தமிழ் அரங்கம்

Friday, May 1, 2009

தமிழினப் படுகொலைக்கு எதிராக மேதின அறைகூவல்: சிறப்பு ஆவணம்

புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

புலிகள் மக்களை என்றும் நம்பவில்லை. தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதுதான், வலதுசாரிய புலிகளின் பாசிசச் சித்தாந்தமாக இருந்தது. இனவழிப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும், மக்கள் நடைப்பிணமாக ஓடிக்கொண்டிருந்தனர். மக்களை தம் யுத்த எடுபிடிகளாகவே பயன்படுத்தத்தான், புலிகள் விரும்பியிருந்தனர். தாம் பயிற்சி வழங்கிய மக்கள், தமது சொந்த யுத்த நெருக்கடி காலத்தில் கூட அவர்கள் ஆயுதமேந்துவதை புலிகள் விரும்பவில்லை. அது அந்த வர்க்கத்தின் அரசியல். புலிகளின் மிக நெருக்கடியான அரசியல் காலகட்டத்தில், இதை நாம் ஒரு அரசியல் கோரிக்கையாக கூட வைக்கத் தவறியிருந்தோம்.

இந்த நிலையில், இன்று கொல்லப்படும் மக்கள் யார்? இன்று முட்கம்பிக்கு பின் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் யார்? இவர்கள் புலிகள் அல்ல, மாறாக எம் மக்கள்.

இவர்களை யார் கொன்றனர்? யார் அடைத்து வைத்திருக்கின்றனர்? எம் மக்களினதும், இலங்கை மக்களினதும் பொது எதிரிதான்.

இப்படி எம் மக்களின் எதிரி அவர்கள் மேல் நடத்திய இனவொடுக்குமுறையினை, நாம் ஆவணமாக்கிக் தொகுத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் கீழ் உள்ள இருபகுதிக்கு ஊடாக, பேரினவாதத்தின் சில பக்கத்தை நீங்கள் தெளிவாக இனம் காணமுடியும்..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: