தமிழ் அரங்கம்

Sunday, November 20, 2005

இலங்கையில் என்னதான் நடக்கின்றது

யார் ஜனதிபதியானலும், யார் வெற்றாலும், யார் தோற்றலும், மக்களுக்கு கிடைப்பது எதுவுமில்லை. மக்கள் இருப்பதை இழப்பதும், வாழ்வின் துன்பமுமே வாழ்வின் கதியாகின்றது. இதையே இலங்கை மக்கள் தமது முரணான முரண்பட்ட வாக்களிப்பினூடகவே தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர். மக்கள் விரும்பவது அமைதியையும் சமாதானத்தையும் கொண்ட நல்லதொரு வாழ்வைத் தான். இதற்கே மக்கள் வாக்களித்தனர். இதை வென்றவர்களும் தோற்றவர்களும் புரிந்து கொள்வதில்லை. மக்கள் விரும்பவது தமது சமூக பொருளாதார விடிவிற்கான தமது சொந்த அதிகாரத்தைத் தானே ஒழிய, அரசியல் மோசடிக்காரர்களை அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் மக்களை எமாற்றும் சமூக விரொதிகள் தான்.

இலங்கையில் நடைபெற்ற ஜானதிபதி தேர்தல் முடிவுகள், மக்களின் மனநிலையையும் இந்த ஜனநாயகத்தின் மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. மக்களையே பிளந்து அவர்களை குறுகிய வட்டத்தில் நிறுத்தி, இது தான் மிகவுயர்ந்த ஜனநாயகம் என்று கூறி வாக்களிக்க விட்டனர். அதாவது வளர்ப்பு மந்தைக்கு கருக்கட்ட ஆண் மந்தைகளை புணர விடுவது போல், அரசியல் கட்சிகள் மக்களை புணரவிட்டனர். இந்த புணர்வின் மூலம் பலரும் எதிர்பாராத முடிவுகளையே, எதார்த்தம் சார்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். மக்களைப் பிளந்து அரசியல் செய்யும் இந்த மோசடியான ஜனநாயகத்தில், மஹிந்த ராஜபக்ஷ என்ற பேரினவாதி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மனித அழிவுகளை பெருமளவில் ஏற்படுத்தக் கூடிய, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய பல எதிர்வு கூறல்களுக்கு எதார்த்தம் எம்மை இட்டுச்செல்லுகின்றது. மொத்த இலங்கையும் முன்கண்டிராத மிகவும் நெருக்கடியான காலகட்டத்திற்கு ஊடாகவே நகரவுள்ளது. என்றுமில்லாத ஒரு பயங்கரமான மனித அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய, வன்முறைகளை மக்கள் மேல் ஏவப்படும் சூழலே பொதுவாக உள்ளது. அதேநேரம் இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய எண்ணப்பாடுகள், எதிர்நிலையில் அரசியல் விபச்சாரத்தையே எள்ளி நகையாடியுள்ளது. இதை நாம் விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் முடிவுகள் எதைக் குறிப்பாக்கி காட்டுகின்றன

சிங்கள இனவாத கோசங்கள் மூலம், புலிகளின் மறைமுகமான அனுசரணை மூலம் தான் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார். ஆச்சரியமானது ஆனால் இதுவே உண்மை. இந்த ஜனநாயகம் வழங்கும் கூத்தில் பெறப்பட்ட வெற்றி, மிகக் குறுகிய பெருபான்மையுடன் கூடியது. இதுவே அவரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இந்த வெற்றியை உருவாக்கித் தந்ததே புலிகள். புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடே வெற்றியாகியது. புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்து, இந்த வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவுக்க தங்கத் தட்டில் வைத்து வழங்கியுள்ளனர். இப்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியினால் புளகாங்கிதம் அடையும் ஜே.வி.பியும், ஈ.பி;.டி.பியும், இந்த வெற்றி ஜனநாயக விரோத புலிகளின் நடத்தையால் தான் தமது குழுவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஜனநாயகத்தின் காவலராக மாறி இந்த வெற்றியை விமர்சிக்கவில்லை.
தமிழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை புலிகள் வழங்கியிருந்தால் தமது தோல்வி நிச்சயம் என்று கூறி, ஜனநாயக அரசியலுக்காக மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து புலம்பவில்லை. ஜனநாயகம் என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, தமது குறுகிய நலன் சார்ந்ததாக இருப்பதால் தான், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் தமது பங்குக்காக வாலாட்ட தொடங்கிவிட்டனர். இந்த வெற்றிக்கு புலிகளின்; ஜனநாயக விரோதம் உதவியதால், அது ஜனநாயக மீறல் அல்ல என்பது அரசியல் பிழைப்புவாதிகளின் நக்கிபிழைப்பாக உள்ளது. ஆனால் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என்பது, இவர்களின் மற்றொரு பக்க சந்தர்ப்பவாத அரசியலே இனவாதமாக கொக்கரிக்கின்றது. உண்மையில் மக்களின் ஜனநாயகம் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. மாறாக இனவாத அரசியல் தான் இவர்களின் மையப்புள்ளி. அதனால் தான் புலிகளின் ஜனநாயக மீறலைப் பற்றி மட்டும் பேசுகின்றனர். அது தமது அரசியல் பிழைப்புக்கு சாதகமாக மாறும் போது மௌனவிரதம் இருக்கின்றனர்.

இந்த ஜனநாயக விரோத வெற்றியை யாரும் கண்டிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷக்கு ஆதாரவாக உள்ள எந்த ஜனநாயகவாதிக்கும் இதுமட்டும் பிடிபடுவதில்லை. புலியெதிர்ப்பு கும்பலும், ஜே.வி.பி.க்கு இடதுசாயம் பூசி காட்டும் அராஜகவாதிகளும் கூட, இந்த ஜனநாயக விரோத செயலை கண்டிக்க முடிவதில்லை. நக்கிப்பிழைப்பு இதன் அரசியலாக உள்ளதை காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்காக அவரின் ஜனநாயகத்தை போற்றி வழிபடும் கும்பல்கள் கூட, இந்த புலி ஜனநாயக விரோதச் செயல்பாட்டால் கிடைத்த வெற்றியைக் கண்டிக்கவில்லை. ஜனநாயகம் இப்படித் தான் வாழ்கின்றது. பெரும்பான்மை இப்படிப் தான் பெறப்படுகின்றது.

புலிகளின் ஜனநாயக விரோத செயல்பாட்டால் கிடைத்த வெற்றிக்கு மறுபக்கத்தில், மஹிந்த ராஜபக்ஷ முற்றுமுழுதாகவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராக வெற்றிபெற்றுள்ளார். இப்படி இலங்கை வரலாற்றில் நடந்ததில்லை. ஒரு முரண்பாடாகவே புலிகள் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கு உதவ, மறுபக்கத்தில் தமிழ் மக்கள் அவரை திட்டவட்டமாகவே நிராகரித்துள்ளனர். புலிகளின் பகிஸ்கரிப்பை மீறும் வகையில் வாக்களித்த தமிழ் மக்கள், ஒரு இனவாதியான மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்துள்ளனர். புலிகள் தமது சொந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளின் மூலம் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்த அதேநேரம், புலிகளின் அரசியல் முடிவுக்கு முரணாகவே தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்துள்ளனர். இந்த அரசியல் உண்மையை யாரும் இலங்கையில் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவை சிறுபான்மை இனங்கள் புலிகளின் விருப்பையும் மீறி, மிகவும் நேர்த்தியாகவே தோற்கடித்துள்ளனர். இந்த அரசியல் தோல்வி தெளிவாகவே இன அரசியல் பிளவை மேலும் அகலமாக்கும். வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட இனவாத ஒப்பந்தங்கள் இதற்கு வழிகாட்டுவனவாகவும், இனப்பிளவுகள் நிரந்தரமானதாகவும் மாற்றிவிடுகின்ற உள்ளடகத்தைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் குறிப்பாக புதிய பாராளுமன்ற தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் முடிவுகள் அமைந்துள்ளது. இருக்கும் பெரும்பான்மையை தக்கவைக்கும் வகையில் தான், தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு இனவாதிகளுக்கு வழிகாட்டுகின்றது. இருக்கும் பெரும்பான்மையை தக்கவைக்க கடும் பௌத்த சிங்கள இனவாதிகளான சிங்கள உறுமயவுடனும், ஜே.வி.பியுடனும் சமரசம் செய்ய வேண்டிய நிலையில், அவர்களுடன் செய்து கொண்ட இனவாத ஒப்பந்தம் அமுல் செய்யவேண்டிய நிலையை தெளிவாகவே உருவாக்கியுள்ளது. இதன் விளைவு கடுமையான இனவொடுக்குமுறையைக் கையாள்வதைத்தான் கோரும்.

பொதுவாக சர்வதேச மத்தியஸ்;தம் பற்றி இவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடும், பேச்சுவார்த்தை யாருடன் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடும ;, அனைத்து பேச்சு வார்த்தையையும் அடியோடு தகர்த்து விடுகின்றது. சர்வதேச மத்தியஸ்தம் பரஸ்பரம் இணங்கிப் பெறுவது என்பது, நிச்சயமாக புலிகளுடன் பேசுவதை முன் நிபந்தனையாக்கின்றது. ஆனால் இதை மறுத்து நின்றால், இதன் விளைவு கடுமையானதாகவே மாறிவிடும். இதனால் என்னதான் நடக்கும்.

1.அமைதி சமாதானம் மீறப்படும் போது சர்வதேச தலையீடு அதிகரிக்கும்;. இந்தத் தலையீடு நடக்கும் பட்சத்தில், அதாவது இந்திய தலையீடு அன்று நடந்தது போல் நடக்கும் பட்சத்தில், இந்த கூட்டணிக்கு இடையில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கும்;. எந்த சர்வதேச தலையீடும் நிச்சயமாக, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்னிபந்னையாக கொண்டுதான் நடக்கும். இதை புலிகள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இது திணிக்கப்படும்;. இதேபோல் அரசின் முன்பும் திணிக்கப்படும். அதாவது எதை அன்று இந்தியா தலையீடு செய்ததோ, அதையே இம்முறையும் செய்யும்.
ஆனால் ஒரு விதிவிலக்கு மட்டும் இருக்கும்;. முன்புபோல் புலிகளை ஆயுதக் குழுவாக தொடர்ந்து இருப்பதை மட்டும் நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். இன்று இதை "சர்வதேசப் பயங்கரவாதம்" என்ற எல்லைக்குள் வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம் அமுல்படுத்தப்படும். இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என அனைவரும் ஒரே முடிவை நோக்கித் தான் நகருகின்றனர். தொடர்ந்தும் சண்டையை அனுமதிக்க முடியாது என்பதில் ஒருமித்த முடிவுகளைக் கொண்டுள்ளனர். இந்த நாடுகளின் தனிப்பட்ட பொருளாதார நலன்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை என்ற போதும் கூட, அவர்களின் பொருளாதார நலன்களுக்கு இந்த யுத்தம் தொடர்ந்தும் ஆபத்தானதாகவே கருதுகின்றனர். அத்துடன் தமக்கு எதிரான "சர்வதேச பயங்கரவாதத்தை" புலிகளின் இருப்பு ஒருவிதத்தில் தூண்டுவதாகவே கருதுகின்றது. குறிப்பாக இந்தியப் பொருளாதாரம் ஆசிய சந்தை வலைப்பின்னலை கோருகின்றது. இந்திய தரகுமுதலாளி வர்க்கம் கொண்டுள்ள மிகப்பெரிய உபரி மூலதனம், ஆசியச் சந்தையை விரைந்து திறந்துவிடக் கோருகின்றது. இந்த வகையில் தான் பாகிஸ்தானுடனான உறவுகள் கூட வேகமாக சீரமைக்கப்படுகின்றது. இதன் மூலம் அயல்நாடுகளுடனான நெருங்கிய வலைப்பின்னலை இந்தியா விரைவாகவே உருவாக்கி வருகின்றது. புலிகளின் இருப்பை தனது பொருளாதார நலன் சார்ந்து இனியும் இந்தியா அனுமதிக்காது என்பதுடன், ஆசியக் கடலில் கடல் மீதான தாக்கும் திறனை புலிகள் கொண்டிருப்பதை இந்தியா அனுமதிக்க முடியாது என்ற நிலையை வந்தடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜரோப்பா ஏகாதிபத்தியங்களின் ஆதரவும் உண்டு. இலங்கையில் அன்னிய தலையீட்டுக்குரிய சூழல்கள் பலதளத்தில் அதிகரிக்கின்றது. குறிப்பாக இந்தியாவுடன் அண்மைக் காலமாக ஜே.வி.பி கொண்டுள்ள உறவு மற்றும் மஹிந்த சிந்தனை கொத்து பேசும் ஆசிய பொருளாதாரம் என்ற முன்மொழிவுகள், இந்தியாவின் தலையீட்டுக்குரிய நிலைமையை கோடிட்டு காட்டுகின்றது. இதற்கு ஏற்ப புலிகளை பழிவாங்க காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியே இந்தியாவில் ஆட்சியில் உள்ளது.

2.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சர்வதேச தலையீடு நடக்காத பட்சத்தில், சமாதானம் உடன்பாடு எதுவும் காணாத ஒரு நிலையில், நடக்கும் யுத்தம் மிக கோரமானதாக முன்பு இலங்கை கண்டிராத மனித அழிவை ஏற்படுத்துவதாக அமையும். இதன் மூலம் கூட சர்வதேச தலையீட்டை கொண்டு வரும்; புறச் சூழல் காணப்படுகின்றது. இந்த யுத்தம் முன்பைவிட மிகக் கோரமானதாக அமையும்.

பரஸ்பரம் தற்கொலையை நோக்கி நடத்தும் இறுதி அரசியல் என்பதால், கண்மூடித்தனமான மனித அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் யுத்தம் மனித இனத்துக்கே எதிராக அரங்கேற்றப்படும். இன்று புலிகள் அரசியல் ரீதியாக சந்திக்கும் கடும் நெருக்கடியும், அதில் இருந்து தப்பிப் பிழைக்க முனையும் போக்கில் யுத்தத்தை மிகக் கோரமாகவே புலிகள் நடத்த முனைவர். இதற்கு ஏற்;ப அனைத்து ஆற்றலுடன் சிங்கள இனவாதிகளும் ஒன்று கூடியுள்ளனர். ஆச்சரியம். ஆனால் இதுவே உண்மை.

குறிப்பாக ஜே.வி.பி தன்பின்னால் அணிதிரட்டியுள்ள இளைஞர் சக்திகளை இராணுவமயமாக்குவது ஜே.வி.பியின் இரகசிய திட்டங்களில் ஒன்று. அதை இந்த அரசின் மூலம் செய்யும் சதித்திட்டம் ஜே.வி.பியிடம் உள்ளது. இதன் மூலம் அவர்கள் தம்மை ஆயுதபாணியாக்கும் அரசியல் உத்தி இதில் கையாளப்படவுள்ளது. அதாவது புலிகளை ஒழிக்கும் யுத்தத்தில், ஜே.வி.பி இராணுவத்தின் ஊடாகவே ஆயுதபாணியாகும். இனவொழிப்பின் பெயரில் நடக்கவுள்ள இந்த ஆயுதமயமாதல், இலங்கை அரசியலையே இராணுவ ரீதியாக கைப்பற்றும் ஜே.வி.பியின் கடந்தகால கனவே அரசியல் ரீதியான சதியாக இங்கு அரங்கேறும். இனஒழிப்பு உள்ளடக்கிய வகையில், இலங்கையில் தமது அதிகாரத்தைக் கைப்பற்றும் சதித் திட்டத்தை ஜே.வி.பி கொண்டுள்ளது.

உண்மையில் கூலிப்பட்டாளமான சிங்கள இராணுவத்தின் இனவாத உள்ளடகத்தையே தான் அதில் இணைந்து கொள்வதன் மூலம் புரட்சிகரமானதாக காட்டமுனையும்;. இதன் மூலம் கூலிப்பட்டாளம் என்ற மனப்பாங்கை இல்லாததாக்கி, நாட்டுப்பற்று யுத்தமாக ஜே.வி.பி செய்து முடிக்கும் உத்தி இங்கு செறிந்து காணப்படுகின்றது. இதன் மூலம் இரண்டு பக்கத்திலும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட யுத்தம், மிகக் கொடூரமான தன்மை கொண்டதாக மாறும். ஜே.வி.பி தன்னை ஆயுதபாணியாக்குவதுடன், தமது சொந்தப் புரட்சி திட்டத்துக்கு அமைய அதிகாரத்தை நோக்கி இது நகர்த்தும். இந்த இரகசியத் திட்டமே யுத்தத்தை கொடூரமாக நடத்த நிர்பந்திக்கும். ஆகவே யுத்தத்தை நோக்கி வியூகங்கள் மிகவும் நுட்பமாகவே திட்டமிடப்படுகின்றது.

இதற்கு புலிகளின் நடத்தைகளையும், மக்களிடம் இருந்து விலகி வாழும் அவர்களின் எல்லா மனித விரோத செயலையும் அவர்கள் நுட்பமாகவே பயன்படுத்துவர். புலிகள் தமது சொந்த நடத்தைகள் மூலமே இதற்கு துணைபோவார்கள். தேர்தலில் எப்படி மஹிந்த ராஜபக்ஷ வெல்வதற்கு புலிகளின் அரசியல் நடத்தை உதவியதோ, அப்படி ஜே.வி.பி ஆயுதபாணியாகவும் புலிகளே உதவுவர். ஜே.வி.பி ஒருபடி மேலே சென்று கருணா குழு உட்பட அனைத்து புலியல்லாத புலியெதிர்ப்புக் குழுக்களையும் நவீனமாக அணிதிரட்டி ஆயுதபாணியாக்குவர். புலியெதிர்ப்பு அணியை எதிர்த்து போராடுபவர்களை புலிகள் ஒழித்து வருவதால், ஜே.வி.பிக்கு அந்த வேலையை இல்லாதாக்கிவிடுகின்றனர். ஜே.வி.பியின் கடும் எதிர்pகள் இவர்கள் தான். ஜே.வி;.பியின் புரட்சி பற்றிய மாயை அம்பலமாவதை, புலிகள் படுகொலை நடத்தை மூலம் தற்காப்பு பெற்றுவிடுவார். ஜே.வி.பி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய கடும் நெருக்கடிகளை கடந்த, தமிழ் தரப்பை இதன் மூலம் அணிதிரட்டிவிடுவர். தமிழரை தன்பின்னால் அணிதிரட்ட, புலிகளே மறைமுகமாக தமது சொந்த நடத்தைகள் மூலம் துணை நிற்பர். மக்களை வெறும் கூலிப்பட்டாளமாக ஆனால் மிகவும் நுட்பமாக புரட்சியின் பெயரில் திரட்டிவிடுவார்கள். இது முன்பைவிடவும் புலிகளுக்கு கடும் சவாலாக மாற்றும்.

யூ.என்.பி யின் பரிதாபகரமான இந்த அரசியல் முடிவு ஏன் எற்பட்டது

சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் வீசிய இனவாத வலையில் சிக்கிய யூ.என்.பி, பரிதாபகரமாக தோற்றுப் போனது. அமைதி சமாதானம் என்ற ஏகாதிபத்திய விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு கருவியாகவே யூ.என்.பி செயல்பட்டது. இந்தவகையில் செயல்பட்ட யூ.என்.பி, உருவாக்கிய தனது ஆரம்ப தேர்தல் வியூகங்கள் நிச்சயமாக யூ.என்.பியின் வெற்றியை உறுதி செய்திருந்தது. இதுபற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் தேர்தலின் இறுதி நாட்களில் தனது தோல்வியை ஏற்படுத்தக் கூடிய, தனது சொந்த தற்கொலைக்கு ஒப்பான புலியெதிர்ப்பு பாதையை தேர்ந்தெடுத்த போது பரிதாபகரமாகவே தோற்றுப் போனார்கள். திடீரென தோற்கடிக்க வைத்தவர்கள் புலிகள். இனப்பிரச்சனைக்கான தீர்வில் தான் யூ.என்.பி யின் வெற்றி என்ற அரசியல் உண்மையை கைவிட்டு, எதிர்தரப்பின் இனவாத எல்லைக்குள் சறுக்கி வீழ்ந்த போது தோல்வி நிச்சயமாகியது. இதில் புலிகள் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகித்துள்ளனர். ஆரம்பத்தில் மக்களின் சுதந்திரமான வாக்குப் பதிவு மூலம் யூ.என்.பியை வெல்லவைக்கும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரச்சாரத்தை முழு மூச்சில் பினாமிகள் மூலமும், தமிழ் ஊடகங்கள் மூலம் செய்தனர். அதேநேரம் புலிகள் உத்தியோகபூர்வமாக ஒன்றும், தம்மால் உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புகளின்; பெயராலும் பினாமிகள் மூலம் இன்னொன்றுமாக ஆடிய சூதாட்டத்தில் முடிவில் புலிகளும் தோற்றதுடன், யூ.என்.பியும் தோற்றப்போனது. இதற்கு கடைசி பத்து நாட்களில் யூ.என்.பி புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் வகையில், பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போது நிலைமை திடீரென மாறியது. புலிகள் உருவாக்கிய கற்பனை அமைப்புகள் வாக்களிப்புக்கு எதிராக விட்ட விசேட எச்சரிக்கைகள், தமிழ் பினாமிய ஊடகங்கள் யூ.என்.பி க்கு எதிராக நடத்திய திடீர் பிரச்சாரம் என அனைத்தும் அரசியல் நிலைமையையும் தலைகீழாக்கியது. அரசியல் சதியாலான நடத்தைகள் ஏற்படுத்திய தோல்வி, அனைவருக்குமானதாக மாறியது. இதை கடைசி நேரத்தில் புரிந்துகொண்டு, அவசரமாக யூ.என்.பி சந்திரசேகரனை வன்னிக்கு தூது அனுப்பிய போதும், புலிகள் முந்தைய தமது நிலைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். இதன் மூலம் தோல்வி உறுதி செயப்பட்டது.

சமாதானம் அமைதி என்ற மையக் கோசம் சரியாக வைக்கப்பட்டு இருந்தால், வெற்றி யூ.என்.பியின் பக்கம் தான் என்பதற்கு எந்த ஐயப்பாடும் யாருக்கும் கிடையாது. அதாவது தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து இருந்தால் இந்த வெற்றி உறுதியானது. ஆனால் நடந்ததோ எதிர்மாறானாது. இது ஒரு தீடிர் திருப்பமாகும்; சிங்கள இனவாதிகளான ஜே.வி.பி உள்ளிட நடத்திய விரிவான இனவாத அரசியலைக் கண்டு அஞ்சிய யூ.என்.பி, புலிகளுக்கு எதிராக நடத்திய உரைகளே புலிகளின் தனிப்பட்ட ஒரு எதிர்வினையாகியது. அவர்கள் யூ.என்;.பி சீண்டிய போது, மொத்த வாக்களிப்புக்கும் எதிரான வன்முறையை ஏவிவிட்டனர்.
கருணாவை நாமே பிளந்தோம், புலியின் ஆயுதக் கப்பல்களை நாங்களே கடலில் தகர்த்தோம், சர்வதேச வலைப்பின்னலை புலிக்கு எதிராக நாங்களே உருவாக்கினோம் என்று யூ.என்.பி நடத்திய உரைகள், தனிப்பட்ட புலிகளின் வங்குரோத்து அரசியலை அம்பலமாக்கத் தொடங்கியது. இந்த வங்குரோத்து அரசியலில் சிக்கி கிடந்த புலிகளின் அரசியல், மேலும் வங்குரோத்துக்குள் அம்பலமாகத் தொடங்கியது. இதில் இருந்து அரசியல் ரீதியாக தப்பிப்பிழைக்கவே வாக்களிப்பதற்கு எதிரான தடையை உத்தியோகபூர்வமற்ற வகையில் நடைமுறைப்படுத்தினர்.

தமிழ் மக்களிடம் இருந்து புலிகள் வேறுபட்டு நிற்பதை அம்பலமாக்கிய தேர்தல்.
மக்கள் வாக்களிக்க கூடாது என்பதை கற்பனை அமைப்புகள் மூலமும் பினாமிகள் மூலமும் தான் புலிகள் முன் வைத்தனர். இதைக் குண்டுகள் மூலமும், துப்பாக்கிகள் மூலமும், ரயர் எரிப்புகள் மூலமும் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் இது யூ.என்.பியின் குறிப்பான சில உரைகளுக்கு எதிரானதாக அமைந்தது. புலிகளின் அரசியல் பேரங்களையே அம்பலப்படுத்தும் இந்த உரைகள், பகிரங்கமாக மக்கள் முன் வந்தபோது அதன் எதிர்வினையாகவே புலிகளின் நடவடிக்கை அமைந்தது. தற்செயலான இந்தச் சம்பவம், இலங்கை வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது.

புலிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை அமுல் செய்த போது, அதை துப்பாக்கிகள், குண்டுகள், ரயர் எரிப்புகள், பயமுறுத்தல் ஊடாகத் தான் கையாண்டனர். மக்கள் தாங்களாகவே இதைப் பகிஸ்கரிக்கவில்லை. புலிகள் பலாத்காரமாகவே பகிஸ்கரிக்க வைத்தனர். புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை இது மறுபடியும் தெளிவாக்கியது.

புலிகள் தமது பலாத்காரத்தை பிரயோகிக்க முடியாத பலவீனமான பிரதேசங்களில் புலிகளின் விருப்பை மீறி மக்கள் வாக்களித்தனர். இது புலிகளிடம் பிரிந்துகிடக்கும் மக்களின் மன நிலையைக் காட்டியது. ஒருபுறம் தேர்தல் பகிஸ்கரிப்பை மக்களின் விருப்பை மீறி பலாத்காரமாகவே புலிகள் நடத்த முடிகின்றது. மறுபுறம் புலிகளின் அதிகாரம் அற்ற பிரதேசங்களில் மக்கள் புலிகளின் விருப்பை மீறி வாக்களிக்கின்றனர். புலிகளை மக்களை ஆதரிக்கின்றனர் என்பதும், அவர்கள் ஏக பிரதிநிதிகள் என்று கூறுவதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. புலிகளின் விருப்பை மக்கள் தமது சொந்த அரசியல் சித்தமாக கொள்ளாமையைத் தான், இந்த தேர்தல் மறுபடியும் அம்பலமாக்கியது. அவர்களின் விருப்பை மீறி வாக்களித்த போது, இங்கும் புலிகளின் விருப்பை மீறி யூ.என்.பியை வெல்ல வைத்தனர். அதாவது இந்த வெற்றியை பிரபாகரனின் ராஜதந்திர முடிவு என்று கூறும் இன்றைய பினாற்றலை, தமிழ் மக்கள் மறுத்துத்தான் வாக்களித்தனர். எந்தளவு மிகப் பெரிய உண்மைகளை நாம் காண்கின்றோம்.

இப்படி புலிகளின் விருப்பை மீறி யாழ்குடா அல்லாத வடக்கு கிழக்கு பகுதிகளில் கணிசமான வாக்களிப்பு நடந்துள்ளது. அத்துடன் வடக்குகிழக்கு அல்லாத பகுதிகளிலும் கூட வாக்களிப்பை தமிழ் மக்கள் நடத்தியுள்ளனர். இது புலிகளின் அரசியல் முடிவுக்கு மாறானது. தமிழ் மக்களை புலிகள் கட்டுப்படுத்தும் ஒரு இயல்பான அரசியல் தலைமையை புலிகள் வழங்கிவிடவில்லை. வாக்களித்த தமிழ் மக்களில் பெருபான்மையானோர் யூ.என்.பிக்கே வாக்களித்தனர். இது புலிகளின் இறுதி விருப்பமாக இருக்கவில்லை. இதிலிருந்து மக்களின் விருப்பு வேறொன்றாக ஒன்றாக இருந்தது. உண்மையில் யூ.என்.பிக்கு எதிராகத் தான், புலிகள் இந்த பகிஸ்கரிப்பையே கோரினர். பார்க்க அனைத்து தமிழ் செய்தி ஊடகங்களின் இறுதி தேர்தல் காலச் செய்திகளையும், கட்டுரைகளையும். ஆனால் மக்கள் இதற்;கு எதிராகவே தெளிவாக வாக்களித்துள்ளனர். இது புலியின் அரசியல் விருப்பங்களுக்கு மாறானதாகவே அமைந்தது. மக்கள் என் இப்படி வாக்களித்தனர். மக்கள் சமாதானத்தையும், அமைதியையும் விரும்புகின்றனர். இனவாதிகளை வெறுக்கின்றனர். இதைத் தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையும், அதன் முடிவுகளும் எடுத்துக் காட்டுகின்றன.

தமிழ் மக்கள் சொல்லும் செய்தி தான் என்ன

அமைதி, சமாதானம் இதுவே வாக்களித்த மக்கள் தெளிவாக சொல்லும் செய்தி. இனவாதிகளுக்கு எதிராகவும், யுத்த வெறியர்களுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். யுத்தத்தைத் தூண்டும் புலிகளின் அரசியல் விருப்பையும் மீறி, அவர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். யூ.என்.பிக்கு வாக்களித்ததன் மூலம், புலிகள் யூ.என்.பி மீது கொண்டிருந்த நட்பு மற்றும் பிளவு சார்ந்த அரசியலைக் கூட மறுத்து யூ.என்.பிக்கு வாக்களித்தனர். யூ.என்.பிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது என்பது, அவர்கள் அமைதியை கொண்டு வருவார்கள் என்ற வெளிப்படையான நம்பிக்கை மட்டும் தான் காரணம். மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியாக தன்னை அடையாளப்படுத்திய போது, அதை எதிர்த்து தமிழ் மக்கள் வாக்களித்தனர் அவ்வளவே. இங்கு புலிகளின் விருப்புகளைக் கூட மறுத்தனர். புலிக்கு எதிராகவும் கூட வாக்களித்தனர். மக்கள் விரும்புவது புலிகளின் தனிப்பட்ட சொந்த விருப்பங்களை அல்ல, அவர்கள் வேண்டியது அமைதியையும் சமாதானத்தையுமே.

புலியெதிர்ப்பு அணியினரின் அரசியலை தமிழ் மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் சார்பாக வீறாப்பாக மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நின்ற இவர்களுக்கு எதிராகவே சுதந்திரமாக மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர். யுத்தவெறி அரசியல் அணுகுமுறையையும், ஜனநாயகத்தின் பெயரில் செய்யும் அரசியல் துரோகத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமது ஒருமித்த எதிர்ப்பை, புலிகளின் விருப்பையும் மீறி வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த புலியெதிர்ப்பு கும்பலும், முகம் தெரியாத புலியெதிர்ப்பு பினாமிகளும், தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையை வர்க்க சார்பானது என்று காட்டி வாய்கிழிய கத்துகின்றனர். இந்த கும்பல் சொந்த அரசியலில், சொந்த நடத்தைகளின் வர்க்க ஆய்வையும், வர்க்க சார்பையும், வர்க்க நடத்தையையும் கொண்டிராத இந்தக் கும்பல் தான் தமிழ் மக்களின் வர்க்கம் பற்றி பேசுகின்றன. இதுதான் நகைப்புகுரிய ஒரு அரசியல் உண்மையும் கூட. மக்கள் விரோத சொந்த அரசியலை நியாயப்படுத்தவும், மக்களின் விருப்பை சோடித்துக் காட்டவுமே வர்க்கம் பற்றி பேசுகின்றனர். உங்களுக்கு என்ன தார்மிகப்பலம் உள்ளது, வர்க்கங்களைப் பற்றி பேசுவதற்கு. ஐரோப்பிய யூனியனுக்கு முன்னால் நின்று, அவர்களின் வளர்ப்பு நாயாக வாலாட்ட தயார் என்று கோசம் போடும் அரசியலுக்கு, ஒடுக்கப்பட்ட எந்த வர்க்க அரசியலும் இருப்பதில்லை. மாறாக அதே யூ.என்.பி வர்க்க அரசியலே இவர்களிடமும் உள்ளது. இன்று புலியெதிர்ப்பு அரசியலுக்காக தலைமை தாங்கத் தொடங்கியுள்ளவரும், ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற அரசியலை கட்டமைப்பவருமான ஜெயதேவன் அரசியல் பற்றி, நாம் விரிவாக மற்றொரு கட்டுரை ஒன்றில் பாhக்கவுள்ளோம்;. இந்த ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம் முன்னால் நின்று கோசம் போடும் அரசியலுக்கு வழிகாட்டும் ஜெயதேவனும் சரி, ரி.பி.சியும் சரி, தேனீ இணையமும் சரி அல்லது இந்தக் கும்பலுடன் கூடி கூத்தடிக்கும் அனைத்து புலியெதிர்ப்பு வாதிகளும் சரி, என்றுமே வர்க்க அரசியலை தமது சொந்த அரசியல் அணுகுமுறையாக கொண்டது கிடையாது. மாறாக மக்கள் விரோத அரசியலை, புலி அழிப்பு அரசியலை யார் மூலமாவது சாதிக்க நினைப்பதற்கு மேல், இவர்களின் கைக் கூலித்தனமான அரசியல் செயல்படுவதில்லை.

