தமிழ் அரங்கம்

Thursday, February 5, 2009

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர். இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.
தம் இனம் மீதான யுத்தம், பேரினவாத கொக்கரிப்புகள் என்று எதையும், சமூகம் எதிர்கொள்ளத் தயாராகவில்லை. புலம்பெயர் சமூகம் மட்டும், இடைக்கிடை புலியைச் சுற்றி உருவெடுத்து ஆடவைக்கப்படுகின்றது. மண்ணில் வாழும் மக்கள் அமைதியாகி, நடைப் பிணமாகிவிட்டனர். பேரினவாதத்தை நக்கும் கண்ட கண்ட நாய்கள், மக்களை மேய்க்;கும் நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலைமை எப்படி உருவானது.

உண்மையில் இதை புலிகள் தான் உருவாக்கினர். தாம் அல்லாத எந்த செயலையும், எம் மண்ணில் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் அதை அழித்தன் விளைவு, சமூகம் செயலற்ற தன்மைக்கு சென்றுள்ளது. சமூகத்தில் எதைச் செய்தாலும் புலிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரம், அவர்கள் மேலான அழித்தொழிப்பின் போது ..........

No comments: