ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்'' எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஈராக், ஆப்கன் போர்களில் பங்கெடுத்த அமெரிக்க வீரர்களில் 200 பேருக்கும் மேலானோர், அமெரிக்க ராணுவம் அந்நாடுகளில் செய்துள்ள படுகொலைகளையும், மனிதவிரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தினார்கள். நான்கு நாட்கள் நடந்த அச்சந்திப்பில் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனும் பேரால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களுக்கு எதிராக அமெரிக்கப் படை நடத்திய மனித உரிமை மீறல்கள் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டன. அமெரிக்காவின் பேரால் தாங்கள் செய்த கொடூரச் செயல்கள் மனசாட்சியை உறுத்தியதால் அவற்றை அம்பலப்படுத்துவதென்று முடிவு செய்த அப்போர்வீரர்களின் சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்: ஆக்கிரமிப்பின் சாட்சியங்கள்'' என்ற நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Thursday, December 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment