தமிழ் அரங்கம்

Tuesday, April 28, 2009

அந்திய முதலீட்டுக்கு அபாரச் சலுகை

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பா.ஜ.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் முணுமுணுத்திருப்பார்களேயொழிய, அந்நிய முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங்குக்கு வேறு தலைவலி எதுவும் ஏற்பட்டிருக்காது. எனினும், மன்மோகன் சிங் கும்பலோ அந்த வாசூப்பைக்கூட நாடாளுமன்றத்திற்குத் தராமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி முடிவெடுத்து இம்மாற்றத்தை அறிவித்து விட்டது.

மறுகாலனியாதிக்கச் சூழலில் நாடாளுமன்றத்திற்கு ""ரப்பர் ஸ்டாம்ப்'' என்ற மதிப்புமிக்க தகுதியைத் தருவதற்குக்கூட ஆளும் கும்பல் தயாராக இல்லை என்பதை மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துக் காட்டிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், 15ஆவது.........
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: