தமிழ் அரங்கம்

Sunday, December 31, 2006

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பி. இரயாகரன்.
01.01.2007


னித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.


பார்ப்பனீயம் பற்றிய அடிப்படை ஆய்வை நாம் நடத்த முனைகிறோம். இதுபற்றி புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், எதிரி பற்றிய குழப்பங்கள் உள்ளடங்கிய வகையில் உள்ள தெளிவின்மையை நாம் எதிர்கொள்கின்றோம். சாதிய ஒழிப்பு அவசியம் என்றதில் உள்ள தெளிவு, அதைப் பற்றிய உள்ளடக்கம் மீதானதில் தெளிவு கிடையாது.


சாதியம் பற்றிய அதிதீவிரமான கருத்துநிலைப் போக்கு, உள்ளடகத்தில் அறிவியலுக்கு புறம்பாகவே பல சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது. சாதியம் மனித குலத்துக்கு எதிரானது என்ற வகையில், அதை வேர் அறுப்பது மனிதனின் கடமை. சாதியைக் கடந்த மனிதன் மட்டும் தான், இயற்கையின் மனிதனாக உள்ளான். இதை மறுத்து, இதை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாதவொன்று.


எதிரி பற்றி சூக்குமமாகவும், பிறப்பை அடிப்படையாக கொண்டும், வெறும் நம்பிக்கைகளின் பின்னால் நின்றும், கற்பனையான புனைவுகளின் பின்னால் மிதக்கும் கருதுகோள்களில் நின்றும் சாதியை ஒழிக்க முடியாது. உதாரணமாக சாதியை பிறப்பை அடிப்படையாக கொண்டு வரையறுகப்படுகின்றது. இது பார்ப்பனீய கோட்பாட்டு விளக்கத்தில் ஒன்று. அதாவது இந்துமதத்தின் அடிப்படை விளக்கமும் கூட. இந்த நிலையில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, போராடப் போவதாக பாசாங்கு செய்வது நிகழத்தான் செய்கின்றது. அதாவது இந்த சாதியை எதிர்த்து போராட, பிறப்பை அடிப்படையாக கொண்டு, இனப்பிரிவை அடிப்படையாக கொண்டு போராடுவதாக கூறுவது கூட, உள்ளடகத்தில் பார்ப்பனீயம் தான்.


பார்ப்பானாக பிறப்பதும், பார்ப்பனீயமும் ஒன்ற அல்ல. பிறப்பு சாதிய வடிவில் இதன் போக்கில் உள்ளது உண்மை. ஆனால் பார்ப்பனீயத்தை மறுக்கும் பார்ப்பான், தன் சாதியை உதறும் பார்ப்பான் அவனை எப்படி வரையறுப்பது. ஒரு மனிதனாக மாறுவதை எப்படி நாம் வேறுபடுத்துவது! அதை எப்படி செய்யக் கோருவது! இதை நாம் எதிர்நிலையில் கீழ் இருந்தும் காணமுடியும். பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதற்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்த நினைப்பது உண்மையில் பார்ப்பனீயத்தை பாதுகாக்கின்றது.


இந்த பார்ப்பனீயத் தன்மை எதிர்நிலைப் போராட்டத்தில் பல கற்பனை புனைவுகளின் வெளிப்பாடாக மிதக்கின்றது. எதிரியை தவறாகவும், பகுதியாகவும் வரையறுத்து மனிதகுல எதிரிக்கே உதவுவது தொடருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிய ஒரு தெளிவை, சந்தேகங்களை எழுப்பியும், விடை காணமுடியாத புதிர்களை விடுவிக்கவும் விரும்புகின்றோம். உங்கள் பங்களிப்பை இதற்காக எதிர்பார்க்கின்றோம்.


அந்த வகையில்


1. பார்ப்பனீயம் என்பது மனித இனத்துக்கு எதிரானது. ஏன்? ஏப்படி?


2. நாம் பிறப்பை குறித்து பார்ப்பனீயத்தை வரையறுக்கவில்லை. ஏன்?


3. பார்ப்பனீய நடைமுறை உள்ளடகத்தின் வெளிப்பாட்டைத் தான், நாம் எதிராக காண்கின்றோம்.


4. ஆரியர் திராவிடர் என்ற வரையறைக்குள் பாhப்பனீயத்தை பொதுமைப்படுத்துவதை, நாம் எதிர்க்கின்றோம். ஏன்?


5. பார்ப்பானுக்கு எதிர் மற்றைய சாதிகள், என்ற பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதியக் கோட்பாட்டை நாம் எதிர்கின்றோம். ஏன்?


6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.


7. வருணத்தை தொழில் பிரிவினையாக காட்டிய அம்பேத்கார் வாதம் உட்பட, இது போன்ற குருட்டு வாதங்கைள நாம் மறுக்கின்றோம்


8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.


9. தொல்காப்பியத்தில் வருணம் இருந்ததா எனின் ஆம் என்று நாம் தெளிவாக பதிலளிக்கின்றோம். அது இடைச்செருகல் என்பதை மறுக்கின்றோம்


10. சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்ற மிகை வாதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றோம்.


11. அன்றைய ஆரியர் அல்லது பார்ப்பானே, இன்றைய பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பான் என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றோம். இன்றைய பார்ப்பான், அன்றைய பார்ப்பான் வேறுவேறானவர்கள்.


12. பார்ப்பான் என்ற ஒரு சாதியில் பிறந்தவர்கள என்பதால், அவர்களை பார்ப்பனீயமாக பொதுமைப்படுத்தி வகைப்படுத்துவதை நாம் மறுக்கின்றோம். பார்ப்பனீயம் பிறப்புக்குள்ளும், வெளியிலும் இயங்குகின்றது.


14. சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நாம் மறுக்கின்றோம். ஏன்?


15. இந்திய சமூக அமைப்பை வருண மற்றும் சாதிய அமைப்பு என்ற எடுகோளில் பின்னால், வர்க்க அமைப்பு எங்கே போனது? இந்திய சமூக அமைப்பு வர்க்க அமைப்பாக இருக்கவில்லையா? இந்த கேள்வி அவசியமற்றதா?


16. புத்தன் பார்ப்பனீயத்தை எதிர்த்தான் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். புத்தன் எதை மறுத்தான், எதை பாதுகாத்தான் என்பதை தெளிவாக முன்வைக்க முனைகின்றோம்.


17. சாதியம் எப்படியான எந்த சந்தர்ப்பத்தில் ஏன் தோன்றியது? என்பதை நாம் ஆராய முனைகிறோம்.


18 .பார்ப்பான் என்ற சாதி, சாதிய தோற்றத்தில் என்ன பங்கு வகித்தது என்பதை தெளிவுபடுத்த முனைகின்றோம்.


19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.


20. ஆபிரிக்காவில் சாதி உள்ளது என்ற வாதங்களை, நாம் மறுதலிக்கின்றோம்.


21. இந்து மதம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பதை அதாவது இதில் சாதி வேறு என்பதை மறுதலிக்கின்றோம்.


22. சாதிய சமூக அமைப்பு விதியை, அதன் சித்தாந்த கோட்பாட்டை பார்ப்பனீயமே உருவாக்கியது. அதாவது பார்ப்பனீயம் எந்த சாதிக்கு முதன்மையாக சேவை செய்கின்றதோ, அந்த சாதியின் கோட்பாடே சாதியம். இது அந்த சாதியை குறிக்கின்றதே ஒழிய, அதில் உள்ள நபர்களையல்ல. யாரெல்லாம் சாதியை வெறுத்து, சாதிக்கு வெளியில் சாதியை துறந்து, தனது அடையாளத்தை இழந்து வாழ முற்படுகின்றனரோ, அவர்களை இது உள்ளடக்காது. யாரெல்லாம் சாதியை கொண்டு அப்பிறப்பைக் கொண்டு சாதியாக வாழ்கின்றனரோ, அவர்களை இது மறுதலிப்பதில்லை. இது ஒடுக்குகின்ற சாதிகளில் பார்ப்பனிய சாதிக்கு மட்டும் குறுக்கிப் பொருந்தாது.


23. நான் பிறந்த சாதியை பார்ப்பனீயமாக வகைப்படுத்துவதை எதிர்க்க வேணடுமென்றால், சாதியை துறந்து ஒரு மனிதனாக வேண்டும்.


24. பார்ப்பனீயம் பார்ப்பான் சாதியைக் கடந்து காணப்படுகின்றது.


இப்படி பலவற்றை நான் எழுதி வரும் நூலினுள் விவாதிக்கின்றேன். இப்படி 50க்கு மேற்பட்ட தலைப்புகள். பெரும்பகுதி முடிந்த நிலையில் உள்ளது. எனது ஆய்வுகள் ஒரு அதிர்வை, அதிர்ச்சியை உண்டாக்கத்தக்கன.


உண்மையில் கடந்தகால நம்பிக்கைகள், ஆய்வுமுறைகள், சமூகத்தின் பிளவு மீதான ப+டகமான எடுகோள்கள், போராட்ட வழிமுறைகள், என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். சாதிய அமைப்பை புதிய முறையில், முன்னைய ஆய்வுக்கு மாறாக முன்வைக்கும் எனது ஆய்வு முறைக்கு, உங்கள் விவாதத்தினூடான பங்களிப்பை கோரி நிற்கின்றேன். உங்கள் கேள்விகள் மற்றும் பதில்கள், உங்கள் விவாதங்கள் மற்றும் மறுப்புகள், சந்தேகங்கள் மற்றும் தெளிவாக்கல் மூலம் நீங்களும் பங்களிக்க முடியும். நான் எனது முயற்சியை விவாதத்துக்காக உங்கள் முன் முன்வைப்பதன் மூலம், இந்த நூலுக்கு உதவும் வகையில் குறிப்புகள், தரவுகள், வாதங்களையும் முன்வைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அவற்றை விவாதிக்க அழைக்கின்றோம்.


தனி நூலுக்கான எனது இந்த முயற்சியில் 150 பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. 50 மேற்பட்ட தலைப்பை உள்ளடக்கிய இந்த நூல், இந்தியாவில் வெளியிடப்படும். நூலின் உள்ளடக்கம் விவாதம் மூலம் வளம்பெறும் என்ற வகையில், உங்கள் முன் பல பகுதிகளாக இம் மாத இறுதிக்குள் முன்வைக்க உள்ளேன்.


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாகும். அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிhபார்க்pன்றேன்.


இந்த நூலை எழுதத் தூண்டியது இலங்கை சாதியப் போராட்டம் தொடர்பான எனது மற்றொரு நூல் தான். சண்முகதாசன் தலைமையிலான கட்சி நடத்திய சாதிய போராட்டத்தின் தோல்விகள் வெற்றிகளை பற்றி எனது நூல் முழுமைபடுத்த முடியாத வகையில் சாதியம் பற்றிய வரலாற்றுப் பார்வை குறுக்கிட்டது.


1. சண் தலைமையிலான கட்சியின் மார்க்சிய பார்வை தவறுகள்


2. சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு


அம்பேத்கரின் தவறு இலங்கை சாதிய போராட்டத்திலும் தவறாக வழிநடாத்தியுள்ளது. இலங்கை சாதிய நூலின் வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்திய சாதியம் பற்றிய ஆய்வுகள் மீதான இந்த நூலை ப+ர்த்தி செய்ய உள்ளேன்.


நான் பார்ப்பனீயத்தின் எதிரி என்றவகையில் இந்த விவாதத்தை எழுதும் போது, பிறப்பை அடிப்படையாக கொண்டு எதிரியை வகைப்படுத்தவில்லை. பிறப்பு தற்செயலானது என்ற வகையிலும், பார்ப்பான் சாதியில் பிறப்பவர் பார்ப்பனீயத்தை பிரதிநிநித்துவம் செய்வர் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதையும் நான் அங்கீகரிக்கவில்லை. பார்ப்பனீய சிந்தாந்தம், அதன் நடைமுறை அம்சம், அதைக் கொண்டு நியாயப்படுத்தி வாழும் பிரிவுகளே, இந்த மனித குலத்தின் எதிரிகள்.


சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம்.


இந்த வாதத்தில் பார்ப்பனீயம் சரி என்பதை யாராவது முன்வைப்பார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்குமாறு கோருகின்றோம் ஏன்?, எதனால்? எப்படி?


1. பொருளாதார காரணமா!


2. சாதிய சமூக அந்தஸ்தா!


3. சாதிய பிறப்பா!


4. அல்லது எது?


இதை எந்த வகையில் மனித குலத்துக்கு முரணாக அல்லது சார்பாக நீங்கள் முன்வைத்து எப்படி சரியானது என்கின்றீர்கள்?


இந்தவகையில் இந்த விவாதத்தளம் மூலம் அல்லது எனது ஈமெயில் மூலம்mailto:tamilcircle@tamilcircle.net நீங்கள் பற்பல வழிகளில் உதவமுடியும்.


எமது தளத்தில் இடப்படும் கருத்துகள் நேரடியாக வரமுடியாத வகையில் உள்ளதால், அதை அனுமதிக்கும் வரை நீங்கள் காத்திருக்கவும். கருத்து அல்லாத தனிமனித தாக்குதல் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கருத்துகள் என்ற வகையில் உள்ள அனைத்தும் அனுமதிக்கப்படும். அடிப்படையான தர்க்கவாதங்களை, உங்கள் நியாயங்களை விளக்கும் வகையில், உங்கள் கருத்துக்களையே நாம் விரும்புவது இயல்பு அல்லவா! ஆமாப் போடுவது விவாதத்தக்குரிய நடைமுறையல்ல.


14 comments:

dondu(#11168674346665545885) said...

நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தி, டிஸ்கிகள் விட்டாலும் பார்ப்பனியம் என்னும் வார்த்தையை வைத்துக் கொண்டிருக்கும் வரை உங்கள் வாதங்கள் எல்லாமே பார்ப்பனராலும் மற்றவராலும் பார்ப்பனர்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் பார்க்கப்படும். கூறப்போனால், ஸ்ரீலங்காவில் வெள்ளாளீயம்தான் உள்ளது.

ஆகவே உயர்சாதீயம் என்று எழுதினால்தான் விவாதம் திசைதிரும்பாது போகும். இல்லையென்றால் இப்போதைய சூழ்நிலையில் வெளிப்படையாக சாதி வெறியைக் காட்டும் முதலியார், கவுண்டர், தேவர், வெள்ளாளர், நாயக்கர், வன்னியர் ஆகிய எல்லோரும் பார்ப்பனனை நோக்கி கைகாட்டி விட்டு ஒளிந்து கொள்கின்றனர்.

இவ்வாறு நடப்பதால் உங்கள் நோக்கம் அடிப்பட்டு போகிறது. பார்ப்பனர்கள் விவாதத்துக்கு வரமாட்டார்கள். மற்றவர்கள் பார்ப்பனர்களை திட்டுவார்கள்.

இதை முதலில் சரி செய்து கொள்வதே மேலே விவாதம் உருப்படியாக நடப்பதற்கான சூழ்நிலையைத் தரும்.

மற்றப்படி மேலே பேச இப்போதைக்கு ஒன்றும் இல்லை. இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழரங்கம் said...

நீங்கள் கருதும் அந்த பார்ப்பனீயம் தான் என்ன?

பார்பனீயம் தான் சாதியம்;.

உயர்சாதிக்காரன் என்ற தன்னை நினைப்பவனை, எப்படி நாம் மனிதனாக எற்றுக்கொள்வது?

பார்பானைக் காட்டிவிட்ட, இரண்டாவது முன்றாவது சாதிகள் ஒழித்து நின்று பாhபனீயமாகவே வாழ்வது அல்லது அதன் பின் நிற்பது என்பதை மனிதன குலம் எற்றுக்கொள்ளாது.

அடிநிலலைச் சாதியில் சாதியின் பெயரில் இருத்;தல் கூட, அதாவத சாதியின் பெயரால் சாதியை பாதுகாத்தல் கூட பார்பனீயம் தான்;

இலங்கையில் இருப்பது வெள்ளாளீயம் என்பது தவறு. அதவும் பார்பானீயம் தான். பிறப்பை வைத்து, அதன் சாதிய ஆளுமையை வைத்து, சாதியை வகைப்படுத்துவது கூட தவறானது. சாதியில் பிறப்பது தற்செயலானது.

சாதிக்கு வெளியில் ஒரு மனிதன் தன்னை அடையாளப்படுத்தவது முதன்மையானது.

பிறப்பால் ஒரு பார்பான் தனது சாதியின் பெயாரல் பார்பனீயமாக இருந்தால், அதை அங்கிகரிக்க முடியாது. அதே போல் பிறப்பால் பார்பானாக பிறந்த ஒருவன் பார்பனீயத்தை எதிர்த்தல் தான் மனிதத் தன்மை.

உயர் சாதி என்று கூறுவது என்பது பார்ப்பனீயம் உருவாக்கிய எல்லைக்கு உட்படதே. சாதியத்தின் முழுமைய அது குறித்து நிற்பதில்லை. பாhப்பனீயத்தை ஒரு பிரிவு தனது நலன் சார்ந்த உருவாக்கி, அதை முழு சமூகத்தின் கூறுலும் அது உள்ளடங்கியுள்ளது. இந்திய சமூக அமைப்பில், ஏன் இலங்கையிலும் கூட அது பார்பனீயம் சமூக பொருளாதார கூறை முழுமையாக சிதைத்து நிற்கின்றது. குறைந்த பட்சம் சுதந்திரம், ஜனநாயக விழுமியங்களைக் கூட அது மறுதளிக்கின்றது. பார்ப்பனீயம் என்பது நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்று தனக்கென்று ஒரு சமூக பொருளாதார கூறை உள்ளடங்கியது.

வினையூக்கி said...

// பார்ப்பனீயம் என்பது நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்று தனக்கென்று ஒரு சமூக பொருளாதார கூறை உள்ளடங்கியது.
//
சரியாக சொன்னீர்கள்.

dondu(#11168674346665545885) said...

"இவ்வாறு நடப்பதால் உங்கள் நோக்கம் அடிப்பட்டு போகிறது. பார்ப்பனர்கள் விவாதத்துக்கு வரமாட்டார்கள். மற்றவர்கள் பார்ப்பனர்களை திட்டுவார்கள்."

ரிபீட்டு.

அதுதான் உங்கள் விருப்பம் என்றால், அப்படித்தான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவேன் என்றால் அது உங்கள் விருப்பம். எனக்கென்னவோ நீங்கள் சந்தடி சாக்கில் உங்கள் சொந்த ஜாதியையும் - அது எதுவாக இருந்தாலும் - காபந்து செய்து கொள்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழரங்கம் said...

பார்ப்பனீயம் என்பது உள்ளடகத்தில் சாதியமாகவும் இருக்கின்றது. இதனடிப்படையில் பார்ப்பனீய ஒழிப்பில் பார்பன பிறப்பை கொண்டவர்களும் நேர்மையாக போராடுகின்றனர். அவர்கள் தமது சொந்த சாதிய அடையாளத்தை துறந்து, எரு மனிதன் என்ற எல்லையில் போராடுகின்றனர். யாராவது பார்பனராக இருந்து கொண்டு சாதியை ஒழிக்க முடியாது. இது எல்லாச் சாதிக்கும் கூட பொருந்தும்.

இந்த வாதத்தில் உள்ள தர்க்கம்; பற்றி, ஒரு விரிவான விளகத்தை நிச்சயமாக விரைவில் முன்வைக்க முடியும்; அந்த வகையில் உங்கள் வாதம் முரண்பாடாக இருந்த போதும், அதை தெளிவுபடுத்தும் சந்தாப்பத்தை இது தந்துள்ளது.

நீங்கள் கருதம் பார்பானீயம் என்ன? அதை தெளிவுபடுத்துங்கள். நாங்கள் கருதும் பார்ப்பனீயம் என்று எதை கூறுகின்றீர்கள். நீங்கள் கருதுவது என்ன?

இதில் இருந்து உயர்சாதியம் எப்படி வேறுபடுகின்றது அல்லது உடன்படுகின்றது. தெளிவுபடுத்துங்கள்.

பி.இரயாகரன்

ஜூலியன் said...

நீங்கள் கருதம் பார்பானீயம் என்ன? அதை தெளிவுபடுத்துங்கள். நாங்கள் கருதும் பார்ப்பனீயம் என்று எதை கூறுகின்றீர்கள். நீங்கள் கருதுவது என்ன?

good luck with explaining this to Dondu. You have a whole year in your hand.

Anonymous said...

ஐயா இராகரன் அவர்களுக்கு,

தன்னை ஒரு பார்ப்பான் என சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்ளும் டோன்டு போன்ற 'மனிதர்' களிடத்தில் நோர்மையான வாதப்பிரதிவாதங்களை எதிர்பார்க்க முடியாது. அவருடைய விவாதங்கள் எதிர்மறையாக உங்கள் நூல்களுக்கு பங்காற்ற முடியும் என்பதை தவிர வேறொரு பலனும் இராது.

மற்றபடி உங்களுடைய முயற்சி வரவேற்கத் தக்கதே. எளிமையான நடையில் நீங்கள் இந்நூலினை நீங்கள் தருவீர்களேயானால் இது பெருத்த வரவேற்ப்பை பெரும் என்பது உறுதி!

Anonymous said...

பார்ப்பனீயம் என்பது சூழ்ச்சியால் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டு அதற்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடாதபடி என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்து தங்கள் வாழ்வை உயர்த்திக்கொள்வது.அரசனை மயக்கி அவன் மூலம் மக்களை மயக்கிக் கடவுள் பயத்தை உண்டாக்கிக் கடவுள் எங்கள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர் என்பதைப் "படித்தவர்" படிக்காதவர் அனைவரையும் நம்பவைத்து ஏமாற்றுவதுதான் பார்ப்பனீயத்தின் அடிப்படை.
இந்த ஏமாற்று வேலைக்கு எதையும் செய்யலாம்.ஆட்சி யாரிடம் இருந்தாலும் அவர்களை எந்தவிதத்தில் வேண்டுமானாலும் மயக்கி பார்ப்பனீய்திற்குப் பயன்படச்செய்துவிடவேண்டும்.அதற்கு எந்த விலைவேண்டுமானாலும் தரலாம்.எதிரிகளைப் பிரித்து அடிமைப்படுத்து,எதைவேண்டுமானாலும்
கொடுத்து அடிமைப்படுத்து,அல்லது சேர்ந்து உள்கொள்கைகளை மக்க அடித்துவிடு{படிக்கட்டுச் சாதிப் பிரிவினை,வெள்ளைக்காரனைக் கைக்குள் போட்டுக் கொண்டது,முருகனுக்குத் தெய்வானையை மணமுடித்தது,புத்த மதத்தை உள்ளே புகுந்து அழித்தது-புத்தனை இன்னொரு அவதாரம் ஆக்கியது} எல்லாம் சொல்லும்.
எதையும் சிந்திக்கவிடாமல் தெய்வ நிந்தனை,நரகம் என்றெல்லாம் ஏமாற்று
என்று நன்கு தெரிந்தும் மூளைக்கு விளங்கிட்டுப் பரம்பரையாகச் சிந்திக்கும் திறனையே மழுுங்கச் செய்வது பார்ப்பனீயத்தின் அடிப்படை வழி.
மநு,அர்த்தசாச்த்திரம் அனைத்துத் தந்திரங்களையும் பட்டியல் போட்டுத் தருகிறது.
அந்த பார்ப்பனீயத்தில் மயங்கிவிட்ட போலிப்பார்ப்பனீயத்தின் எடுத்துக் காட்டுத்தான் தனக்கு மேல்படியில் இருப்பவனைக்கண்டு கோபப்பட வேண்டியதை விட்டுக் கீழ்ப்படியில் உள்ளவனைப் பார்த்துப் பெருமைப்படுவதும் அவர்களை அடிமைப்படுத்தி ஆன்ந்தப் படுவதும் ஆன புத்தியற்ற[சிந்திக்கும் திறமையைப் பரம்பரையாக இழந்துவிட்ட} மடத்தனம்.
சிலர் சொன்ன வார்த்தைகள் அனுபவப்பூரணமானவை என்பதால் எடுத்துக்காட்டுகிறேன்.அதனை அனுபவித்தவர்கள் கோணத்திலிருந்துப்ு பார்த்தால் நன்கு புரியும்.
விவேகாந்தர்-பார்ப்பனீயத்தால் இந்து மததிற்குக் கெடுதலும் அவமான்முமே.அவர்கள் வேறு யாருக்கும் எந்த நன்மையையும் செய்யாமல் உழைக்காமலேயே உண்டுகொழுப்பதில் வல்லவர்கள்
டாக்டர் நாயர்-நம்பிக்கையான் வேலையாள்,கொடுமையான முதலாளி
கழுத்தருக்கும் நண்பன்.
நேரு-இமய மலையில் உலவும் இந்தக்குண்டுச் சாமியார்களை வயல்களில் வேலை செய்ய்ச்சொல்ல வேண்டும்.

தமிழரங்கம் said...

பார்ப்பனீயத்தால் ஏன் விவாதிக்க முடிவதில்லை?

உயர்சாதி பார்பனர்கள் பாப்பனீயம் என்றால், விவாதிக்க மாட்டார்கள் என்று டொண்டு குறிப்பிட்டார். இந்த உள்ளடகத்தில் ஏன் என்று கேள்வியை எழுப்பியிருந்தேன். மற்றவர்கள் திட்டுவார்கள், அது இது என்றார். மற்றவர் யார்? நீங்கள் யார்? ஏன் திட்டுவர்? இந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பொதுவாக பார்ப்பனீயமும், நாங்கள் பார்பனர் என்று சொல்பவர்களும், தங்கள் நிலை சரி என்று விவாதிக்கும் ஆளுமையும் ஆற்றலும் எதுவும் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் தங்களது நிலையை தக்கவைக்கும் வாதங்களை முன்வைப்பது கூட கிடையாது. மனிதத்துக்கு எதிரான கோட்பாடு, நடைமுறை மற்றும் சமூக முறை என்ற வகையில், சதியையும் சூழ்சியையுமே, அதிகாரத்தையும் ஆதாரமாக கொள்கின்றது. இந்த வகையில் டொண்டு விவாதிக்க முன்வந்த போது, அதை நாம் எதிர்நிலையில் பார்க்கவில்லை.

விடையத்தை பற்றி அவர்களின் நிலை என்ன என்பதை அறிவதும், அதற்குள் விவாதிப்பது அவசியம் என்று கருதினோம்? அவர் நீங்கள் எனறும், நாங்கள் என்ற குறிப்பிட்டு கடுமையாக எழுதிய போதும், மென்மையாக விவாவதத்தின் உள்ளே விவாதிக்க துண்டினோம்.

ஆனால் அவராலும் தொடர்ந்து விவாதிக்க முடியவில்லை. எமது கேள்விகள் அப்படியே அவா முன் தொங்கி நிற்கின்றது. அதேபோல் பலர் முன்னும் நிற்கின்றது.

எதிர்மறையில் இவ்வாதம் உதவும் என்ற அடிப்படையில் அவசியமானது என்று கருதினோம். ஆரியமாயை போல் திரவிட மாயை உருவாக்கியுள்ள புள்ளிகளையும், பார்ப்பனீயம் போல் பார்பனீய எதிர்ப்பில் உள்ள கற்பனைகளை நாம் கண்டிறிந்துள்ளதுக்கு வெளியில், எந்த புள்ளியல் வேறு உள்ளன என்ற எமது தேடுதலுக்கு இவ்வாதம் அவசியம்.

பொதுவாக பார்ப்பனீயம் தொடர்பாக தமிழ்மண, திண்ணை விவாதங்கள் பல நடக்கின்றன. நடைமுறை சம்பவங்கள் தவிர, பார்ப்பனீய கோட்பாடு மீதான விவாதங்கள் ஆரோக்கியமாக நடத்தப்படவே இல்லை. முட்டிமோதும் மாட்டுக் கொம்புகளுக்கு இடையிலான ஒரு சண்டைக் காட்சியைத்தான் பார்க்கின்றோம். இதற்கு பின் ஒரு ரசிகர் கூட்டத்தில் கும்மளத்தை பார்க்கின்றோம். இது அறிவியல் ப+ர்வமான வகையில் புரிந்து, நடைமுறையில் மாற்றத்தை எற்படுத்தும் ஒரு யுத்தமாக பார்க்க முடியவில்லை. எழுத்து துறையில் ஆய்வு முறையை உள்ளடக்கிய ஒரு நடைமுறையை இது மறுதலிக்கின்றது. இதன விளைவு?

பி.இரயாகரன்

அசுரன் said...

//சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம். //
பார்ப்ப்னியத்தை நேரடியாக எதிர் கொண்ட தமிழ் மண அனுபவம் அது குறித்த ஒட்டு மொத்த புரிதலுக்கு உதவும் ஒரு புத்தகம் இல்லையொ என்ற சந்தேகத்தை என்னுள் எழுப்பியது. இப்போதைய உங்களுடைய நூல் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் என்று எதிர் பார்க்கிறேன்.

டோ ண்டு அவர்கள் பார்ப்ப்னியம் என்று குறிப்பிட்டால் பார்ப்பனர் விவாதம் செய்ய வரமாட்டான். பார்ப்பான் பாதிக்கப்படுவான் என்று சொல்கிறார். நாம் திருப்பிக் கேட்க்கிறோம். ஏன் உன்னை பார்ப்பனாக அடையாளப்படுத்திக் கொள்கிறாய்?

ஒரு பறையன் ஒரு சக்கிலியன், ஒரு மலம் அள்ளுபவன் தனது சாதியை பெருமையாக கூற முடியுமா இவ்வாறு?

மேலும், தமிழ் சர்க்கிள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் இல்லை.

உங்களுடைய 24 கேள்விகளில் எனக்கும் பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.

8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.

6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.

19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.

புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வர்ணம் என்பது மனிதன் பிறக்கும் போதெ குண்ம், அதற்க்குண்டான கடமை இவை நிர்ணயிக்கப்படுகிறது என்ற தர்மம். இதை அறிவியல் மறுக்கிறது. இந்த அம்சத்தையும் வலுவான தரவுகளுடனும் வாதங்களுடனும் தங்கள் புத்தகத்தில் எழுதியிருப்பீர்கள் என்றூ எதிர்பார்க்கிறேன்.

ஏனேனில் இன்றைக்கு பார்ப்பினியம் அல்லது இந்து தர்மத்தை நம்புகிறவர்கள் - இந்த வர்ணஸ்ரம தரமம் அறிவியல் பூர்வமானது. பிறக்கும் போதே ஒருவனின் குணம், கடமை தீர்மாணிக்கப்படுகீறது என்றூ நம்புகிறார்கள்.


அசுரன்

dondu(#11168674346665545885) said...

பார்ப்பனர்கள் வர மாட்டார்கள் என்று நான் கூறியதற்கு முக்கியக் காரணமே உயர்சாதீயம் என்று பொதுப்பெயரைக் குறிப்பிடாது பார்ப்பன எதிர்ப்பு என்னும் மன அரிப்பினால் அதை வேண்டுமென்றே பார்ப்பனீயம் என்று குறிப்பிட்டால், அவ்வாறு பேசுபவரிடம் சரியான விவாதம் செய்ய முடியாது என்னும் அச்சத்தால்தான்.

அசுரன் அவர்கள் கேட்கிறார் நான் ஏன் பார்ப்பனன் என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று. எனது பதில், அது எனது விருப்பம் என்பதே. அதற்கு அசுரன், இரயாகரன் போன்ற தாங்களாகவே தங்களை இணைய தாசில்தாராக நினைத்து கொண்டிருப்பவரது அனுமதி எதுவும் தேவையில்லை.

இன்னொரு விஷயம். நான் உங்கள் பதிவில் முன்னால் இட்ட பின்னூட்டத்துக்கு காரணமே உங்கள் பதிவு தேவையின்றி ஒரு சாதியை திட்டி வருவதால் விவாதம் திசை திரும்பி போகும் என்பதால்தான். அதுதான் நடக்கிறது இப்போது. நடத்துங்கள்.

நான் ஏற்கனவே பல இடங்களில் கூறியதை இங்கேயும் கூறிவிடுகிறேன். என்னதான் தொண்டை வளர கரடியாகக் கத்தினாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது.

வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.

அம்புடன், (எழுத்துப் பிழை எதுவும் இல்லை)
டோண்டு ராகவையங்கார்

தமிழரங்கம் said...

"பார்ப்பனர்கள் வர மாட்டார்கள் என்று நான் கூறியதற்கு முக்கியக் காரணமே உயர்சாதீயம் என்று பொதுப்பெயரைக் குறிப்பிடாது பார்ப்பன எதிர்ப்பு என்னும் மன அரிப்பினால் அதை வேண்டுமென்றே பார்ப்பனீயம் என்று குறிப்பிட்டால், அவ்வாறு பேசுபவரிடம் சரியான விவாதம் செய்ய முடியாது என்னும் அச்சத்தால்தான்.

அசுரன் அவர்கள் கேட்கிறார் நான் ஏன் பார்ப்பனன் என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று. எனது பதில், அது எனது விருப்பம் என்பதே. அதற்கு அசுரன், இரயாகரன் போன்ற தாங்களாகவே தங்களை இணைய தாசில்தாராக நினைத்து கொண்டிருப்பவரது அனுமதி எதுவும் தேவையில்லை.

இன்னொரு விஷயம். நான் உங்கள் பதிவில் முன்னால் இட்ட பின்னூட்டத்துக்கு காரணமே உங்கள் பதிவு தேவையின்றி ஒரு சாதியை திட்டி வருவதால் விவாதம் திசை திரும்பி போகும் என்பதால்தான். அதுதான் நடக்கிறது இப்போது. நடத்துங்கள்.

நான் ஏற்கனவே பல இடங்களில் கூறியதை இங்கேயும் கூறிவிடுகிறேன். என்னதான் தொண்டை வளர கரடியாகக் கத்தினாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது.

வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.

அம்புடன், (எழுத்துப் பிழை எதுவும் இல்லை)
டோண்டு ராகவையங்கார்"

எனது கேள்விக்கு நீங்கள் இன்னமும் பாதிலளிக்கவில்லை.

' என்னதான் தொண்டை வளர கரடியாகக் கத்தினாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது." நல்லது. அதை சக மனிதனின் அதே உரிமையை வழங்கிக் கொண்டு முன்னேற்றத்தை பற்றி கதைத்தால் அது ஜனநாயக பண்பு. இல்லாத அனைத்தும் சூழ்ச்சியும் சதியும் தான். அதுதான் பாhப்பனீயம்;

' அசுரன் அவர்கள் கேட்கிறார் நான் ஏன் பார்ப்பனன் என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று. எனது பதில், அது எனது விருப்பம் என்பதே. அதற்கு அசுரன், இரயாகரன் போன்ற தாங்களாகவே தங்களை இணைய தாசில்தாராக நினைத்து கொண்டிருப்பவரது அனுமதி எதுவும் தேவையில்லை." இவை உங்கள் விரும்பம் அல்ல. அது இந்த சமூக அமைப்பு நலன்கள் சார்ந்த, குறுகிய வாழ்க்கை முறை. சம மனிதனின் வாழ்வை சூறையாடி வாழும் வாழ்க்கை. அப்படி வாழ்வதற்கு எதிராக மனிதர்கள் போராடுகின்றனர், போராடுவர். அதில் நாங்களும் பங்களிகள்.

இப்படி சக மனிதனின் வாழ்வை இழிவாடி வாழ்வதை நீங்கள் பெருமையாக கருதுவது என்பது ஆச்சரியமானதல்ல. அத பார்ப்பனீய ஓழுக்கக் கேட்டின் அடிப்படை உள்ளடகம் தானே.

பி.இரயாகரன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பார்பனீயம் தான் சாதியம்
If so why not use the word சாதியம்
instead of பார்பனீயம்.I am not interested in entering into a debate on பார்பனீயம் or சாதியம்
as I have no time for this.

Anonymous said...

//என்னதான் தொண்டை வளர கரடியாகக் கத்தினாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது.//

கரடி கத்தினால் தொண்டை வளராது.

பார்ப்பனர்கள் மட்டுமல்ல சக்கிலியன், பறையன், சூத்திரன், திராவிடன், அசுரன், இறை நேசன் ஏன் இரயாகரன் முன்னேறுவதைக் கூட எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது.

திருநெல்வேலிக்கு வழி கேட்டால் திருப்பாச்சி அரிவாளுக்கு கூர்மை போகாது என்று கூறும் முட்டாள்களிடம் என்ன கூறினாலும் மண்டையில் ஏறப்போவதில்லை.

சகோதரர் பி.இரயாகரன் அந்த நேரத்தில் வேறு நல்ல வேலைகள் பார்க்கலாம்.

மற்றவர்களின் உதிரத்தில் முங்கிக் குளித்து ஆகா நல்ல சுவை என சப்பு கொட்டி, அதனை "முன்னேற்றம்" என எவ்வித வெட்கம், மானம் இல்லாமல் கூறி திரியும் ஜந்துக்களின் தோலை உரிக்க வரும் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கல் மற்றும் மண்ணுடன்
இறை நேசன்.