தமிழ் அரங்கம்

Wednesday, September 3, 2008

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.


பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே, குழந்தைகளின் தவறான வழிகாட்டலுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குழந்தைகள் சொல்வழி கேட்காமை, தாம் விரும்பியதற்காக அடம்பிடித்தல், அதைப் பெறுதல் என எதுவாகவும் இருக்கட்டும், கணவன் மனைவிக்கு இடையிலான வேறுபட்ட முடிவின் அடிப்படையில் தான், குழந்தைகளால் அது சாதிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமானதல்ல என்பது மிக முக்கியமானது. இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

குடும்பத்தினுள் உள்ள முரண்பாட்டையே குழந்தை பயன்படுத்துகின்றது. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு குழந்தை இதைப் பயன்படுத்த முடியுமா எனின், ஆம் என்பதே உண்மை. ஒரு வயது குழந்தை கூட இதை பயன்படுத்துகின்றது. இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிதானமாக அவதானமாக அணுகிப் பாருங்கள், அப்போது வெளிப்படையாகவே புரிந்து கொள்வீர்கள். கணவன் மறுக்கும் அல்லது மனைவி மறுக்கும் விடையத்தை, இதில் ஒருதரப்பு குழந்தைக்கு அதைப் பூர்த்தி செய்தால் என்ன நடக்கும்? விளைவு குழந்தையின் அதிகாரத்துக்குள் பெற்றோர் சென்றுவிடுகின்றனர். குழந்தை தான் விரும்பியதையே சாதிக்கும். குழந்தை பெற்றோரின் சொல்லைக் கேட்பதை மறுக்கின்ற பொதுவான நிலை உருவாகின்றது. ஆணும் பெண்ணும் தமது குழந்தை விடையத்தில், ஓரே விதமாக இணக்கமான ஒரே முடிவை எடுத்தல் அவசியமானது. இந்த சூழலில் தான் குழந்தை, பெற்றோரின் சொல்லைக் கேட்கும் இணக்கமான குழந்தையாக உருவாகும். சரி பிழையை விவாதிக்கும் இணக்கமான அறிவியல்பூர்வமான குடும்ப சூழல் உருவாகும். இது பொதுவாக இணக்கமாக நடப்பதில்லை. ஒரு பெண் தான் அடைய விரும்பியதை இணக்கமான வழிகளில் அடைவதில்லை. குறுக்கு வழியில்தான் அடைகின்றாள். குழந்தைகள் விடையத்தில் மட்டும் இது எப்படி சரியாக அமைந்துவிடும்.

இயல்பாகவே ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள சமூக உறவில், பெண் தனக்கு தேவையான ஒன்றை எப்படி சாதிக்க முனைகின்றாள். பெரும்பாலும் வன்முறை கொண்டது. தான் முன் கூட்டியே எடுத்த முடிவை, விவாதத்துக்கு இடமின்றி திணிக்கின்றாள். அது மொழி வன்முறை, அழுவது....... ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: