skip to main |
skip to sidebar
இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்க..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment