தமிழ் அரங்கம்

Saturday, April 25, 2009

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

ஜனவரி 26, 2009 அன்று மட்டும் ஏறத்தாழ 85,000 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருக்கப்பட்ட அதேநேரத்தில்தான், இந்திய அரசு தனது 60ஆவது ""குடியரசு'' தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

இச் சம்பவம் நடந்து பத்துபதினைந்து நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்; பிரணாப் முகர்ஜி, ""உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் இந்தியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதாக''த் தனது உரையில் பீற்றிக் கொண்டார். இதைக் காணும்பொழுது, ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் நம் நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகள் பற்றி கவலைப்படும் மைய அரச, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வேலையிழப்பு ஒரு சுனாமி போல இந்திய உழைக்கும் மக்களைத் தாக்குவது பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது.
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: