skip to main |
skip to sidebar
மக்களின் எதிரிகளாக யார் உள்ளனரோ, அவர்களின் கைக்கூலிகள் தான் புலியெதிர்ப்புக் கும்பல். இதற்கு வெளியில் சுயாதீனமான மக்கள் அரசியல் எதுவும் இந்தக் கும்பலிடம் கிடையாது. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகள்" மக்களின் எதிரிகளிடம் பணத்தில் அரசியல் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பில் நின்று அதற்கு விசுவாசமாக குலைக்கின்ற ஓட்டுண்ணிக் கும்பல். இதை யாரும் இல்லை என்று நிறுவமுடியாது.
இந்தக் கும்பல் கைக்கூலிக்குரிய விசுவாசத்துடன், புலியொழிப்பு என்று வித்தை காட்ட முனைகின்றனர். புலியை எதிரியாக காட்டி, தனக்கு பணம் தருபவனை எதிரியற்றதாக காட்டி எதிரிக்கு வாலாட்டி நக்குகின்றனர்.
எதிரி பற்றிய வரையறை என்ன? மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணையாத அனைத்தும், மக்களுக்கு எதிரி தான். மக்களைச் சார்ந்தே நிற்காத புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் கூட, மக்களின் எதிரிதான். மக்களை எதிரியாகி செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை மக்களின் எதிரிதான். மக்களுக்காக இவர்கள் சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. மக்களை வேட்டையாடி தமக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும் சேவை செய்கின்றவர்கள் மக்களின் எதிரிதான்.
இந்த எதிரி புலியாக இருந்தாலும் சரி, புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பலாக இருந்தாலும் சரி,......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment