தமிழ் அரங்கம்

Thursday, August 6, 2009

ஜெகத்துரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி

சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.

"இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்'' என்று ஒரு விஷமப் புன்னகையுடன் இதற்குப் பதிலளிக்கிறார் புரட்சித் தலைவி.

விசாரணையின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் ""இதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும்'' என்று ஐயம் எழுப்புகிறார் கருணாநிதி. ""ஆமாம்'' என்று வேறு ஒரு முனையிலிருந்து இதனை ஆமோதிக்கிறார் இல. கணேசன். ஜெயலலிதாவின் உள்நோக்கம் குறித்த பேச்சு தவிர்க்கவியலாமல் ஜெயேந்திரனுக்குச் சாதகமாக அமைகிறது.

மாறாக, ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: