skip to main |
skip to sidebar
ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.
மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும். அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.
இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின், அதுவும் முடியாது. ஓபாமா ஆட்சியிலும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதைக் குவித்துக் கொண்டே இருப்பான், இழப்பன் இழந்து கொண்டு இருப்பான்;. இது இந்த சமூக அமைப்பின் சொந்தவிதி. அதாவது ஜனநாயகமும், சுதந்திரமும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment