1986ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களின் கொலை மற்றும் அராஜகத்துக்கு எதிராக போராடிய போது ஒட்டிய சுவரொட்டிகளே இவை. இன்று கொலையை நியாயப்படுத்த முடியாது கொலை செய்ய பலபெயர்களில் பல படையணிகள். இதை மறுக்க அவர்களே கற்பனை செய்து கூறும் பல பெயர் கொண்ட பல குழுக்கள். அனைத்தும் அவர்களே. அதாவது கொலையாளியே. தூக்கில் இடுபவனை தூக்கில் இட ஒரு கொலையாளி எப்படி தேவையோ, அப்படி ஒரு பாதிரியாரும் அங்கு பிரசன்னமாகின்றான். இங்கு தூக்கில் இடுபவன் பணி. அதுபோல் பாதிரியார் பணி.
இரண்டும் மக்களை அடக்கியாளத் தேவைப்படுகின்றது. இதுபோல் தான் கொலையும், கொலையை மறுக்க பல வண்ணக் கதைகளும். இங்கு கொலை செய்ய கொலையாளியும், கொன்றதை நியாயப்படுத்த அல்லது மறுக்க பல வண்ண தூய்மைவாதிகளும் அரங்கில் நின்று தமிழ் இனத்தையே காயடிக்கவே பல பெயரில் கொலையாளி வலம் வருகின்றான்.
1 comment:
இரயா,இன்றைய மக்களின் உளவியலானது மிகவும் காயடிக்கப்பட்டவொரு சமூகக் கண்ணோட்டத்தை வளர்த்து அதனூடாகக் காரியமாற்றும் அரசியாக்கப்பட்டுள்ளது.இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை எவரும் பெறாதபடி அனைத்தும் இனவாத அரசியலூடாக இலங்கையின் அதிகார வர்கங்களால் திட்டமிட்டுச் செவ்வனவே செயலாற்றப்படுகிறது.இதில் உச்சபட்ச உளவியலை நாம் வாசக உளவியற் பாங்கில் காணமுடியும்.இதிலிருந்து மீள நீண்டபடிப்பும்,ஆய்வு மனமும் தேவை.இது இயக்கவாத மாயைத் தாண்டிய பார்வையிடாகவே சாத்தியம்.
Post a Comment