தமிழ் அரங்கம்

Friday, November 16, 2007

சமூக விரோத பொறுக்கிகள் பற்றிய எச்சரிக்கை.

முக்கிய அறிவித்தல்


சமூக விரோத பொறுக்கிகள் பற்றிய எச்சரிக்கை.

இதன் பின்னணியில் புலி மற்றும் புலியெதிர்ப்பு கோஸ்டிகள் இயங்குகின்றது.

தேசம் நெற், எனது பெயரில் பதிவுகளை இடுகின்றது. நாம் அதில் எழுதுவதில்லை என்று, முன்பே எமது கட்டுரையில் அறிவித்திருந்தோம். அதன் ஆசிரியர் சேனன் என்னுடன் தொலைபேசியில் தொடர்;பு கொண்ட போதும், திட்டவட்டமாக இதையே கூறியிருந்தேன். இன்று (16.11.2007) எனது பெயரில் நான் போட்டதாக, எனது கட்டுரையை போட்டிருந்ததை, எனது பெயரில் இருந்து அகற்ற, இணைய ஆசிரியர் இருவரிடமும் ஈமெயில் மூலம் கோரியிருந்தேன்.

ஆனால் அது அகற்றப்படவில்லை. அதைப் பார்த்த சமூகவிரோத புலிப்பொறுக்கி ஒன்று வந்த உறுமுகின்றது. அதை அதன் பின் அனுமதித்துள்ளனர்.

எனது பெயரில் அல்லது எமது இணையத்தின் பெயரில் தேசம் நெற்றில் போடும் எந்தக் கருத்துக்கும் நாம் பொறுப்பாளிகள் அல்ல. அது எனது கட்டுரையைப் போட்டாலும் கூட பொருந்தும்.

தேசம்நெற் இணைய விபச்சாரத்தை செய்ய புறப்பட்ட பின், அது சமூக விரோத இணையப் பொறுக்கிகள் வம்பளக்கும் அரசியல் தளமாகிவிட்டது. எம்மை வைத்து காறி துப்புவது தான், அவர்களின் அரசியல் வாடிக்கையாளர்களின் அரசியல் கொசிப்பாகின்றது. தொட்டுக் கொள்ள நாம். இல்லாது எப்படித்தான், எதைத்தான் அவர்கள் விவாதம் செய்வது.

தேசியம், தலித்தியம், மரபு மார்க்சியம், ஸ்ராலின் என்று அரட்ட, அலட்டமுடியும்.

சரி உங்கள் அரசியல் என்ன? புலி மற்றும் புலியெதிர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? ஏகாதிபத்தியம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? புலி வைக்கும் தமிழீழத்தைப் பற்றிய தேசத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? புலியெதிர்ப்பு வைக்கும் ஜனநாயகம் பற்றிய அரசியல் நிலைப்பாடு என்ன.? இலங்கை அரசுடன் கூலிப்பட்டாளமாக உள்ள குழுக்கள் பற்றிய தேசத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? இந்திய இலங்கை உளவு அமைப்புகள், புலம்பெயர் நாட்டில் உங்கள் பின் இயங்கவில்லையா? ஏகாதிபத்தியம் பற்றிய நிலைப்பாடு என்ன?

எதுவும் இல்லை. படுபிற்போக்கான சமூக விரோதக்கும்பலுடன் சேர்ந்து கருத்தாடுகின்றனராம். அது மார்க்சியத்தை வேரறுக்க, புரட்சிகரமான எமது நிலையை காறித் துப்ப எடுக்கும் சதிக்கும்பலின்; முயற்சி தான் இவைகள். இதன் மூலம் புலி மற்றும் புலியெதிர்ப்புடன் கூடி விபச்சாரம் செய்வது தான் இக் கைங்கரியம்.

2 comments:

kiddy ppl said...

இரயாகரன் அவர்களுக்கு வணக்கம்!

எங்கே தான் நேர்மையைக்
காண முடிகிறது? எங்கேயாவது பலிகடாவாகவே நம்மை வைக்க முற்படுகிறார்கள். உங்களுக்கு நடந்த நிகழ்ச்சியை போல் எனக்கும் நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழச்சி என்ற பெயரில் யாரோ ஆபாசமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
(தமிழ்மணத்தில் அல்ல) இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டு குறைசொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பார்கள் இணையப் பொறுக்கிகள்.

மாசிலா said...

சைபர் உலகம் உண்மையிலே சைபர்களின் உலகமாகவே மாறிக்கொண்டு வருகிறது!
:-(