செய்வோரை மக்கள் தெளிவாகவே அம்பலப்படுத்துகின்றது.
இலங்கையில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தல் முடிவுகள், மக்களின் மனநிலையையும் இந்த ஜனநாயகத்தின் மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. மக்களையே பிளந்து அவர்களை குறுகிய வட்டத்தில் நிறுத்தி, இது தான் மிகயுயர்ந்த ஜனநாயகம் என்று கூறி வாக்களிக்க விட்டனர். அதாவது வளர்ப்பு மந்தைக்கு கருக்கட்ட ஆண் மந்தைகளை புணர விடுவது போல், அரசியல் கட்சிகள் மக்களை புணரவிட்டனர். இந்த புணர்வில் மூலம் பலரும் எதிர்பாரத முடிவுகளையே, எதார்த்தம் சார்ந்து வெளிபடுத்தியுள்ளனர். மக்களைப் பிளந்து அரசியல் செய்யும் இந்த மோசடியான ஜனநாகத்தில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மனித அழிவுகளை பெருமளவில் எற்படுத்தக் கூடிய, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய பல எதிர்வுகூறல்களுக்கு எதார்த்தம் எம்மை இட்டுச்செல்லுகின்றது. மொத்த இலங்கையும் மிகவும் முன் கண்டிராத நெருக்கடியான காலகட்டத்தில் ஊடாகவே நகரவுள்ளது. என்றுமில்லாத ஒரு பயங்காரமான மனித அழிவுகளை எற்படுத்தக் கூடிய, வன்முறைகளை மக்கள் மேல் எவப்படும் சூழலலே பொதுவாக உள்ளது. அதேநேரம் இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய எண்ணப்பாடுகள், எதிர்நிலையில் அரசியல் விபச்சாரத்தையே எள்ளி நகையாடியுள்ளது. இதை நாம் விரிவாகப் பார்ப்போம்.
தேர்தல் முடிவுகள் எதைக் குறிப்பாக்கி காட்டுகின்றன
சிங்கள இனவாத கோசங்கள் மூலம், புலிகளின் மறைமுகமான அனுசாரனை மூலம் தான் ஜனதிபதியாகியுள்ளார். இந்த ஜனநாயகம் வழங்கும் கூத்தில் பெறப்பட்ட வெற்றி, மிகக் குறுகிய பெருபான்மையுடன் கூடியது. இதுவே அவரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இந்த வெற்றியை உருவாக்கித் தந்த புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை, மஹிந்த ராஜபக்ஷ வெற்றியால் புளுங்காதிதம் அடையும் ஜே.வி.பியும், ஈ.பி;.டி.பியும் இந்த வெற்றி ஜனநாயக விரோத புலிகளின் நடத்தையால் தமக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஜனநாயகத்தின் காவலராக மாறிவிடவில்லை. ஜனநாயகம் என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, தமது குறுகிய நலன் சார்ந்தாக இருப்பதால் தான் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றில் தமது பங்குக்காக வாலாட்ட தொடங்கிவிட்டனர். இந்த வெற்றிக்கு புலிகளின் ஜனநாயக விரோதம் உதவியதால், அது ஜனநாயக மீறல் அல்ல என்பது அரசியல் பிழைப்புவாதிகளின் நக்கிபிழைப்பாக உள்ளது. ஆனால் புலிகளின் ஜனநாயக விரோத செய்ல்பாட்டை அனுமதிக்க முடியாது என்பது இவர்களின் மற்றொருபக்க சந்தர்ப்பவாத அரசியலே இனவாதமாக கொக்கரிக்கின்றது.
இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும்.
தமிழ் அரங்கம்
Saturday, November 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ANNA VANINKO PURANAM PADA
EVALAVU KALUMM UNNKALA KANALA
ENNDA NEINKA ENNUMM PULEE ETHIRPUU PDALA ENNU PAARTHENAA
ENNE NEEINKA UNNKA KAAICHEERAAI NADAINTHUUINKUU
UNNKALUU MANEE ADDEEKA JANANAYAGAM, KARUNANATHAN, PARAMUVELLAN AND SRI RANGAN ELLARUMM VARUVEENAM
ORA UNNKA PULLEE ETHRIUPPUU
ORA PAAITTA THEERUMPEE THEERUMPPEE PADATHAINKOO
ரணில் வென்றிருந்தால் இன்னமும் ஒரு ஜந்துவருடம் பேச்சுவார்த்தை என்று இழுத்திருப்பார், மகிந்தர் நினைத்தாலும்,கூட்டுகட்சிகள் விடா. இது பிரபாகரனின் தூரநோக்கு எதிர்வரும் மாவீரர் உரை இதற்க்கான விடைபகரும்.
இந்த விழக்கத்தையும் பாருங்கள்.
பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.
ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.
குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.
ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.
இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.
வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.
அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.
பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.
கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.
ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.
விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.
ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.
'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.
அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.
தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.
வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.
(இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)
நன்றி: Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy
தமிழில்: திருமகள் (ரஷ்யா)
வணக்கம்
குருட்டுக் கண்ணுக்கு உலகத்தையே முழுமையாக கணமுடியாது. முதலில் புலியெதிர்ப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தை நான் தான் அரசியலுடன் பயன்படுத்தி வந்தவன். அதை என்னிடம் கடன் வாங்கிய நீங்கள், வழமையாக கூறும் துரோகி என்பதற்கு மாற்றாக பயன்படுத்த முனைகின்றீர்கள்;. தமிழில் கூட எழுத முடியாத நீங்கள், அர்த்தம் தெரியாது இருப்பது மறுபக்கம். புலியெதிர்ப்பு என்பது, மக்களை அணிதிரட்ட மறுக்கும் ஏகாதிபத்தியத்துக்கு இதன் மூலம் துணைபோகும் அனைத்து அரசியலை குறிக்கின்றது. நான் புலியெதிர்ப்பு அரசியலை அம்பலப்படுத்தியளவுக்கு, புலிகள் கூட எதிர்த்தது கிடையாது. மக்கள் நலன்னை முதன்மைப்படுத்தாத புலியெதிர்ப்பு, புலிசார்ப்பு இரண்டையும் நான் அம்பலப்படுத்தி வருகின்றோம்;.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கு புலிகள் துணை போனவர்கள் இது உண்மை. இது பிரபாகரனின் ராஜதந்திரம் என்றால், துணைபோனதை ஒத்துக் கொள்ளுங்கள். அந்த அரசியல் ஒட்டையை மட்டும் என் ஒட்டுப் போடுகின்றீர்கள். நிலைமைக்கும் சந்தர்ப்பத்துக்கும் எற்ப நடனமாடி அரசியல் பேசுவது ராஜதந்திரமல்ல நண்பர்களே. அது அரசியல் மோசடி.
ரணில் இலங்கை இனப்பிரச்சனையில் ஒரு முடிவை நோக்கி ஏன் இட்டுச் செல்வார் என்ற அரசியல் ஆய்வை, நான் தான் முதலில் தெளிவாக முன்வைத்தவன். அதற்கான சர்வதேச நிலைமையைக் கூட ஆய்வு செய்தவன் தான்;. ஏதோ புதிதாக புலம்பவதும், எதோ புதிதாக கண்டுபிடித்தாக காட்டுவது கூட சந்தாப்பவாத அரசியலே. வெளிவரவுள்ள கட்டுரையில் முழுமையாக இதை மேலும் காணவுள்ளோம்.
பி.இரயாகரன்
MAAMU RAYAGARAN
NEEINKA ANNA KAANAGA THULUVEEINKALOO, PEPSIKUUMM COKEUUMM KAITRUAI ELLUTHURA NEEINKA TAMIL PEOPLE IKKU ENNA SAINTHEEINKA ORU PAATTEYAL ONNU THARAMUDUYUMA
SUMMA PUDEEKENA PAANEENA ENDUU REEL THAN UNKALA VEDA MUDYUMM
EHTHAVATHUU ELLATHUUKUU UTHAVEE SAINCH PUNNEYAMAVATHUU KEDDAIKUUMM
UNNKA PULLE ETHRUU PAA BOLG KAIITEE UNNUMM NAADAKA POVATHEELAI
ATHU SAAREE MAAMUU NEEINKA PARISU ALA OLEEICHUU OLICHUU THEEREEYATHAI KEELVEE MAAAMUU
EENN MANUU EENNNA NADAINTHUU
NAIITTU NAALU SAIINKOO MAAMUU SUMMA
BLOG PULLE ETHRUUPUU SOLLUUTHARA VITTUU
NAAYEENA ENNAI NEEVAIUU IRUKA
NANREE
UNNKA LUMMBAN(THUSANA PUYAL)
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்கள் தண்டனை அளித்திருக்கிறார்கள் என்றும் மேற்குலகம் மீதான சிங்களத்தின் இரட்டை வேடம் அம்லப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சீறிப் பாய்கிற சிங்களத் தேசியத்தினால்தான் ரணிலால் வெற்றி பெறமுடியவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.
புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியதாவது:
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவுகள் குறித்து சிறிலங்கா தமிழீழ தேசங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மெளனம் தோன்றியுள்ளது. ஏனெனில் இந்தத் தீர்ப்பு அத்தகைய தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பினது விளைவுகள் மிக நீண்டகாலகத்துக்குப் பேசப்படுகிற ஆராயப்படுகிறதாக விடயமாக மாறும்.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து எல்லோரும் மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்துக்கு உலகத்தில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் எதுவும் இல்லை. இந்தத் தேர்தலில் வென்றவர் தோல்வியடைந்திருக்கிறார். இது தேர்தல் முடிவு அல்ல. ஒரு தேசியத்தின் தீர்ப்பு. உலகை உலுக்கியிருக்கும் தமிழ்த் தேசியத்தின் தீர்ப்பு.
தமிழர்கள் வரலாற்றில் மேற்கொண்டிருக்கும் மற்றுமொரு முக்கிய தீர்ப்பு இது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னால் எடுக்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு.
தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் முதிர்ச்சியை தங்களுக்கு எது தேவை எதனை நிராகரிக்கிறோம் என்பதை சுயாதீனமாக நீதியாக நடத்தப்பட்டதாக அமைப்புகள் கூறுகிற தேர்தலில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் தெளிவாக குழப்பம் ஏதுமில்லாமல் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலின் முடிவானது சிங்களத் தேசியத்துக்கான வெற்றி என்றும் கூறலாம். சிங்களத் தேசியத்தால் தமிழ்த் தேசியத்தை அவரணைக்க முடியாவிட்டால் தமிழர்களுடைய அபிலாசைகளை அவர்களால் உள்ளடக்க முடியாவிட்டால் ஏன் சிங்கள தேசியத்துக்குள் தமிழ்த் தேசியம் கரைய வேண்டும் என்ற கேள்வியை இன்று தமிழ் மக்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
இது எந்த ஒரு சர்வதேச சட்டவாளளராலும் சட்டப்புத்தகத்தாலும் புறந்தள்ள முடியாத தர்க்க ரீதியான ஒரு கேள்வி. இந்தக் கேள்வியானது தேர்தல் முடிவுகளினூடாக உலக அரங்கில் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் முடிவானது ஜனநாயக விரோதமல்ல. உண்மையான ஜனநாயகம் இது. மக்களினது கருத்து.
மகிந்தவின் வெற்றி- பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம்
இந்தத் தீர்ப்பை ஆழமாகப் பார்த்தால் வெற்றி பெற்றவருக்கும் தோல்வியடைந்தவருக்குமான இடைவெளி மிக நுண்ணியதாக இருக்கிறது. கடந்த 4 தேர்தல்களிலும் சிங்கள மக்கள் ஓரளவுக்குத் தெளிவான இடைவெளியையே காட்டியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களிடத்தில் சிங்கள மக்கள் என்ன வேறுபாடுகளை காண்கிறார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது.
புறந்தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள கிராம மக்களின் வாக்குகளைத்தான் மகிந்தர் பெற்றுள்ளார். அனேகமான பின்தங்கிய மாவட்டங்களில் மகிந்தர் வென்றுள்ளார். ஆகவே இது மகிந்தரின் வெற்றியா? ஜே.வி.பி.யின் வெற்றியா? சந்திரிகா ரணிலுக்குத் தோல்வியா? என்றால் எவருமே வெல்லவில்லை. இவர்கள் அனைவருமே தமிழ் மக்கள் முன்னால் தோற்றுவிட்டார்கள்.
இந்தத் தேர்தல் எங்களுக்கு ஒரு நினைவினை மீட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக மகிந்தரே தனது வெற்றி ஏற்பட்ட பிறகு தேர்தல் ஆணையாளரால் வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் கூறிய செய்தி என்னவெனில் 1956 ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. அன்று பண்டா வென்றதைப் போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே நாங்கள் தமிழ் பேசும் மக்களும் இதைத் தான் கூறுகிறோம்.
அதாவது இந்தத் தேர்தல் என்பது 1956 ஆம் ஆண்டு சம்பவம் போல் தொடர்புபடுகிறது. இன்னொரு பண்டா சகாப்தம் என்று மகிந்தரே கூறியிருக்கிறார்.
1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்னர் என்று பார்த்தீர்கள் எனில் 1956 ஆம் ஆண்டின் விளைவாகத்தான் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் கருக்கள் விதைக்கப்பட்டன.
எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களே 1958 ஆம் ஆண்டு கலவரம் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார்.
பண்டாவினது செயற்பாடு காரணமாக- சிங்கள தேசியத்தை ஒன்றிணைத்து-பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து-கட்சிகளை ஒன்றிணைத்து இப்பொழுது மகிந்த செய்ததைப் போல அதே மாதிரியாக ஒன்றிணைத்து மிக முக்கியமான மொழிச்சிக்கலை தேசியவாத இனவெறியாக மாற்றியபோது எங்களுடைய தேசியத் தலைமை உருவாகக் காரணமாக அமைந்தது.
அதாவது பிரபாகரன் அவர்கள் உருவாகுவதற்கு பண்டா அவர்கள் காரணமாக இருந்தது உண்மை.
அதுபோலவே மகிந்தரின் வெற்றியானது பிரபாகரனின் வெற்றிக்கான வாய்ப்பாக அமையப் போகிறது. தொடங்கப்பட்டது அந்த பண்டாவால்...முடிக்கப்பட உள்ளது இந்த மகிந்த பண்டாவால்.
ஆகவே பண்டா சகாப்தம் என்று மகிந்தரும் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார்.
சிங்கள மக்களுக்கு இவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எதிர்காலம் கூறப்போகிறது.
பலபேர் கூறுவது போல் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ள முரண்பாடு மிகக் கூர்மையாக முற்றிஇ இன்னொரு மிகப்பெரிய கிளர்ச்சி அல்லது கலகம் அல்லது ஊழிவிபத்தாக மாறப்போகிற ஆபத்தை நோக்கி சிங்களம் செல்கிறது என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் தமிழ் மக்கள் தங்களுடைய பாதுகாப்பை எந்த வகையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்த அரசியலை கூர்மையாகப் பார்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஐ.தே.க.வுக்கு தமிழர்கள் கொடுத்திருக்கும் தண்டனை
இந்தத் தேர்தலின் தொடக்கத்தில் மகிந்தர் ஜே.வி.பி. ஹெல உறுமயவினது பிரச்சாரம் எப்படி இருந்தது எனில் ரணிலும் புலியும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் கள்ள ஓட்டுப் போடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்கிறார்கள் என்று மிக மும்முரமாக பரப்புரை செய்தனர்.
அந்த சமயத்திலே ரணில் எதுவும் பேசாமல் இருந்தார்.
ரணிலுக்கு தமிழ் மக்கள் ஏதோ கடமைப்பட்டவர்கள் போலவும் தமிழ் மக்களினது வாக்குகள் கட்டாயம் ரணிலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது போலவும் கொழும்பிலே சில கருத்துகள் இருப்பதை நாங்கள் கவனித்துப் பார்த்தோம்.
ஆனால் தமிழ் மக்கள் எதற்காக ரணிலுக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் அநீதிகளுக்கு என்ன நன்றி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தத் தேர்தலினூடாக மக்கள் ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் தீர்ப்பை- ஐக்கிய தேசியக் கட்சி மீதான கோபத்தின் தீர்பாக இந்தத் தீர்ப்பு அமைந்துவிட்டது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரணிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றிருக்கிறார்.
எதற்கெனில்
தமிழ் மக்களைக் ஐக்கிய தேசியக் கட்சியினர் கொன்றழித்தமைக்கு
83 ஆம் ஆண்டு கலவரத்துக்காக
வெலிக்கடை வீதிகளின் படுகொலைக்காக
கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்றமைக்காக
இந்திய அமைதிப் படையை இங்கே வரவழைத்து வேடிக்கை பார்த்தமைக்காக
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் இந்தத் தேர்தலினூடாக வழங்கிவிட்டார்கள்.
சீறிப்பாயும் சிங்களப் பெருந்தேசியவாதமும் ரணிலின் தோல்வியும்
ரணிலினது வெற்றி வாய்ப்பானது புலிகளுடன் சேர்ந்து இருப்பதால் குறைந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்களிலே கூறினார்கள். பி.பி.சி. போன்ற ஊடகங்களில் புலிகளுடன் ரணில் மென்மைப் போக்கைக் கடைபிடிக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் நாங்கள் புலிகள் அப்படியான போக்கிலே இல்லை என்பது வெளிப்பட்டிருக்கிறது. எங்கள் மக்களை ரணிலுக்கு வாக்களிக்குமாறு கூறி எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை என்று தமிழ் மக்கள் மேற்கொண்ட முடிவுக்கு தலை வணங்கி புலிகள் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே இத்தகைய பரப்புரைகளை புலிகளும் மக்களும் நிராகரித்துவிட்டார்கள்.
அப்படியானால் தெற்கில் ரணில் வெற்றி பெறுவதற்கு என்ன தடையாக இருந்திருக்கும்? ரணில் ஏன் தோற்க வேண்டும்?
மகிந்தருக்கு மாற்றாக மிலிந்த மொறகொடவும் நவீன் திசநாயக்கவும் தெரிவித்திருந்த கருத்துகளை சிங்கள மக்கள் உள்வாங்கியிருந்தால் ரணில் தோற்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே ரணிலின் தோல்வி அல்லது வெற்றி என்பது தமிழ்பேசும் மக்களின் வாக்குகளினூடானது என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
தமிழ் மக்கள் எந்த நிலையிலும் எவருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர்.
மகிந்தரின் வெற்றியை சிறிலங்காவின் சுதந்திரக் கட்சிக்குள் பெரும்பான்மையோர் விரும்பவில்லை. குறிப்பாக சந்திரிகா அனுரா போன்றவர்கள் விரும்பவில்லை. வெளிப்படையாக அந்தக் கட்சி பிளவுண்டிருந்தது. மகிந்தர் தோல்வியடைவதற்கு இந்தப் பிளவு காரணமாக இருக்கும் என்று பலரும் நம்பினார்கள். இந்த வாய்ப்பைக் கூட ரணிலினால் பயன்படுத்த முடியவில்லை.
மகிந்தரின் வெற்றியாது தென்னிலங்கைச் சிங்கள மக்களினது வெற்றியாகப் பார்க்க முடியும். சிங்களப் பெருந்தேசியவாதத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட தேசியத்தின் வெற்றி இது. சிங்களத் தேசியத்தின் ஊற்றுக்கண் மிக ஆழமாக சீறிப்பாய்வதால்தான் இத்தனை வாய்ப்புகள் இருந்தும் ரணிலினால் வெற்றி பெறவில்லை.
மேற்குலகம் தொடர்பான சிங்களத்தின் இரண்டகம் அம்பலம்
இந்தத் தேர்தல் முடிவானது இலங்கையின் வரலாற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.
இப்போது வென்றுள்ள மகிந்தர் தனது செயற்பாடுகளை விரைவில் வெளிப்படுத்துவார்.
மேற்குலகம் சாராத மேற்குலகை முற்றிலுமாக எதிர்த்து சிங்கள மக்களின் பொருண்மிய கொள்கைகள்
போர் நிறுத்த உடன்பாட்டை மீளாய்வு செய்தல்
இந்தியத் தரப்பு போன்றவற்றை உள்நுழைய வைத்தல் ஆகியவற்றை நிச்சயமாக மகிந்தரால் செய்ய முடியாது.
இந்தச் செயற்பாடுகளைத் தொடங்கும்போதே ஏற்படப் போகும் உள்முரண்களின் விளைவுகளை இப்போதே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
மேற்குலகத்தின் மீதான சிங்களத்தின் இரண்டக வேடத்தை இந்தத் தேர்தலினூடாக நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
மேற்குலகம் வேண்டாம்... எந்த நேரத்தில் வேண்டாம்?
மேற்குல பொருண்மியம் வேண்டாம் மேற்குலகத் தலையீடு வேண்டாம் சிங்கள மக்களின் வாழ்க்கை நலன்களுக்கு மேற்குல செயற்பாடுகள் தடையாக இருப்பதால் மேற்குலம் வேண்டாம் என்கிறது சிங்களம்.
ஆனால் மேற்குலம் வேண்டும் என்றும் சொல்கிறது எந்த நேரத்தில் சொல்கிறது?
தமிழ் மக்களை கொன்றழிக்க
தமிழ் மக்கள் மீது போர் செய்வதற்கு
தமிழ் மக்கள் மீது நிழல் போர் நடத்த சிங்களத்துக்கு மேற்குலகம் வேண்டும்.
இந்த இரண்டகத்தினது வெளிப்பாடாகத்தான் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.
இதைத்தான் நாம் முன்பே சொன்னேம்...இந்தத் தேர்தல் முடிவானது ஒரு பெரிய செய்தியைச் கூறப்போகிறது என்று.
இந்தத் தேர்தல் மூலமாக என்ன வெளிப்பட்டு இருக்கிறது.
ஒற்றையாட்சி மூலம் தீர்வு-
புலிகளோடு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
மிக முக்கியமாக மேற்குலகத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்ற கருத்துகளினூடே இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
சர்வதே சமூகத்தால் புறந்தள்ளப்பட முடியாத தர்க்க ரீதியாக மாறியிருக்கிற இந்த முடிவுக்கு தமிழ் பேசும் மக்களினது முடிவுதான் காரணமாக அமைகிறது.
இலங்கையினது கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதை நிரூபிக்கிற காலமாக-
குறிப்பாக முஸ்லிம் மலையக கட்சிகள் எல்லாம் மக்கள் நலன்களுக்குத்தான் செயற்படுகிறார்களா? அல்லது தம் நலன்களுக்காகச் செயற்படுகிறார்களா? என்பதை மக்கள் முன்னிலையே நிரூபிக்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியாக பல்வேறு வகையான அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் இந்தத் தேர்தல் முடிவு பயன்படப் போகிறது.
ஒடுக்கப்படுகிற மக்களினது எந்த செயற்பாடும் ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கிற இனத்தினது மக்களுக்குக் கூட நன்மையைப் பயககும்.
இது ஒரு தேர்தல் முடிவல்ல- வரலாற்றுத் தீர்ப்பு
வரலாற்றுப் பேரொளி என்ற நூலில் அருட்திரு. ஜெகத் கஸ்பாரின் கட்டுரையின் தலைப்பான எங்கள் கனவையும் இல்லாது போனவர்களது உயிர்க் கனவையும் சுமந்தவர் என்று தலைவர் அவர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.
அந்தக் கனவுகளைச் சுமந்தெடுத்த முடிவுகளுக்கு ஊடாக இன்றைக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார் க.வே.பாலகுமாரன்.
நன்றி: புதினம்
yakaran avarkalai ungalkarthu mikafum alamanathu ithu intha thamil inathitku potiyathu ulka politiks vibasaram than
Post a Comment