீர் வரவிட்டால் என்ன செய்வீர்கள், எப்படி மலம் கழிப்பீர்கள் என்ற யோசிப்பதில் இருந்தே இதன் முழுமையையும், மனித அவலத்தையும் முன்கூட்டியே புரிந்து கொள்ளமுடியும்.

No comments: