போலீஸின் பங்கு
சட்டத்தின் பாதுகாவலர்களே சட்டத்தை உடைத்தெறிந்தக் கயவர்களுடன் இரகசியமாகப் பங்கெடுத்து குஜராத்தின் பயங்கரத்தை மேலும் எவ்வாறு மோசமாக்கினார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்:
மேலோட்டம்
நரோடா பாட்டியாவில் கிடந்த 700-800 இறந்த சடலங்களை இரகசியமாக எடுத்து, அஹ்மதாபாத் முழுவதும் போடுவதன் மூலம் படுகொலைகளின் எண்ணிக்கையை க் (கோரத்தை) குறைத்து காண்பிப்பதற்காக உத்தரவு பிறப்பித்தானாம் (சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் குஜராத் போலீஸ் துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்)போலீஸ் ஆணையாளர் PC பாண்டே.
பஜ்ரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவன் நரேந்திர மோடி சரண் அடையச் சொன்னவுடன் தான் அவ்வாறு செய்ததாகக் கூறினான். பாபு பஜ்ரங்கியைக் கைது செய்யும் போது இணை ஆணையாளர் (குற்றவியல் கிளை) PP பாண்டேயும் அவன் உடனிருந்த காவல் துறையினரும் இதுவெல்லாம் ஒரு நாடகம் தான் என்று அவனிடம் கூறினார்களாம்.
உள்ளுர் சங்பரிவார் தலைவன் ஒருவனை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிடப்பட்டிருந்தும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ND சோலங்கி அவனை விஹெச்பி அலுவலகத்தில் இருக்க அனுப்பி வைத்தார்.
கலுப்பூர் மாவட்ட விஹெச்பி நபரான ரமேஷ் தேவ் என்பவனிடம் DCP காட்வி, தேவ் தன்னிடம் முஸ்லிம்களை இனம் காட்டினால் குறைந்தது நான்கைந்து முஸ்லிம்களையாவது கொல்லுவேன் என உறுதியளித்தானாம். உடனே தேவ் காட்வியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களைக் காட்டினானாம். நாங்கள் உணர்வதற்குள் காட்வி 5 நபர்களை கொன்று விட்டான் என தேவ் கூறினான்.
குல்பர்க் முஸ்லிம் சமுதாய குடியிருப்புகளுக்கு வெளியே குழுமியிருந்த வன்முறை கும்பலிடம், அக்கும்பல் தங்கள் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்ட 3 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது என போலீஸ் ஆய்வாளர் KG எர்டா கூறினான். உடனே வன்முறையாளர்கள் வெறிகொண்டவர்களாய் சென்றார்கள். போலீஸ் ஆய்வாளர் KG எர்டா முன்பாகவே ஒரு மனிதர் துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
முஸ்லிம்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீ வைத்து கொளுத்திடுமாறு போலீஸ் ஆய்வாளர் எர்டா விஹெச்பி தொண்டர்களிடம் சொன்னான். இன்னும் அவ்வாகனத்தில் உடன்வந்த காவலரை ஓடிவிடுமாறு கூறிய எர்டா, "இந்நிகழ்வு முழுவதும் இங்கேயே முடிக்கப்பட வேண்டும். பிறகு எவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை", எனக் கூறினான்.
காக்கி கொலையாளிகள்
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இரகசியமாக அனுமதித்திலிருந்து முன்னின்று தாக்குதல்களை நடத்தியது வரை, காவல்துறை அவர்களால் முடிந்த ஒவ்வொரு வழிகளாலும் வன்முறையாளர்களுக்குரிய வழியை சுலபமாக்கித் தந்தனர்.
2002 மார்ச் 2ம் தேதியன்று மாலை 6 மணியளவில், பாவாநகர் மாவட்டத்திலுள்ள கோகா ரோடு என்னுமிடத்திலுள்ள ஒரு மதரஸாவில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த வேளையில், ஒரு ஹிந்து வெறிக் கும்பல் இரத்தத்தை ஓட்ட உறுமலோடு அந்த மதரஸாவினுள் நுழைந்தது. பாவாநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அப்போது பணியாற்றிய ராகுல் சர்மா, துப்பாக்கி சூடு நடத்துமாறு தனது காவல்படையினரை ஆணையிட்டார். அதனால் வன்முறை கூட்டம் கலைந்தோடவே, குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.
பாவாநகர் சம்பவத்திற்குப் பின் அடுத்த இரண்டு வாரங்கள் போலீசார் அதே போன்று துணிச்சலான நடவடிக்கைகளை மேலும் சில இடங்களிலும் எடுத்தனர். மார்ச் 16 வரை பாவாநகர் மாவட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் ஹிந்துகளும், இருவர் முஸ்லிம்களுமாவர். சரியான நேரத்தில் காவல்துறை முறையாக தலையிட்டக் காரணத்தால், இம்மாவட்டம் ஏறக்குறைய கொலைகள் நிகழாத மாவட்டமாக திகழ்ந்தது. இந்நிலையில் மார்ச் 16 அன்று கிட்டதட்ட காலை 10:10 மணியளவில், ராகுல் சர்மாவுக்கு அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சராக இருந்த கோர்தன் ஜடாபியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
நான் சிறப்பாக பணியாற்றியதாக ஜடாபியா பாராட்டினாலும், காவல் துறை துப்பாக்கி சூட்டின் போது இறந்தவர்களின் விகிதாசாரம் சரியாக இருக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஏனெனில் இறந்தவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விட அதிகமாக இருந்தக்
காரணத்தினால் அவ்வாறு குற்றம் சாட்டினார். "அதற்கு நான் அவரிடம் கூறினேன்,
இவைகள் எல்லாம் சம்பவங்கள் நடந்த இடத்திலுள்ள நிலமைகளின் அடிப்படையிலும், வன்முறையாளர்கள் நடக்கும் விதத்தின் அடிப்படையிலுமாகும்", என ராகுல் சர்மா பதவி நீக்கம் செய்யபட்ட பின் நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு கூறினார்.
சர்மா மேலும் ஆணையத்திடம் கூறும் போது, 2002 மார்ச் 1ம் தேதி இரவு 10:20 மணியளவில் தான் அப்போதைய காவல்துறை தலைவரான K. சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு, பாவாநகரில் கூடுதலான காவல் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டப் போது DGP, அவர் மறுநாள் காலை ஒரு மாநில ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அனுப்புவதாகவும், இதற்கு மேல் நான் எவ்வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது எனவும் ஏனெனில் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் முழுமையாக விட்டு கொடுத்து விட்டனர் என கூறினார்.
ஜடாபியாவுடனும் இன்னும் காவல்துறை தலைவருடனும் ராகுல் சர்மா செய்த இரண்டு உரையாடல்களுமே, 2002 மனித இனப் படுகொலைகளின் போது பெரும்பான்மையான காவல்துறையினர் குஜராத்தை எரித்துச் சுடுகாடாக்கிய வன்முறை கும்பல்களுடன் இணைந்து செயல்பட்டனர் என்பதற்குப் போதுமான சான்றைக் காட்டுகிறது. கொலைவெறி கும்பல்களைக் கொலை செய்யத் தூண்டியதிலிருந்து, அவர்களுக்கு வெடிப் பொருள்களை விநியோகம் செய்தது, வெடி குண்டுகளை மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வது, ஏற்கெனவே ஹிந்து கொலைவெறி வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவற்றைச் செய்து மனித இன படுகொலைகள் எளிதாக நடைபெற காவல்துறை எல்லா வழிகளிலும் முடிந்தவரை உதவியது.
கலவரக்காரர்கள் மற்றும் சதி செய்தவர்களிடம் இருந்து பெறபட்ட சில முதன்மையான தகவல்கள், வன்துறையாளர்கள் பெரும்பாலான காவல்துறையினரிடமிருந்து உதவிகள் பெற்றதையும், வன்முறையால் திக்குமுக்காடி திணறிய நாட்களில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியவர்களே சீருடை அணிந்த வன்முறையாளர்களாக மாறியதையும் தெரிவிக்கின்றது
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...6.
மாநில அரசு எதை விரும்பியதோ அதை போலீஸ் செய்தது
ஹரீந்தர் பவேஜாவிடம் முன்னாள் கூடுதல் DGP (நுண்ணறிவு)RB ஸ்ரீகுமார் பேசி கொண்டிருக்கும் போது, "கலவரகாரர்களுடைய பார்வையில் அரசாங்கம், அவர்கள் பக்கமே இருப்பதாகக் கருதினார்கள்" என ஒப்புதல் அளித்திருந்தார்.
நீங்கள் கூடுதல் DGP (நுண்ணறிவு)ஆக இருந்த போது, சபர்கந்தாவிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்றப் புகாரை பதிவு செய்தீர்களா?
2002ல், முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. எங்களுடைய தகவல் என்னவென்றால், விஹெச்பியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான, வட்காமிலுள்ள இரும்பு பட்டறையில் தான் இந்த ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்டன. நான் எழுத்து மூலமாகவே அறிக்கை அனுப்பினேன். மேலும் அப்போதைய அஹ்மதாபாத் போலீஸ் தலைவரான KR கவ்சிக்கிடமும் இது குறித்துத் தகவல் சொன்னேன். அவர்கள் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், சோதனை நடத்தச் சென்றவர்களே, சோதனை நடத்த வரும் செய்தியைக் கசிய விட்டதால், அங்கே சோதனையின் போது ஒன்றும் கைபற்றப்பட வில்லை என்பதனை பின்னர் நான் தெரிந்து கொண்டேன். இத் தகவல்களை பத்திரிக்கைகள் அறிந்து கொண்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதல் பக்க செய்தியாகவே வெளியிட்டது. அவர்கள் தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுத்தனர். அதனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அங்கு நாட்டு துப்பாக்கிகள் தாயாரிக்கப்படுவதாக வலுவாக சந்தேகிக்கப்பட்டது.
கலவரத்தின் போது இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா?
இந்தத் தகவல் பின்னரே கிடைத்தது. எனக்கு எதிராக ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் தகவல்களைப் பரிமாறுவது நுண்ணறிவு பிரிவுக்கு வழக்கமான ஒன்றே என DGP கூறிவிட்டார்.
சோதனையிட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டா?
(சிரிக்கிறார்) சோதனையிட்டவர்களின் செயல்பாடுகள், ஆளும்கட்சியின் அரசியல் ஆதாயத்திற்கு இசைவானதாகவே இருந்தது. காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்ட ஒழுங்கு அதன் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர்த்தும் வகையில், ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றபட்டதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 தேதியன்று DG வன்ஜராவுக்கும், மற்றவர்களுக்கும் இந்த ஆயுதப் பறிமுதலுக்காக வெகுமதிகள் வழங்கப்பட்டது.
கலவரங்களின் போது ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டது என்று ஏதேனும் புகாரை பதிவு செய்தீர்களா?
நானாவதி-ஷா ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட என்னுடைய முதல் பிரமாண பத்திரத்திலேயே எனது அறிக்கைகளின் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது. சூலாயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் அந்த அறிக்கையிலே உள்ளது. ஏப்ரல் 2002 -ல் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு வன்முறை வெறி கீழே இறங்கி விட்டது. FIRகள் முறையாக பதிவு செய்யபடவில்லை என்றும், அதிகமான குற்றச்சாட்டுகள் ஒன்றாக இணைக்கபட்டுள்ளது என்றும், வன்முறை கும்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய விஹெச்பி தலைவர்களின் பெயர்கள் FIRகளில் விடுவிக்கப்பட்டுள்ளது போன்ற புகார்களை குறிப்பிட்டு அறிக்கை அனுப்பினேன். இது ஒரு சர்ச்சையாகிற்று. இவ்வாறு கொடுக்கப்பட்ட புகார் அறிக்கைகள் எவற்றின் மீதும், அரசாங்கம் எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அல்லது இவற்றை பற்றி எந்த மேலதிக விளக்கங்களையும் கேட்கவிலலை. அது மிகவும் தெளிவு.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
1 comment:
கட்டுரையை மறு பதிப்பு செய்தமைக்கு நன்றி. மொழிபெயர்த்து தனது தளத்தில் வெளீயிட்ட Copymanக்கு நன்றீ.
அசுரன்
Post a Comment