தமிழ் அரங்கம்

Saturday, December 19, 2009

ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் "மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை"!

"தேர்தலை நிராகரி" என்கின்றது இலங்கை பு.ஜ கட்சி. அட!, இலங்கை பு.ஜ கட்சி வர்க்கப் போராட்டத்தை முன் வைக்கின்றது என்ற ஆச்சரியத்துடன், என்ன எது என்று பார்த்தால் "50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று நம்பி தேர்தலில் பங்கு பற்றக் கோரிய ஒரு "வர்க்கக்" கட்சி, அந்த காரணத்தைச் சொல்லியே மீண்டும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றது.

இப்படி இலங்கையில் ஒரு "மா.லெ.மா சிந்தனையை" முன்னிறுத்தும் ஒரு கட்சியாக, தன்னை அடையாளப்படுத்துகின்றது. இந்த புதிய ஜனநாயகக் கட்சி, வர்க்கப் போராட்டத்தையா இப்படி முன்னெடுக்கின்றது!? சண் தலைமையிலான மா.லெ.மா கட்சியில் இருந்து 1970 களில் பிரிந்தவர்கள் தான் இந்த புதிய ஜனநாயகக் கட்சி. இதற்கு பிந்தைய மிகக் கொந்தளிப்பான இலங்கை வரலாற்றில், இக்கட்சி மா.லெ.மா சிந்னையை என்றும் முன்னிறுத்தியதில்லை. இது வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து, சமூகத்தை புரட்சிகரமான ஒரு அரசியல் வழியில் மக்களை வர்க்கங்களாக அணிதிரட்டவில்லை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதன் அரசியல் நிலைப்பாடு, மா.லெ.மா சிந்தனைக்கு முரணான சந்தர்ப்பவாதமாகும். அக்கட்சி.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: