தமிழ் அரங்கம்

Friday, October 31, 2008

சென்னை : விற்பனைக்கு! இரண்டாவது மாஸ்டர் பிளானின் மகாதிமியங்கள்!

சென்னை, தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால்தான் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை என்று தீயணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

அதனால் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நெரிசல் மிகுந்த இடத்தில், எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி இந்தக் கட்டிடம், இவ்வளவு விதி மீறல்களுடன் கட்டவும், இயங்கவும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமன்றி தி.நகரில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை விதிகளை மீறித்தான் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களினால் பொதுமக்களின் உயிருக்கு எப்போதும் ஆபத்துதான். ஆனால், இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கவலைப்படுவதே இல்லை. பொதுமக்கள் நலனில் சிறிது கூட அக்கறையில்லாத, லஞ்ச பணத்திற்கு எளிதில் விலை போகக்கூடிய, இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பித்தான் இந்த அரசு சென்னை நகரத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப் போகிறதாம். இதற்கென சென்னை மாநகரப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்தத் திட்டத்தின்படி, சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீட்டாளர்களைக் கவரும் நகரமாக மாற்ற உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், தடையற்ற மின்சார விநியோகம், நல்ல தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை ஏற்கெனவே ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அவை மேலும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: