தமிழ் அரங்கம்

Thursday, September 11, 2008

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.

அதே விமான நிலையத்தில் இருக்கும் ரஷீத் வங்கியின் மேலாளர் ஹபீத் அபோத் மஹ்திதான் அக்காரை ஓட்டி வந்தவர். பெண் ஊழியர்கள் இருவரையும் வங்கிக்குத் தனது காரிலேயே அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நூறு முறைக்கும் மேலே சுடப்பட்டு சல்லடையாக்கப்பட்ட காரின் எஞ்சின் தீப்பற்றி மூவருமே சாம்பலாகிவிட்டனர்.

உடனே அமெரிக்க இராணுவம் "மூன்று குற்றவாளிகள் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்; திருப்பச் சுட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி வெடித்ததில் மூன்று குற்றவாளிகளும் மாண்டனர்'' என அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இராணுவ வண்டியில் இரண்டு இடங்களில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலும் அது கதையளந்துள்ளது.

மஹ்தியின் கார் குண்டுகளால் துளைக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரது ஆறாவது மகன் முகம்மது ஹபீத் அங்கு விரைந்திருக்கிறார். தன் கண் முன்னாலேயே தீப்பிழம்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த தனது தந்தையை நெருங்க விடாமல் அமெரிக்கப் படைவீரர்கள் அவரைத் தடுத்து விட்டனர். மஹ்தியின் ஆறு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்ட அமெரிக்க இராணுவமோ பத்தாயிரம் டாலரை இழப்பீடாக அக்குடும்பத்துக்கு வழங்க முன்வந்தது. அதை வாங்க மறுத்த அக்குடும்பத்தினர், "இப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் ஈராக் அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: