இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.
இதற்குள் தான் எமது போராட்டமும், அரசியல் நிலைப்பாடுகளும் உள்ளடங்குகின்றது. இலங்கை மக்களின் பிரதான எதிரி அரசே ஒழிய, புலிகளல்ல. ஆனால் புலியல்லாத தரப்பில் எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்!? என்பது, இன்று அடிப்படையான அரசியல் கேள்வியாகியுள்ளது.
தமிழ்மக்களை விடுதலைப் புலிகள் கட்டிப்போட்டு நடத்திய அரசியலால், அதுவே தமிழ் மக்களின் பிரச்சனையாக பொதுவாகப் பார்க்கப்பட்டது. புலிகளுக்கு வெளியில் மாற்று அரசியல் தளம், அரசியல் ரீதியாக புலிகளால் முடக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராடியவர்கள் புலிகளை தமது முதன்மையான இலக்காக கொண்டது தவறல்ல. .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment