தமிழ் அரங்கம்

Thursday, December 31, 2009

2009

சுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. அழிவு அரசியலின் தலைமையால் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டவர்களாக இந்த மக்கள் சிங்கள தேசியத்தின் காலடியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.

புலித்தலமையின் அழிவு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்கு, இதுவரை தெரியாமலிருந்த எதிரிகளையும் தெரிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

“மணியோடர் சமூகமாக” இருந்தமையால் போர்க்காலத்திலும் யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உண்டியல்களினால் பொருளாதார ரீதியாக பிழைத்துக் கொண்டது. ஆனால் வன்னி முகாம் மக்களுக்கு இந்த “வசதி” இல்லை. முகாமைப் போய்ப் பார்த்தோம், மகிந்த அவர்களை நன்றாகவே “வைத்திருக்கிறார்” என்ற தமிழ்குடிகளின் அறிக்கைகள்தான் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், வெளியில் போனால் அவர்களுக்கு வீடில்லை, வருமானம் இல்லை, ஆகவே முகாம்தான் சிறப்பானது என்கிறார்கள். அந்த மக்களுக்கு உதவுவது அவர்களது போர்க்குணாம்சத்தை மழுங்கடித்து விடும் என்று புரட்சிகரமாக முழங்கப்படுகிறது.

2009_1மே 17ஆம் திகதிவரை தமிழீழம் வாழ்க என்று ஆவேசத்துடனும், துடிப்புடனும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ்தேசிய வீரர்கள் பின்னர் அடங்கிப்போய், இப்போது வேட்டைக்காரன் பார்ப்பவர்கள் துரோகிகள் என போராட்டதின் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளனர்.

புலி அரசியலால் இல்லாமல் செய்யப்பட்டிருந்த புலி அல்லாத இன்னொரு அரசியல் புலித்தலமைகளின் அழிவின்பின் தமது குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. “உன்னைப் பற்றி எனக்கு முன்பே தெரியும்” என்று ஆளாளுக்கு “ஓடவிட்டு” போர் புரிய ஆரம்பித்துள்ளனர். அரசியலற்ற போரையும், வீடியோவுக்கான இராணுவத் தாக்குதல்களையும் தமிழீழத்துகான ஒரேவழியாக புலம்பெயர் புலித்தேசியம் தாரகமந்திரமாகக் கொண்டிருந்தது. இப்போதும் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: