பி.இரயாகரன்
06.01.2007
சந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில், ஜெர்மனியில் இந்தக் கொலைகாரர்கள் கூடும் அறிவித்தலை விடுத்துள்ளனர். ஜெர்மனி பொலிசுக்கு தகவல் கொடுக்கும் ஆள்காட்டியின் ஏற்பாட்டில், இந்த மாநாடு.
இந்த புளட் இயக்கம், உமாமகேஸ்வரனுக்கு அடுத்து தலைமைப் பொறுப்பில் இருந்த சந்ததியாரை படுகொலை செய்த விதமோ வக்கிரமானது. அவரின் கண்ணை முதலில் தோண்டி எடுத்தபின், அவரை துண்டுதுண்டாக வெட்டியவர்கள், அவரின் உடலை கூவத்தில் போட்டனர். இந்த கொலைகாரக் கும்பல் தான்போடும் ஜனநாயக வேஷத்துக்கு ஏற்ப ஒரு மாநாடு. மானம்கெட்ட கொலைகார நாய்கள் கூடும் ஒரு இடம் தான், அது.
இந்த புளட் என்ற சதிகார கொலைக் கும்பல், உள் இயக்கத்தில் நடத்திய கொலைகளோ சில நூறு. அண்ணளவாக 500 பேர் புளட்டின் உள்ளியக்க படுகொலைக்கு பலியானவர்கள். (இதன் ஒரு பகுதியை விரையில் நாம் வெளியிட உள்ளோம். உங்களிடமும் இருக்கும் தகவல்களை தந்துவுதமாறு கோருகின்றோம்.) இதுவரை அப்படிக் கொல்லப்பட்டவர்களை, எந்த ஜனநாயகமும் மீட்டு எடுக்கவில்லை. மாறாக தாம் ஜனநாயகவாதிகள் என்று வேஷம் போடுவது மட்டும் தொடருகின்றது.
அன்று புளட் என்ற சதிக் கும்பல், சித்திரவதைக்கென்று ஒரு குழுவை நிறுவனப்படுத்தி வைத்து இருந்தது. சித்திரவதைக்கென்ற தனிமுகாங்கள், சித்திரவதைக்கென்று சிறப்பு ஏற்பாடுகள், கொல்வதற்கும் உடலை அழிப்பதற்கும் என்று வகைவகையான ஏற்பாடுகளையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தது.
யாரைக் கொல்ல இந்த ஏற்பாடுகள்? வேறு யாரையுமல்ல, சொந்த இயக்க உறுப்பினரைக் கொல்லத்தான். பின்தளத்தில் இந்த ஏற்பாட்டுடன் தான், உமாமகேஸ்வரன் புளட்டின் தலைவராக இருக்கமுடிந்தது. தளத்தில் இருந்து கொல்வதற்காகவே, பின்தளத்துக்கு பலரை பலவிதத்தில் கடத்திச்சென்றவர்கள். இந்த புளட்டின் தலைவர் வெறும் கொலைகாரன் மட்டுமல்ல. இயக்க பெண்களை பாலியல் ரீதியாக வளைத்துப் போட்டும், மிரட்டியும், ஆசை காட்டியும் அனுபவிப்பதில் கூட, அவர் தலைவர் தான். அவனின் பெயரால், அவனின் வழியில் ஜெர்மனியில் மாநாடு.
இவர்கள் தமது கடந்தகால செயலுக்காக மனம் வருந்தியது கிடையாது. இன்று வரை அதற்காக எந்த மன்னிப்பைக் கோரியதும் கிடையாது. ஏன் அதைச் செய்தோம் என்று, சுயவிளக்கம் கூட கிடையாது.
மாறாக இன்றும் அதே அரசியல், அதே வக்கிரம். இன்று இலங்கை அரசில் கூலிக் குழு. இதை எப்படி செய்வது என்பதை ஆராய மாநாடு. இப்படி இருக்க, தம்மைத் தாம் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். புலியை எதிர்ப்பதால், தாம் ஜனநாயகவாதி என்கின்றனர். இப்படித்தான் பலரும். அரசுடன் கூடி இயங்குவது தான், ஜனநாயகம் என்கின்ற அளவுக்கு இலங்கை அரசியலில் புழுத்துக்கிடக்கிற கூட்டத்தில் ஒன்று தான், இந்த சதிகாரப் புளட்.
புலியை அழிக்க, புலியைக் கொல்லுதல் என்பதே இவர்களின் ஜனநாயக வேலைத்திட்டமாகும். இப்படி புலியொழிப்பில் ஒரு கூலிக் குழுவாக செயல்படும் இவர்கள், மறுபக்கத்தில் கப்பம், கொள்ளை முதல் அனைத்து அடாவடித்தனங்களையுமே தமது ஜனநாயக நடைமுறையாக கொண்டவர்கள்.
1984-1986 காலகட்டத்தில் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை சந்ததியாருடன் நின்றது. கொலைகாரர்களும் ரவுடிகளுமான சிறுபான்மை உமாமகேஸ்வரனுடன் நின்றது. கொலைகள் மூலம் அமைப்பை அச்சுறுத்தி அடிபணியவைத்தன் மூலம், உமா கும்பல் தனது தலைமையைத் தக்கவைத்தது. மத்திய குழு உறுப்பினர்களைக் கூட, தமது சொந்த வதை முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கி செயல் இழக்கவைத்தனர்.
அதே நேரம் மத்திய குழுவின் பெரும்பான்மை, உமாமகேஸ்வரனை எதிர்த்தது. அதன் மக்கள் விரோத அரசியலை எதிர்த்து, சந்ததியார் தலைமையில் அணி திரண்டனர். உமாமகேஸ்வரன் தலைமையில் திரண்டு நின்ற கொலைகார கும்பலும் ரவுடிகளுமான ராஜன் மற்றும் மாணிக்கதாசன் கும்பல், தாம் அல்லாத மத்திய குழுவை படுகொலை செய்ய முயன்றது.
இந்தப் படுகொலையில் இருந்து தப்ப, பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் தப்பியோடினர். இப்படித் தப்பியோடிய குழு தான் தீப்பொறியாயினர். இவர்கள் தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை மூலம் அறிமுகமாகினர். அவர்களின் ஒருவரான கேசவன்(நோபட்) எழுதிய நூல் தான், புதியதோர் உலகம் என்ற நாவல். இது அந்த கொலைகார புளட் என்ற கும்பலைப் பற்றியது. இந்த கொலைக்காரக் கும்பல் தான், ஜெர்மனியில் மாநாடு நடத்துகின்றனர்.
அன்று பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி தப்பி ஒடிய நிலையில், சந்ததியார் மட்டும் முன்னணி தலைவர் என்ற நிலையில் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று தப்பிச் செல்லவில்லை. அவரைக் ஏமாற்றி அழைத்துச்சென்ற கொலைகார சதிக் கும்பலான புளட்டோ, அவரின் கண்ணை முதலில் பிடுங்கி எடுத்த பின் படுகொலை செய்தது.
இப்படி படுகொலைகளே புளாட்டின் அரசியலாக மாறியது. இதில் இருந்து தப்பியவர்களுக்கு புகலிடம் கொடுக்கவோ, சந்ததியார் கொலையை அம்பலப்படுத்தவோ யாரும் கிடையாது. வலதுசாரி பாசிச சூழல் தான், எங்கும் எதிலும் காணப்பட்டது. இந்த நிலையில் என்.எல்.எவ்.ரி அமைப்புத் தான், அவர்களுக்கு புகலிடத்தை வழங்கியது. அவர்களைப் பாதுகாக்கவும், தங்கவும் இட ஏற்பாடுகளையும் செய்தது. அவர்கள் வெளியிட்ட தீப்பொறி மற்றும் புதியதோர் உலகம் என்ற நூலுக்கான ஒரு தொகைப் பணத்தையும் வழங்கியது. தீப்பொறி உறுப்பினர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றதும் என்.எல்.எவ்.ரி தான். அவர்களின் புதியதோர் உலகம் நூல் உட்பட தீப்பொறி பத்திரிகையை, இலங்கைக்குள் எடுத்துச்சென்று கொடுத்ததும் என்.எல்.எவ்.ரி தான். என்.எல்.எவ்.ரி செயல்பாடுகள் இப்படி பல தளத்தில் நடந்தது.
இதன் பின் சந்ததியார் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு முழு மக்கள் முன்னும் மறைக்கப்பட்டது. இந்த நிலையில், அதையும் என்.எல்.எவ்.ரி தான் மிகப்பெரிய 1000 போஸ்ரர்கள் மூலம் தமிழ் மக்கள் முன் இந்தக் கொலையை எடுத்துச்சென்றனர். இப்படி கொலையெறியாட்டம் ஆடியவர்கள், இன்று ஜனநாயக வேஷம் போட்டு கூடுகின்றனர்.
மத்திய குழு உறுப்பினர்களுக்கும், இரண்டாவது தலைவரான சந்ததியாருக்கும் இது தான் கதை என்றால், சாதாரண உறுப்பினர்கள் கதையோ அதிபயங்கரமானது. மனநோய் பிடித்த புளட் கொலைகாரக் கும்பலால், அண்ணளவாக 500 பேர் இப்படிக் கொல்லப்பட்டனர். இந்த வகையில் புளட்டின், சவுக்கு தோப்பு வதை முகாம் புகழ் பெற்றது. பலர் இயக்கத்தில் இருந்து தப்பியோடத் தொடங்கினர். முழுமையாக கொலைகாரக் கும்பலான பரந்தன் ராஜன் மற்றும் மாணிக்கம்தாசன் கும்பல் இதன் மூலம் அதிகாரத்துக்கு வந்தது.
ஏன் பலரும் கொல்லப்பட்டனர். ஏன் தப்பியோடினர். இதற்கு புளட்டோ, அதில் இருந்து உருவான ஈ.என்.டி.எல்.எவ் வோ பதிலளிக்காது. இவர்களால் கொல்லப்பட்டவர்களும், இவர்களுக்கு அஞ்சியோடியவர்களும் கோரியதோ, மக்களின் அடிப்படை உரிமையைத் தான். இன்று வரை புளட்டோ, ஈ.என்.டி.எல்.எவ் வோ அதை மறுக்கின்றது. மக்களின் உரிமைகளை மறுப்பது தான், அதன் அரசியல். அதனால் தான் இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக அவை இன்றுவரை உள்ளது.
அன்று புளட்டின் போராட்டம் யாருக்கு, எதற்கு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 1978 - 1979 இல் புலியில் இருந்து பிரிந்தவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத் தான், இங்கு மீளவும் முன்வைத்தனர். போராட்டம் என்பது மக்களுக்கானது என்பதை அழுத்திக் கூறியவர்களை, அதை அமைப்பில் முன் வைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுத்து கொன்றனர்.
மக்களின் விடுதலை என்ற அடிப்படையில், மக்களின் சமூக பொருளாதார முரண்பாட்டைக் களையும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் கோரினர். அதை அமைப்பில் பிரச்சாரம் செய்தனர். இதனால் இதற்கு எதிரானவர்கள், அவர்களை கொன்று போடுவது என்ற அடிப்படையில் தான், வதை முகாமை நிறுவி சித்திரவதை செய்து பின் கொன்றனர். இதில் இருந்து பலர் தப்பி ஒடினர்.
இப்படி புளட் என்ற சதிகார அமைப்பு சிதையத் தொடங்கியது. இதை சமாளிக்க நடந்த தளமாநாடு கூட, மக்களுக்காக போராடுவதை நிராகரித்தது. கொலைகாரக் கும்பலான ராஜன் மாணிக்கதாசனுக்கு இடையில் புதிதாக உருவாகிய அதிகார முரண்பாடே தளமாநாடாகியது. உமாமகேஸ்வரன் மாணிக்கதாசன், சோதீஸ்வரன், வாசுதேவா( பரமதேவாவின் அண்ணர்) போன்றவர்களுடன் சேர்ந்து ராஜனை எதிர்த்தான். தளமாநாட்டைப் பயன்படுத்திய ராஜன் - அசோக் ஈஸ்வரன், தீபநேசன், சிவராம், செந்தில், பாபுஜி, முரளி, ஜென்னி கும்பல், புதிய மக்கள் விரோத கும்பலாக கொலைகார ஈ.என்.டி.எல்.எவ் வடிகட்டினர்.
இப்படி சூழ்ச்சி மற்றும் சுத்துமாத்துகள் மூலம், தளமாநாட்டை தோற்கடித்தனர். அரசியல் போராட்டம் என்பது, ராஜன் உமா கும்பலின் மோதலாக மாறியது. அது துப்பாக்கி மோதல் வரை சென்றது. ரவடி ராஜனுடன் சேர்ந்து அசோக் எதிர்த்தரப்பை சுட்டக்கொல்ல முயன்ற போது, அசோக் காயமடையும் வரை மோதல் அரங்கேறியது.
இப்படி மக்களுக்கான அரசியல் என்ற பதாகை தூக்கியெறியப்பட்டது. அமைப்பு இப்படி கொலைகார சதிகார கும்பலுக்குள் முற்றாகவே சிதைந்து, சின்னாபின்னமாகியது. கொலைகாரர்களும், இதை பயன்படுத்திப் பிழைப்பவர்களுமோ இரண்டு பக்கத்திலும் எஞ்சினர். புலிகள் புளட்டை தடை செய்து ( சின்ன மென்டிஸ் போன்றோர்) சிலரைக்கொல்ல, அந்த இரண்டு கும்பலும் முழுமையாக இந்திய இலங்கை அரசின் கூலிக் குழுக்களாக சிதைந்தன.
இப்படித்தான் இவர்களின் மக்கள் விரோத வரலாறு நீண்டு கிடக்கின்றது. இன்று இதை மூடிமறைக்கவே, தமக்குத்தாமே சூட்டிக்கொள்வது ஜனநாயகவாதிகள் என்ற வேஷம்.
ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவின் கைக் கூலிக் கும்பல், தீப்பொறி என்ற பெயரையே பயன்படுத்தி இணையம் நடத்துகின்றது. யாருக்கு எதிராக தீப்பொறி பத்திரிகை வந்ததோ, அந்தப் பெயரையே பயன்படுத்தி மக்களுக்கு எதிராக இயங்கும் இணையம். அதைவிட மூடிமறைத்து நடத்திய, லண்டன் ரீ.பீ.சீ என்ற வானொலி. ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயக விரோதிகளாக இருப்பதில் உள்ள, வக்கிரமோ கடைகெட்ட தனமானது. இந்த ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியக் கூலிக் குழுவாகி, இந்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து, 1987-1991 வரை பாரிய படுகொலைகளை மண்ணில் நடத்தியவர்கள் இவர்கள். புலியில் இருந்து வெளிவந்த கருணா, கூலிக் குழுவாக சீரழிந்த போது, அதனுடன் கூடி மனிதவேட்டை நடத்தியவர்கள். இப்படி இதன் மனித விரோத செயல்பாட்டுக்கு பல வரலாறுகள் உண்டு.
புளட் இலங்கை அரசின் கூலிக் கும்பலாக மாறியது. இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இலங்கை அரசின் வளர்ப்பு நாயாக மாறிக் குலைத்தது. மாலைதீவினைக் கைப்பற்றும் சதிகார கூலிக் கும்பலாகவும் கூட மாறியது. வவுனியாவில் கப்பம், வரி, கடத்தல், கொலைகளை அரசியலாகக் கொண்டு, இலங்கை அரசின் ஒரு கூலிக் கும்பலாகவே இயங்குகின்றது.
இப்படி இயங்கும் இந்த இரண்டு கொலைகாரக் கும்பலும், புலம்பெயர் நாட்டில் ஜனநாயக வேஷம் கட்டி ஆடுகின்றனர். இதில் புளட் மாநாடு என்கின்றனர். என்ன மக்களின் விடுதலைக்காகவா மாநாடு? இல்லை, நிச்சயமாக இல்லை. மாறாக இலங்கை அரசுடன் சேர்ந்து, உலக ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து, எப்படி புலியை ஒழிப்பது என்பதை ஆராயும் சதி மாநாடு. இதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். எந்த மக்களின் விடுதலைக்காகவுமல்ல. புலிகளின் பெயரில் எப்படி மக்களை ஒடுக்குவது என்பதைப் பற்றி சதிகாரக் கும்பல் கூடி ஆராயவுள்ளது.
இவர்கள் தமது அமைப்பில் இருந்த பலரைக் கொன்று போட்டவர்கள். பல நூறு மக்களை கொன்றவர்கள். இப்படிப்பட்ட பொறுக்கிகள் மையம் தான் புளாட்.
இவர்கள் மாநாடு எந்த தமிழ் மக்களைப் பற்றியும் அக்கறை கொள்ளப் போவதில்லை. அன்று இவர்களால் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இன்று சொல்பவர்கள் தான் இவர்கள். இன்றும் மக்களுக்காக போராடுபவர்களை கொல்லுகின்றனர். கொல்லத் தயாராகவே உள்ளவர்கள் இவர்கள். புளட்டில் இருந்தவர்களை அன்று ஏன் தாம் கொன்றோம் என்ற சொல்ல மறுப்பவர்கள். இன்றும் அதை சுயவிமர்சனம் செய்ய மறுக்கும் கொலைகாரர்கள் தான் இவர்கள்.
சுழிபுரத்தில் ஆறு இளம் புலிப் போராளிகளை அவர்களின் ஆணுறுப்புகளை அறுத்து கதறக்கதற கொலைசெய்து மணலில் புதைத்தவர்கள். கொலையுண்ட உடல்கள் வெளித்தெரிய வந்தவுடன் அவசர அவசரமாக தமக்கும் இக் கொலைக்கும் சம்பந்தமில்லை என மிரட்டும் அறிக்கைகளை வெட்கமின்றி வெளியிட்டனர். சங்கிலி என்ற கந்தசாமி தலைமையில் நடந்தேறிய மூர்க்கமான வெறித்தனமான ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலை பற்றி இயக்கத்துக்குள் கேள்வியெழுப்பியவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இக்கொலைக்கு சாட்சி சொல்லக்கூடியவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பின்தளம் கொண்டு செல்லப்பட்டனர். சில மத்திய குழு உறுப்பினர்கள் எதுவுமே தெரியாதவர்கள் தாங்களென வேசமிட்டனர். கொலை நடந்த சுழிபுரத்தில் இக் கோரக் கொலை நடந்தபோது அங்கு அந்நேரம் பாசறை வகுப்புகள் நடத்திய சிலருக்கு இக்கொலை பற்றித் தெரிந்தே இருந்தது.
திருகோணமலை புளட் உறுப்பினர்கள் அகிலன் செல்வன் கொலையானது இயக்க உறுப்பினர்களை திகில் கொண்டு அவர்களை உறைய வைத்தது. இக் கொலைகளுக்கு காரணகர்த்தாக்கள் யாரென்பதும் அவர்கள் ஏன் எவ்வாறு கொலைசெய்யபட்டனர் என்பதும் தெரிந்தவர்கள் தான் இன்றைக்கும் புளட்டில் ஜனநாயகம் பேசுபவர்களாக இருக்கின்றனர்.
இன்று இந்த கொலைகாரக் கும்பலை இனம் காண்பது, சமூக அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.
No comments:
Post a Comment