தமிழ் அரங்கம்

Monday, October 31, 2005

நுகர்வு வெறியும்

இன்ப நுகர்ச்சியியும் நேர்விகிதத்தில்
ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்கின்றது.


ஏற்றுமதி பொருளாதாரம் அன்னிய மூலதனக் கொழுப்பை அடிப்படையாக கொண்டது. இலங்கையின் தேசிய உற்பத்திகள் வெள்ளையர்களும், பணக்காரர்களும் நுகர வேகமாக நாடு கடந்து செல்லுகின்றது. வெள்ளையர்கள் சுற்றச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கழிப்பவை, இறக்குமதியாக நாட்டினுள் வருகின்றது. இதைவிட மிகை உற்பத்திகள், சர்வதேச சந்தையில் தேங்கிப் போனவை நாட்டின் உள் கொட்டப்படுகின்றது. அதையும் கடனாக தலையில் கட்டிவிட்டு, பின் வட்டி வசூலிப்பதும் கூட ஒரு இறக்குமதின் அடிப்படைக் கூறாகி உள்ளது. அடிப்படை தேவையற்றவையும், கழிவுகளையும் விளம்பரம் செய்து வாங்க வைக்கும் உளவியல் சிதைவை எற்படுத்தி, தேவை அற்றவைகளை தேவையானதாக்கி இறக்குமதி ஊக்குவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் கொழும்புத் துறைமுகம் பொருட்களை எற்றி இறக்குவது 2002 மற்றும் 2003 கிடையிலான முதல் 6 மாதத்தில் 13.5 சதவிகிதத்ததால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 843 கோடி ரூபாவை ஈட்டியது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் பிரதான உற்பத்தியும், பெரும் மூலதனம் கொண்டதும், சுற்றுச் சூழலலை நஞ்சாக்கும் வாகன உற்பத்தியின் அடிப்படைக் கழிவுகளை கொண்டு, மீள் அமைக்கப்பட்ட நிலையில் இலங்கையரின் தலையில் எப்படி கட்டிவிடுகின்றனர் எனப் பார்ப்போம்.


2003 முதல் 8 மாதத்தில் வாகன இறக்குமதி முந்தைய வருடத்தை விட 63 சதவீதத்தால அதிகரித்துள்ளது. 25000 வாகனங்களை யப்பான், பிரிட்டன், தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், nஐர்மனி எற்றுமதி செய்துள்ளது. வாகனங்களை இறக்கி எற்றும் தொழில் 2003 முதல் எட்டு மாதத்தில் 200 சதவிதத்தால் அதிகரித்திருந்தது. 2002ம் ஆண்டு எடுத்தால் 113351 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டது. 2002 இல் நாட்டில் 18 92 367 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் 9 23 467 யாகும். பத்து பேருக்கு ஒரு வாகனம் நாட்டில் ஒடுகின்றது. இதில் அரைவாசி மோட்டார் சைக்கிள்கள். சுற்றுச்சூழலை நாசமாக்கி, வீதிகளை நச்சுப் புகையாக்கி உள்ளது. இதனடிப்படையில் பல புதிய நோய்களும், நோயாளிகளின்; எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்த வாகனங்களின் எரிபொருள் பூர்த்தி செய்ய எரிபொருள் இறக்குமதி பெருகிச் செல்லுகின்றது.
வாகனங்கள் ஒட வீதிகள் அகலப்படுத்துவதுடன், புதிய வீதிகள் கட்டப்படுகின்றன. ஏகாதிபத்திய கடன்கள் பெருமளவில் இதற்குள் திருப்பிவிடப்படுகின்றன. எகாதிபத்திய பொருளாதாரம் சார்ந்து தேசிய பொருளாதாரம் விபச்சார நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்டது. எற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை இதற்குள் இருக்கும் போது, நாட்டில் எழைகள் ஒரு பக்கம் அதிகரித்துச் செல்லுகின்றனர். இளைஞர் சமூகத்தின் பண்பாடுகள் இந்த வாகனப் பண்பாட்டைச் சுற்றிய கனவில் மிதக்க வைக்கின்றது.

இந்த வாகனக் கனவுடன் கூடிய ஆடம்பரத்தின் விளைவுகளில் விபத்தம் ஒன்றாகும் ஆசிய நாடுகளில் வீதி விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவோரில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது. 2001ஆம் ஆண்டில் இலங்கையில் 52ஆயிரத்து 57 வீதி விபத்துகள் எற்பட்டன. இதனால்; 2159 உயிரிழப்புகள் நடந்தன. 2002ஆம் ஆண்டில் 55031 வீதி விபத்துகள் நடந்தன. இதனால் 2160 உயிரிழந்தனர். கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் நாள்தோறும் 300 முதல் 350 வீதி விபத்து சார்ந்து மருத்துவ உதவி கோரிவருகின்றனர். 2002 இல் 150000 பேர் வந்ததுடன் 434 இறந்தனர். இலங்கையில் அதிக மரணத்தை எற்படுத்துவதில் வாகன விபத்தும் ஒன்றாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 7 பேர் வீதி விபத்துகள் பலிகொள்கின்றது. எகாதிபத்திய சந்தைக் கட்டமைப்பு இலங்கையில் குவிக்கும் கழிவுகள், ஆடம்பரப் பொருட்கள் மக்களை பல தளத்தில் மூலதனத்துக்காக பலியிடுவதையே உறுதி செய்கின்றது.

No comments: