சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸே வெளியேறு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
உலகப் பணக்காரன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், சென்னை நகரில் காய்கறிக்கடை தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரேயொரு முதலாளி கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகப் பல இலட்சம் சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் விவசாயிகளுடைய தொழிலை நாசமாக்கி, அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல அரசாங்கம் தெரிந்தே அனுமதி வழங்கியிருக்கிறது.
கிரிமினல் ஃபோர்ஜரி வேலைகள், திருட்டு, லஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகரில் மொத்தம் 100 இடங்களில் தனது கடைகளை விரிவுபடுத்த இருக்கிறது.
சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து வி! ட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோக்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியி லும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய்க் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், ப! ண் உழைப்பாளிகள்...
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துக்குடி, சேலம், தருமபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பணியாற்றும் பல இலட்சம் தொழிலாளர்கள், அந்தக் காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்துவரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்... அனைவர! ுக்கும் மேலாக இந்தக் காய்கனிகளையும் பூக்களையும் விளைவிக்கும் பல இலட்சம் விவசாயிகள்... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒரேயொரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்குக் காவு கொடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.
சென்னை நகரில் பாரம்பரியமாக காய்கனிச் சந்தைகள் உள்ள இடங்களில் எல்லாம் கடை தொடங்கியிருக்கிறது ரிலையன்ஸ். எல்லா இடங்களிலும் இந்தச் சந்தைகள் வெறிச்சோடி விட்டன. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து ஒரு நாளைக்கு 50100 சம்பாதித்த ஏழை வியாபாரிகளின் குடும்பங்கள் எல்லாம் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. ""இனிமேலும் தாங்க முடியாது. வேறெந்தத் ! தொழிலுக்கும் போகவும் முடியாது'' என்று பரிதாபகரமான நிலைக்குப் பல ஆயிரம் குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டன.
ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடிக் கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டதால் தங்களுடைய சந்தைக்கு காய்கனிகள் வருவதில்லை என்று மேட்டுப்பாளையம் வியாபாரிகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கம்பம் பகுதியிலும் காய்கனிக் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் தேவைக்கே காய்கனி கிடைக்காது என்ற நிலைமை பல ஊர்களில் உ! ுவாகி வருகிறது. சுனாமியைப் போலக் குறுகிய காலத்தில் மக்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை உருவாக்கியிருக்கிறது ரிலையன்ஸ்.
""ஒரேயொரு ரிலையன்ஸ் நிறுவனம் இத்தனைக் கோடி மக்களின் வாழ்க்கையை அழித்து விடமுடியுமா?'' என்று நீங்கள் எண்ணலாம். ஒன்றல்ல இரண்டல்ல, 25,000 கோடி ரூபாய் முதலீடு போட்டு நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் தொடங்க இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சென்னை நகரில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு கடை வீதம் நூற் றுக்கணக்கான கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்ட! ருக்கிறது.
ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன.
சில்லறை வணிகத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க வால்மார்ட் நிறுவனமும் ஏர்டெல் முதலாளி மிட்டலும் இணைந்து ஆகஸ்டு 15 முதல் சென்னை நகரில் கடை திறக்கப் போகிறார்களாம். உலகின் இரண்டாவது பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான "காரஃபோர்' உடன் கூட்டு சேரப் போகிறார் அம்பானி. ஆஸ்திரேலியாவின் உல்வொர்த் நிறுவனத்துடன் இணைந்து மளிகைக் கடை போடப் போகிறார், டாடா.
சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேர! ுக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.
இது வணிகப் போட்டி அல்ல, பயங்கரவாதம்!
கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று ஒழிக்கும் இந்த அயோக்கியத்தனத்தைவிடப் பெரிய பயங்கரவாதம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 4 கோடிக் குடும்பங்களை நரபலி கொடுத்து 4 முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் கொள்கையை விடக் கொடூரமான பயங்கரவாதக் கொள்கை வேறு ஏதாவது உண்டா?
காய்கறிக் கடையும், மளிகைக் கடையும் நடத்த நமக்குக் கற்றுக் கொடுக்கத்தான் அம்பானியையும் அமெரிக்காக்காரனையும் இங்கே அழைத்து வருகிறதா இந்த அரசாங்கம்? ரிலையன்ஸ் கடை வைக்காததால் சென்னையில் "ஃபிரெஷ்ஷான' காய்கனிகள் கிடைக்கவில்லை என்று இந்த அரசாங்கத்திடம் மக்கள் முறையிட்டார்களா?
நன்கொடை என்று கொள்ளையடிக்கின்றன தனியார் பள்ளிகள்; புதிதாக அரசுப் பள்ளிகள் துவங்குவது இல்லை, இருக்கின்ற பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை. கழுத்தில் கத்தி வைத்துப் பணம் பறிக்கின்றன தனியார் மருத்துவமனைகள்; அரசு மருத்துவமனைகள் இல்லை. இருக்கின்ற மருத்துவமனைகளிலும் மருந்தில்லை. சின்னம்மைக்குத் தடுப்பூசி இல்லை. நாய்க்கடிக்குக் கூட மருந்தில்லை. போதுமான ! ேருந்துகள் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வக்கில்லை. கோடை வந்தால் குடிநீரில்லை, கொசுவை ஒழிக்கத் துப்பில்லை. அவசரத்துக்கு ஒதுங்குவதற்குக் கூட சாலையோரங்களில் கழிப்பறை இல்லை.
இவையெதற்கும் எதுவும் செய்ய வக்கில்லாத அரசாங்கம் ""மக்களுக்கு ஃபிரெஷ்ஷாகக் காய்கனிகள் கிடைக்கவில்லையே'' என்று ரொம்பவும் கவலைப்பட்டு "ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷை' அழைத்து வந்திருக்கிறது.
படித்த இளைஞர்களுக்குக் கூட வேலை தர வக்கில்லாத அரசாங்கம், மக்கள் தானே முயன்று, கையை ஊன்றிக் கரணம் போட்டு, வாழ்வதற்கு ஒரு வழி தேடிக்கொண்டால் அதில் மண் அள்ளிப் போடுவதற்கு அம்பானியையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் அழைத்து வருகிறது.
சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோ! ையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?
அம்பானியின் கடையில் அடுக்கி வைத்திருப்பவையெல்லாம் என்ன அதிசயக் காய்கனிகளா? கோயம்பேட்டில் விற்கப்படும் அதே ஊட்டி முட்டைக்கோசும், கம்பம் கத்தரிக்காயும்தான். ஆனால் அதையே கழுவித் துடைத்து கண்ணாடி ஷோ கேஸில் வைத்து, கடைக்கு குளுகுளு வசதியும் செய்து சுத்தம் என்றும் ஃபிரெஷ் என்றும் பிரமிக்க வைக்கிறார்கள்.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடியாகவே கொள்முதல் செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். எந்தக் காய் எங்கே மலிவோ அதை நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் கொண்டு வந்து புழல் அருகில் ஒரு குளிரூட்டப்பட்ட கிடங்கில் காய்கனிகளைக் குவிக்கிறது. அங்கிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புகிறது. வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்களை எந்! ிரங்களில் வைத்து வெட்டி பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்கிறது.
""காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது. இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.
துவங்கிய சில நாட்களுக்குள்ளேயே சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற காய்கனிக் கடைகள் எல்லாம் சுடுகாடாகி விட்டன. கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குப் பல வியாபாரிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். தமிழகத்தின் காய்கனிச் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தில் 3,000 கோடி ரூபாய் மூலதனத்தை தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒதுக்கியிருக்கிறது ரிலையன்ஸ! ் என்கிற இந்தப் பிசாசு.
ஐந்து வட்டிக்கும் பத்து வட்டிக்கும் கடன் வாங்கி, அதிகாலை 3 மணிக்கு ஷேர் ஆட்டோ பிடித்து, கோயம்பேட்டில் சரக்கெடுத்து, அதை நாள் முழுவதும் தெருத்தெருவாகக் கூவி விற்று, விற்காத சரக்கு அழுகிப் போகுமே என்று பயந்து, வந்த விலைக்குத் தள்ளி விட்டு, கந்து வட்டிக் கடனடைத்து, மிச்சமுள்ள காசில் கஞ்சி குடிக்கும் ஏழை வியாபாரிகளால் இந்தப் பிசாசுடன் எப்படிப் போட்டி போட முடி! ும்?
"இன்றைக்குள் விற்காவிட்டால் நாளை அழுகி நட்டமாகி விடுமே' என்ற கவலை ரிலையன்சுக்கு இல்லை. அவனிடம் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் இருக்கின்றன. இந்தக் கடையில் விற்காவிட்டால் இன்னொரு கடைக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் இருக்கின்றன. இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழுகாமல் பதப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.
அவன் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கத் தேவையில்லை. அரசு வங்கிகளில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் சொந்தப் பணத்தைப் போலப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அம்பானிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அவன் போலீசு மாமூல் கட்ட வேண்டியதில்லை. அரசும் அதிகாரவர்க்கமும் நாயைப் போல அவன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.
"விலையைக் குறைத்து விற்றால் நட்டமாகிவிடுமே' என்ற கவலையே அவனுக்கு இல்லை. இரண்டு வருடங்கள் நட்டத்தில் தொழில் நடத்தி, சந்தை முழுவதையும் கைப்பற்றிய பிறகு, ஆறே மாதத்தில் போட்ட காசை எடுக்கும் கலை அவனுக்குத் தெரியும்.
காய்கனி வியாபாரத்திலும் ஏகபோகம்!
""அம்பானி புகுந்த கோயம்பேடு, ஆமை புகுந்த வீடு'' என்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்தேதான் அம்பானி முதல் அமெரிக்கக் கம்பெனிகள் வரை அனைவரையும் சில்லறை வணிகத்தில் அனுமதித்திருக்கிறது அரசு.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் ""விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
பொள்ளாச்சிச் சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி ""கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்! ்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாகக் கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?
""சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் சிறுவணிகர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது'' என்று தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். ""நாம் கடை வைத்திருப்பதைப் போல அவனும் ஒரு கடை வைக்கிறான். யாரிடம் சரக்கு தரமாகவும் மலிவாகவும் இருக்கிறதோ அவர்களிடம் மக்கள் வாங்கப் போகிறார்கள். இதில் கவø0லப்படுவதற்கு என்ன இருக்கிறது'' என்று எண்ணிவிட வேண்டாம். ! ஒரு அம்பானி என்பவன் ஆயிரம் சரவணா ஸ்டோர்சுக்கு சமம். ஒரு வால்மார்ட் நூறு அம்பானிகளுக்குச் சமம்.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மற! முனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
ரிலையன்ஸ் வருவது விவசாயிக்கு நல்லதா?
சில்லறை விற்பனை இவர்களுடைய பிடிக்குள் சென்றால், நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தி, காய், கனி, மலர் உற்பத்தி அனைத்தும், அதாவது விவசாயம், தொழில்துறைகள் அனைத்தும் அந்நியக் கம்பெனிகள் மற்றும் அம்பானியைப் போன்ற சில தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்.
இன்று பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஊட்டி முதலான காய்கனிச் சந்தைகளில் மற்ற வியாபாரிகளைக் காட்டிலும் அதிக விலை தருவதாக ஆசை காட்டி விவசாயிகளைக் கவர்ந்திழுக்கும் ரிலையன்ஸ், கொஞ்ச காலத்தில் அந்தச் சந்தைகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். பிறகு கத்தரிக்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் ரிலையன்ஸ் சொல்வதுதான் விலையாக இருக்கும். மற்றவர்! ளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிடுவதால் அவனுடன் போட்டி போட சந்தையில் வேறு வியாபாரிகளே இருக்க மாட்டார்கள்.
""விதை தருகிறேன், உரம் தருகிறேன், பூச்சி மருந்தும் தருகிறேன், காய்கனிகளைப் பயிர் செய்து கொடு'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையையும் ரிலையன்ஸ் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த வலையில் சிக்கிய விவசாயிகள் கொத்தடிமைகளைப் போல அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கிக் கொள்வார்கள்.
அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட நிலைமையைத் தமிழகத்தின் விவசாயிகளும் எதிர்கொள்ள நேரும்.
இது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நவீனப் பண்ணை விவசாயம், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் போன்றவற்றை ரிலையன்ஸ் ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இந்த நவீன விவசாயத்தில் விளையும் பொருட்களுடன் சிறு விவசாயிகளின் பொருட்கள் சந்தையில் போட்டி போடவே முடியாது. திவாலாகி நிலத்தை ரிலையன்சுக்கே விற்றுவிட்டுக் கூலி வேலை தேடி நகரங்களுக்கு ஓடி வருவதைத் தவிர! அவர்களுக்கு வேறு வழியும் இருக்காது.
நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்!
காய்கறி விற்பனையில் ரிலையன்சும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதென்பது வியாபாரிகளையும் விவசாயிகளையும் மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. நுகர்வோர் அனைவரையும், மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினை. கீரைகளில் பலவகை, காய்களில் பலவகை, மாம்பழத்தில் பலவகை என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய விவசாயிகள் உருவாக்கி வைத்திருக்கும் ரகங்கள் எல்லாவற்றையும் பன! னாட்டு நிறுவனங்கள் அழித்துவிடும். பல வகையான ரகங்கள், பல வகையான சுவைகள், பல வகையான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கனிகள் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு, எந்த ரகத்தை விளைவித்தால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அந்த ரகத்தைத் தவிர வேறு எதுவுமே உற்பத்தியாகாமல் செய்துவிடும்.
பங்கனபள்ளி, நீலம், சிந்தூரா, ருமானி என்ற மாம்பழங்களின் வகைகள் எல்லாம் அழியும். "ரிலையன்ஸ் மாம்பழம்', "பிர்லா மாம்பழம்' என்று இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மட்டுமே சந்தையில் இருக்கும். இதெல்லாம் கட்டுக்கதையல்ல. மேற்கத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன. பல்வேறு சுவைகள், பல்வேறு ரகங்கள் என்பதெல்லாம் அழிந்து பருத்! திக் கொட்டையும் பிண்ணாக்கும் தவிர வேறு எந்தச் சுவையும் அறியாத மாடுகளாக நுகர்வோரெல்லாம் மாற்றப்பட்டு விடுவார்கள்.
இது என்றோ நடக்கவிருக்கும் கதையுமல்ல. இன்று நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் கதை. இந்தியாவில் சிகரெட் உற்பத்தி செய்யும் ஐ.டி.சி. என்ற நிறுவனம் இன்று தானியக் கொள்முதலும் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் "ஆசீர்வாத் ஆட்டா' நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல ! ாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன.
தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்குப் பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை மட்டும் உற்பத்தி செய்யும்படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.
தானிய ஏகபோகத்தின் விளைவுதான் விலைவாசி உயர்வு!
உணவு தானிய விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இன்றே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் தானியக் கொள்முதல் செய்வதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்து கொள்ள ஊக்குவித்து வருகிறது அரசு. அது மட்டுமல்ல, அரிசி, கோதுமை, பருப்பு முதலான அனைத்திலும் முன்பேர வணிகத்தையும் ஆன்லைன் வணிகத்தையும் மத்! ிய அரசு அனுமதித்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று தானிய விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன.
இந்த விலை உயர்வால் விவசாயி 5 காசு கூட ஆதாயம் அடையவில்லை. உற்பத்தி செய்யும் விவசாயி கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கிறான். வாங்கிச் சாப்பிடும் மக்களும் விலைவாசி உயர்வால் கடனாளி ஆகியிருக்கிறார்கள். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் மட்டும்தான் கொழுத்திருக்கிறார்கள். இவர்கள் சில்லறை வணிகத்திலும் நுழைந்துவிட்டால் பஞ்சத்தையும் பேரழிவையும்தான் மக்கள் எதிர்! ொள்ள வேண்டியிருக்கும்.
பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்! ் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.
இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றிக் கேட்டால் ""அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது'' என்று பதில் சொல்லும் அமைச்சர்கள் நாளை அரிசி கிலோ 50 ரூபாய் விற்றாலும், வெங்காயம் கிலோ 100 ரூபாய் விற்றாலும் ""சர்வதேசச் சந்தையில் விலை ஏறிவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்ற பதிலைக் கூசாமல் சொல்வார்கள்.
""சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காக! ்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?
இந்திய நாட்டின் விவசாயிகளையும், நுகர்வோரையும் இந்த நாட்டின் சில்லறை வணிகர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றும், அவர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதற்காகத் தான் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கூறுகிறார்கள். இத்தகைய முதலாளிகளின் பிடியில் இருக்கும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்! இந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைக்கின்றன.
நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.
இது அப்பட்டமானதொரு பித்தலாட்டம். சிறுவணிகர்களுக்கு எதிராக நுகர்வோருக்குக் கொம்பு சீவிவிடும் சதி. ""பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', ""ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', ""பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவ! ிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.
""தள்ளுவண்டியில் திறந்து போட்டு வியாபாரம் செய்பவர்களிடம் பொருள் வாங்காதே, பில் போடாத மளிகைக் கடையில் சாமான் வாங்காதே'' என்று பிரச்சாரம் செய்யும் இந்த யோக்கியர்கள், அவர்களிடம் ""ஓட்டு வாங்கமாட்டோம்'' என்று மட்டும் ஏன் சொல்வதில்லை?
தெருவில் சாக்கடை ஓடுவதற்கும், கார்ப்பரேஷன் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதற்கும், சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பதற்கும், குப்பைகள் குவிந்து கிடப்பதற்கும் சிறு வணிகர்களா பொறுப்பு? ஈயையும் கொசுவையும் அவர்களா உற்பத்தி செய்கிறார்கள்? அரசாங்க மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் பேருந்து நிலையங்களும் என்ன யோக்கியதையில் இருக்கின்றன? இதற்கெ! ல்லாம் யார் பொறுப்பு?
ஃபிரெஷ்ஷான புற்றுநோய்!
சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்! கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?
கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் ""லே'ஸ்'' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்! பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?
சுத்தம் சுகாதாரம் என்ற இவர்களுடைய பேச்செல்லாம் முழு மோசடி. அழுகிப் போன பழத்தையும், ஈ மொய்க்கும் தின்பண்டத்தையும் வாங்கித் தின்றால் வாந்தி, பேதி போன்ற சின்ன நோய்கள்தான் வரும். அவற்றைக்கூட சமாளித்து விடலாம். பன்னாட்டுக் கம்பெனிகளின் ஜிகினாத்தாள் சரக்குகள் சின்ன நோய்களை எல்லாம் உருவாக்குவதில்லை. புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பது, இதயந! ய் போன்ற பெரிய ஆட்கொல்லி நோய்களைத்தான் அவை உருவாக்கும். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், சொத்தை விற்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஏனென்றால் நோயை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அதற்கான மருந்தையும் உற்பத்தி செய்து அதிலும் கொள்ளையடிக்கின்றன.
கொள்ளை இலாபம் ஈட்டுவதொன்றுதான் பன்னாட்டுக் கம்பெனிகளின் நோக்கம். அதற்காகத்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கனிகள் மனிதனின் உடலுக்கு என்ன தீங்குகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய விதைகளைத் திருட்டுத்தனமாகப் ப! ன்படுத்துவதற்கும் சோதனை செய்து பார்ப்பதற்கும் இந்திய அரசே அவர்களை அனுமதித்திருக்கிறது.
இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத்தான் சமீபத்தில் கோவை விவசாயிகள் பிடுங்கி எறிந்தார்கள். தன்னுடைய இலாபத்துக்காக எத்தகைய கொலைபாதகத்தையும் செய்வதற்கு அஞ்சாத ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை நம்பி நம் வயிறை ஒப்படைப்பதென்பது, கொலைகாரனின் கையில் உயிரை ஒப்படைப்பதற்குச் சமமானது.
பில் போடாத அண்ணாச்சி! பில் போட்டுத் திருடும் அம்பானி!
"ரிலையன்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நம்பகத்தன்மை என்று பொருள். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமே ரிலையன்ஸ் நிறுவனம்தான். "ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையில் கறிவேப்பிலை வாங்கினாலும் பில் போட்டுக் கொடுக்கிறான்' என்று படித்த அறிவாளிகள் சில பேர் சிலிர்த்துக் கொள்கிறார்கள். பில்லை வைத்துத் தாளிக்கவா முடியும்? அன்றாடம் பத்து லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் ! ெய்யும் கடையில் ஆள் வைத்து பில் போடுவதில் என்ன அதிசயம் இருக்கிறது?
காலை 3 மணிக்கு எழுந்து கோயம்பேட்டுக்குச் சென்று சரக்கெடுத்து ஒரு வண்டி காய்கறியை டி.வி.எஸ்.50இல் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கி, ""இரண்டு ரூபாய் கத்தரிக்காய், ஒரு ரூபாய் வெங்காயம்'' என்று கேட்கும் ஏழை மக்களுக்கு அதை விற்பனை செய்யும் அண்ணாச்சி, கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?
வாட் விரிவிதிப்பும், பில் போட்டு வியாபாரம் செய்யச் சொல்லி சிறுவணிகர்களுக்கு அரசாங்கம் கொடுத்துவரும் நிர்ப்பந்தமும் நுகர்வோரின் நலனுக்காகச் செய்யப்படுபவை அல்ல. சிறுவணிகர்களை வரி விதிப்புக்கு உள்ளாக்கி, அதிகாரிகள் மூலம் சித்திரவதை செய்து தொழிலை விட்டே துரத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை வளர்த்து விடுவதுதான் அரசின் நோக்கம்.
பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய கால்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு வெளிநாட்டுக் கால்களை! ெல்லாம் லோக்கல் கால் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.
மண்ணையும் கல்லையும் காலி அட்டைப் பெட்டிகளையும் பில் போட்டு வெளிநாடுகளுக்கு "ஏற்றுமதி' செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை அரசாங்கத்திடமிருந்து சுருட்டினார் திருபாய் அம்பானி. அப்பன் செய்த திருட்டுகளைப் பட்டியல் போடவேண்டுமென்றால் அதற்குத் தனியாகப் புத்தகமே போட வேண்டும். அப்பனை விஞ்சுகிறார்கள் பிள்ளைகள். ஜவுளி, எண்ணெய் சுத்திகரிப்பு, பங்குச்சந்தை,! தொலைபேசி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் என்று கால் வைத்த துறைகளிலெல்லாம் களவாணித்தனம் செய்கிறார்கள்.
சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, ""இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வா! ிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
பில் போட்டுத் தொழில் நடத்துவதாகப் பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அம்பானி, டாடா, பிர்லா போன்றோருடைய நிறுவனங்களின் யோக்கியதை இதுதான். இந்த யோக்கிய சிகாமணிகள்தான் அரசு வங்கிகளுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருப்பவர்கள். ஆண்டுதோறும் 15,000 கோடி, 20,000 கோடி வரிபாக்கி வைப்பவர்கள். இந்தியாவுக்கே இரண்டு ஆண்டுகளுக்குப் பட்ஜெட் போடுமளவு! ்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களும் இவர்கள்தான்.
இந்த விவரங்களையெல்லாம் நாம் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கவும் இல்லை. இட்டுக் கட்டிச் சொல்லவுமில்லை. இவையெல்லாம் சர்வகட்சிகளையும் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள். எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்திகள்.
நடப்பது பன்னாட்டுக் கம்பெனி ஆட்சி!
தங்களுடைய கொள்ளை இலாபத்துக்காக எந்தவிதமான கிரிமினல் வேலையையும் கொலைபாதகத்தையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பது அரசுக்குத் தெரியும். அப்புறம் ஏன் இவர்களைப் பாக்கு வைத்து அழைத்து, தொலைபேசி, மின்சாரத்தில் தொடங்கி தானியக் கொள்முதல், சில்லறை வணிகம் வரை அனைத்தையும் அரசாங்கமே இவர்கள் கையில் ஒப்படைக்கிறது? பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் உள்ளூ! ர் விவசாயமும், தொழிலும், வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லாப் பிரிவு மக்களும் எதிர்த்துப் போராடினாலும் அதைப் பற்றி எந்தக் கட்சியும் கொஞ்சம் கூடக் கவலைப்படாதது ஏன்?
கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறி விட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளை அடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லாக் கட்ச! அரசாங்கங்களும் நிறைவேற்றுகின்றன.
தனியார்மயம்!
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து வாடிக்கையாளர்களைப் பலவிதமாகப் பித்தலாட்டம் செய்து கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடைசியாகத்தான் செல்போன் சே! ையைத் தொடங்கியது.
வெளிநாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்கி லாபமாக மட்டும் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் ஈட்டி வந்த வி.எஸ்.என்.எல். நிறுவனத்தையே வெறும் 1440 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் தூக்கிக் கொடுத்தது பாரதிய ஜனதா அரசு. 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பாரத் அலுமினியம் கம்பெனி என்ற அரசுத்துறை நிறுவனம், வெறும் 552 கோடி ரூபாய்க்கு ஸ்டெர்லைட் முதலாளிக்கு விற்கப்பட்டது. ஏழைகளுக்கும! மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் தரமான ரொட்டியை வழங்கி வந்த 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள "மாடர்ன் புட்ஸ்' என்ற அரசுத்துறை நிறுவனம் வெறும் 104 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அரசு வங்கிகள், இன்சூரன்சு, அனல்மின் நிலையங்கள் அனைத்தும் இப்படித்தான் அந்நிய நிறுவனங்களுக்குக் கூறு கட்டி விற்கப்படுகின்றன.
இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டுமல்ல, ஆறுகளையும் அணைக்கட்டுகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது அரசு. நம்முடைய நாட்டின் தேவைக்கே வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, வங்காள விரிகுடாவில் எண்ணெயும் எரிவாயுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை அரசுடைமை ஆக்காமல் அம்ப! னிக்கு உடைமை ஆக்குகிறது அரசு.
தனக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டித்தரும் அரசுத்துறை நிறுவனங்களையே அந்நியக் கம்பெனிகளுக்கு விற்கத் தயங்காத அரசு, கோயம்பேட்டு சந்தையை அம்பானிக்குக் காவு கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
பள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்கம் கட்டுவதில்லை. இருக்கின்ற பள்ளிகளையே பராமரிப்பதில்லை. போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்தால் பிள்ளை உருப்படாது என்ற நிலைமையை அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்குகிறது. நர்சரிப் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்தும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. கந்த! வட்டித் தொழிலைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருப்பதால் எல்லாக் கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கல்வித் தொழில் நடத்தி கல்லா கட்டுகிறார்கள்.
அரசாங்கம் மருத்துவமனைகள் கட்டுவதில்லை. அரசு மருத்துவ மனையே சவக்கிடங்கு போலத்தான் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. இப்போது சென்னையில் சின்னம்மை பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதற்கு தடுப்பூசி கிடையாது. தடுப்பூசியின் விலை 1300 ரூபாய். நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. அதை மருந்துக் கடையில் வாங்கினால் 1500 ரூபாய். இருக்கிற மருத்துவம! ைகளில் போதிய மருத்துவர்களும் கிடையாது. கல்வியைப் போலவே மருத்துவமும் முதலாளிகள் கொள்ளை லாபமடிப்பதற்கான தொழிலாக மாற்றப்பட்டு விட்டது.
அரசாங்கம் சாலை போடுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டு விட்டன. அவர்கள் வழி நெடுக சுங்கச் சாவடி வைத்து எல்லா வாகனங்களுக்கும் வரி வசூல் செய்கிறார்கள்.
சாராயம் விற்கும் அரசாங்கத்தால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தர முடியவில்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய ஆறுகள் ஏரிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து அதை பாட்டில் 14 ரூபாய் என்று நமக்கே விற்பனை செய்கிறார்கள். நிலத்தடி நீர் என்னும் பொதுச்சொத்தை ஒரு பன்னாட்டு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றிக் கொள்ளையடிக்க அனுமதி வழ! ்குகிறது அரசாங்கம்.
அரசாங்கத்தால் சென்னை நகரில் குப்பை வாரக்கூட முடியவில்லை. அதையும் "ஓனிக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அவன் வெள்ளைக்காரனை வைத்தா குப்பை வாருகிறான்? நம்முடைய இளைஞர்களை குறைந்த கூலிக்கு மாடுபோல வேலை வாங்கி கோடிக்கணக்கில் லாபத்தைக் கொண்டு போகிறான்.
""அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க வேண்டியதில்லை. கல்வியோ, மருத்துவமோ, தண்ணீரோ, கக்கூசோ எதுவாக இருந்தாலும் அவனவன் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாமே பன்னாட்டு முதலாளிகளும் இந்நாட்டு முதலாளிகளும் லாபம் பார்ப்பதற்கான தொழில்கள்'' என்று கூறும் தனியார்மயம் என்ற இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்சொன்ன எல்லா அயோக! ்கியத்தனங்களும் தேசத்துரோக நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படுகின்றன.
கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தையும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றி, இல்லாதவர்களும் ஏழை எளியவர்களும் பரிதவித்துச் சாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம், அம்பானியின் காய்கறி வியாபாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய வியாபாரிகளையும், தொழிலாளிகளையும் பற்றியா கவலைப்படப் போகிறது?
தாராளமயம்!
இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் விளைவிக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான் அவர்களால் வாழமுடியும், விவசாயம் செய்யவும் முடியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் ஒன்னேகால் இலட்சம் விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அரசாங்கமே புள்ளி விவரம் கொடுக்! கிறது. பல கோடி விவசாயிகள் வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலை தேடி நகரத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.
ஏன் இந்த நிலைமை? ""விவசாயிக்கு சலுகை வழங்கக் கூடாது, வங்கிக் கடன் கொடுக்கக் கூடாது, உரமானியம் கொடுக்கக் கூடாது, அரிசி, கோதுமை முதலானவற்றை அரசாங்கம் கொள்முதல் செய்யக்கூடாது, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும், ரேசன் கடைகளை இழுத்து மூட வேண்டும்'' என்பதெல்லாம் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகள்.
இந்த ஆணைப்படிதான் எல்லா அரசாங்கங்களும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. அரசாங்கம் நெல் கொள்முதலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. இந்திய உணவுக்கழகம் கையில் வைத்திருந்த தானியங்களை பாதி விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இந்திய விவசாயிக்கு கிலோ கோதுமைக்கு 7 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கும் அரசாங்கம் கிலோ 10 ரூபாய் ! விலையில் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதியும் செய்திருக்கிறது.
ஏழை மக்கள் சோறு தின்ன வேண்டுமே என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தாராளமயக் கொள்கைகளின் கீழ் உணவு தானிய வியாபாரத்திலேயே பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருக்கும் இந்த அரசாங்கம், அவர்கள் குழம்பு வைப்பதைப் பற்றியா கவலைப்படப் போகிறது?
காய்கனி விற்பனையில் மட்டுமல்ல, கறிக்கடை வைக்கவும் பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கிறது அரசு. சென்னையில் இறைச்சி வியாபாரமும் தொடங்கப் போகிறது ரிலையன்ஸ். சென்னையில் இறைச்சிக் கூடங்களையும் கறிக்கடைகளையும் நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்களின் வாழ்க்கையும் இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
உலகமயம்!
நம்முடைய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்திருப்பது யார்? அரசாங்கமா அல்லது டாடா பிர்லா அம்பானி போன்ற முதலாளிகளா? கைத்தறியும், சிறு தொழில்களும், சில்லறை வணிகமும்தான் மீதியுள்ள மக்களில் கணிசமான பேருக்குச் சோறு போடுகின்றன. இந்தத் தொழில்களைப் பாதுகாக்கத் தவறினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவதைத் தட! ுக்க முடியாது.
எனவேதான், ""குறிப்பிட்ட சில ரகங்களைச் சேர்ந்த நூல்கள் கைத்தறிக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்ற விதிமுறை இருந்தது. ""தீப்பெட்டி, நோட்டுப்புத்தகம், ஊறுகாய், ஊதுபத்தி, தின்பண்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் சிறு தொழிற்சாலைகளில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும், பெரிய தொழிற்சாலைகள் அவற்றை உற்பத்தி செய்யக்கூடாது'' என்று விதி இருந்தது.
""பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் நுழைந்து என்ன தொழிலை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்'' என்ற உலகமயமாக்கல் கொள்கையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கூறிய விதிமுறைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்யப்பட்டு விட்டன. தீப்பெட்டி முதல் ஊதுபத்தி வரை அனைத்தி! லும் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து விட்டன. பல சிறு தொழில்கள் அழிந்து விட்டன. மிச்சமிருப்பது சில்லறை வணிகம். அதையும் அழிப்பதற்கு அம்பானியும், டாடாவும் பிர்லாவும் அமெரிக்கக் கம்பெனிகளும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். வழக்கம் போல அரசாங்கம் அவர்களுக்குத் துணை நிற்கிறது.
இனி போவது எங்கே?
சிறு வியாபாரிகளும் சில்லறை வணிகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்ற காசைப் போட்டுக் கடை வைக்கும் அண்ணாச்சிகள், பெரிய கம்பெனிகளிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள், சிறு தொழில்கள் அழிந்ததால் சில்லறை வணிகத்துக்கு வந்த சிறு தொழில் முதலாளிகள், வேலை கிடைக்காததால் வீ! ட்டை விற்று சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள்.
கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்குபவர்களும் வண்டி இழுப்பவர்களும் யார்? விவசாயம் அழிந்து போனதால் கிராமப்புறத்தில் வாழ முடியாமல் நகர்ப்புறத்துக்கு வேலை தேடி வந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள்.
அங்கே கூடைகளில் சரக்கெடுத்துச் சென்று வீடுவீடாக நாள் முழுவதும் கூவி விற்றுக் கஞ்சி குடிப்பவர்கள் யார்? வேறு வேலை எதுவும் கிடைக்காத ஏழைகள். விற்றுத் தொழில் செய்ய சொத்து இல்லாமல் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து விற்று நேர்மையாக வாழ முயலும் உழைப்பாளிகள். கணவனால் கை விடப்பட்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தைத் தலையில் சுமக்கும் நிரா! ரவான ஏழைப் பெண்கள், சோறு போட யாருமில்லாததால் தள்ளாத வயதில் வேகாத வெயிலில் வண்டியைத் தள்ளிச் செல்லும் முதியவர்கள்.
எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா? கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் இந்த மிருகங்கள! யெல்லாம் மனிதன் என்றுதான் மதிக்க முடியுமா? வயலில் நுழைந்து விளைச்சலைத் தின்று அழிக்கும் காட்டுப்பன்றிகளை வெடி வைத்துக் கொல்வார்கள் விவசாயிகள். இரக்கமே இல்லாத இந்தப் பணக்காரப் பன்றிகளைக் கண்டதுண்டமாக அறுத்துக் கொல்ல வேண்டும்.
எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்?
கேட்டாலே நமக்கு இரத்தம் கொதிக்கிறதே, ஆனால் இந்த அநீதிகளைக் கேட்பதற்கு ஒரு நாதியில்லையே ஏன்? சிவாஜி கணேசனின் பேரன் கல்யாணத்துக்கும் பேத்தியின் காதுகுத்துக்கும் ஆசி வழங்கத் தெரிந்த தானைத்தலைவரின் காதுகளுக்கு கோயம்பேடு தமிழர்களின் கூக்குரல் மட்டும் எட்டவில்லையே ஏன்? தன்னுடைய மேயர் பதவி பறிபோனவுடன் பதறித் துடித்த தளபதி, ஒரு இலட்சம் தமிழர்களின் வாழ்க்கை ! றிபோவதை வேடிக்கை பார்க்கிறாரே, இவர் யாருக்குத் தளபதி? உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராகச் சீறாத மர்மம் என்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே, ஏன்?
இந்தக் கேள்விகள் எதற்கும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்ப்பது போல நடிக்கிறார்கள். ""இன்னும் பத்தே நாட்களில் சென்னையில் உள்ள தன் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு ரிலையன்ஸ் ஓடி விடவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும். நாங்கள் எந்த விலை கொடுக்கவும் தயார்'' என்று சீறினார் ராமதாஸ். சில்லறை வணிக! ்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது முதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்துப் போடுகிறார். தந்தையோ இங்கே தாண்டிக் குதிக்கிறார்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் சிறுவியாபாரிகள் சங்கமும், தொழிற்சங்கமும் ரிலையன்சை விரட்ட வேண்டுமென்று போராடுகின்றன. ""வணிகர்கள் தங்களுடைய வரம்பில்லா லாபத்துக்கு போட்டியே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்'' என்று அம்பானிக்கு வக்காலத்து வாங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார். ""ரிலையன்ஸ் வந்ததனால் ! ென்னை நகரின் சிறுவணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது'' என்று சாதிக்கிறார் திருமாவளவன்; தொலைபேசித் துறையைக் கொள்ளையடித்துப் பிடிபட்ட திருடன் அம்பானி தொலைபேசித் துறையில் மாபெரும் புரட்சி செய்திருப்பதாகப் புகழாரமும் சூட்டுகிறார்.
இங்கே ரிலையன்ஸை எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் மார்க்சிஸ்டு கட்சி மே.வங்கத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அம்பானிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்குகிறது. முதல்வர் புத்ததேவோ அமெரிக்க வால்மார்ட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார். அம்பானியை விடப் பன்மடங்கு பெரிய கொம்பானியான "மெக்டொனால்டு' எனும் அமெரிக்க நிறுவனம் கல்கத்தா நகரெங்கும் "ட! பன் கடை' போட அனுமதித்து திறப்புவிழா நடத்துகிறார்.
கோயம்பேடு வியாபாரிகளை ஆதரிப்பதாக நாடகமாடும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பதே அம்பானியின் காசில்தான் என்பது அகில உலகமும் அறிந்த இரகசியம். சென்ற பாரதிய ஜனதா ஆட்சியில் பிரமோத் மகாஜன் தொலைபேசித் துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசித் துறை அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட ஊழல் சந்தி சிரித்தது உங்களுக்கு நினைவில்லையா?
தண்ணீருக்குத் தவிக்கும் தென்மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, தாமிரவருணி ஆற்றையே அமெரிக்க கோகோ கோலாவுக்குத் தூக்கிக் கொடுத்த ஜெயலலிதா, அம்பானியை எதிர்ப்பதாக அறிக்கை விடுவது அப்பட்டமான மோசடியில்லையா?
ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற இந்த நாடகத்தை எத்தனை ஆண்டுகளாக இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இந்த மோசடி நாடகத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அவர்கள் பதில் சொல்லப் போகிறார்களா என்ன?
அதிகாரபூர்வமான கணக்கின்படியே இந்திய அரசியல்வாதிகளில் முதல் பணக்காரர் ஜெயலலிதா. இரண்டாவது கருணாநிதியாம். மூன்றாவது இடத்துக்குப் போட்டி போடுகிறார் ராமதாஸ். கோடிகளைக் குவிப்பது எப்படி என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்களா தள்ளுவண்டி வியாபாரிகளின் பிரச்சினைக்கு வழி சொல்லப் போகிறார்கள்? நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
நீங்கள்தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள். ""அந்த ஆட்சிக்கு இந்த ஆட்சி பரவாயில்லை, இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி பரவாயில்லை'' என்று கடந்த 15 ஆண்டு காலமாக இவர்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தியது நீங்கள்தான். எனவே, நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
""எல்லாம் திருட்டுப்பயல்கள். பெட்டி வாங்கியிருப்பார்கள்'' என்று இப்போது குற்றம் சாட்டுவதில் பயனில்லை. பெட்டி வாங்குவதென்பது இன்று நேற்றா நடக்கிறது? இவர்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்று நம்பி யாராவது ஓட்டுப் போட்டார்களா? வாட் வரிவிதிப்பை அமல்படுத்தப் போவதாக சிதம்பரம் சொன்னபோது அதை ஜெயலலிதா எதிர்த்தார். ஜெயலலிதா சொன்னபோது கருணாநிதி அதை எதிர்த்தார்.! ""எல்லோருமே உலகமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துபவர்கள் என்பதால் இவர்கள் யாரையுமே நம்ப முடியாது'' என்று வணிகர் சங்கம் இந்தத் தேர்தலில் தனியே வேட்பாளர்களை நிறுத்தியது.
ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான கொள்கையை யாராவது அமல்படுத்தி விட முடியுமா? முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் இந்த அரசமைப்பில் தேர்தலில் நிற்க முடியும். ஆட்சி நடத்தவும் முடியும். ஒரு இலட்சம் மக்களின் வாழ்க்கை பறிபோகிறதே என்று எந்த நீத! மன்றத்தில் முறையிட்டாலும் அம்பானியின் கடைக்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கப் போவதில்லை.
தேர்தல் பாதை தீர்வல்ல!
ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்! து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.
உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும்தான் இவர்களுடைய உண்மையான எசமானர்கள். ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சேவகம் செய்வதன் மூலமும், ஃபோர்டு, ஹூண்டாய், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் பாக்கு வைத்து அழைப்பதன் மூலமும்தான் நம்முடைய நாடு முன்னேற முடியும் என்பதே இவர்களுடைய கொள்கை.
பெரும்பான்மை உழைக்கும் மக்களுடைய தொழிலையோ வாழ்க்கையையோ இவர்கள் ஒருக்காலும் பாதுகாக்க மாட்டார்கள். நம்முடைய போராட்டங்களை ஆதரிப்பதாக இவர்கள் சவடால் அடிப்பதை நம்புவதும், இவர்களை மேடையில் உட்கார வைத்து மாலை மரியாதை செய்வதும், இவர்களிடம் நடையாய் நடந்து மனுக்கொடுப்பதும் ஏமாளித்தனமில்லையா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விலைபேசும் இந்தக் கொள்கைகள் திடீரென்று இன்றைக்கா அமல்படுத்தப்படுகின்றன? 1994இல் காட் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட்ட நாளிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு இன்று மிகத் தீவிரமாக அமலாகி வருகின்றன. தொலைபேசி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், இன்சூரன்சு மற்றும் வங்கி ஊழியர்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத் ! தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், பருத்தி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நீலகிரி தேயிலை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், வணிகர்கள் என்று எல்லாப் பிரிவு மக்களும் தமக்குப் பாதிப்பு வரும்போதெல்லாம் போராடியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்கள் நடந்திருந்தபோதிலும் அநேகமாக யாரும் வெற்றி பெறவில்லையே, ஏன்?
ஏனென்றால், ஒரு பிரிவு மக்கள் இப்படிப் போராடும்போது மற்றவர்கள் அதைப்பற்றிக் கடுகளவும் கவலைப்பட்டது கூட இல்லை. அவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் ஒடுக்குவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று ஒதுங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்கூட மற்றவர்கள் அக்கறை காட்டியதில்லை.
ஆனால் எதிரிகளைப் பாருங்கள். டாடாவுக்கும் பிர்லாவுக்கும் அம்பானிக்கும் வால்மார்ட்டுக்கும் என்னதான் தொழில் போட்டி இருந்தாலும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கும், வாட் வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கும், வங்கி இன்சூரன்சு துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவதற்கும் ஒரே அணியில் நின்று அரசை நிர்ப்பந்திக்கிறார்க! ்.
அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.
அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்ட! போராடினால் தான் முடியும்.
மக்களிடம் செல்வோம்!
மறுகாலனியாக்கத்தை வெல்வோம்!
""இதெல்லாம் ஆகிற கதையா?'' என்று சிலர் கேட்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் ஆகியோரை நம்பிக் காவடி எடுப்பதுதான் ஆகாத கதை. போகாத ஊருக்கு வழி தேடி ஆகாத காரியத்துக்கு மெனக்கிடுவதைவிட ஆகிற கதைக்கு நாம் தாராளமாக மெனக்கிடலாம். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் போன்ற எல! லாப் பிரிவு மக்கள் மத்தியிலும் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று ஆதரவு திரட்டும் வேலையைச் செய்யலாம்.
இன்று ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு காய்கனி வாங்கச் செல்பவர்கள் யார்? எல்லோரும் அம்பானியின் மாமன் மச்சான்களா அல்லது டாடா பிர்லாவின் சொந்தக்காரர்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி இன்சூரன்ஸ் ஊழியர்கள் கம்ப்யூட்டர் கம்பெனிகளின் படித்த கொத்தடிமைகள் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் ரிலையன்ஸ் கடையை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே போய் காய்கறி வாங்குவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கைக்கே குழி பறித்துக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ""மலிவு, சுத்தம், இலவசம்'' போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் மயங்கி, உலகப் பணக்காரன் அம்பானியை மேலும் பணக்காரனாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேடில் உண்ணாவிரதம் இருந்தால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும். ""இத்தனைக் காலமும் உங்கள் வீடு தேடி வந்து வியாபாரம் செய்த எங்களுடைய வாழ்க்கையில் மண் அள்ளிப் போடுவது நியாயம! ?'' என்று அங்கே காய்கனி வாங்கச் செல்பவர்களை மடக்கி நியாயம் கேட்கவேண்டும்.
""ஏ.சி. கடையையும், வண்ண விளக்கையும், பாலித்தின் பாக்கெட்டையும் பார்த்தவுடன் இத்தனைக் காலமும் மளிகை சாமான் வாங்கிய அண்ணாச்சி கடையை மறந்துவிடுவீர்கள் என்றால், நாளைக்கு அம்பானி கடையில் அழகான பிள்ளை விற்றால், பெத்த பிள்ளையைக் கூட குப்பைத் தொட்டியில் வீசி விடுவீர்களா?'' என்று சுருக்கென்று தைப்பது போல அவர்களிடம் கேட்கவேண்டும்.
""ஒரு ரூபாய் மலிவாகக் கொடுக்கிறான் என்பதற்காக 20,30 வருடமாக உங்களுக்குப் பொருள் விற்ற எங்களை ஒரே நாளில் தூக்கி எறிகிறீர்களே, உங்களை விடக் குறைவான சம்பளத்துக்கு நீங்கள் செய்யும் வேலையைச் செய்ய பல பேர் தயாராக இருப்பதால், 10,20 வருசம் சர்வீஸ் ஆன உங்களை வேலைநீக்கம் செய்வதாக உங்கள் நிர்வாகம் கூறினால் அதையும் ஒப்புக் கொள்வீர்களா?'' என்று மண்டையில் அடித்தாற்போலக் க! ேட்க வேண்டும்.
""கேவலம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாகக் கொடுக்கிறான் என்பதற்காக இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களையும், மக்களுடைய வரிப்பணத்தையும், நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தையில் போட்ட பணத்தையும் திருடி சொத்து சேர்த்த ஒரு கிரிமினலின் கடை வாசலில் கியூவில் நிற்கிறீர்களே உங்களுக்கு இது அவமானமாக இல்லையா?'' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல அவர்களைக் கேட்க வேண்ட! ம்.
தெரியாமல் தவறு செய்யும் படித்த முட்டாள்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்; தெரிந்தே தவறு செய்யும் காரியவாதிகளிடம் காறி உமிழ்வதைப் போலப் பேசவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாக சென்னை நகரின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இந்த பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும்.
எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடை காய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீட! க இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.
தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்!
இதெல்லாம் நடக்க முடியாத விசயங்கள் அல்ல. பிரிட்டிஷ்காரனின் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக நாம் இருந்தபோது அந்நியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் இப்படித்தான் நடந்தது. விலை குறைவான நைஸான வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணித்து முரட்டுக் கதராடையையும் கைத்தறி ஆடையையும் நாட்டுப் பற்றுள்ள மக்கள் அன்று விரும்பி வாங்கத்தான் செய்தார்கள்.
இன்று நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளாச்சிமடா என்ற கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி சுடுகாடாக்கி, கழிவு நீரை வெளியேற்றி விளைநிலங்களையும் அழித்த கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக அங்கு மக்கள் நடத்திய போராட்டம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி, இன்று கேரள மக்கள் யாருமே கோக் பெப்சியை விரலால் கூடத் தீண்டுவதில்லை என்ற நிலை அங்கே உருவாகியிருக்கிறது.
அத்தகையதொரு நிலையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாம் இங்கே உருவாக்கினால்தான் நாளை வால்மார்ட்டும் டாடாவும் பிர்லாவும் தமிழகத்தில் நுழைவதற்கே தயங்கிப் பின்வாங்குவார்கள். இந்த ரிலையன்ஸ் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் ஒரு பேரியக்கமாகப் பற்றிப் படரும்.
""விலை மலிவு, தரம் அதிகம் என்பதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், எங்கள் நாட்டு வியாபாரிகளிடம்தான் பொருளை வாங்குவேனே தவிர எங்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளியிடம் வாங்க மாட்டேன்'' என்று மக்களைச் சொல்ல வைக்க வேண்டும். ""சிறு வியாபாரிகள், விவ சாயிகளின் இரத்தம் குடிக்கும் ரிலையன்ஸ், டாடா போன்ற கோடீசுவரத் தரகு முதலாளிகள் கொள்ளை இலாபம் அட! ப்பதற்குத் துணை போகமாட்டேன்'' என்று மக்களைப் பேச வைக்க வேண்டும். அத்தகைய நாட்டுப்பற்றும் சுரண்டலுக்கு எதிரான கோபமும் எங்கும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் இந்த தேசத்துரோக அரசையும் தூக்கி எறிய மக்கள் தயாராகி விடுவார்கள்.
இவையெல்லாம் சாதிக்க முடியாத சாகசங்கள் அல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொழுப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் படுத்து 1000, 500, 200 என்று குறைந்து, மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி, பிறகு அது ஒரு வேளையாகக் குறைந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதை விட, அவனா நாமா என்று பார்த்து விடுவதுதான் தீர்வு.
மகாராட்டிர மாநிலத்தில் தினந்தோறும் 10, 15 விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை தொடர்கிறதே தவிர அவர்களுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மக்களோ, தங்கள் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகப் போராடினார்கள். 14 பேரை மார்க்சிஸ்டு அரசு சுட்டுக் கொன்ற பின்னர! ும் மக்கள் போராட்டம் அடங்கவில்லை. நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முடிவையே கைவிடுவதாகக் கூறி மேற்கு வங்க அரசு பின்வாங்கியது.
""தங்களுடைய நிலத்தை டாடாவுக்குக் கொடுக்க முடியாது'' என்று போராடிய ஒரிசா மாநிலம் கலிங்கநகரைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருந்தாலும் இன்று வரை டாடா நிறுவனம் அங்கே கால் வைக்க முடியவில்லை.
தம்முடைய மண்ணையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தீவிரமாகப் போராடியதால் நந்திகிராம் மக்களைப் பயங்கரவாதிகள் என்கிறது அரசு. 80,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் உலகின் 18வது பெரிய பணக்காரனான முகேஷ் அம்பானி, ஒரு தள்ளுவண்டி வியாபாரியையும் மளிகைக் கடைக்காரரையும் மோதி அழித்தால் அதனை வியாபாரம் என்றா சொல்ல முடியும்? இதுதான் உண்மையான பயங்கரவாதம்.
இந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசாங்கமும் போலீசும் கோர்ட்டும் இவர்களுடைய பங்களாவில் வேலை செய்யும் தோட்டக்காரனுக்கும் வாட்ச்மேனுக்கும் சமமானவர்கள். ரிலையன்ஸை ஒழிக்கச் சொல்லி இவர்களிடம் முறையிடுவது வீண். நாய்தான் வாலை ஆட்ட முடியும். வால் நாயை ஆட்ட முடியுமா? அப்படி முடியும் என்று நம்பிக் கெட்டவர்கள் பலபேர். தொலைபேசித்துறை, வங்கி, இன்சூரன்சு, துறைமு! , விமானநிலைய ஊழியர்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பினார்கள். தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள். இந்தத் துறைகள் எல்லாம் தனியார்மயமாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
உண்ணாவிரதம், தர்ணா, கடையடைப்பு போன்ற "அறவழி'ப் போராட்டங்களுக்கு அம்பானியும் அசையமாட்டான். இந்த அரசும் அசையப் போவதில்லை. நர்மதை அணைக்கட்டுத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர் நடத்தாத அறவழிப் போராட்டமா? அணைக்கட்டின் முன் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு... இத்தனைக்குப் பிறகும், அந்த அணைக்கட்டுக்கா! வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
அம்பானியையும், வால்மார்ட்டையும் விரட்ட வேண்டுமானால் அதனைத் தம் கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம்தான் அதைச் செய்ய முடியும். ""தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட்டு உள்நாட்டுத் தொழில்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டும்'' என்ற கொள்கையுடைய ஒரே இயக்கம் நக்சல்பார! இயக்கம்தான். இது மிகையல்ல, உண்மை. நக்சல்பாரி இயக்கத்தின் கீழ் அணிதிரண்டால் அம்பானியை நாள் குறித்து வெளியேற்ற நம்மால் முடியும். நந்திகிராம் மக்களைப் போலப் போராடினால் எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும்.
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு. பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!
சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம்!
ரிலையன்ஸ், டாடா, பிர்லா தரகு முதலாளிகள்
மற்றும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் புறக்கணிப்போம்!
அந்நிய அடிமை மோகம் உதறி எறிவோம்!
உள்நாட்டுப் பொருட்களை வாங்குவோம்!
தேசிய, சிறு தொழில்களை ஊக்குவிப்போம்!
விவசாயிகள், சிறுதொழில் முனைவோரை வாழவைப்போம்!
நம் மண் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் பற்று கொள்வோம்!
நாட்டுப் பற்றுணர்வை நாடி நரம்புகளில் முறுக்கேற்றுவோம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
***
No comments:
Post a Comment