தமிழ் அரங்கம்

Wednesday, February 27, 2008

தந்தையெனும் ஆணாதிக்க மந்தை!!!

தந்தையெனும் ஆணாதிக்க மந்தை

யோனிக்குள் இன்னும் மிச்சமீதி உணர்ச்சிகள் இருக்கா? ஆராய்ச்சி செய்யும் தகப்பன்

மரண வலியில்
துடிக்கும் மகள்.

கொடுமையின்
உச்சம்.

சந்தேகம்
தீராத தகப்பன்.

காம உணர்ச்சிக்கு
மொத்தமாக தடா
போட்டாகி விட்டதா?

குருதிக்கு நடுவே
கதறும் மகளை
கவுத்துப் போட்டு
ஆராய்ச்சி செய்கிறான்...

நன்றி தமிழச்சி

5 comments:

தமிழச்சி said...

வணக்கம் இரயாகரன்!

கொடுமையின் மிகக் கொடுரம் புகைப்படத்துடன் பாலீயல்ரீதியாக பெண்ணீன் உறுப்பு வெட்டியெடுத்த சம்பவத்தை மனித நேயத்துடன் அனுகாமல் யோனி என்ற வார்த்தையை நான் மீண்டும் மீண்டும் உபயோகிப்பதாக கூறுகிறார்கள். சில பதிவர்கள் தமிழ்மணத்தில் இருந்து என்னை நீக்கச் சொல்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்! நான் யாரிடமும் அபிப்பிராயங்கள் கேட்டது இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் போதிய அறிவில்லாமை உங்களிடம் கேள்வி கேட்க வைக்கிறது. யோனி என்ற வார்த்தையை பற்றி உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

தமிழரங்கம் said...

இலங்கையில் உயிரியல் கல்வியில், பெண் உறுப்பை யோனி என்றுதான் பயன்படுத்தப்படுகின்றது. அப்படித்தான் நாங்கள் கல்விக் கூடங்களில் படித்தோம். இந்தியாவில் வேறு அர்த்தம் உண்டா என்பது எனக்குத் தெரியாது.

தமிழச்சி said...

///தமிழரங்கம் said...

இலங்கையில் உயிரியல் கல்வியில், பெண் உறுப்பை யோனி என்றுதான் பயன்படுத்தப்படுகின்றது.///

தமிழ்நாட்டில் இலக்கியங்களில் அப்படித்தான் குறிப்பிடுகின்றது. ஆனால் பாலியல் அங்கங்களை வெளிப்படையாக பேசத் தயங்கும் மக்களிடம் யோனி என்ற வார்த்தை அதிர்ச்சியளிக்கின்றது. தினசரி இதழ்களில் பெண்குறி என்று தான் குறிப்பிடுகின்றார்கள். என் அறிவுக்கு இந்த வாதம் தவறானதாக இருக்கின்றது. மனித உறுப்புகளை அதன் பெயரில் சொல்வது தானே பொருத்தமாகதாக இருக்கும்?

பெண்குறி என்றால் என்ன?
ஆண்குறி என்றால் என்ன?

இப்படித்தான் மறைமுகமாக பாலியல் சார்ந்த வார்த்தைகளைக் குறிப்பிட்ட வேண்டும் என்று வரைமுறைகள் உள்ளனவா?

தமிழரங்கம் said...

தொலைபேசி மூலம் தொடர்ப கொள்ள முனைந்தேன். நம்பா வேலை செய்யவில்லை.

யோனி என்பது துறை சார்ந்த கல்வியிலும், இலக்கியத்திலம் இருக்கின்றது. அனைவருக்கும் தெரிந்த மொழியல்ல.

எனவெ தான் ஆண் உறுப்பு, பெண் உறுப்பு என்று புரியும் மொழியில் பேசப்படுகின்றது. முடிமறைத்தல்ல.

மற்றும் படி நிலவவது தூசனம். இது இழிவுபடுத்த ஆணாதிக்க வக்கிரத்துடன் பயன்படுத்தப்பவது. இதையொட்டி அடையளங்களம் உண்டு.

தமிழச்சி said...

தமிழ்நாட்டில் பெண்களை மட்டந்தட்டும் நோக்கத்துடனும், கோபமாக திட்டும் போது பெண் உறுப்பை வைத்து இழிவு படுத்தும் வார்த்தைகள் பு**, கு* இன்னும் சில இருக்கிறது. எனக்கு தெரியவில்லை.

பெண்குறி என்பது பெண் உடலில் இருக்கும் கண், காது, மூக்கு, கை என எல்லாமே உறுப்புக் குறிக்கும் குறியாக தானே உருவகப்படுகிறது.

அப்படியே பெண்குறி, யோனி என்றாலும் இரண்டுமே ஒரே உறுப்புத் தானே? ஆபாசம் நாம் உச்சரிக்கும் ஒலியில் இருக்கிறதா? எழுத்தில் இருக்கிறதா? மனிதனின் உறுப்பு எப்படி ஆபாசமாக முடியும்? அப்படி ஆபாசமான உறுப்பை ஏன் மனிதன் பயன்படுத்த வேண்டும்?

ஆண்குறியை கு**, பூ*, சு** என்று குறிப்பிடும் போது ஒரு பெண் குறியை குறிப்பிட்டுச் சொல்லப்படும் சொல் எப்படி ஆபாசமாக இருக்க முடியும்?