இதற்காக தமிழ் மக்களின் வாக்களிப்பை யூ.என்.பியுடனான வர்க்க சார்பாக புரட்டிக் காட்டுகின்றனர். யூ.என்.பி வர்க்க அரசியல் சார்பு கொண்ட புலியும், தமிழ் கூட்டமைப்பும், புலியின் குறுகிய நலன் சார்ந்து யூ.என்.பியை எதிர்த்த போது, மக்கள் அதை ஆதாரித்து வாக்களி;த்தனர். உண்மையில் தமிழ் மக்கள் விரும்பியது அமைதி சமாதானத்தைத் தான். ஆனால் சமாதானத்துக்கும் அமைதிக்கும் பாரிய பங்கம் ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக காவடி எடுத்து இவர்கள் ஆடிய போது, புலியின் பின்னால் மறைந்து நின்றே சன்னதம் ஆடினர். புலிகள் திடீரென நிர்வாணமாகிய போது, இதன் பின்னால் நின்று ஆடியவர்களின் அரசியலை மக்கள் தெளிவாக நிர்வாணமாக்கினர். புலிகளின் முடிவை மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அரசியல் முடிவையும் கூட சுதந்திரமாகவே நிர்வாணமாக்கினர். ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. மக்கள் விரும்பும் அமைதி, சமாதானம் அனைத்தின் எதிரியாக இவர்கள் இருப்பது நிர்வாணமாகியது.

கருணாவின் அரசியலை அம்பலமாக்கிய மக்கள்

யாழ் மையவாத விடுதலைப்புலிகள் கிழக்கு மக்களை ஒடுக்குவதாக கூறிக்கொண்டு, பிரதேசவாதத்தை முன்வைத்து தனது சொந்த தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக பிரிந்து சென்ற கருணாவின் அரசியலுக்கு கூட மக்கள் பதிலளித்துள்ளனர். மக்கள் விரோத புலி அரசியலையே கொண்டுள்ள கருணா, ஒன்றும் மக்களுகாக போராடவில்லை. அதே புலி அரசியல், அதே புலிப் பணி படுகொலை அரசியலையே கொண்டு கிழக்கில் தொடர் படுகொலைக்கு களமமைத்து கூத்தாடுவதே கருணா அரசியல்.

இந்த கருணா மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கும் படி விடுத்த வேண்டுகோளை கிழக்கு மக்கள் தெளிவாகவே நிராகரித்துள்ளனர். கிழக்கு மக்கள் சமாதானத்துக்கும் அமைதிக்குமாக வாக்களித்துள்ளனர். கருணா கேட்டவுடன் அந்த மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒடிச்சென்று வாக்களித்துவிடவில்லை. புலிகளின் கோரிக்கையை எப்படி மக்கள் நிராகரித்தனரோ, அப்படி கருணாவின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளனர்.

இதைவிட முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ் என அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்காலத்தில் சிதைந்த போகும் வகையில் முடிவுகள் வந்தடைந்துள்ளனது. பிளவுகளும், சீராழிவுகள் எதார்த்தமான நிகழ்ச்சி நிராலாகிவிட்டது. இலங்கை முழுக்க இந்தத் தேர்தல் எற்படுத்தியுள்ள விளைவுகள், இலங்கையின் கொந்தளிப்பான ஒரு பலதரப்பான சமூக நெருக்கடிக்குள் நகர்வதை உந்திதள்ளியுள்ளது.

6 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

ரயாகரன்

இது ஆக அநியாயம்
புலிகள் ரணிலுக்கு வாக்களிக்கும்படி சொல்லியிருந்தால் புலிகளும் ரணிலும் வர்க்கச் சகோதர்கள் என்பீர்கள்.
மகிந்தவுக்கு வாக்களிக்கச் சொல்லியிருந்தால் புலிகள் பேரினவாதத்தின் அடிவருடி என்பீர்கள்
இல்லை இரண்டு பேருமே வேண்டாம் வாக்களிக்கவே வேண்டாம் என்றால் அதுக்கும் ஏதாவது காரணம் கண்டுபிடிக்கிறீர்கள்

இதுக்கு இரண்டே இரண்டு வழிதான் இருக்கு
ஒன்று புலிகள் தங்கள் சார்பில் ஒருத்தரை நிற்பாட்டி அவருக்கே தமிழ்மக்களின் வாக்குகளை அளிக்கவேண்டுமென்று சொல்லியிருக்கலாம்(இதுக்கும் நீங்கள் புலிகளின் பாராளுமன்ற ஆசை என்று அறிக்கை விடுவீர்கள் என்பது வேறு கதை)
இரண்டு ஆயுர்வேத வைத்தியர் ஹெட்டிகொடவுக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கோரியிருக்கலாம்

ஆகக் குறைந்தது இயற்கையை நேசிப்பவர்கள் என்ற பட்டமாவது அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

இடதுசாரி வாசுதேவநாணயக்காரவே மகிந்தவை ஆதரிக்கிறார் அவரைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே

தமிழரங்கம் said...

நட்புடன் ஈழநாதனுக்கு

உங்கள் கேள்வி தர்க்க பூர்வமானது. அதுபோல் உங்கள் வாதமும் தாக்க பூர்வமானதே.
இது அறிவியல்பூர்வமாக கேள்வி எழுப்புகின்றது. விதண்டவாதமாக அல்ல. அந்த வகையில் இது முக்கியமானதே.

மறுபக்கத்தில் பாருங்கள் இந்த வாதத்தை ஒத்த வகையில், இந்த நடவடிக்கை பிராகரனின் ராஜதந்திரம் என்கின்றனர். அதற்கு மேலே சென்று பாலகுமார் பிரபாகரனின் விருப்பை அடைய அதாவது யுத்தத்தை அடைய இது போதும் என்கின்றார். இப்படி பற்றபல வாதங்கள். ஏன் ரி.பி.சி தமிழ் மக்கள் யூ.என்.பிக்கு வாக்களித்ததே, புலிகளை ஒழத்துக்கட்டக் கோரியே என்கின்றனர். இப்படி பற்பல. இதில் எனது வாதமும் உள்ளது.

எப்படி இதை நாம் புரிந்து கொள்வது. ஒரேயொரு அரசியல் அளவுகோள்தான் உள்ளது. அது மட்டும்தான் எமது குறுகிய புத்தியையும், குறுகிய நோக்கத்தைக் கடந்து நேர்மையான வழியைக் காட்டும். அது என்ன?; மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியல் தான்;. அரசியல் என்பது எனக்கோ, பிரபாகரனுக்கோ, புலிக்கோ, அல்லது யாருக்குமான தனிப்பட்ட ஒரு நலன் சார்ந்த விடையமல்ல. ஆனால் அப்படித் தான் பலரும் கருதி சொந்த குறுகிய நலனை இதன் மூலம் அடைகின்றனர். அதனால் தான் முரண்பட்ட கருத்துகள், வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றன.

நாம் மக்கள் நலனை என்ற விடையத்தில் நின்று தான் விடையங்களை ஆராயவேண்டும். எமது குறுகிய நோக்கில் இருந்தல்ல. எமது விருப்பில் இருந்தல்ல. மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை நிறைவு செய்யாத அனைத்து அனுகுமுறையும் தவறானது.

இன்று இருக்கும் பராளுமன்றம், ஜனதிபதி அத சார்ந்த ஜனநாயகம் என்பன மக்களுக்கானவையல்ல. அனைத்தும் மக்களின் முதுகில் சவாரி செய்வது தான். மக்களை எமாற்றி அவர்களின் வாழ்வை அழித்து அதில் குதிராட்டம் போடுகின்றது. மக்களுக்கான தேர்வு அல்லது அரசியல் அனைத்துமே தெளிவாக அம்பலப்படுத்தி புறக்கணிக்கப்பட வேண்டும்;. மேற்கில் மக்கள் தமது கோரிக்கையுடன் தேர்தலில் போட்டியிடமுடியும். எனென்றால் அவர்கள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்திவர்கள். அந்த பராளுமன்றங்கள் அங்கு உள்ளது. ஆனால் அதிகாரத்தை இதன் மூலம் மக்கள் பெறமுடியாது. இருக்கம் சமூக பொருளாதார அமைப்பு மக்களுக்கு எதிரானது என்பதெ அடிப்படைக் காரணம். இதை தேர்தல் மூலம் யாரும் மாற்றமுடியாது.

மூன்றாம் உலகில் முதலாளித்துவ ஜனநாயகம் என்பது நடைபெறத நிலையில், ஜனநாயகம் என்பதை பராளுமன்றம் தனது குறுகிய வழியில் பெற்ற போது அது ஜனநாயக விரோதமாகவே உள்ளது. அதாவது இந்த ஜனநாயகம் மேற்கின் நோக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதாவது மேற்கின் நலனை உறுதி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்ட இந்த பராளுமன்றம் மக்களுக்கு எதிராக மேற்ககு சார்பாக உள்னது. இங்கு மக்கள் தமது உறுப்பினரை தெரிவு செய்து, போராடவே முடியாது. இது எதாhத்தம்;

உண்மையில் மூன்றாம் உலகில் தேர்தல்கள் பகிஸ்கரிப்பட வேண்டும். மாறாக அந்த பகிஸ்கரிப்பை தெளிவாக மக்கள் நலன் சார்ந்தாக அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்;. அதாவது மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கு எற்ற ஒரு வழியை தெரிவு செய்துகொள்ள வேண்டும். இது தான் அவர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும்;. இங்கு சொந்த அதிகாரம் என்பது, தமது சமூக பொருளாதார விடுதலையை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டது. கீழ் இருந்து ஜனநாயகக் கூறுகளை கட்டி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தை, இந்த பராளுமன்றத்துக்கு மாற்றாக வைக்கப்பட வேண்டும். இன்று இலங்கையில் இதன் கூறுகள் கிடையாது.

அனைவரும் சொந்த நலன் சார்ந்த இதை அனுகி விபச்சாரம் செய்கின்றனர். மக்களின் முதுகில் குத்தி பிழைப்பு நடத்துகின்றனர். இது வாசுதேவநாணயக்காரர் என்ற பச்சொந்திக்கும் பொருந்தும்;.
பி;இரயாகரன்
21.11.2005

ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் ரயாகரன் உங்கள் பதில் மூலம் தெளிவு அடைந்தேன் நன்றி.என்னைப்பொறுத்தளவில் தமிழ்மக்களில் 90 சதவீதமானோர் தேர்தலைப் புறக்கணித்தனர் என்ற செய்தி உலக நாடுகளால் உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு விமர்சிக்கவும் பட்டிருக்கிறது இதைத்தவிர வேறொன்றும் நன்மையில்லை என்ற உங்கள் முடிவுதான் எனதும்.

Anonymous said...

MAMUU RAYAGARAN EENDA NEEINKA INNUM
SOLLELA ENNDU PARTHEEN

AHA NEEINKA MUTTALYILA MAAGIIRR POUUDUKERATHILA SPECIALIST

EEN MAANUU UNNKALLU VERA VELLAI ILLAIYA ITHUKAVA NEEINKA PARIS ILL
REFUGEEN ADCHEENKAL

NANREE
LUMBAN (THUSAN PUYAL)

ஈழபாரதி said...

Rajapakse will need to moderate if he seeks peace

By M.R. Narayan Swamy

A deeply divided Sri Lanka has chosen a known Sinhalese hardliner as its new president - but by the narrowest margin in the country's history. This itself is the first clear pointer that Mahinda Rajapakse, the current prime minister, will urgently need to shed some of his ethno-religious rhetoric and moderate himself if he wants lasting peace in his country.

The just over 50 percent of the votes Rajapakse got to grab the presidency against great odds is primarily due to the tactical mind of Velupillai Prabhakaran. The LTTE chief decided it would be easier to deal with a brazenly Sinhalese foe than someone like Ranil Wickremesinghe, who is more acceptable to the Tamils and a Western world intent on restarting the stalled peace process.


In contrast to Wickremesinghe, who as prime minister signed a path breaking, even if flawed, peace pact in 2002, Rajapakse feels the peace process has ended up cementing the LTTE. He is also ranged against Norway, the mediator. His fervent backers are JVP, a Sinhalese-Marxist party, and JHU, a party of Buddhist monks. Both JVP and JHU articulate the views of the Sinhalese majority in a country where Tamils, the minority, have traditionally complained of discrimination.


All this puts him in the firing line of LTTE, which declared its opposition to Tamils taking part in Thursday's presidential election saying both Rajapakse and Wickremesinghe were two sides of the Sinhalese coin. The LTTE stand effectively killed the prospects of a Wickremesinghe victory because it ensured that Tamils in the country's north and east who may have supported him never dared to vote.


Amid a virtual boycott by most Tamils, Rajapakse sneaked past Wickremesinghe by a wafer thin margin.


Prabhakaran would have ensured this with only one thing in mind: a Rajapakse victory is bound to strengthen the hands of Sinhalese hardliners and in the process give oxygen to the struggle for an independent Tamil Eelam state.


Prabhakaran, who will give his annual address Nov 27 as part of 'Heroes' Week', is unlikely to make peace with a Sinhalese-Buddhist hardliner. It is an ideology and mindset he has fought for over three decades. To push Rajapakse into an embarrassing corner, the LTTE chief will demand major concessions - if Colombo wants to restart peace talks stalled since April 2003. Wicremesinghe may have conceded Prabhakran's demands. Rajapakse will not - or cannot, at least easily - because of the JVP-JHU crutch. In the process, the LTTE will tell the world that it is Rajapakse, or the Sinhalese state, that is intransigent, not the Tigers.


If Rajapakse, like some of his predecessors earlier, decides to backtrack, he will be dubbed a 'betrayer' by Sinhalese hardliners, now his friends. At the same time, the new president will find that with his slender majority, it will not be easy to run the country - or even win any fresh parliamentary election.


'I am not a candidate for war, but it has to be an honourable peace,' Rajapakse said as the election results came in. That is easier said that done. If he wants to arrest the current dangerous levels of violence and bring lasting peace, the president will have to stop acting like a Sinhalese-Buddhist hardliner. If he does not, Sri Lanka will be in for troubled times.


At a time when Prabhakaran is fuming over the European Union curbs on his group following foreign minister Lakshamn Kadirgamar's assassination, intransigence on the part of Colombo will only mean more violence and more killings - even if there is no outright war. It is going to be tough for Rajapakse.


(The author is a Sri Lanka watcher and the author of two books on the Tamil Tigers.)

Anonymous said...

Daily Mirror (Colombo), Tues 22 November 2005
After the Presidential Elections: A wake-up call to all!
By Sathya
The outcome of the Presidential Election with all the excitement and disappointments of a one-day match is in the opinion of Sathya a wake up call to all, including Sathya whose hibernation was once again rudely disturbed.
Firstly, it was a wake up to the Tamil People. It was indeed a cruel irony that their self-proclaimed “sole representative” was bent on defeating Ranil Wickremesinghe, the Presidential candidate that the vast majority of the Tamil people wanted to see emerge as the victor! Of course, it was not the love for Ranil, but the fear of the Sinhala hardliners arrayed behind Mahinda Rajapakse that propelled the Tamil voters in Ranil’s direction.
Ultimately, the Tamil people living in areas under the direct military-intelligence and propaganda control of the LTTE were disenfranchised by the LTTE. It was not a boycott by the Tamil people. It was instead a boycott call by the LTTE backed by coercion, intimidation and force. So how come that the Tamil people behaved in a manner that was diametrically opposed to that of their “sole representative”, as evidenced by their preference when they came out in their numbers and voted for Ranil in areas where the Tigers could not directly and physically enforce their control? Well, that is the question that the LTTE will have to ponder over.
Meanwhile, the decision of the LTTE to disenfranchise the Tamil voter at this Presidential Election (in contrast to the creation of phantom voters at the last General Elections!) could well be the third historical blunder of the LTTE – the other two historical blunders being the expulsion of the Muslim people from the “traditional Tamil homeland” compelling the Muslim people to distance themselves from the Tamil national struggle and the assassination of Rajiv Gandhi which compelled India to list the LTTE supremo and his intelligence chief as the most wanted criminals in India.
If the LTTE reckoned that the International Community would empathise with it if Mahinda Rajapakse is elected with the support of Sinhala hardliners, they are in for another rude shock which is bound to follow the earlier shock treatment meted out by the European Union by imposing a travel ban on LTTE delegations.
If Anton Balasingham, Thamilselvan or LTTE’s international lobbyists were to complain to the West about the “hardliners” in Colombo, they are bound to be admonished for not allowing the people that they claim to “solely” represent to vote and ensure a victory for Ranil Wickremesinghe, their favoured candidate.
The writing is already on the wall with the comment by John Cushnahan, EUs Head of the Election Monitoring Mission at the media briefing following the elections that he would take up LTTE “discriminatory” and “unacceptable” behaviour with the Council of the European Union.The second wake up call is to Ranil Wickremisnghe. His policy of appeasement of the LTTE is not winning him any votes amongst broad sections of the Sinhala people as well as the Muslim people – not to mention the remnants as well as the fledgling Tamil democratic alternatives to the LTTE. Further, the emphasis on negative peace (i.e. the mere absence of war) with a so-called international security net to bail him out if things go wrong and the notion of an agreement only with the LTTE, with the SLFP being made a fait accompli is not exactly firing the imagination of the people in the South.
Ranil would also have realised that this is not the first time that the Tiger bit the hand that fed it. It is imperative that Ranil should now put into practice his campaign preachings about removing the peace process from partisan politics and to extend support to Mahinda Rajapakse’s fresh approach to the peace process based on inclusivity and human rights that goes beyond a mere “deal” between the Government of the day and the LTTE.
The third wake up call is to Mahinda Rajapakse. He must put into practice and in deed his stirring words following the taking of oaths that he no longer represents his voters and allies, but all sections of the Sri Lanka society. He can neither pursue the peace process, manage a mixed economy aimed at equitable growth or for that matter govern the country if he allows himself to be held hostage to the forces of ethnic and religious extremism and obscurantism in the south.
He has to put into practice and deed his words following the taking of oaths ceremony that he stands for an honourable peace for all the Peoples of Sri Lanka. While inclusivity in the peace process was sorely lacking in the manner in which it was being managed by Norway, LTTE and the Government of the day since the signing of the ceasefire agreement, Mahinda Rajapakse should recognize that once the process of consultations aimed at a broad consensus is advanced, there will come a time when the principle of “sufficient” consensus may have to be put into place based on the principles of democracy, secularism, pluralism. It is a consensus based on these principles that would ensure sustainability and equality.
The fourth wake up call is to the JVP. The JVP must realize that democracy, devolution and development are inseparably linked and that one cannot be advanced without the other.
In fact power-sharing and resource-sharing could well be the key link between democracy and development and is imperative particularly in a multi-ethnic, multi-religious and multi-cultural country like Sri Lanka. Diversity and differentiation rather than uniformity and homogeneity is the essence of Marxist ideology and philosophy. It is incumbent on the JVP, if it is truly a vanguard of the working people and the oppressed masses as it perceives itself to be, to take forward the cry of devolution rather than dismiss it as being archaic and obsolete.
In this regard, statements by the JVP during the election campaign that if the LTTE were to give up its demand for a separate state then the South would be prepared to go beyond a unitary State is welcome and could well be the basis for future negotiations. The responsibility now lies with the JVP as the vanguard of the working people to go before the people with that message rather than wait for a referendum and then call on the people to vote against devolution.
The role of a vanguard Marxist party (as the JVP perceives itself to be) is to raise the level of mass consciousness, rather than to get bogged down in false consciousness.
The fifth wake up call is to the religious organizations which are bent on playing politics. Every religion has its essentials and non-essentials. While the essentials of all religions are the same, it is the non-essentials like rites, rituals, and the institutionalization of religion with their personality cults that divide Peoples along religious lines.
State patronage to one religion in a multi-religious society leads to the alienation of other religions, just as much as the proselytizing based on global financial networks is the worst form of intolerance and threat to religious freedom and harmony between religions. The despicable manner in which religious organizations and personalities dabbled in politics during the election campaign is a wake up call to the people who espouse those religions to be vigilant against self-proclaimed messengers and servants of God.
The final wake up call is of course to Sathya to stop throwing brickbats at others and to start looking inwards into the chasm that governs word and deed of Colombo-based “civil” society to which he belongs! More on this at an “appropriate” time!
-------------------------------