தமிழ் அரங்கம்

Wednesday, August 27, 2008

'ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது!" அதிகார கும்பல் விடக்கும் பகிரங்க எச்சரிக்கை!

லலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.

அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்மோசடி, வீண்விரயங்களை அரசு அதிகாரிகள் கண்டறிந்து தணிக்கை செய்யும் முறைக்கு மாற்றாக, மக்களிடம் கருத்து கேட்டு தாங்களே தணிக்கை செய்யும் நடைமுறையை அண்மைக்காலமாகத் தன்னார்வக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனைச் ''சமூகத் தணிக்கை முறை'' என்று அவை குறிப்பிடுகின்றன. பிரபல பொருளாதார நிபுணரான ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: