skip to main |
skip to sidebar
மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.
தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம்............... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment