தமிழ் அரங்கம்

Sunday, February 22, 2009

சுதந்திரமாக மக்களைப் பேச விடு!

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

இந்த மக்களின் வாழ்வையிட்டு எழும் கூச்சல்கள் கூட போலியானவை. இந்த மக்களின் பெயரில் புலிகளும் அவர்களின் பினாமிகளும் விரும்புவது என்ன? சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதித்து, இதன் மூலம் தமக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் நாலு குண்டு வெடிக்காதா என்பது அவர்கள் கவலை. இப்படி தமது ஆட்கள் மக்களின் பெயரில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற விருப்பம், கவலை.

மறுபக்கத்தில் இந்த திறந்தவெளி சிறையைக் காட்டி, வன்னியில் தாம் தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்காமல் இருக்க, நியாயம் கற்பிக்க உதவும் என்ற நம்பிக்கை. இதற்கு வெளியில் மக்களையிட்டு எந்த கவலையும் புலிக்கு கிடையாது.

மறுபக்கத்தில் அரசு புலிகளின் ஊடுருவலைக் காட்டி, திறந்தவெளி சிறைக்கூடத்தில் மக்களை அடைத்து வைத்து வடிகட்ட முனைகின்றது. இதற்கு அப்பா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: