தமிழ் அரங்கம்

Friday, October 28, 2005

ஜனாதிபதி தேர்தலும்

இனப்பிரச்சனையும்

இனப்பிரச்சனையே மீண்டும் மீண்டும் தேர்தல் சூதாட்டத்தில், மிகமுக்கியமான ஒரு அரசியல் கூறாகவிட்டது. இத்தேர்தல் கூட இனப்பிரச்சனை மீதான பேரினவாதத்தின் காய் நகர்த்தலாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை இனங்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறையே, தேசிய பிரச்சனைக்கு வித்திட்டது. இதை இன்று பலரும் மறந்து போகின்றனர். புலிகளே இனப்பிரச்சனை என்று காட்ட முனைகின்றனர். இந்த நிலையை சர்வதேச சமூகம் வரை எடுத்துச் சென்றுவிட்டனர். இதில் புலிகளின் பங்கும் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு பேரினவாதிகளின் இதற்கு பொறுப்பாக இருந்துள்ளது.

இருந்தபோதும் இன்றுவரை பேரினவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை தொடரும் அதேநேரம், அதில் இருந்து சிறுபான்மை இனங்கள் மீள்வதற்கான ஒரு பாதை இதுவரை இந்த சமூக அமைப்பில் உருவாகிவிடவில்லை. இது புலிகளின் இராணுவ நோக்கிலும் சரி, பேச்சு வார்த்தையிலும் சரி, இதற்கான ஒரு விடிவு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுரண்டும் வார்க்கத்தின் நலனையே பாதுகாக்கும் தேர்தல் என்ற கூத்து ஆடப்படுகின்றது. இது இரண்டு பிரதான ஆளும் கட்சியான சிங்களப் பேரினவாதிகளிடையே, தமிழ்மக்களின் இனப் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக, அரசியல் ரீதியாகவே ஆழமாக பிளவுறவைத்துள்ளது.

இன்றைய உலகில் நடைபெறும் எந்தத் தேர்தல்களும், மக்களின் நலனுக்காக நடத்தப்படுவையல்ல. மாறாக சுரண்டு வர்க்கத்தின் நலனுக்காக, அதை அண்டிப் பிழைப்போருக்கு இடையிலான சுதந்திரமான போட்டியாகவே நடத்தப்படுகின்றது. சுரண்டும் வர்க்கம் மேலும் மேலும் மக்களைச் சுரண்ட அனுமதிக்கும் உள்ளடகத்தில் இருந்தே, தேர்தல்கள் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. உலகில் இந்த சமூக அமைப்பில் நடைபெறும் எந்தத் தேர்தலும், மக்களின் வாழ்வியல் உரிமைக்காக எதையும் தேர்தல் மூலம் பெற்றுத் தருவதில்லை. மாறாக சில சீர்திருத்தங்கள் மூலம், சுரண்டும் வர்க்கத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சில சலுகைகளை வழங்கி அதை மீளவும் பறிக்கும் தந்திரத்தையே சகல சுதந்திரமான ஜனநாயக ஆட்சி மற்றங்களும் செய்கின்றன. மக்கள் ஜனநாயக தோதல் மூலம், தமது வாழ்வியல் சுதந்திரங்களை இழப்பதற்கான வாக்களிக்கும் முறையே இன்றைய ஜனநாயகத் தேர்தலாகும்.

இந்த நிலையில் இலங்கையில் ஜனதிபதி தேர்தல், இன்றைய ஆளும் வர்க்கத்தின் (சந்திரிக்காவின்) விருப்பமின்றியே நடத்தப்படுகின்றது. இந்தநிலையில் இந்த ஜனதிபதி தேர்தல் ஏகாதிபத்தியங்களின் ஆழமான தலையீடு இன்றி நடத்தப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், யார் வேட்பளர்கள் என்று உறுதியான நிலையில், பேரினவாதம் தனது சொந்த முகத்துடன் சிறுபான்மை இனங்களை பகடைக்காயாக முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளது. இதில் எந்த வேட்பளரும் விதிவிலக்கல்ல. தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலுடனும், புலிகளுக்கு எதிரான அரசியலுடனும் கூடிய இரண்டு அம்சங்களையும் அடிப்படையாக கொண்டு தேர்தல் வியூகங்கள் அமைந்துள்ளன.

பிரதான கட்சியான யூ.என்.பியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தத்தம் பக்கத்துக்கு அணிகளை இணக்க வகையில் பேரங்களுடன் தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டன. சிறுபான்மை இனங்கள் தம்தரப்பில் பேரம் பேசி, தமது சொந்த தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்களையே பேரப்பொருளாக முனவைத்து கூட்டுச் சேர்ந்து நிற்கின்றன. இதில் புலிகள் முதல் ஜே.வி.பி ஈறாக, மக்கள் விரோத தேர்தல் சூதாட்டத்தில் நடிகர்களாகவே களத்தில் நிற்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் இடையிலான அரசியல் கூட்டை தீர்மானிப்பதே உலகமயமாதல் தான்

இந்த தேர்தலில் சிறப்பாக பேரினவாதம் தனக்குள் இரண்டு பிரிவாக பிளந்து நிற்கின்றது. வலதுசாரிகளான யூ.என்.பி ஒருபுறமும், போலி இடதுசாரிகளும் கடும் போக்கு வலதுசாரி பேரினவாதிகளும் மற்றொரு அணியாக களத்தில் அணிவகுத்து நிற்கின்றனர். இந்த இணைப்பின் புள்ளியாக புலிகள் இருக்கின்றனர். போலி இடதுசாரிகளாகவே தனது வரலாறு முழுக்க நடித்த சிறிலங்கா சுதந்திரகட்சியின் தலைமையிலான அணி, வலதுசாரியன படுபிற்போக்கான பேரினவாதிகளுடனும், ஜே.வி.பி என்ற தீவிர இடது இனவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்த போது எற்பட்ட மற்றங்கள் இலங்கை அரசியலுக்கு புதியது.

இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கூட பிளந்துவிடும் அளவுக்கு, அதன் அடிப்படையான சர்வதேச கொள்கைகளையே தகர்த்து விடுமளவுக்கு நிலைமை முற்றியுள்ளது. இந்த அரசியல் பிளவு ஆழமானதே. உண்மையில் என்ன நடக்கின்றது.

உண்மையில் உலகமயமாதல் என்ற கொள்கை வழியில் இலங்கையில் நடக்கும் சமூக அசைவுகள், இலங்கை அரசியலிலும் அரசியல் கட்சிகளிலும் அதிர்வை உருவாக்கின்றது. ஏகாதிபத்தியம் தனது தலைமையில் தனது நலனில் நின்று வழிகாட்டும் உலகமயமாதல் கொள்கை, இலங்கையில் மோதலை உடன் நிறுத்தப்பட்டு ஒரு சமாதானம் காணப்படவேண்டும் என்பதில் தெளிவானதும் உறுதியான நிலையைக் கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் அடிப்படையில் தான் இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளும் தத்தம் பங்குக்கு இயகுவதால், பிளவுகளும் கூட்டுகளும் உருவாகின்றன.
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற விடையத்தில் பேரினவாதம் இதுவரை எந்த ஒரு தீர்வுக்கான முன்மொழிவையும், புலிகளுடன் சேர்ந்தும் சரி அல்லது தனித்தும் சரி முன்வைக்கவில்லை. அதேநேரம் யுத்தம் இல்லாத ஒரு சூழலும், புலிகளின் ஒரு தலைப்பட்சமான முன்முயற்சி கொண்ட ஒரு நிழல் யுத்தமும் நடக்கின்றது. இந்த நிலையிலும் கூட, ஒரு யுத்தமற்ற சூழல் நிலவுதற்கான மர்மான சூழல் ஆச்சரியமானவையல்ல. நான்கு வருடங்களாக நீடிக்கும் அமைதி மற்றும் யுத்த நிறுத்தின் பின்னால் உண்மையில் புலிகளும் சரி, பேரினவாத அரசும் சரி உண்மையான ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை. ஆனால் அதை உண்மையான ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தி வைத்திருப்பதே உலகமயமாதல் சமூக அமைப்புத்தான். ஆனால் இந்த உண்மை வெளியில் இனம் காணமுடியாத வகையில் சூக்குமாகவே காணப்படுகின்றது. தாம் தப்பி பிழைக்கவே புலிகள் வலிந்து ஒரு தலைபட்சமாக சண்டையை தொடங்க விரும்பும் முன்முயற்சிகளும், தொடர் கொலைகளும் கூட ஒரு யுத்தமாக மாறிவிடவில்லை, மாற்றிவிடவில்லை. புலிகள் விரும்புவது போல் உருவாகாத யுத்த சூழல், அவர்களின் அரசியல் தோல்வியாகவே தொடருகின்றது.

யுத்ததுக்கு எதிரான கடுமையான சர்வதேச (உலகமயமாதல்) அழுத்தத்தை புலிக்கும், பேரினவாதிகளுக்கு உலகமயமாதலுக்கு தலைமை தாங்கும் ஏகாதிபத்தியம் தெளிவாக கொடுக்கின்றது. அதன் பிரதிநிதியாகவே நோர்வையுள்ளது. இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கவேமுடியாது. ஜே.வி.பி முதல் சிங்கள உறுமய வரை நோர்வையை புலி சார்பாக கூறும் கூற்றின் பின்னால் உள்ள பேரினவாத யுத்தவெறி, உண்மையில் யுத்தம் தொடங்காது நிர்பந்திக்கும் நோர்வையின் அனுகுமுறைக்கே எதிரானதே. நோர்வை ஏகாதிபத்தியத்தின் ஏக பிரதிநிதியாகவே, தனது ஏகாதிபத்திய கடமையைச் செய்கின்றது. வாரிவழங்கும் அரசியல் பொருளாதார சலுகைகள் முதல் அனைத்தையும் வாரி வழங்குவது என்பது, போராட்டத்தின் நோக்கத்தை உடைக்கவும், சிதைக்கவும் கையாளும் அரசியல் உத்தி அவ்வளவே. இந்த சலுகைகளுக்கு புலிகள் பலியாகியுள்ளனர். பேரினவாதத்தை நடைமுறைப்படுத்தி அரசியல் பிழைப்பை நடத்தவேண்டிய நிலையில் உள்ளவர்களின் கண்ணுக்கே, இவைகள் தெரிவதில்லை. இதில் தான் புலி எதிர்பணியினரும் அடங்குவர்.

புலிகள் தொடர்ந்தும் செய்யும் கொலைகள், சிறுவர்களை தமது கூலிப்பட்டளத்துக்காக கடத்திச் செல்லல், பணத்தை கப்பமாகவும் பலகாரமாகவும் வாங்கி சூறையாடல் போன்ற, புலிகள் பல விதமான மனிதவிரோத செயலையிட்டு, ஜே.வி.பிக்கும் சரி சிங்கள உறுமயாவுக்கும் சரி எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. உண்மையில் இவர்களுக்கு சமூக அக்கறை என எதுவும் கிடையாது. உதாரணமாக சுனாமி நிதியை மோசடி செய்த இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சாவுடன் கூடி நின்று மக்களை அடிமைப்படுத்துவதற்கு, எதையும் செய்ய தயாரகவே உள்ளனர்.
இதற்காக மனிதனை பிளந்து அரசியல் பேசும் இந்தக் கும்பல், அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட அங்கிகரிப்பதில்லை. ஏன் ஜே.வி.பி ஆயுதம் எந்திய காலங்களில், அவர்களின் மனிதயுரிமை மீறல்கள் புலிக்கு நிகரானதே. இங்கு எதற்கும் பூதக் கண்ணடி தேவையில்லை.

தேசிய இனப்பிரச்சனைக்கு ஏன் தீர்வு காண முனைகின்றது யூ.என்.பி

தேர்தல் கூட்டுகளின் பின்னால் உள்ள அரசியல் உள்ளக்கம் என்ன எனப் பார்ப்போம். யூ.என்.பி உலகமயமாதல் என்ற அமைப்பில், அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு கட்சியாகவே உள்ளது. ஏகாதிபத்தியங்களால் தாம் விரும்பி எற்கப்படும் ஒரு ஆளும் வர்க்க கட்சியாகவே யூ.என்.பி உள்ளது. இந்த அரசியல் கட்சியின் தொடர்ச்சியான வலதுசாரி அரசியலும், மூலதனத்துக்கு அதற்கும் இடையிலான உறவு அசைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தநிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கதம்பமான பொருளாதார கொள்கைக்கும் இடையில், உலகமயமாதல் யூ.என்.பியை அதிகம் விரும்புகின்றது. யூ.என்.பி உலகமயமாதல் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அழுல் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு கட்சி. இந்த நிலையில் தான், தேசிய இனப்பிரச்சனையிலும் கூட யூ.என்.பி தீர்வுக்கான ஒரு நெம்புகோலைக் கொண்டுள்ளது. இது எப்படி எனப் பார்ப்போம்.

பாரம்பரியமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, நாட்டை பிளவுபடுத்தி இலகுவாக சமூகங்களை சுரண்டவும் இதே யூ.என்.பி தான் காரணமாக இருந்தது. ஆனால் இதே கட்சி தான் பிளவை அகற்றி, ஒன்றுபடுத்தும் அதிக சாதகமான கூறுகளை இன்று கொண்டுள்ளது. எமது இவ்வாய்வு சார்ந்த இக் கருத்து, வலதுசாரியான தமிழ் பொது கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் மறுபட்டது. இது நடக்கும் மற்றம் சார்ந்த இயங்கியல் கூறில் உருவானவையல்ல. மாறாக சுயநல அரசியல் நோக்கில் இருந்து குருட்டுத்தனமான நம்பிக்கை சார்ந்து அங்குமிங்கும் ஊசாலாட்டத்துடன் கூடி உருவாகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரானதும், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரானதுமான பல இனவாத நடவடிக்கைகளை முன்னின்று இலங்கையில் அழுல்படுத்தியது இந்த யூ.என்.பி தான். மூலதனத்தின் சுரண்டல் நலன்களைப் பேன சிறுபான்மை இனங்களைப் பிளந்து, அதில் நக்கிவாழும் ஒரு சமூகப் பிரிவையே உருவாக்கியதும், இதே யூ.என்.பி தான். எப்போதும் யூ.என்.பி சிறுபான்மை மக்களை ஒடுக்கியபடி, தனக்கு பின்னால் சிறுபான்மை பிரிவின் ஒரு பகுதியை பேரம் பேசும் உத்தியூடாக தொடர்ச்சியாகவே தக்கவைத்துக் கொண்டது. இது வாக்கங்களின் நலன்கள் என்ற நோக்கில் முரணவையல்ல.

உண்மையில் அனைத்து சுரண்டு வர்க்கங்களின் நெருக்கடியற்ற சூறையாடலுக்கும், அதை அண்டி வாழ்வோரின் நலனுக்காவுமே செய்தன. இதற்கு வெளியில் எந்த நோக்கமும் இவர்களுக்கு இருக்கவில்லை. இதே யூ.என்.பி இன்று அதே நோக்கத்துடன் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவிரும்புகின்றது. இது ஒன்றும் அதிசயமானவையல்ல.
இனப்பிரச்சனைக்கான இன்றைய தீர்வும் கூட, அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் என்ற உள்ளடகத்தில் அவசியமானதாகவும், முன் நிபந்தனையாகியுள்ளது. இந்த நிலையில் இனப்பிரச்சனைக்கு இந்த சமூக அமைப்பில் தீர்வு காணவிரும்பும் எவர் முன்பும், யூ.என்.பி இருப்பது ஆச்சரியமானவையல்ல. யூ.என்.பி வேறு, உலகமயமாதல் வேறல்ல.
உலகமயமாதல் எதை விரும்புகின்தோ, அதை யூ.என்.பி செய்து முடிக்கும்.
உலகமயமாதல் இலங்கையில் சுரண்டுவதற்கு அமைதி தேவை என்பதில் உறுதியாக இருப்பதால், அதை யூ.என்.பியே நடைமுறைப்படுத்தும் இயல்பான கோட்பாட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது.

யூ.என்.பி பாரம்பரியமாகவே சுரண்டு வர்க்கத்துடன் கொண்டிருந்த ஜக்கியம், இயல்பாகவே சிறுபான்மை சுரண்டு வர்க்கத்துடன் கொண்டுள்ள உறவும் வர்க்க ரீதியாக மிகவும் நெருக்கமானவை. எவ்வளவு தான் இன அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறையை யூ.என்.பி செய்ய போதும் கூட, சிறுபான்மை பிரிவின் சுரண்டும் வர்க்கம் யூ.என்.பியுடன் கொண்டிருந்த உறவு வர்க்க ரீதியாக இருந்தமையால் மிக நெருக்கமானதே. சிறுபான்மை இனங்களின் மேலான அரசியல் செல்வாக்கை இந்த சுரண்டும் வாக்கமே கொண்டிருந்தது. இது இயல்பாகவே சிறுபான்மை இனங்களை, யூ.என்.பியின் பால் எப்போதும் அனுதபத்துடன் கூடிய வர்க்க ஆதாரவை வழங்கி வந்துள்ளது. இந்த வகையிலும் இந்த சமூக அமைப்பில் இனப்பிரச்சனை தீர்வில், யூ.என்.பி உடன் நிகழும் வாய்ப்பே, நிகழ்தன்மை கூடியவையாக உள்ளது.

இங்கு தமிழ்மக்கள் மட்டுமின்றி மலையக முஸ்லீம் மக்களை தலைமைதாங்கும் சுரண்டும் வர்க்கம், யூ.என்.பியுடன் கொண்டுள்ள உறவு நகமும் சதையும் போன்றது. இக்கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமது சேர்ந்த சுயநல வர்க்க அரசியலுக்காக பல சந்தர்ப்பங்களின் கூட்டுச் சோந்தபோதும் கூட, எப்போதும் யூ.என்.பியுடன் தான் தனது ஆழமான வர்க்கப் பிணைப்பைக் கொண்டிருந்தன. சிறுபான்மை இனத்தில் அனைத்து சுரண்டும் வாக்க பிரதிநிதிகளும் யூ.என்.பியின் பால் கொண்டுள்ள உறவு தாய் மகன் உறவாகவே உள்ளது. சிறுபான்மை இனத்துக்கு யூ.என்.பி தான் அதிகளவு கெடுதியான முடிவுகளை எடுத்திருந்த போதும் கூட, வாக்க ரீதியான பினைப்பு அதன் தலைவர்களை யூ.என்.பி பின்னால் தான் எப்போதும் அணிவகுத்து வைத்திருந்தது.

புலிகளின் நலன்களைப் பொறுத்த வரையில், அவர்களின் நலன்கள் சமூகத்தை உயர்ந்தபட்சம் சுரண்டுவது தான். தீவிர வலதுசாரிகளான புலிகளுக்கும், கூட்டணியின் அரசியல் வாரிசாகவே உருவான புலிகளுக்கும், யூ.என்.பி உடன் உள்ள பிணைப்பு வர்க்கரீதியானது. இது அரசியல் ரீதியாக பிளக்க முடியாத ஒன்று. இதில் முரணற்றதும், கொள்கை ரீதியான ஐக்கியம் உள்ளது.

யூ.என்.பி ஆட்சிகாலத்தில் மிக மோசமான இன ஒடுக்குமுறைகளையும், புலி ஒழிப்பு யுத்தங்களையும் எதிர்கொண்ட போதும் கூட, புலிக்கும் யூ.என்.பி உள்ள உறவுக்கு பின்னால் ஒரு அதியுயர் சமூக பினைப்பு காணப்படுகின்றது. அது வர்க்க ரீதியானது. தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு, யூ.என்.பி உடன் மிக இலகுவானதும் மிக சாத்தியப்பாடன ஒன்றாகவுள்ளது. உலகமயமாதல் விரும்பும் அமைதியை, யூ.என்.பி உடாக சாத்தியமாக்க கூடிய ஒன்றாக இருப்பதால், இத் தேர்தல் முடிவுகள் அதை நோக்கியே நகருகின்றது.

சில கட்சிகளின் சொந்த இருப்புகே இனவாத அரசியலை அடிப்படையாகவுள்ளது.

உலகமயமாதல் சமூக அமைப்பு அரசியல் தீர்வு மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுனையும் நிலையில், அதை எதிர்ப்பதன் மூலம் சில கட்சிகளின் எதிர்காலமே அடங்கி உள்ளது. இந்த வகையில் யூ.என்.பி புலிகளுடன் உடன்பாடு காணமுனையும் உலகமயமாதல் தீர்வை எதிர்ப்பதன் மூலம் தான், சில கட்சிகளின் எதிர்கால அரசியல் வாழ்வே உள்ளது. இதானல் தொடரும் அமைதி சமாதானம் மூலமான தீர்வுத் திட்டத்தையும், புலிகளுடன் இணங்க முற்படும் எந்த முடிவையும் எதிர்ப்பதே இவர்களின் இன்றைய சந்தர்ப்பவாத அரசியலாகிவிட்டது. இதுவே சிறிலங்கா சுதந்திரகட்சிக்குள்ளான ஒரு அரசியல் பிளவாகியுள்ளது. இப்பிளவு உலகமயமாதல் நோக்கை ஆதாரிக்கும் சந்திரிக்கா தலைமையிலான அணிக்கும், அதை எதிர்க்கும் பிரிவுக்கும் இடையிலானதாகவும் உள்ளது. இதுவே ஆழமாகி வெடிக்கும் போது, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு யூ.என்.பி உடன் ஒரு கூட்டரசங்கத்தை அமைக்கும் வகையில், நிலைமை மாறிச் செல்லுகின்றது. உண்மையில் இனப்பிரச்சனையில் யூ.என்.பியும் புலிகளும் தமக்கு இடையில் ஒரு உடன்பாட்டின் மூலம் காணும் தீர்வு, சிங்கள உறுமய, ஜே.வி;.பி முதல் சுதந்திரக்கட்சியின் மகிந்த பிரிவின் அரசியல் எதிர்காலமே சூனியமமாகிவிடும். இந்த அரசியல் உண்மைக்கான வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்பமே, யூ.என்.பி இருந்த அதிகார முரண்பாடுகளால் பிரிந்து வந்த பண்டராநாயக்கவால் உருவாக்கப்பட்டது. உருவாக்கும் போதே அந்த பழைய கட்சியின் அரசியல் கொள்கைகளை விமர்சித்தல்ல, யூ.என்.பியின் இனவாத சுரண்டல் அரசியலுடன் தான் புதுக்கட்சியை ஆரம்பித்து அதற்கு பூச்சூட்டவே விரும்பினார். பிரிந்து வந்தவர் பூச் சூட்டி அரசியலில் பிழைத்துக் கொள்ள, (பிரபாவிடமிருந்து பிரிந்து வந்த கருணா தான் பிழைத்துக் கொள்ள சமூக முரண்பாடாக இருந்த பிரதேசவாதத்தை முன்வைத்தது போல்), மக்களையே எமாற்றி கவர வேண்டியிருந்தது. இந்த வகையில் யூ.என்.பியினால் அதிர்த்தியுற்ற சமூகப் பிரிவுகளை இனம் கண்டு, அனுகும் அரசியல் உத்தி கையாளாப்பட்டது. சிங்கள் எழை விவசாயிகளையும், நிலப்;பிரபுத்துவ பண்பாடின் பிரதிநிதியாக செயல்பட்ட அடிப்படைவாத பிழைப்புவாத பிக்குகளின் மதத்தையும் வலிந்து ஆரத்தளுவியபடி தான், பண்டரநாயக்காவின் அரசியல் கட்சி பரிணமித்தது. யூ.என்.பியோ சுரண்டும் வர்க்கத்தை ஆதாரித்து நின்ற நிலையில், பண்டரநாயக்க அதனால் பாதிக்கப்பட்ட அடிமட்ட சிங்கள பிரிவுகளை அணிதிரட்ட முடிந்தது. இதற்கு ஏற்ப துரோக கம்யூனிட் கட்சிகளின் உதவி கிடைத்தபோதே, அதிகரத்தைப் பிடிக்க முடிந்தது. இப்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெயாரளவில் இடதுசாரி தன்மை கொண்டதாக, இந்த சமூக அமைப்பில் தன்னைக் காட்டிக் கொள்ளமுடிந்தது.

யூ.என்.பி 1948-1949 களின் மலையக மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமைச் சட்டம் கொண்ட வந்த போது அதன் பிரதான நோக்கம் இனரீதியானதல்ல. வர்க்க ரீதியான நோக்கமே முதன்மை பெற்று இருந்தது. மலையகத்தில் அதிக செல்வாக்கு பெற்று இருந்த இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை கட்டுப்படுத்தும் நோக்கமே முதன்மை பெற்றிருந்தது. ஆனால் பின்னால் கொண்டு வரப்பட்ட இனவாதச் சட்டங்களோ, போட்டிக் கட்சியை முடக்கும் வகையில், இனவாதம் முதன்மை பெற்ற ஒன்றாக இருந்தது. இந்த இனவாதம் மூலம் வர்க்க நோக்கில் சமூகங்களை பிளந்து சுரண்டும் நோக்கமே இதன் மையக்கூறாக இருந்தது. இங்கு மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதம் என்பது, அதன் குறிப்பான மைய அரசியலாக இருந்தது. இது போன்றே சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவம் செய்த கட்சிகளும் கூட இந்த இனவாத நோக்கில் இருந்தே தம்மையும், தமது தனிப்பட்ட வர்க்க நலனையும் பேனிக் கொண்டனர். இதில் ஜே.வி.பி முதல் புலிகள் வரை எந்தவித்திலும் விதிவிலக்கல்ல.

யூ.என்.பியின் இனங்களை பிரித்தாளும் தந்திரதினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற திணறின. இந்த நிலையில் தனது தாய் கட்சி வழியில் ஆட்சியை கைப்பற்ற விரும்பிய பண்டரநாயக்க, பேரினவாதத்தையும் நிலப்பிரபுத்துவ மதவாதத்தையும் படிப்படியாக உள்வாங்கி ஒரு பேரினவாதக் கட்சியாகவே அதிகாரத்தை பிடிக்கமுடிந்தது. யூ.என்.பிக்கும் சிறலங்கா சுதந்திரகட்சிக்கும் சுரண்ட வர்க்கத்தின் நலன்களை பேனுவதில் எந்த கருத்த முரண்பாடுகளும் இருக்கவில்லை. அதை அழுல்படுத்தும் விதத்தில் தான் நெகிழ்சி போக்கை அடிப்படையாக கொண்ட வேறுபாட்டைக் கையாண்டனர்.

இலங்கையில் சுரண்டும் வர்க்கத்தின் முற்றுமுழுதான நலன்களை உறுதிசெய்யும் வகையில் பேரினவாத சித்தாந்தமே இரண்டு கட்சியினதும் ஆன்மாவாகியது. இதனுடன் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் படிப்படியாக இணைந்து கொண்டன. இந்த நிலையில் இன்று இனப் பிரச்சனையில் யூ.என்.பிக்கு நிகரகவே தமிழர் பிரச்சனையை இந்த சமூக அமைப்பில் தீர்க்க சிறிலங்கா சுதந்திரகட்சி ஒரு பகுதி எடுத்த முடிவை, மற்றொரு பகுதியால் எதிர்க்கப்பட்டது, எதிர்க்கப்படுகின்றது.

இனப் பிரச்சனையின் தீவிரமான இறுதியாக எம்முன்னுள்ள 14 வருடம் சந்திரிக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியே அதிகாரத்தில் அமர்ந்து இருந்தது. இதில் இறுதி நான்கு வருடமும் அமைதியைக் கொண்ட காலமாகும். சந்திரிக்காவின் காலத்தில் தான் உலகில் தீவிரமான பல மற்றங்களும் நடந்தேறின. உலகமயமாதல் முதல் செப்டெம்பர் 11 வரையிலான உலகை மற்;றியமைக்கக் கூடிய பல மற்றங்களை உலகம் சந்தித்தது. இது இலங்கையிலும்; பிரதிபலித்தது. உலகமயமாதல் என்ற உலகம் தளுவிய புதிய அடக்குமுறை இயந்திரம், இலங்கை சமூகத்தின் அனைத்துக் கூறையும் அடக்கியொடுக்கும் வகையில் புகுந்து கொண்டது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் சரி, ஜே.வி.பி முதல் புலிகள் வரை அதை அரசியல் பொருளாதார ரீதியில் துளியளவு கூட எதிர்க்கவில்லை. அதற்கு இசைவான கொள்கைகளைக் கொண்ட நிலையில், இவர்களின் சொந்த அரசியல் இருத்தலுக்கே இனவாத அரசியல் அவசியமாகிவிட்டது. வெளிப்படையாகவே தம்மை காட்டிக் கொள்ளும் சுரண்டும் வர்க்கம் சார்ந்த கட்சிகளுக்கு இனவாதம் அவசிமில்லாததாகவிட்டது. இதை அகற்றுவது அவர்களுக்கு அவசியமாகிவிட்டது.

இந்த நிலையில் இலங்கையில் உலகமயமாதல் விரும்பும் அமைதி சமதானம் என்ற சுரண்டலுக்குரிய அடிப்படையான நிலைப்பாட்டை, நிறைவு செய்வது உலகமயமாதலை முன்னெடுத்துச் சென்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் கடமையாக இருந்தது. சந்திரிக்காவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் இதை நிறைவு செய்யும் போராட்டத்தில், சொந்தக் கட்சிக்குள்ளும் கூட்டுக் கட்சிக்குள்ளும் கூட ஒருமித்த பலம் வாய்ந்த சக்தியாக அதனால் ஒருநாளுமே இருக்கமுடியவில்லை. இது இன்றைய உலகமயமாதல் விரும்பும் அமைதி சமதானத்துக்கு தடையானதாக மாறிவிட்டது. உலகமயமாதல் விரும்பும் சுரண்டலுக்கு எற்ற அமைதி மற்றும் சமதானத்தை அழுல்படுத்த முனைந்த போது கட்சியினுள்; இருந்த இனவாதிகள் எற்படுத்திய தடையும், விட்டுக் கொடுப்பும், படிப்படியாகவே அந்தப் பிரிவை பலப்படுத்தியது. இதுவே இன்று மகிந்த சந்திரிக்க மோதலாகவுள்ளது. இதை ஜே.வி.பி திட்மிட்ட அரசியல் சதிகள் மூலம் பலப்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையே பிளந்து வருகின்றனது. இத தான் அவர்களின் புரட்சி சித்தாந்தமும் நடைமுறையும்.
மறுபக்கம் புலிகள் ஜனநாயக விரோத செயல்பாடுகள் அமைதி சமாதனத்தின் போது படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு சமாதானம் நோக்கிய நகர்வு என்பது அவர்களுக்கு தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருந்தது, இருக்கின்றது. மக்களை எப்போதும் துப்பாக்கி குண்டுகளால் சுட்டு அடக்கியாண்டவர்கள் என்ற வகையில், சமாதானம் மூலம் மக்களை அடக்கியாள முடியாத என்ற நிலையில் சமதானத்துக்கு முட்டுக்கட்டை இட்டனர், இடுகின்றனர். சமதானம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில், தமது சொந்த அதிகரத்துவம் தகர்ந்து போகும் அபாயத்தையே எப்போதும் பறைசாற்றியது, பறைசாற்றி வருகின்றது. இதானல் வீச்சானதும் விரிவானதுமான ஜனநாயக விரோதப் போக்கை அங்கிகரிக்கும் உள்ளடகத்தில் மட்டும் தான், சமாதனம் பற்றி உளறமுடிகின்றது. மக்களை துப்பாக்கி முனையில் மட்டுமே கட்டுப்படுத்திய புலிகளால் அதைவிடுத்து ஒரு நாளும் உயிர்வாழமடியாது. மக்களை மிரட்டிப் பணியவைக்க, கொலைகள் அவர்களின் உயிர் வாழும் அரசியலுக்கு அவசியமாகி விடுகின்றது. இதனால் துப்பாக்கியும் கொலையும் அல்லாத சமாதான சூழல் எதற்கும் இணங்கிப் போக மறுக்கும் புலியின் இயல்பு, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் போக்குடன் மிகவும் ஒன்றுபட்டு நின்றது. அமைதி சமாதானம் என்ற நடைமுறை சார்ந்த போக்கு, இரண்டு பக்க அரசியல் நிலையிலும் எதிரான உள்ளடகத்தில் காணப்படுகின்றது. அமைதி சமாதானம் என்பது புலிகள் மற்றும் ஜே.வி.பி உள்ளடக்கிய கூட்டு கும்பலுக்கு அவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இந்த நிலைமை, ஏகாதிபத்திய தலையீட்டை நடத்த முடியாத ஒரு நிலையும், அதேநேரம் புலிகளை அடிபணியவைக்க முடியாத வகையில் நிலைமை காணப்படுகின்றது. இதற்கு அரசின் உள்முரண்பாடுகளே கராணமாகும். இன்றைய நிலையில் ஏகாதிபத்திய தலையீடு குறைந்தபட்சம் அரசின் ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்வுடன் சாத்தியமானதாகவே உள்ளது. ஏகாதிபத்திய தலையீட்டை அவர்களே நியாயப்படுத்தம் வகையில் புலிகள் மனிதவிரோத குற்றங்கள் பெருகிவருகின்றன.

இந்த நிலையில் சுதந்திரக்கட்சி இனப்பிரச்சனையை தீர்க்கும் தகமையை இழந்து நிற்கின்றது. இந்த சமூக அமைப்பில் கூட ஒரு சமாதானம் என்பதை, அவர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. உண்மையில் சந்திரிக்கா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் இறுதி நான்கு ஆண்டில் எற்பட்ட மற்றங்களைக் கூட சந்திரிக்காவின் அரசு உருவாக்கவில்லை. யூ.என்.பி பராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு நிலைiயில் தான் சமதானம் அமைதி நாடகம் தொடங்கப்பட்டது. சர்வதேச தலையீட்டுடன் தொடங்கிய இந்த இழுபறியான அமைதி சமாதான என்ற நாடகம், கடுமையான பல நிலைமைகள் உடாகவே நகர்ந்தது. யூ.என்.பி அரசை இனப்பிரச்சனைக்கான தீர்வு அடிப்படையில் முரண்பட்ட சந்திரிக்கா, ஜனநாயக விரோதமாக அந்த அரசைக் கலைத்த போது மீண்டும் தீர்வுத் திட்டம் சொந்த முரண்பாட்டால் ஆழமான நெருக்கடிக்குள்ளாகியது. இதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஜே.வி.பியும் கொண்ட உறவு இனப்பிரச்சனையை மேலும் சிக்களுக்குளக்கியது. பராளுமன்றத்தில் ஜே.வி.பி இன்றி ஆட்சியை தக்கவைக்கவே முடியாது என்ற நிலையில், புலிகளை விட ஜே.வி.பி யுடான உடன்பாடு முதன்மையானதாக மாறியது. இழுபறியான நிலைக்குள் சமதானமும் அமைதியும் சென்றது. புலிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு தமது ஜனநாயக விரோதச் செயல்களை அதிகப்படுத்தினர்.

பேரினவாதமே ஜே.வி.பியின் அரசியலாகிப் போனது

மறுபக்கம் ஜே.வி.பி அரசியல் என்பது இனப்பிரச்சனையை விட்டால் மாற்று அரசியல் இல்லை என்ற நிலைக்குள் மேலும் ஆழமாகவே சீராழிந்தனர். ஜே.வி.பியே பேரினவாதத்தின் தீவிர செயல்பாட்டாளராகினர். உலகமயமாதல் என்ற சுரண்டல் சமூக அமைப்பில், ஒரு இடதுசாரி அரசியல் என்பது ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே. அதை ஜே.வி.பி முற்றாகவே மறுதலிக்கின்றது. மாறாக சதிகள் மூலம் பராளுமன்ற கதிரைகள் மூலம் ஆட்சிக்கு வரத்துடிக்கும் இவர்கள், பராளுமன்ற சாக்கடைக்கு எற்ற மக்கள் விரோத அரசியலில் மூழ்கத்தொடங்கினர்.
முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாடுகளில், பராளுமன்றம் உட்பட அனைத்து ஆட்சி அமைப்புகளும் ஜனநாயக விரோதமானவையே. முதலாளித்துவத்தின் முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முதலாளித்துவ பராளுமன்றமின்றி, குறைந்தபட்ச ஜனநாயகம் என்பது அறவே சாத்திமில்லை. நிலப்பிரபுத்துவ காட்டுமிரண்டி பண்பாட்டையும், அடக்குமுறையையும் அடிப்படையாக கொண்டதும், மேல் இருந்து திணிக்கபட்ட ஒரு பராளுமன்றம் ஜனநாயக பூர்வமானவையல்ல. ஆனால் ஜே.வி.பி அதை ஜனநாயக பூர்வமானதாக கூறிக் கொண்டு, உழைக்கு மக்களின் அடிமை முதுகின் மேல் எறிநிற்கவே துடிக்கின்றனர். இதற்கு எற்ற ஒரு அரசியல் இன்றி, பேரினவாதத்தையே தனது அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்.

இதன் மூலம் ஜே.வி.பி பராளுமன்றத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் சக்கடை அரசியலில் இறங்கியது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்த மறுத்து, பராளுமன்ற கதிரைக்கு ஊடாக ஆட்சியை பிடிக்கும் தனது அரசியல் வழியையே தனது கொள்கையாக வரிந்து கொண்டனர். இந்த நிலையில் தான் கொண்டிருந்த இடதுசாரிய பாரம்பரிய கொள்கைகள் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகின்றது. மக்களை தமது பின்னால் புரட்சி பேசி தக்கவைக்கவும், பராளுமன்றத்தில் அதிக கதிரைகளை பிடித்து பேரம்பேசவும் அல்லது ஆட்சியைப் பிடிக்கவும் மக்களின் அற்ப உணர்வுகளில் வடிகால் தேடுவது அவசியமாகின்றது. இந்த வகையில் தான் இன்றைய ஜே.வி.பியின் அரசியல் பரிணாமம் பெறுகின்றது.

வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட நிலையில், அதில் அம்பலமாகாத வகையில் புரட்சிகர சொல் அலங்கார வார்த்தைகளை உச்சரித்தபடி குறுகிய இனவாத உணர்வுடன் களத்தில் இறங்குகின்றனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையாக உள்ள ஜனநாயகக் கோரிக்கையைக் கூட மறுக்கும் ஜே.வி.பி, ஒன்றுபட்ட வாழ்வில் இதை தீர்க்கமுடியும் என்கின்றனர். சுத்த அயோக்கியத்தனமானதும், எமாற்றுவதில் கைதேர்ந்த மூடிச்சுமாற்றி அரசியலாகும்;. மனிதன் மனிதனாக மட்டும் உள்ள நிலையில், யாரும் இதை தீர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த பராளுமன்ற கதிரை அரசியல் ஊடாக, மனிதனை மனிதனாக உருவாக்கவே முடியாது. தனிப்பட்ட அந்த கதிரை பேர்வழி கூட, ஒரு மனிதனாக இருப்பதில்லை. அவன் ஒரு மோசடிக் காரணாகவே இருக்கின்றான். மனிதன் மனிதானாக இல்லாத நிலையில் தான், சமூக முரண்பாடுகள் உருவாகின்றன.

சமூக முரண்பாட்டின் உள்ளடகத்தை விரிவாக்கி விளக்குவதும், அதை நடைமுறையில் மாற்றியமைக்க முன்வைக்கப்படுவதே மார்க்சியம். மனிதன் மனிதனாக மாறும் நிலையில், மார்க்சியம் கூட முழுமையாக அதற்குரிய விளக்கமும் அற்றவிடும். அதற்கு பின் மார்க்சியத்துக்கு எந்த ஆயுளும் கிடையாது. சமூக முரண்பாடுகளை விளக்கும் மார்க்சியம், அதை மாற்றியமைக்கும் போராட்டத்தையே வழிகாட்டுகின்றது.

இந்த வகையில்; தான் தேசிய இனப்பிரச்சனையும்;. தேசிய இனப்பிரச்சனை இனங்களுக்கு இடையிலான மனித முரண்பாடுகளில் ஒன்று. இதை ஜனநாயக பூர்வமாக தீர்க்க முன்வராத அரசியல், அடிப்படையில் இந்த முரண்பாட்டை மேலும் ஆழமாக்கின்றது. இந்த அரசியல் அப்பட்டமான இனவாதமாகும். இனவாதத்தை இதற்கு வெளியில் விளக்கவேமுடியாது. சாதியம், ஆணபாதிக்கம் எப்படி உள்ளதொ அப்படித் தான் இனவாமும்;. இதை ஜனநாயக பூர்வமான வழிகளில் தீர்க்கமறுப்பது சுத்த அயோக்கியத்தனமானதும், அந்த ஒடுக்கமுறைக்கு துணை போவதுமாகும்.
இங்கு இந்த முரண்பட்டின் பின்னால் புலிகள் உயிர் வாழ்ந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இங்கு இந்த முரண்பாடு நிலவுகின்றது. புலிகள் இல்லாத ஒரு நிலையில் தொடங்கிய இன முரண்பாடுகள், ஜனநாயக பூர்வமாக தீர்க்க மறுத்தால் புலிகள் அழிந்த பின்பும் கூட தொடரும்.

ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வே வர்க்கப் போராட்டத்தின் அரசியல் உள்ளடக்கமாகும். வர்க்கப் போராட்டத்தையே கைவிட்ட ஜே.வி.பி, தமிழ் மக்களின் பிரச்சனையை ஜனநாயக பூர்வமாக தீர்ப்பதற்கான தடைக்கல்லாகவே மாறிவிட்டனர். ஜே.வி.பினா இதை மட்டுமின்றி வர்க்கப் போராட்டத்தின் அனைத்து சமூகக் கூறுகளையும் கைவிட்ட நிலையில், சொல்லில் புரட்சி பேசியபடி, இடதிலிருந்து வலது கோடியில் அணிவகுத்து நிற்கின்றனர்.

வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் நடத்தாது, உலகமயமாதலை எதிர்ப்பாதாகவும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகவும் வாய்யளவில் புரட்சிகர அலங்கார வார்த்தைகளை பேசுகின்றனர். மார்க்கிய ஆசான்களின் படங்களையும், வர்க்க போராட்ட கொடிகளையும் ஆட்டிய படி, மக்கள் முன் கவர்ச்சியாகவே தம்மை காட்சிப்படுத்துகின்றனர். இதையே தான் உலகில் வர்க்கப் போராட்டத்தை கைவி;ட அனைத்து போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்தன, செய்கின்றன. அந்த பாதையில் தான் ஜே.வி.பி மக்களின் முதுகில் எறிநின்று பவணி வருகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்தில் தேசிய பிரச்சனையை தீர்க்க உள்ள சரியான ஜனநாயக உள்ளடகத்தை நிராகரிக்கின்றது ஜே.வி.பி. இந்நிலையில் இலங்கையில் பிரதான பிரச்சனையாக உள்ள இனப்பிரச்சனையில் வேறு என்ன முடிவைத் தான், மார்க்சியத்துக்கு புறம்பாக எடுக்க முடியும்;. அது அப்பட்டமான இனவாதம் தான். வர்க்கமற்ற சமுதாயத்தில் தேசிய இனங்கள் என்ற சமூகப் பிளவு இருக்க முடியாத என்ற உண்மையை, வர்க்க உள்ள சமுதாயத்துக்கு காட்டி ஜனநாயகக் கோரிக்கையையே மறுக்கும் அராஜாகவாத நிலைக்கு தமது அரசியலை இட்டுக்கட்;டி திரித்துக் காட்டுகின்றனர். இது கூட இனவாதம் தான். இதில் இருந்து கொண்டுதான், பேரினவாதத்துடன் இலகுவான ஒரு அரசியல் புள்ளில் சந்திக்கும் நிலைப்பாட்டை கொண்டு ஐக்கியத்துக்கு அவர்களால் வரமுடிகின்றது.
தமிழ் மக்களுக்கு ஜனநாயக பிரச்சனை எதுவும் கிடையாது என்ற கடைகோடியில் நின்று உரைக்கின்றனர். அதை வெறும் புலிப் பிரச்சனையாகவும், புலியால் தான் தமிழ் மக்களுக்கு பிரச்சனையாகவும் காட்ட முனைகின்றனர். சொந்த பேரினவாத நடத்தைகளும், ஒடுக்குமுறையுமே அனைத்துக்குமான காரணம் என்பதை மூடிமறைக்க முனைகின்றனர். பேரினவாத அரசுடன் கூடி நிற்கும் தமது இனவாதக் கொள்கையை ஆதாரித்து, அந்த பேரினவாத அரசில் பங்கேற்கின்றனர். தீவிர வலதுசாரியான அடிப்படைவாத மதவாதிகளான சிங்கள உறுமயவுடன் கூடி நின்ற ஒன்றாகவே குரைக்கின்றனர். இலகுவாகவே பேரினவாதம் இவர்களை இணைப்பதுடன், இனப்பிரச்சனையில் கொள்கை வேறுபாடுகள் இன்றி இணையமுடிகின்றது. இதையே தான் தமிழ் துரோக குழுக்களுடனும் அவர்களால் செய்ய முடிகின்றது.

இலங்கையில் பிரதான முரண்பாடக உள்ள இனப்பிரச்சனையில் இனவாதிகளுக்கு இடையில் எற்பட்ட ஒன்றுபட்ட ஐக்கியம், அதிகாரத்துக்கு வரும் போது இனவொடுக்குமுறையாக தீவிரமாகும். ஜனநாயகபூர்வமாக இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கும் அரசியல், சொந்த குறுகிய அரசியல் நலன் சார்ந்து உலகமயமாதல் முன்வைக்கும் தீர்வையும் கூட மறுதலிக்கின்றது. மாறாக புலிகளை அழித்தல் என்ற யுத்த கோசமே இதன் பின் உள்ளது. இதற்கு உலகமயமாதலின் நிதியை பயன்படுத்த ஒரு கணம் கூட பின்நிற்பதில்லை. சமதானபூர்வமாக தேசிய இனப்பிரச்சனையை தீர்க்க முன்வராத ஒரு நிலையில், யுத்தமே மாற்றுத் தீர்வாகின்றது. இங்கும் புலிகளின் மக்கள் விரோத இராணுவவாதம் தீர்வுக்கு பதில், இழுபறியான யுத்தமே திணிக்கப்படும். இதில் லாபம் அடைபவர்கள் யார்? மக்களா! அல்லது மக்களின் முதுகில் சவாரி செய்ய நினைப்பவர்களா?

புலிகளுடான யுத்தம் இதுவே ஜே.வி.பி மற்றும் சிங்கள உறுமயாவின் மையக் கோசம். இது புலியெதிர்ப்பு குழுக்களின் கோசம் கூட. இதே கோசம் தான் புலிக்கும் உள்ளது. என்னென்றால் யுத்தமற்ற அரசியல் சூழல், இவர்கள் அனைவரையும் அரசியல் ரீதியாக ஒழித்துவிடும். புலிகள் இருக்கும் வரைதான் ஜே.வி.பி, சிங்கள உறுமயாவும் அரசியல் ரீதியாக உயிர்வாழமுடியும் என்ற நிலையில் அவர்களின் அரசியலே இனவாதமாகிவிட்டது. அதை போல் புலியெதிர்ப்பு கோஸ்டிகளின் நிலையும்;. அதனால் தான் இவர்கள் அனைவரும் மகிந்த தலைமையிலான யுத்தத்தை நோக்கி நகரும் கும்பலுக்கு ஆதாரவு வழங்குகின்றனர்.

புலிகள் யுத்தத்தை விரும்பிய போதும், புலிகளைப் பொறுத்தவரையில் யுத்தத்தை நோக்கிச் செல்லமுடியாத வகையில் சர்வதேச அழுத்தம் கடுமையாக உள்ளது. சர்வதேச தலையீடுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரகவே ஏகாதிபத்தியத்திடம் உள்ளது. இதுவே புலிகளின் யுத்த மோகத்தை தடுக்கின்றது. புலித் தலைவர்கள் யுத்தத்தை நோக்கிய அறைகூவல்களை எல்லாம் சின்னபின்னமாக்கின்றது. ஏகாதிபத்தியத்தை பகைத்து முன்னெடுப்பு என்பது, வாய் சவாடல்களைத் தவிர புலிகளால் முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏகாதிபத்திய விசுவாசிகளான புலிகள், வாலைச் சுருட்டி ஏகாதிபத்தியத்தை நக்கவே விரும்புகின்றனர். ஏஜமானிடம் தம்மை வளர்ப்பு நாயாக அங்கீகரிக்கவே வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நிலையில் புலிகளின் தலைவர்களின் குழந்தைகள் மேற்கில் சொகுசாக வாழும் சிறப்புச் சலுகைகளைக் கூட, புலியை தடை செய்த நாடுகள் எற்படுத்தியுள்ளன. ஒரு சமுதாயத்தை பழ் கிணற்றில் தள்ளியபடி, புலிகளின் தலைவர்களின் குழந்தைகளை அவர்கள் எதை தமது சொர்க்கமாக கருதகின்றரோ அந்த ஏகாதிபத்தியத்தில் கல்விகற்று நக்க அனுப்புகின்றனர். உயர்கல்வி பெறும் வகையிலான சூழல் கூட, மேற்கை மீற முடியாத வகையில் சலுகைக்குள் உட்பட்டுத்திவிட்டது. இதை புலிப் பெற்றோர்கள் மீறும் போது, அதன் முதல் எதிரிகளாக குழந்தைக்கு பெற்றோர்களே இருப்பர்.

இந்த நிலையில் புலிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே இன்று தொடர்ந்து தக்கவைத்துள்ள சொந்த கூலிப்பட்டளத்தை எமாற்றவும், அவர்களை இராணுவ ரீதியாக தொடர்ந்தம் தக்கவைக்கும் வகையில் யுத்தம் பற்றி பிரச்சாரங்கள் முதல் சிறிய தாக்குதல்களும் ஆங்காகே புலிகள் நடத்துகின்றனர். ஆனால் யுத்தத்தை நோக்கி நகரமுடியவில்லை. இந்த நிலையில் தான் பேரினவாதிகளும் கூட யுத்தத்தை நோக்கி நகர முடியாதுள்ளனர்.

உலகமயமாதல் எதை விரும்புகின்றதோ, அதை நோக்கி இவர்களின் சோரம் போன அரசியல் கொள்கைகள் இருப்தால் யுத்தம் இவர்கள் யாரலும் தொடங்க முடியாதுள்ளது. அமைதி சமதானம் இதுவே ஏகாதிபத்தியத்தின் இலங்கைக்கான இன்றைய மையக் கோசம்;. இதனால் இன்றைய தேர்தலில் யூ.என்;.பி வெற்றி என்ற மையக்கோசத்துடன் உலகமயமாதல் செயல்படுகின்றது. இந்த வெற்றி உலகமயமாதலின் சுரண்டும் நலனுக்கு எற்ற சமாதானத்தை உருவாக்கும் ஒரு சூழல் காணப்படுகின்றது. புலிகள் விரும்பவிட்டாலும் கூட, இந்த சமதானம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படும். அந்த சமதானத்தை அன்னிய சக்திகள் தமது கையில் எடுக்கும் சூழல் மேலும் நெருக்கமாகி வருகின்றது. அதையே ரணில் சுயாட்சி என்ற அறிவித்த படி அரங்கில் தெளிவாக முன்வருகின்றார்.

மகிந்த தலைமையில் யுத்த கோசத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜே.வி.பியும், சிங்கள உறுமயாவுக்கு உலகமயமாதலின் ஆதாரவு கிடையாது. சுரண்டப்படும் மக்களின்; அரசியல் ஆதாரவும் சரி, அதேநேரம் அரசியல் வழியென எதுவும் கிடையது. ஜே.வி.பி, சிங்கள உறுமயாவின் அரசியல் புலிகளை எதிர்ப்பதாக மட்டும் உள்ளது. புலிகள் இல்லை என்றால், இவர்களின் அரசியல் எதிர்காலமே கிடையாது. அந்தளவுக்கு அரசியல் ரீதியாக புலியெதிர்ப்பு அரசியலாக இவர்களின் செயல்பாடுகள் குறுகிவிட்டது. வர்க்கப் போராட்டம், உலகமயதால் எதிர்ப்பு போராட்டம் என எதையும் இவர்கள் நடத்துவதில்லை.
தீவிர யப்பானிய விசுவாசிகளான ஜே.வி.பி, தமது அரசியல் கொள்கை விளக்கங்களை யாப்பான் மொழியில் வெளியிடுகின்றனர். ஆனால் தமிழில் அதை வெளியிடுவதில்லை. அந்தளவுக்கு இவர்களின் வர்க்க பாசமும், பேரிவாதமும் காணப்படுகின்றது. சிங்களவனின் வாக்கை எப்படி பெறுவது என்பதே இவர்களின் மைய பிரச்சனையாகிவிட்டது. எப்படி சதிகள் மூலம் இந்த ஜனநாயகத்தின் ஒட்டைகள் மூலம் அதிக ஆசனங்களைப் பெறுவது என்பதும், எப்படி சதிகள் மூலம் கட்சிகளுக்குள் புகுந்து விளையாடுவது என்று சி.ஐ.ஏ பாணி அரசியலைத்தான் ஜே.வி.பி நடத்துகின்றனர். இதைத் தான் புலிகளும் நடத்துகின்றனர். அண்ணனும் தம்பியாகவே மக்களின் முதுகில் எறிநிற்கின்றனர். மக்களின் அடிமைத்தனத்தின் மேல் நின்று கொக்கரிக்க விரும்புகின்றனர் அவ்வளவே.

No comments: