ஈழப் போருக்குப் பின், முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் நிலைமையை அறியும்முகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பி.க்கள் கடந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல்பாடல்கள் எனத் திருமண விழாவுக்கு வருபவர்களைப் போல, தமிழக தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது, சிங்கள அரசு. அவலத்தின் நடுவே இத்தகைய ஆடம்பர வரவேற்பு எதற்காக என்று கேட்டு, தமிழக எம்.பி.க்கள் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக, புன்முறுவல் பூத்தபடியே சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந்தார்கள்.
ஈழத்திலுள்ள நலன்புரி மையங்களை அதாவது, வதைமுகாம்களைப் பார்வையிட்டு, மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து, அந்த அவலங்களைப் போக்க ஏதாவது செய்வார்கள் என்று ஈழத்தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஈழத்துக்குச் சுற்றுலா சென்று வந்ததைப் போலவே தமிழகத்தின் பத்து எம்.பி.க்களின் பயணம் அமைந்தது.
யாழ் பொது நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கருத்துக் கூறியவர்களை அதட்டி உட்கார வைத்தும், முகாம்களில் வதைபடும் மக்களின் அவலத்தைப் பற்றிப் பேசுவதைத் திசைதிருப்பியும், நேரமில்லை என்று தட்டிக் கழித்தும் தூதுக்குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு சிடுமூஞ்சித்தனமாக நடந்து கொண்டார். இதை, ""இலங்கைக்கு முன்பு அனுமன் வந்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment