தமிழ் அரங்கம்

Wednesday, July 16, 2008

மகரஜோதி பொய்! ஐஸ் லிங்கம் பொய்! பக்திப் பரவசமும் பொய்!

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள். ...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

Unknown said...

செவ்வணக்கம் தோழர்

இந்த கட்டுரையை நான் என்னுடைய தளத்தில் ஒட்டியிருக்கிறேன். உங்களுடைய ஒழிவு நேரத்தில் senkodi.multiply.com என்ற தளத்திற்கு வந்து தவறுகளை திருத்துங்கள்.

வணக்கங்களுடன்
சென்கொடி