தமிழ் அரங்கம்

Sunday, December 9, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

பஜ்ரங்கி கூறவரும் கணிப்புபடி, நரோடாவில் அன்றைய ஒரு நாளின் இறுதியில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது 200 க்கும் மேலாகவே இருக்கும். ஆனால் இந்த எண்ணிக்கை மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு அறிவிப்பின் படி நரோடா பாட்டியா மற்றும் நரோடா கவுனில் மொத்தமே 105 பேர் தான் கொல்லப்பட்டனர். எப்படியாயினும், அஹமதாபாத் வட்டாரத்தில் நரோடா மட்டுமே ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இடமாகும். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் மேக்ஹனி நகரில் விஹெச்பி தலைவர்கள் வெறிப்பிடித்த வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் குறி முஸ்லிம்கள் காலங்கலமாக வாழந்து வரும் இடமாகிய குல்பர்க் என்றழைக்கப்படும் சமூகக் குடியிருப்புகளாகும்.



இம்மனிதவர்க்கப் படுகொலையில் பங்கெடுத்த மங்கிலால் ஜெய்ன், பிரகலாத் ராஜ், மதன் சாவல் ஆகிய மூவரையும் தெஹல்கா கண்டுபிடித்தது. இம்மூவரும் உள்ளுர் சிறு வியாபாரிகள்; இன்னும் இம்மூவர் மீதும் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கூறியதாவது, இவர்களும் இன்னும் இவர்களுடன் இருந்த வன்முறை கும்பலும், விஹெச்பி தலைவர்களான அதுல் வாய்த் மற்றும் பாரத் தெலி ஆகிய இருவரால் வழிநடத்தி செல்லப்பட்டது. இவ்விருவரும் FIRல் குற்றம்சாட்டபட்வர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது இவ்விருவரும் எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். சாவல் என்பவன், "அவனும் அவனுடனிருந்த கொடூரக் குற்றவாளிகளும் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரியை எப்படி துண்டம் துண்டமாக கை வேறு கால் வேறாக வெட்டி, பின்பு துண்டாக்கப்பட்ட அவரது பல்வேறு உடல் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து எரித்தார்கள்" என்றக் கொடுஞ் செயலை விளக்கமான விவரித்தான்.

குல்பர்க் படுகொலைகளின் எண்ணிக்கை அரசாங்கக் கணக்கின்படி 39 ஆக கூறப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டபட்டவர்களில் ஒருவன் தெஹல்காவிடம் கூறும் போது கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகாமாகவே இருக்கும் என்றான். இவ்வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் குல்பர்க் சமூகக் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் போக, அதன் பக்கத்திலுள்ள சேரிகளில் வசித்த ஏழை முஸ்லிம்களும் ஆவர். இவர்கள் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திலிருந்துத் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க இக்குடியிருப்புகளில் தஞ்சமடைந்து இருந்தனர். இம் மக்களும் சேர்த்தேக் கொல்லப்பட்டார்கள். அஹமதாபாத்தில் வகுப்புக் கலவரங்களுக்கு அதிக வாய்ப்புள்ளப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டக் கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய சதிகாரர்களான விஹெச்பியின் தலைவர்கள் ராஜேந்திர வியாஸ் மற்றும் ரமேஷ் தேவ் ஆகியோரிடமும் தெஹல்கா உரையாடியது. பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விட்ட சபர்மதி விரைவு ரயிலில் பிராயணம் செய்தக் கரசேவர்களின் பிரயாண ஏற்பாட்டின் பொறுப்பாளனும், அஹமதாபாத் நகர விஹெச்பி தலைவனுமான ராஜேந்திர வியாஸ் என்பவன் சொல்லும் போது, ரயிலில் வைக்கப்பட்ட தீ, 59 கரசேவர்களின் உயிரை வாங்கிய தினத்தன்று இவன் விஹெச்பி தொண்டர்களிடம் கூறினானாம், "முஸ்லிம்கள் ஒரு நாள் போட்டியை விளையாடி விட்டு நமக்கு 60ஐ இலக்காகத் தந்துள்ளனர். இப்போது நாம் ஒரு டெஸ்ட் போட்டியை தான் விளையாட வேண்டும். நாம் 600 எண்ணிக்கையை எட்டும் வரையிலும் நிறுத்தக் கூடாது" என்று கூறி உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளான்.

கலுப்பூரில் வசிப்பவனும், தெஹல்காவின் கேமராவில் பதிவாகியுள்ளவனுமாகிய வியாஸ் என்பவன் கூறும் போது, தானே 5 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் 9 முஸ்லிம் வீடுகளைக் கொளுத்தியதாகவும் விவரித்தான். ரமேஷ் தேவ் என்பவன் தரியாபூரில் விஹெச்பின் முக்கியமான ஆளாக இருந்தான். அவன் சொல்லும் போது, அவனும் அவனது சகச் சதியாளர்களும், 20வது வருடங்களுக்கு மேலாக தாங்கள் தெரிந்திருந்த முஸ்லிம்களையே குறி வைத்து தாக்கிக் கொன்றொழித்ததாக விவரித்தான். மேலும் தேவ் கூறும் போது, அவனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து 10 சிறிய ரக துப்பாக்கிகளைத் தான் ஏற்பாடு செய்ததாக உரிமையும் கொண்டாடினான்.

வதோதரா: எரித்துக் கரியாக்கப்பட்ட நகரம்:

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடங்களும் பல கட்டங்களாகத் தாக்கப்பட்டது. இத்தகையத் தாக்குதல்கள் 2 மாதக் காலங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது. பெஸ்ட் பேக்கரியில் மட்டும் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அஹமதாபாதில் கட்டவிழ்த்து விடப்பட்டத் தாக்குதலுக்கு நிகராக எதுவுமே இல்லை என்ற போதிலும், குஜராத்தின் இரண்டாவதுப் பெரிய நகரமான வதோதராவில் முஸ்லிம்கள் பலக் கட்டங்களாக தாக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 27 அன்று தொடங்கிய முதல் கட்டத் தாக்குதல்கள் மார்ச் 2 வரை நீடித்தது. அப்போது மார்ச் 1ம் தேதி, ஹனுமான் தெக்ரியிலுள்ள பெஸ்ட் பேக்கரியில் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டச் சம்பவமே மிக மேசமான படுகொலை சம்பவமாகும். இதற்குப் பிறகு மார்ச் 15லிருந்து 20க்கு இடையிலும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25லிருந்து மே 2க்கு இடையிலும் குறிவைத்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு, இவைகளுக்கு இடைபட்ட காலங்களிலும் கூட சிலச் சம்பவங்கள் நடந்தன.

நகரத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒவ்வொரு இடங்களும் தாக்கப்பட்டது. கிஷன்வாடி, சாமா, அஷ்ஹாபிவி சாவ்ல், மாதவ்பூர் 2, மக்கர்புரா, அவ்தூத் நகர், ராகவ்பூரா, நூர் பூங்கா, கரேலிபாக், கோட்ரி கிராமம், ஹாஜி மியான் கா சாரா, ஹனுமான் தெக்ரி, ரோஷன் நகர், பானிகேட், தாய்வாடா மற்றும் மச்சிபித் ஆகியப் பகுதிகளுக்கு ஹிந்து வன்முறை கும்பல் வெறியோடு சென்றனர். முஸ்லிம்களுடைய நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு தீக்கிரையாக்கப்பட்டது. ஹிந்துக்கள் பெருவாரியாக வசிக்கும், வதோதராவின் புதியப் பகுதியான சாமாவில் பிப்ரவரி 28 அன்று, 20 பேரை கொண்ட வன்முறை கும்பலொன்று, போரசிரியர் JS பாண்டுக்வாலாவின் வீட்டைத் தாக்கியது. இவர் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றுவதோடு வாதோதராவில் மிக மதிக்கப்படக்கூடிய நபராகவும் இருந்தவர். பேராசிரியர் JS பாண்டுக்வாலாவும் அவரது மகளும், தனதுப் பக்கத்து வீட்டுக்காரான ஒரு ஹிந்து நண்பரின் வீட்டில் பாதுகாப்புப் பெற்றுக் கொண்டதனால், வன்முறை கும்பல் அங்கிருந்து வெறியேறியது.

இருப்பினும் மறுநாள் மார்ச் 1ம் தேதி, மிகப் பெரிய வன்முறை கும்பல் வாயு உருளைகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் இரண்டாவது முறையாக பேராசிரியர் பாண்டுக்வாலா உடைய வீட்டைத் தாக்கியது. இம்முறை தங்களது வன்முறையால் அவரது வீட்டை எரித்துச் சாம்பலாக்கினார்கள். இது தவிரவும் அப்பகுதியில் உள்ள மேலும் இரு முக்கிய முஸ்லிம் உயர் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இம்மூன்று வீடுகளுக்கும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டக் கும்பலில் இருந்த நபரான தீமந் பட் என்ற கலகக்காரனை தெஹல்கா கண்டுப் பிடித்தது. பட் கணக்காளனாக பணி செய்பவன். இவன் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில், தலைமை கணக்காளனாகவும் தணிக்கையாளனாகவும் பணியில் இருக்கிறான். ஆனால் இவனது உண்மையான பணி என்னவென்றால், முஸ்லிம்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தித் துன்புறுத்துவதேயாகும்.

பட் பல்கலைகழகத்தில் பணியாளனாக இருப்பதோடு, வதோதராவின் தற்போதைய பாஜக MPயான ஜெயாபென் தக்காருக்கு அந்தரங்க உதவியாளனாகவும் இருக்கிறான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்புச் சம்பவம் நடந்த அந்த இரவு, வதோதராவிலுள்ள பாஜக, RSS, VHP, பஜ்ரங்தள் மற்றும் ABVP ஆகிய அமைப்புகளில் உயர் பதவி வகிப்பவர்கள் ஒன்று கூடி சந்தித்தத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான். RSS உறுப்பினராகவும் உள்ள பட், அந்த இரவுக் கூட்டத்தில் பங்கெடுத்தாகக் கூறியதோடு, இந்தக் கூட்டத்தில் தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தச் சதித் திட்டங்கள் வரையப்பட்டன எனக் கூறினான். அதே கூட்டத்தில் தான், கலவரத்திற்குப் பின் சட்ட நடவடிக்கைகளை சந்திக்கும் ஹிந்துக்களுக்குச் சட்ட உதவி வழங்குவது குறித்தத் திட்டமும் தீர்மானிக்கப்பட்டது.

வதோதராவிலுள்ள மற்றுமொரு பாஜக தலைவர் தீபக் ஷாவை தெஹல்கா சந்தித்தப் போது, பட் சொன்ன இரவு கூட்டம் குறித்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்தியதோடு, கூட்டம் எங்கே நடைபெற்றது? என்ற தகவலையும் தந்தான். இச்சதி கூட்டம் நர்மதா பண்ணை வீட்டில் வைத்து நடந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சார்ந்த ஹிந்துக்களை காவி அமைப்புகள் பயன்படுத்தியதாக பாபு பஜரங்கி அஹமதாபாத்தில் வைத்து பெருமையாகக் கூறியதை, ஷாவும் ஊர்ஜிதம் செய்தான். இந்த ஷா மஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கிறான்.


சபர்கந்தா: எங்கேயும் ஓடமுடியாது.

500 முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என சபதம் எடுத்திருந்த ஒரு விஹெபி தலைவனால் தலைமை தாங்கித் திரட்டிக் கூட்டிச் செல்லப்பட்ட வன்முறை கும்பலின் உறைய வைக்கும் கூக்குரலாக இருந்தது தான், "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்னும் கோஷமாகும்.

சபர்கந்தா மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் அதிகப்படியான பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர். இங்கு முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இங்கு நடைபெற்ற மனிதஇன படுகொலைகளுக்கு முக்கிய சூத்திரகாரனாக சதித் திட்டங்களை வகுத்தவன்,விஹெச்பியின் முக்கிய தலைமை பிரமுகனான அனில் பட்டேல் என்பவனாவான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்பு சம்பவம் நடந்தப் பிறகு, குறைந்தது 500 முஸ்லிம்களையாவதுக் கொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கொல்லாமல் போனால், தான் விஹெச்பியில் வகித்து வரும் பதவியை விட்டு விலகி விடுவதாக சபதம் செய்ததாகவும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். எங்கள் கோஷமே, "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்பது தான் என மேலும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். விஹெச்பி மற்றும் RSS தொண்டர்களிடம், "வெளியே சென்று முஸ்லிம்களைக் கொல்லுங்கள், இன்னும் அவர்களின் சொத்துக்களை எரியுங்கள்" எனப் பகிரங்கமாகவே தூண்டிதாகவும் இவன் கூறினான். சபர்கந்தாவில் முஸ்லிம்களின் வீடுகளோ, வியாபாரத் தலங்களோ எரிக்கப்படாத கிராமங்களே இல்லை என்பதாகவும் பட்டேல் தெரிவித்தான். பட்டேலின் சொந்தக் கிராமமான தன்சுராவில் மொத்தம் 126 முஸ்லிம் வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டத் தகவலையும் அவன் வெளியிட்டான்.

"முஸ்லிம்களுக்கு அதிகப்படியான உயிர் இழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே உள்நோக்கமே அன்றி வேறுறொருத் திட்டமுமில்லை" என்பதாக பட்டேல் கூறினான். இம்மனித இனப் படுகொலையின் போது, பிரவீன் தொகாடியா மாவட்ட அளவில் செயல்களை நடத்தியதாகவும் மேலும் அவன் தெரிவித்தான். இன்னும் தொகாடியா படடேலிடம், "முக்கியமான விஹெச்பி ஆட்கள் யாரும் காவல் துறையால் குற்றம்சாட்டப்படக் கூடாது, சிறைக்குச் செல்லக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் பணியாற்றுமாறு" கூறியதாகவும் பட்டேல் தெரிவித்தான். சபர்கந்தாவில் 1545 வீடுகளும், 1237 வணிகத் தலங்களும் எரிக்கப்பட்டன. மேலும் 549 கடைகள் சூறையாடப்பட்டன.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

வெடிகுண்டு தயாரிப்பாளர்கள்


வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப்,பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

மேலோட்டம்:

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.

(தெஹல்கா அறிக்கை வெளிப்படுத்தும் ஹிந்துத்துவ வெறிநாய்கள் முஸ்லிம்களை அழிக்க எடுத்துக் கொள்ளும் அனைத்து முன்னேற்பாடுகளும், வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில், அதற்காக எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளின் முக்கியதுவத்தைக் குறித்தும், அந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வகையிலெல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் விரிவாக எடுத்துரைக்கும். முஸ்லிம் சமுதாயம் இவற்றை வைத்து இனிமேலாவதுத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் என நம்புவோமாக! - இறை நேசன்.)

வி.ஹெச்.பியைச் சார்ந்தத் தாவல் ஜெயந் பட்டேல் என்பவன் அவனுடைய குவாரிகளிலுள்ள அபாயகரமான வெடிகளை சபர்கந்தாவில் பயன்படுத்தி உள்ளான். வெடிமருந்துப் பொருள்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற பழம்பெரும் RSS காரனாகிய அம்ருத் பட்டேல் என்பவனுடைய உதவியால், குவாரியிலேயே வெடிமருந்துகள், RDX ஆகியவற்றைக் கொண்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.

வி.ஹெச்.பியின் விபாக் பெர்முக்வாகிய அனில் பட்டேல் என்பவன், எவ்வாறு வெடிகுண்டுகள் சபர்கந்தாவில் உருவாக்கப்பட்டு பின்னர் அஹ்மதாபாத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது என்றத் தகவலை வெளியிட்டான்.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

No comments: