தமிழ் அரங்கம்

Tuesday, March 7, 2006

மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?

மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?

பி.இரயாகரன்
07.03.2006


சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது சார்ந்து சிலர் தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். இதை மொழியின் பெயரால், தத்தம் சார்புத் தன்மையாலும், விடையத்தின் மீதான கவனத்தை இது திசை திருப்புவதாகவும், இன்னும் பலவாறாக கூற முனைகின்றனர்.
குறிப்பாக அஃறிணையில் இனம்காட்டி அம்பலப்படுத்துவதை பலர் ஆட்சேபிக்கின்றனர். இப்படி எழுதலாமா என்று கேட்கின்றனர். மொழியில் இப்படி எழுதுவதே தவறு என்கின்றனர். இப்படி கூறுபவர்கள் சிலர் எழுத்தாளனுக்கு இப்படித் தான் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடக் கூடாது என்று கூறும் ஜனநாயகவாதிகள்.

முன்பு பலதரம் நான் இது பற்றி விவாதித்துள்ளேன். நாயை நாயென்று தான் சொல்ல முடியும். நாயைப் போல் வாழ்பவனை எப்படித் தான் நாம் கூறமுடியும். பன்றியை பன்றியென்று தான் சொல்ல முடியும். மிருக குணத்தை கொண்டுள்ளதால் ஒரு மிருகத்தை மிருகம் என்று அழைக்க முடியுமென்றால், குறித்த மிருகத்தின் குணத்தை மனிதன் தனது குணமாக கொள்ளும் போது நாம் வேறு எப்படித்தான் அழைக்கமுடியும்.

தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் மனிதர்களின் கழுத்தையே வெட்டி அனாதரவாக வீதியில் எறிவதை நாம் எப்படி பண்பாகவும் நாகரிகமாகவும் விளித்து எழுதமுடியும். எப்படித்தான் முடியும், நீங்களே கூறுங்கள். இதை ஆதரித்து கொள்கை விளக்கம் வழங்குபவனை எப்படி நாம் பண்பாக விளிக்க முடியும். வெட்டும், கொத்தும் மட்டுமல்ல, மனித அவலங்களால் சமூகத்தை நாறடிக்கும் இந்த போக்குடன், நாம் எப்படி எந்த முகத்துடன் அனுசரித்து இணங்கிப் போகமுடியும். இதையே விதியென்றும், இதுவே இலட்சியமென்று திணிப்பவனை எப்படி நாம் அங்கீகரித்துப் போகமுடியும். மனிதர்கள் குதறப்படுகின்ற நிலையில், இரத்தம் வடியும் வாயில் தொட்டு எழுதும் கரங்களை எப்படி நாம் பண்போடு நாகரீகமாக கைகுலுக்கி அணுகமுடியுமா?. நீங்களே சொல்லுங்கள். சகமனிதனை மனிதனாக மதிக்க மறுத்து, வக்கிரத்துடன் வன்மம் புரியும் ஒருவனை நாம் சக மனிதனாக கருதி பண்பாட்டுடன் அணுகமுடியுமா?

தேசியம் என்ற பெயரில் உலகெங்கும் போதைவஸ்துகளை காவித்திரிந்து பணம் பண்ணியவர்களையும், மேற்கில் உள்ள மக்களுக்கு போதைவஸ்து கொடுத்து சீரழித்தவர்களை எப்படி நாம் பண்பாட்டுடன் நெருங்கமுடியும். அவர்கள் இன்று புலித் தேசியத்துக்கு நிதி கொடுக்கும் தேசிய புரவலர்களாகவும், தேசியத்தை தலைமை தாங்கும் தலைவர்களாகவும், புலியின் எதிர்தரப்பில் ஜனநாயகவாதிகளாக மக்களின் முதுகில் ஏறி நிற்பதை நாம் எப்படித் தான் அணுக முடியும்? மக்களின் விரோதிகள் உலகையே சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு பாய் விரிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். விபச்சார தரகருக்குரிய, இந்த பண்புகெட்ட மக்கள் விரோதிகளை நாம் எப்படி பண்போடு அணுகமுடியும். சொல்லுங்கள்.
பண்புடன் நாங்கள் இவர்களை அணுக வேண்டுமென்றால், நாம் பண்பு கெட்டவர்களாக முதலில் மாறவேண்டும். புலிகள் மட்டுமல்ல இன்று ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்பு அணியினர் பலருக்கும் இதுவே பொருந்துகின்றது. நாயிலும் கீழாக மக்களின் முதுகில் ஏறிநின்றி வம்பளந்து, சமூகத்தையே அசிங்கப்படுத்தி குரைப்போரை அனுசரித்து நாகரீகமாக அணுக முடியாது. உங்களால் அப்படி முடியும் என்றால் எப்படி முடியும்? அதைச் சொல்லுங்கள்.

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மக்களின் உழைப்பைச் சூறையாடி ஒட்டுண்ணியாக உறுஞ்சி வாழும் ஒருவனை, இவர்கள் யாரும் மக்கள் நலன் சார்ந்து தண்டித்தார்களா எனின் இல்லை. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுக்கு எதிரான ஒருவன் மீதான தண்டனை என்பது, மக்கள் நலனின் அவசியமானது. ஆனால் நடப்பது மக்களை சூறையாடுபவர்கள், சுரண்டித் தின்பவர்கள் தான், இதற்கு எதிரானவர்களை தமது வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். உழைப்பில் ஈடுபடாது மற்றவன் உழைப்பில் வக்கரித்து இரத்தம் குடிக்கும் அட்டைகளை நாம் பண்போடு அழைக்க முடியாது. மக்களின் வாழ்வை உறுஞ்சும் எவரையும் நாம் தோழமையுடன் இணங்கி நின்று தோள்கொடுக்க முடியாது. அவர்களின் மிருக நிலையை, சமூக உயிரியாக இல்லாத அந்த மனிதனின் மிருகத் தன்மையை தோலுரித்து அப்படியே நிர்வாணமாக காட்ட வேண்டியுள்ளது. போலியாக அவர்களுக்கு நாம் மகுடம் சூட்டமுடியாது.

3 comments:

-/பெயரிலி. said...

தோழர் இரயாகரன்,
நீங்கள் சொல்லும் ""மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?" இனை உணரமுடிகின்றது.

ஆனால், இப்போதுதான் உங்களை ஈழத்தமிழர்களிலே விடுதலைப்புலிகளின் எதிர்ப்பான காவலர் என்று பதிவுலகிலே கால்பாவா ஒரு பதிப்புல(க) தேசிக்காய் அரிஞர் தன் நிலையிலிருந்து இரங்கி... மன்னிக்கவேண்டும் ... இறங்கி வந்து சொன்னார். அவரே பார் ஆட்டியிருக்கின்றார் என்பதைக் காணாது இப்போது கீழே உள்ளதைச் சொல்லி அவரின் எதிர்ப்பினைச் சம்பாதித்துவிட்டீர்களே? :-(

/நாயை நாயென்று தான் சொல்ல முடியும். நாயைப் போல் வாழ்பவனை எப்படித் தான் நாம் கூறமுடியும். பன்றியை பன்றியென்று தான் சொல்ல முடியும். மிருக குணத்தை கொண்டுள்ளதால் ஒரு மிருகத்தை மிருகம் என்று அழைக்க முடியுமென்றால், குறித்த மிருகத்தின் குணத்தை மனிதன் தனது குணமாக கொள்ளும் போது நாம் வேறு எப்படித்தான் அழைக்கமுடியும்.

தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் மனிதர்களின் கழுத்தையே வெட்டி அனாதரவாக வீதியில் எறிவதை நாம் எப்படி பண்பாகவும் நாகரிகமாகவும் விளித்து எழுதமுடியும். எப்படித்தான் முடியும், நீங்களே கூறுங்கள்./

சிறில் அலெக்ஸ் said...

'நல்லவன்' 'நல்லவள்' என்பதற்கான விளக்கங்களும் அடையாளங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன.

புலால் உண்ணாதவருக்கு மிருகங்களை கொன்று உண்பவர்கள் மோசமானவர்கள் ஆனால் பூச்சிகளையே துன்புறுத்தக்கூடாதென்பவர்களுக்கு மற்ற எல்லோருமே கெட்டவர்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால் "நாய்போல வாழ்பவன்" என நீங்கள் ஒருவரை குறியிடும்போதே அவரும் உங்களை அப்படியே பர்க்க நேர்கிறது. இரண்டுபக்கமும் 'நாயம்' இருக்கிறது.

கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குற்றம் குறைகளில்லாதவர் என யாருமே இருக்க முடியாது.

உங்கள் கட்டுரையை முழுதாக படிக்கவில்லை. படிக்கத் துவங்கியதுமே தோன்றிய எண்ணங்களை பதிக்கிறேன்.

நாகரீகம் என்பது கூட தனிமனித ஆய்வுக்குட்பட்டதுதான். நாயே என திட்டுவது சிலருக்கு அநாகரீகமாகப் படலாம்.

"உங்களில் குற்றமில்லாதவன் முதலில் (இவள் மீது) கல்லெறியட்டும்" - இயேசு நாதர்

தமிழரங்கம் said...

நட்புடன் பெயரிலிக்கு

"இப்போதுதான் உங்களை ஈழத்தமிழர்களிலே விடுதலைப்புலிகளின் எதிர்ப்பான காவலர் என்று பதிவுலகிலே கால்பாவா ஒரு பதிப்புல(க) தேசிக்காய் அரிஞர் தன் நிலையிலிருந்து இரங்கி... மன்னிக்கவேண்டும் ... இறங்கி வந்து சொன்னார். அவரே பார் ஆட்டியிருக்கின்றார் என்பதைக் காணாது இப்போது கீழே உள்ளதைச் சொல்லி அவரின் எதிர்ப்பினைச் சம்பாதித்துவிட்டீர்களே?" நீங்கள் கூறுவது தெளிவாக புரியவில்லை. புரிந்தால் தான் உங்கள் கருத்தை தெளிவாக விளங்கி கொள்ள எதுவாக இருக்கும்.

மற்றும் சிறிஸ்க்கு
நல்லவன் கெட்டவன் என்று எப்படி நாம் வரையறுப்பது. இது அடிப்படையில் சமூக நலன் சார்ந்த உள்ளடகத்தில் மட்டுமே இதை பகுத்தாய முடியும். எந்த மதிப்பீடும், எந்த ஆய்வும் சமூகம் நலன் கடந்து கிடையாது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தாத நல்லது கெட்டது என எதுவும் கிடையாது. மனிதனுக்கு வெளியில் சிந்தனை உலகம் கிடையாது. மனிதன் சிந்திப்பது சமூகம் சார்ந்தது. தனிமனித விருப்பங்கள், அபிராயங்கள் சமூக விருப்பங்களாகிவிடாது.
பி.இரயாகரன்
80.3.2006