தமிழ் அரங்கம்

Wednesday, January 9, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.

பகை உணர்வின் வெறியாட்டம்



2002ல் நரோடா பாடியாவில் நடந்த அதி பயங்கரமான படுகொலைகளின் பின்னனியில் உள்ள உண்மைகள்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளில் அஹ்மதாபாத் காவல்துறையினர் வன்முறை கும்பலுடன் வஞசக நோக்கத்தோடு செய்துக் கொண்ட இரகசிய ஒப்பந்தங்களும் இன்னும் படுகொலைகளை மூடி மறைத்தலும், குல்பர்க் சமூக குடியிருப்பில், இரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் முன்னாள் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரி கை கால்கள் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரங்கள், இம்மாபாதக செயல்களை எவர்கள் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து……

முஸ்லிம்கள் - வாழ்ந்திட அவர்களுக்குத் தகுதியில்லை


நரோடா பாட்டியாவில் இனஅழிப்பு கொலைகள் மிக துரிதமாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் நடத்தப்பட்டது. குற்றவாளிகள் தணடிக்கப்படாததோடு இன்னும் அவர்களுடைய தவறுகளைப் பற்றி மனவேதனைப் பாடாதவாகளாகவும் இருக்கின்றனர்.

சபர்மதி விரைவு இரயில் துயர் சம்பவம் நடைபெற்றச் சிலமணி நேரங்களிலேயே, பாஜகவும் இன்னும் அதன் சார்பு அமைப்புகளான விஹெச்பி, RSS, பஜ்ரங்தள் ஆகியனவும் இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இனஅழிப்பு படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன. சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்ட மறுநாள், பிப்ரவரி 28, 2002ல் திகிலூட்டும் வகையில் குவியல் குவியலாக நடத்தப்பட்ட படுகொலைகளை அஹ்மதாபாத் கண்டது. ஆயுதங்கள் தாங்கிய காவி வெறியாட்டகாரர்கள் தெருக்களில் வலம் வந்தவர்களாக, அவர்கள் விரும்பியபடி முஸ்லிம்களை எரித்தல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழக் கூடிய அஹ்மாதாபத்தின் வெளிப்புற பகுதியான நரோடாவில் தான் அதிகமாக இரத்தம் ஓட்டபட்டது.

பாஜகவும், விஹெச்பி, மற்றும் பஜ்ரங்தள் ஆகியன மிக நேர்த்தியான முறையில் படுகொலைகளைச் செய்யும் குழுக்களை அமைத்து பிப்ரவரி 28 காலை 10 மணியிலிருந்து நன்கு இருட்டும் (இரவு) வரை திட்டமிட்டுப் படுகொலைகளை நடத்தினார்கள். துப்பாக்கிகள், சூலாயுதங்கள், வாள்கள் போக இன்னும் எவை எல்லாம் தாக்குவதற்கு பயன்படுத்தலாம் என்று உணரப்பட்டு குறைந்த நேரத்தில் கிடைக்கப் பெற்றனவோ, செங்கல் முதல் வாயு உருளைகள், எரிபொருள் நிரப்பப்பட்ட டாங்கிகள் வரை எவ்விதக் கட்டுபாடுகளும் இன்றி மிக எளிதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அவை கொண்டுச் செல்லப்பட்டன. அதிக எண்ணிகையிலான மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு எரிக்கப்படுவதற்கு முன், அதிகமானோர் குத்தப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இன்னும் துணடம் துண்டமாக வெட்டப்பட்டும், பிறகு எரித்தும் கொல்லப்பட்டார்கள்.

படுகொலைகள் நடைபெறும் போது வன்முறை வெறியாளர்களின் கைத்தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் தொடராக பகிர்ந்து கொள்ளப்பட்டன. சூரியன் அஸ்தமித்திருக்க, முஸ்லிம்கள் வாழும் பகுதியான நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியன சடலங்களால் நிரப்பப்பட்ட மிகப் பெரிய வெறுமையான நிலமாக மாறியது. சிலமணி நேரத்திற்கு சற்று முன்னர் தான் மனிதர்கள் வாழும் வசிப்பிடமாக இருந்த இடம், காய்கறிகளைப் போல் நறுக்கப்பட்டதாகவும், கரிகளைப் போல எரிக்கப்பட்டதாகவும் படுகொலைகளுடைய கொடூரத்தின் உச்சத்தைச் சாட்சியாகக் காட்டும் விதத்தில் பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்த கோர இடமாக காட்சியளித்தது.

நரோடா ஒரு பிரபல்யமான இடமல்ல, மாறாக ஓர் ஒதுக்குப்புறமான இடமாகும். இது உள்ளூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், அஹ்மதாபாத் காவல்துறை தலைமையகமான சாஹிப் பவுகிலிருந்து 4 கிமீக்கும் குறைவான தொலைவிலும் தான் அமைந்திருக்கிறது. உயிரை பறிக்கக் கூடிய பங்கர அபாயகரமான ஆயுதங்களைத் தாங்கிய வெறிபிடித்த வன்முறை கும்பல்கள், 10 மணி நேரத்திற்கும் மேலாகவே வெகு ஜாலியாய் படுகொலைகள் செய்திருந்தும், ஆட்சி நிர்வாகம் ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை; சட்டஒழுங்கைப் பலப்படுத்த படைகள் துரிதமாக அனுப்பப்படவில்லை; வன்முறை கும்பலை கலைப்பதற்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நரேந்திர மோடி தான் இந்த இனஅழிப்பு படுகொலைகளுக்கு குற்றம்சாட்டப்பட வேண்டியவன் எனபதில் பொது மக்களுக்கு எவ்வித சந்தேகமுமில்லை. காவல் துறையினர் வன்முறை வெறியர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாக இக்கொடியவர்களின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து உயிர் தப்பித்த அப்பாவிகள் மக்கள் உறுதிபட தெரிவித்தார்கள். அது இன கலவரமாதலால், வன்முறையாளர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தார்கள் என தந்திரமாக பதிலளித்தனர். அரசு தனது தரப்பில் எதையும் செய்யத் தவறியதையோ அல்லது தேவையான உத்தரவுகளை பிறபிக்கத் தவறியதையோ மறுத்தது. ஆண்டுகள் 5 ஆகியும், நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியவற்றில் நடந்த மனித இனப் படுகொலைகள் சம்பந்தமான வழக்கு விசாரணைகள் இன்னும் துவங்க வேண்டியதிருக்கிறது.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

No comments: