தமிழ் அரங்கம்

Wednesday, March 5, 2008

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

இன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.

( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)

மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக‌ மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.

முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த‌ அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான‌ மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."

தொடர்ந்து செய்யப்பட்ட‌ மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவ‌லுக்கு' வ‌ந்திருந்த காவ‌ல்துறையின‌ரையும் சேர்த்து தாக்கியதோடு அவ‌ர்க‌ளை க‌டித்து குத‌றிய‌து தீட்சித‌ வெறிநாய்க‌ள், இருப்பினும் இந்த‌ வெறிநாய்க‌ளை அடித்து உதைகாம‌ல், ப‌வ்ய‌மாக‌ தூக்கி வெளியில்விட்ட‌ போலீசு, போராடிய‌ தோழ‌ர்கள் மீது த‌டிய‌டி ந‌ட‌த்தி தீட்சித‌ர்க‌ளை விட‌ தாங்க‌ள் பெரிய‌ வெறி நாய்க‌ள் என்ப‌தை நிரூபித்த‌து. போலீசு வெறிநாய்க‌ள் ந‌ட‌த்திய‌ இந்த‌ தாக்குத‌லில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ ஐந்திற்கும் மேற்ப‌ட்ட‌ தோழ‌ர்களின் ம‌ண்டை உடைந்து இர‌த்த‌ம் கொட்டிய‌து, குருதி கொட்ட‌ கொட்ட‌ அவ‌ர்க‌ளை துர‌த்தி துர‌த்தி த‌டியால் தாக்கின‌ போலீசு வெறிநாய‌க‌ள், த‌மிழ்நாட்டில் த‌மிழில் வ‌ழிப‌டும் உரிமை வேண்டி போராடியதற்காக‌ அந்த‌ தோழ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், தாக்க‌ப்ப‌ட்ட‌தோடு ப‌ல‌ தோழ‌ர்க‌ள் கைதும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர், ம‌.க‌.இ.க.

ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌த்தை சேர்ந்த‌ 35 தோழ‌ர்க‌ளை கைது செய்து சிறையில‌டைத்த‌து போலீசு.

இந்த‌ அராஜ‌க‌த்தை க‌ண்டித்து சுவ‌ரொட்டி ஒட்டிய‌தோடு, சென்னையில் ஆர்ப்பாட்ட‌மும் ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பினையும் ந‌ட‌த்திய‌து ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம். இந்த‌ செய்திக‌ளையெல்லாம் எந்த‌ ப‌த்திரிக்கையும் வெளியிட‌வில்லை, க‌ட்டுப்பாட்டாக இவற்றை இருட்ட‌டிப்பு செய்த‌ன‌. இருப்பினும் தோழ‌ர்க‌ளின் வீச்சான‌ போராட்ட‌த்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சித‌ர்க‌ளை நேற்று எச்ச‌ரித்து அறிக்கை வெளியிட்ட‌து த‌மிழ‌க‌ அர‌சு, இந்த‌ நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம் ம‌ற்றும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ள் சித‌ம்ப‌ரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌ ஆறுமுக‌ச்சாமி நெஞ்சுருக‌ தேவார‌ம் பாடி சிதம்பரம் நடராசனை வ‌ழிப‌ட்டார்.

தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமைக்கென‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் வென்ற‌ சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம் ம‌ற்றும் அத‌ன் தோழ‌மை அமைப்புக‌ளை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் செவ்வ‌ண‌க்க‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இமெயிலில் நந்தன்

நன்றி அசுரன்

3 comments:

தமிழச்சி said...

கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் அவமானப்பட வேண்டிய சம்பவம். ஏதோ ஒரு சில அமைப்புகளால் இதற்கு தீர்வு கிடைத்து விட முடியாது. மக்களை சிந்திக்க வைக்க வேண்டும். சமஸ்கிருதத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தமிழில் அர்சனை செய்ய வைக்க வேண்டும். தோழர் பிரான்சில் இருக்கும் இந்து கோயில்ளில் சமஸ்கிருதம் ஓதப்படுகின்றதே. இதை ஒழிக்க ஏதாவது வழி இருக்கின்றதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துணிவு மிக்க இந்த அறப்போரில் வென்றதற்குப் பாராட்டுக்கள்.
அத்துடன் சிதம்பரம் ஆலயம் செல்வோர், உண்டியலில் காசுபோடுதல்,அர்சனை செய்தலைத் தவிர்த்தால்..இன்னும் நல்ல பாடமாகும் அவர்களுக்கு.

x-group said...

http://x-group.blogspot.com/2008/03/blog-post.html