தமிழ் அரங்கம்

Wednesday, January 14, 2009

வடமாநிலத் தேர்தல் முடிவுகள் : ஜனநாயகம் பணநாயகமானது

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்தபொழுது பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் வி.கே.மல்கோத்ரா பற்றி, "மல்கோத்ராவைவிடத் தீவிரவாதம் மேல்'' என்ற நகைச்சுவைத் துணுக்கு அரசியல் வட்டாரத்திலும் வாக்காளர்கள் மத்தியிலும் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததாம். தில்லி கோட்டையை எளிதாகக் கைப்பற்றிவிடும் என நம்பப்பட்ட பா.ஜக., "அங்கு மண்ணைக் கவ்வியது ஏன்?'' என்ற கேள்விக்கு இந்தத் துணுக்குதான் இரத்தினச் சுருக்கமான பதில்.

ஜெய்ப்பூர், அகமதாபாத், தில்லி நகரங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள், அதனைத் தொடர்ந்து மும்பயில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் நான்கு மாநிலங்களிலுமே (தில்லி, இராசஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர்) தனக்கு வெற்றி கிடைத்துவிடும் எனக் கனவு கண்டு வந்தது, பா.ஜ.க. மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டபோதிலும், தில்லியிலும், இராசஸ்தானிலும் பா.ஜ.க.விற்குக் கிடைத்துள்ள தோல்வி, அக்கட்சியின் நாடாளுமன்றக் கனவை ஆட்டங்காண வைத்துவிட்டது.

No comments: