தமிழ் அரங்கம்

Thursday, December 22, 2005

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் கூட ஆணின் ஒழுக்கக்கேட்டை மடடுமல்ல, அதன் பாதையில் பின்தொடரும் பெண்ணின் ஒழுக்கக்கேட்டையும் கூட நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. ஒழுக்கக்கேடு என்பது இவர்களின் வாழ்வியல் கண்ணோட்டத்தில் எதுவும் கிடையாது. அப்படி எதாவது உண்டு என்றால், தாம் அடக்கியாளும் வர்க்கத்தின் போராட்டங்களைத் தான்.

நான் எழுதிய "ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டை கோருவதா பெண்ணியம்?" என்ற கட்டுரைக்கு தமிழ்மணம் விவாதத்தளத்தில் இரண்டு முரணிலையான ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதரவு (டோண்டு, மற்றது உண்மை) கருத்துகள் போடப்பட்டடு இருந்தன. அவை இக் கட்டுரையில் முழுமையாக தரப்படுகின்றன. உலகமயமாதல் விபச்சார பெண்ணியத்தின் வாழ்வியலை போற்றும் இந்த இரண்டு பதிவுகளும், தனது சொந்த முகத்துடன் வெளிவந்துள்ளது. கால்மார்க்ஸ் குறிப்பிட்டது போல் "மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனி மனிதனிடமும் இயல்பாக உள்ளர்ந்திருக்கும் சாரம் என்பதல்ல, அதன் எதார்த்தத்தில், அது சமூக உறவுகளின் முழுத் தோற்றம் ஆகும்" அதையே இந்த பதிவுகள் மீண்டும் பதிவு செய்துள்ளன.

இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர். ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பின் முழுத் தோற்றத்துடன், அதன் விபச்சாரத்தனத்தை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதமே முதலாளித்துவத்தின் உள்ளடக்கம் தான். தனிப்பட்ட சுதந்திரம், பெண்ணின் தனிப்பட்ட விடையம், பாலியல் ஒரு உடல் சார்ந்த உணர்வு இன்னும் பலவாக கூறி தப்பிக்க நீக்கல் தேடுகின்றனர்.

நான் எழுதிய கட்டுரையில் இருந்து டோண்டு என்பவர் "கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது." என்று நான் எழுதியதற்கு, அவர் எப்படி பதிலளிக்கின்றார் எனப் பார்ப்போம்.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதற்குள் இப்போது போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்"

இப்படித் தான் அவரால் வாதிட முடிகின்றது. இங்கு ஆணாதிக்கம் பற்றி எந்த அக்கறையும் இவருக்கு இருக்கவில்லை.

மாறாக வெளிப்படுத்துவது நுகர்வு வெறி. சந்தையில் பொருளை வாங்கும் கண்ணோட்டத்தில், அதையே பாலியலுக்குரிய உரிமை என்கின்றனர். இச்சை என்கின்றார். சில ஆண்கள் எரிச்சலால் புகைவதாக கூறகின்றார். இது ஒரு சமூக ஆய்வா? இல்லை தனிப்பட்ட மனிதனின் சொந்த உலகு நோக்கில் இருந்து கூறும் சொந்த சீரழிவு தான். இதைத் தான் குஷ்புவும் செய்தார். இதில் இருந்து சமூகம் வேறானது. தனிமனித சொத்துரிமை சார்ந்து வெளிப்படுத்தும் கருத்து எப்போதும் வேறானது, அதையெல்லாம் இழந்த சமூகம் வெளிப்படுத்தும் கருத்து வேறானது. வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. அவை நேர் எதிர் தன்மை கொண்டவை. உதாரணமாக பார்ப்பானின் உலகம் வேறானது. பள்ளர்களினதும் பறையர்களினதும் உலகம் வேறானது. பார்ப்பான் தனிமனித நலன் சார்ந்து உலகை சூறையாடும் மனித விரோதியாக இருக்கின்றான். பள்ளர் பறையர் சமூக உயிரியாக உலகை சூறையாடுவதற்கு எதிராக இருக்கின்றான்;. கருத்தின் தளம் வேறுபடுகின்றன. பெண்ணை இதில் இருந்து ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறுபடுகின்றது.

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபற்றி பிரச்சனையல்ல. அது இயற்கையானது. ஆனால் அதை இந்த ஆணாதிக்க சமூக பொருளாதா அமைப்பில் உறவு கொள்ளும் வடிவம், அதை துண்டம் சமூக காரணிகள் தொடர்பானதே இங்கு பிரச்சனையாகும். யாரும் இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயமாக இயங்குவதில்லை. எந்த முடிவுகளும் இந்த சமூக பொருளாதாரத்துக்கு வெளியில் யாரும் எடுப்பதில்லை. நாம் இந்த சமூக பொருளாதார அமைப்பின் சிறைக் கைதிகள். சிறைக்குள் இருப்பவன், சிறையின் எல்லைக்குள் உட்பட்டே, அவன் தனது சொந்த முடிவுகளை எடுக்கின்றான். இங்கு சொந்தமாக முடிவு எடுப்பது, அவன் சுதந்திரமாக தோந்தவையாக அல்ல.

உலகம் ஆணாதிக்க சமூக அமைப்பிலானது. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம். மறுபக்கம் உலகமயாதல் என்ற ஆணாதிக்கம். நிலபிரபுத்துவம் பெண்ணை அடிமையாக இருக்க கோருகின்றது. உலகமயமாதல் பெண்ணை விபச்சாரியாக இருக்க கோருகின்றது. இது தவறு என்றால் இதைப்பற்றி முதலில் விவாதியுங்கள். இதை இரண்டையும் எதிர்த்து நாம் போராடக் கோருகின்றோம். இப்படித் தான் சமூகம் எங்கும் பெண்கள் போராடுகின்றனர்.

ஆணும் பெண்ணும் இயற்கை சார்ந்த பாலியல் தேவையை பூர்த்திசெய்ய, நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சரி, உலகமயமாதல் அமைப்பிலும் சரி பாலியல் ரீதியாக உறவைக் கொள்ளமல் வாழவில்லை. இதை யாரும் மறுக்கவுமில்லை? இந்த சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, இதை எப்படிச் உறவு கொள்ளல் வேண்டும் என்று வழிகாட்டுகின்து. இந்த சீரழிவுக்குள் நின்று பொது விபச்சாரமா அல்லது அடிமைத்தனமா என இரண்டில் ஒன்றை சமூகத்தின் தனி அலகுகள் தேர்ந்தெடுக்கின்றனர். இது அக்கம் பக்க்கமாகவே உள்ள போது, பலமான அமைப்பு வடிவம் சார்ந்து மோதல் வெடிக்கின்றது. இந்த இரண்டையும் எதிர்த்த போராட்டத்தில் சமூகம் உள்ள போது, அதை பலமான சமூக பொருளாதார அமைப்பு, இதை எதிர்நிலைக்கு முத்திரை குத்தி தூற்ற முனைகின்றனர்.

"பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே என்ற எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை." என்ற வாதம் முதலாளித்துவ அற்பவாதியின் கண்டுபிடிப்புத்தான். விவாதத்தின் உள்ளடகத்துக்கு பதிலளிக்க முடியாதபோது, இப்படி கூறி தப்பிக்க முன்வைக்கும் குதர்க்கமாகும். உலகின் வறுமைக்கு தங்களுடைய சுரண்டலே காரணம் என்பதை மறைக்க, ஏகாதிபத்தியம் சனத்தொகை பெருக்கம் யுத்தங்கள் என்று தமது சொந்த சூறையாடலை மறைக்க வைக்கும் வாதம் போன்றதே இது. ஒரு முதலாளித்துவவாதி மட்டும்தான், வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் விளைவு என்று, தனது தனிச்சொத்துரிமை உலக நோக்கில் நின்று கூறமுடியும். அவனின் சொந்த மனிதவிரோத அர்ப்பத்தனங்கள், சமூக இயக்கத்தின் நோக்கில் எதையும் ஆராய்வதில்லை. இதை சந்தர்ப்பங்கள், சூழல்கள், வாய்ப்புகள் என்று புலம்பத் தொடங்குகின்றான். இதை தனிமனித எரிச்சல் என்று, எந்த ஒரு சமூக ஆய்வாளனும் கூறமாட்டான். தனிமனித சமூக அமைப்பினால் உச்ச நன்மை பெறும் அற்பவாதிகள் மட்டும், இப்படி கூறுதை வரலாறு முழுக்க நாம் காணமுடியும். இந்த கனவான்கள் சமூகத்தில் காணப்படும் சமூக ஒடுக்குமுறைகள் பற்றி வாய்திறப்பதேயில்லை. எப்போதும் தனிமனித விருப்பங்கள் மீதான சமூகத்தின் எதிர்வினையை பற்றி மட்டும் பேசுபவர்கள்.

"உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார். " என்ற வரிகள், இயற்கையான உடல் சார்ந்த உணர்வை பற்றி பேசவில்லை. மாறாக இந்த இயற்கையான உடல் சார்ந்த உணர்வை தீர்மானிப்பவனின் உலக கண்ணோட்டத்தைப் பாதுகாப்பது பற்றியே பேசமுற்படுகின்றார். இயற்கையான உணர்வு சார்ந்த பசி, தாகம் போன்ற அடிப்படையான தேவையை இந்த உலகமயாதல் சமூகத்தில் கோடானுகோடி மக்களுக்கு கிடைப்பதேயில்லை. அதை கிடைக்கவிடாமல் பண்ணுபவர்கள் யார். இவர்களைப் போன்ற அற்பவாதிகள் தான். இதை சம்பந்தப்பட்டவரின் விடையமாக குறுக்கி காட்டிவிடுவர். மாடிவீட்டில் இருந்து குடிசை பார்த்து ஏப்பமிடுபவர்கள் யார். தாழ்ந்த சாதியை உருவாக்கி அதில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர்கள். இதையெல்லாம் அவன் அவன் தனிப்பட்ட தெரிவாக கூறுவதும், தனிப்பட்ட உணர்வு சார்ந்தாக கூறுவதும், இதை சுதந்திரமாக இந்த சமூக அமைப்பில் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூற முற்படுவன் ஒரு அற்ப வாதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு உடல் இச்சையைக் கூட, ஆணாதிக்க ஒழுக்ககேட்டுக்கு வெளியில் ஆணோ பெண்ணோ யாரும் பெறமுடியாது. இவை அனைத்தையும் சுவீகரித்து வைத்திருக்கின்ற சிலர் சமூக அமைப்பில், இதை துணிச்சலாக உபதேசிப்பதற்கு யாரால் முடியும் என்றால், இதை எல்லாம் சுதந்திரமாக கூறும் அற்பவாதியால் மட்டும்தான் முடியும். மற்றவனுக்கு சுதந்திரத்தை மறுப்பதால் கிடைக்கும் அற்பத்தனத்தில் இருந்து இது வெளிப்படுகின்றது.

பசிக்கு கையேந்த வைத்து, குடிக்கும் தண்ணீரையே பணமாக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். இந்த நிலையில் இதை போல் தான் உடல் இச்சை (பாலியலும்) என்று கூறும் போது உடல் இச்சை விபச்சாரத்தை தாண்டி எதுவுமல்ல. தாம் அனுபவிக்கும் ஆணாதிக்க சுகத்தைத் இப்படித்தான் இவரால் கூற முடிகின்றது. உலகில் பசி எப்படி கோடிக்கணக்கில் மக்களை கொல்கின்றதோ, குடிக்க நீர் இன்றி உலகில் கோடிக் கணக்கில் மக்கள் கொல்கின்றதோ அப்படித் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலும்; உள்ளது. உணவு இன்மையால், சுத்தமான நீh இன்மையால் வருடம் 10 கோடி மக்கள் உலகில் உயிருடன் இறந்து போகின்றனர். அதையே கண்டு கொள்ளது வெறும் உணர்வாக கூறும் இவர்கள், இதை மற்றவனுக்கு மறுத்து தாராளமாக நுகருகின்றான். இதேபோல் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலுக்கும் நடக்கின்றது. சிலர் கோடானுகோடி மக்களின் உணவை பறித்து உண்டு கொழுப்பதும், மற்றவனின் குடிநீரையே அபகரித்து நீச்சல் தடாகங்களில் வாழ்வது போல், பெண்ணின் உடலை சுதந்திரமாக வரைமுறையின்றி அனுபவிக்க வைக்கும் வாதங்கள்; தான் இவைகள். இதுவே உலகமயமாதல் ஒழுக்கம். ஆண் விரும்பும் வரைமுறையற்ற பாலியல் சுதந்திரம் என்னும் விபச்சாரத்தைத் தான், பெண்ணின் உரிமை என்ற கூற முற்படுகின்றனர்.

இதே போன்ற தான் உண்மை கருத்திடுகின்றார். அவர் மற்றொரு வாலில் தொங்கிக் கொண்டு "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். இது தான் அவரின் அனைத்து ஆணாதிக்க வாதத்தையும் காட்டிவிடுகின்றது. சமூகம் பெண்விடுதலையை ஏற்கனவே அடைந்து விட்டதாகவும், மீண்டும் பழையபடி பெண்ணடிமைத்தனத்தை கொண்டு வர முயல்வதாகவும் கூற முனைகின்றார். இவர் அடைந்த பெண்விடுதலை என்பது ஆணாதிக்க உலகமயாதல் விபச்சாரத்தைத் தான்;. இதே போன்று தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் போராடும் போதும், சாதியை மீண்டும் கொண்டு வர முயல்வதாக ஒடுக்கும் சாதிகள் கூறுவது வழமை. அதேவாதம் இங்கும் வெளிப்படுகின்றது. சொந்த ஆணாதிக்க சமுகம் அம்பலமாகும் போது, இப்படி புலம்புவது நிகழ்கின்றது.

இப்படி கட்டுரையை முடிப்பவரின் பதிவைப் முழுக்கப் பார்ப்போம்.
"முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்.

ஆண்களின் ஒழுங்கீனங்களை பெண்களும் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்கவில்லை, பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம். ஒழுக்கமாயிரு என்று சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். பாலியல் விவகாரம் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் உங்கள் மனப்போக்கிற்கு வாழவேண்டும், ஆனால் நீங்கள் கட்டிக்காக்கும் போலி கலாசாரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் , பெண் உயிரை விடவேண்டும். எந்த ஊர் நியதி இது. தினம் ஒருவனுடன் படுப்பதற்கும், உடல் இச்சைகளைப் பற்றி பேசுவதையும் உரிமையாகக் கேட்கவில்லை. அது உங்கள் உலகம். ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்? உங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காப்பதற்காக இத்தனை நாள் நீங்கள் கொடுத்த தியாகச்சுடர் என்ற பட்டம் எங்களுக்கு தேவையில்லை. பெண்கள் தன் விருப்பத்தை, தனக்கென்று ஒரு வாழ்க்கை தன் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியதில், எங்கே நீங்கள் இது நாள் கட்டிக்காத்துவந்த பெயர் போய்விடுமோ என்ற பயம் ஆண் வர்க்கத்தைப் பீடித்துக்கொண்டுள்ளது. இது நாள் வரை உங்கள் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் பயன் படுத்தி வந்த பெண்குலம், தனக்கென்று ஓர் உலகம் அமைத்துக்கொள்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடாய், இதுபோன்ற விஷயங்களைப் பெரிதாக்கி அதன் மூலம் உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறீர்கள். பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்."
என்கின்றார்.

ஆணாதிக்க உலமயமாதல் பெண்ணியம் என்ற பெயரில் வழங்கும் விபச்சார உலகில் அதை பெண்விடுதலையாக காண்பதால் தான் "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். உலகமயாதல் ஒரு ஆணாதிக்க அமைப்பு அல்ல என்றே, இவர் வாதாட முற்படுகின்றார். பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்ட அமைப்பில், வாழும் ஒரு கற்பனை பெண்ணின் ஆணாதிக்க புலம்பல் இது.

கொள்கை ரீதியாகவே நாங்களும் நீங்களும் இரண்டு வேறுபட்ட துருவங்கள். நாங்கள் இந்த சமூக அமைப்பபை ஆணாதிக்க அமைப்பு என்கின்றோம்;. நீங்கள் இல்லையில்லை என்று கூறி பெண் விடுதலை அடைந்த அமைப்பு என்கின்றீர்கள். உங்கள் வாதங்கள் அனைத்துமே ஆணாதிக்கம் சார்ந்ததென நாங்கள் கூற முற்படுகின்றோம்.

நிலபிரபுத்துவ அமைப்பு மட்டும் ஆணாதிக்கமானதல்ல. நீங்கள் விசுவாசிக்கும் நம்பும் உலகமயமாதல் கூட ஆணாதிக்க அமைப்புத் தான். ஆணாதிக்க விபச்சார உலகில் கற்பனைகளுடன் வாழும் போது, நாம் அதை ஆணாதிக்க விபச்சார அமைப்பு என்று கூறும் போது துடித்து பதைத்து குமுறிக் கொட்டுவது இயல்பே. இக்கட்டுரையை கண்டு கொதிக்கும் போது "முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். " என்று தான் உங்களால் எழுத முடிகின்றது. உலகமயமாதல் சமூக ஒழுக்கக்கேட்டை நாம் மறுதலிப்பவர்கள். கோடானுகோடி மக்களின் உள்ளக்குமுறலின் குரலாக நாம் இருப்பவர்கள். எங்கெல்லாம் உலகில் நீங்கள் மக்களை அடக்கியபடி கூடி கூத்தடிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் உங்களின் மக்கள் விரோத கோமளித்தனத்தை அம்பலப்படுத்துபவர்கள் நாங்கள்.

விவாதத்தில் இருந்து தப்பவே, உடனே பெண் என்ற அடையாளத்தை தூக்கிகொண்டு ஒடி வருகின்றீகள். "குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்." என்று கூறிய பின்பும் கூட, குஷ்புவுக்காக வக்காலத்து வாங்குகின்றீர்கள். இங்கு பெண் என்ற அடையாளத்தைக் கொண்டு, எதிராளிக்கு முத்திரை குத்தி தப்பிவிட முனைகின்றீர்கள். விவாதத்துக்கு பதில் குறித்த அடையாங்களில் தஞ்சமடைந்து தப்பித்துக் கொள்ளுதல் இங்கு அரங்கேறுகின்றது. இதுவே சமூக இயக்கம் எங்கும் காணமுடியும்.

பள்ளன், பறையன் என்று அடையாளம் இட்டு பார்ப்பான் அவர்களை சுரண்டியது உயர் நிலை அடைந்தது போல், கறுப்பன் என்று இழிவுபடுத்தி வெள்ளையன் அடக்கியாண்டு கொள்ளையிட்டது போல், தமிழன் என்று கூறி சிங்களவன் அடக்கியது போல், அடையாளங்களின் மீது நின்று தற்காப்பை பெறுவது அபத்தம். முடிந்தால் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதியுங்கள். ஆண்கள் எல்லோரையும் பெண்ணுக்கு எதிராக நிறுத்தும் ஆணாதிக்க உத்தி, பார்ப்பனிய தந்திரம் தான். ஆணாதிக்க அமைப்பில், ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க வாதிகள் தான். இங்கு ஆண் எதிர் பெண் அல்ல. ஆணும் பெண்ணுமற்ற எந்த சமுதாயமும் கிடையாது. ஆணாதிக்க அமைப்புக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை தான். இதை நிலப்பிரபுத்துவ அமைப்பிலும் பெற முடியாது உலகமயமாதல் அமைப்பிலும் பெறமுடியாது.

ஆண்கள் தான் குஷ்பு விவாகரத்தை முன்னிலைப்படுத்தியதாக கூறுவது, சமூக ஆய்வு முறையல்ல. ஆணாதிக்க அமைப்பு தான் அதை முன்னிலைப்படுத்தியது. இதில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமும், உலகமயதாதல் ஆணாதிக்கமும் தனது எதிர்நிலை பண்பாட்டின் மீது நின்று குரைத்தனர். இந்த இரண்டடையும் எதிர்த்தே நாம் போராடுகின்றோம். எனது முழுக்கட்டுரையும் இதை தெளிவாக துல்லியமாகவும் எடுத்துக் காட்டுகின்து.

"பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம்." இதைச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. நீங்கள் பெண்கள் என்றால், அதை ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் ஆண்கள் உள்ளடங்கி ஆண் பெண் சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்றே கூறுகின்றோம். அடுத்து நீங்கள் கூறுகிறீர்கள் "ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்?" நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் அடிமையாக இருக்கும் உரிமையையும், உலகமயமாதல் அமைப்பில் விபச்சாரியாக வாழ விரும்பும் உரிமையை நாங்கள் ஒரு நாளுமே மறுக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தின் பெயரில், இவை இந்த அமைப்பில் அவர்களின் சொந்த தெரிவாகவே உள்ளது. ஆனால் நாங்கள் இந்த இரண்டடையும் எதிர்த்து ஒரு சமூக உயிரியாய், போராடும் ஆண் பெண் சமூகத்தையே கோரி நிற்கின்றோம். அடிமைத்தனத்தையும், விபச்சாரத்தையும் எதிர்த்து நாம் போராடுவதை யாரும் தடுக்கவே முடியாது. அது எங்கள் சமூகத்தின் உரிமை.

மார்க்ஸ் கூறியது போல் "கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன் தான்" உலகத்தின் உண்மைகளையும, சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியை செய்ய முடிகின்றது. அதை நாம் செய்ய முனைகிறோம்.

பி.இரயாகரன்
21.12.2005

14 comments:

Anonymous said...

உலக மயமாதல் என்ற ஆணாதிக்க அமைப்பு, பெண்களை கற்பு என்ற ஆணாதிக்க
தளையிலிருந்து விடுவிப்பது முரண்தான். இந்த விலங்கை உடைப்பது அவசியம்தான்.

இது எப்படி விபச்சாரம் ஆகும். காசுக்கு உடலை விற்கும் விபசாரியிடமோ,
கிகோலோவுடனோ போவது தான் விபச்சாரம். ஒரு ஆணும், பெண்ணும் அவர்களாக
விரும்பி உறவு கொள்ளும்போது அது எப்படி விபச்சாரமாகிறது.

உம்முடைய ஒழுங்கிலக்கணப்படி, ஆண்களின் ஒழுங்கீனத்தை (?) பெண்
கற்றுக்கொண்டாள் என்றால் இங்கு சமூகத்தை கெடுப்பது யார்? முதலில்
ஊர் மேயும் (அடிக்கடிஇங்கு இப்படி பலர் எழுதுகிறார்கள். அதனால் நானும் எழுதுகிறேன் )
ஆண்களை முதலில் திருத்துங்கள் செருப்பு, துடைப்பம்,கழுதைசகிதமாக. அப்புறம்
பெண்களை திருத்தலாம். திருத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

dondu(#11168674346665545885) said...

""ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது."
என்ன பிதற்றல் ஐயா. ஆண் அந்த உடல் இச்சையைத் தணித்துக் கொண்டுதானே இருக்கிறான் இத்தனை ஆண்டுகளாக. அப்போதெல்லாம் அது விபசாரம் இல்லையாமா? அப்படியே அவன் போனாலும் இன்னொரு பெண்ணும் அதற்குத் தேவைதானே. இப்போது பெண்ணும் போகலாம் என்ற நிலையெடுக்கும்போதே இப்படி குதிக்கிறீர்கள்.

முதலில் சுழற்றிச் சுழற்றிப் பேசுவதையெல்லாம் நிறுத்தி நான் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள். என்னமோ டிஃபால்ட் மாதிரி கணினியில் உட்கார்ந்தாலே இடதுசாரி, வலதுசாரி என்றெல்லாம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறீர்கள். உங்களுக்கே நீங்கள் எழுதுவது புரிகிறதா என்பதே சந்தேகம்தான்.

கணவன் செயலற்றுப் போனால் அந்த மனைவி தன் உடல்தேவைக்கு என்ன செய்வாள்? அதுவே நிலைமை தலைகீழாகப் போனால் கண்வன் என்ன செய்வான் என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே? அவன் செய்வது மட்டும் நியாயம் என்றால் இவள் செய்வதையும் புரிந்து கொள்ள முடியும். அவள் மிகுந்த கட்டுப்பாட்டில் இருப்பதால் ரகஸியமாகத்தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது. செய்யவும் செய்கிறாள்.

இன்று மட்டுமல்ல, சரித்திரக் காலத்திலிருந்தே. ஆயிரத்தொரு அரபுக் கதைகள், டெக்காமெரான் ஆகியக் கதைகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை வைப்பாட்டி என்பது போல கள்ள புருஷன் என்பதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது.

நான் கூறியதெல்லாம் அச்செயல்களைப் புரிந்து கொள்கிறேன் என்பது மட்டுமே. அதற்கு ஏன் இப்படி குதிக்கிறீர்கள்?

இந்த அழகில் காசியின் பெயரில் ஓர் இழிபிறவி எச்சமிட அதை அகற்ற என்னுடன் பேரமா? வெட்கமாக இல்லை? முதலில் கணினி அறிவை வளர்த்துக் கொண்டு வாருங்கள். அல்லது சொன்னாலாவது தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் போலி காசியின் பின்னூட்டங்கள் இரண்டு அப்படியே இருக்கின்றன. போலி டோண்டுவுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. அதன்படி அவன் நடந்து கொள்கிறான். அந்த வலையில் நீங்கள் விழுந்தால் உங்களுக்குத்தான் கஷ்டம்.

"இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர்." ரொம்பக் கண்டீர்களோ? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இன்னொன்று. காசியின் பெயரில் எச்சமிட்ட போலி டோண்டு என மனைவி மக்களை இழுத்ததை நீங்கள் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் ஒழுக்கம்தான் சந்தேகத்திற்கிடமானது.

எரிச்சலுடன்,
டோண்டு ராகவன்

தமிழரங்கம் said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

கற்பு, கருத்துச் சுதந்திரம்:மாயையும் உண்மையும்
நன்றி : புதியகலாச்சாரம்

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.

கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.

இதையே சற்று "அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வேலையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.

இது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக "இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது. ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

எது கருத்துச் சுதந்திரம்யாருக்குக் கருத்துச் சுதந்திரம்?

இந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.

உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.

குஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.

இதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன்? ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா? குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.
எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.

சாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.

உலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.
உண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து "விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும்? விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா?

இதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.எனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் "துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.

இவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.
மக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.

கேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும்? எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.

அம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.
தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்கு உகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.

"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில் "அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.

""கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது?

குஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் "தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்?

பழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.

ஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.

கலாச்சாரப் போலீசைக் கண்டிக்கும் சட்டம் ஒழுங்கு போலீசு!

குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் "கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.

கற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது? உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.

அடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும்? லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது "நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
ஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு "எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை?

பாசிசத்தின் பாதந்தாங்கியாகக்கருத்துச் சுதந்திரம்!

ஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?
கருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. ""பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் "மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், "அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.

முற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

எல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.

பெண்ணடிமைத்தனத்தைவளர்க்கும் பாலுறவு சர்வேக்கள்

இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.

இந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான "வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா?' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.
குஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் "பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.

சுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.

ஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.

இந்தியா டுடேயின் "புதிய முற்போக்கு'

கற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சாக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த "முற்போக்கை' மறுத்து "பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக்குப் புரியும்.
முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற "முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.

கருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை? ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் "முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.

எய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் "பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து "பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.

குஷ்பு, சுகாசினிமேட்டுக்குடியின் மனச்சாட்சி!

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.
குஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப் பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த "தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.
குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும்? நிச்சயமாக "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.

சுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, "தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.

மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.
பிழைப்புவாதத்தைப் பாதுகாக்கும்"தமிழ் ஆணுறை'!

தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.

எத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.

குஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. "தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ "அப்பழுக்கற்றது'.
வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் "ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு "கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை "தமிழ்'.

தாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்!

இந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி! இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.

மு இளநம்பி

தமிழரங்கம் said...

குஷ்பு - தங்கர்பச்சான் விவகாரம் :பெண்ணியவாதிகளும் பழமைவாதிகளும்

நன்றி : புதிய ஜனநாயகம்

"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்'' எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், ""கற்பு'' மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.

இந்தியாடுடே வாசகர்களோடு முடிந்து போயிருக்க வேண்டிய இந்தக் கருத்தை, கருணாநிதி குடும்பத்தினரால் வெளியிடப்படும் தமிழ் முரசு இதழ், தனது வியாபார அரசியல் நோக்கத்திற்காக, ""தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?'' எனும் தலைப்பில் பரபரப்பூட்டும் செய்தியாக மாற்றியது. இதையடுத்து, தினத்தந்தி (24.9.05) நாளிதழுக்கு பேட்டியளித்த குஷ்பு, ""திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?'' என அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார். இதையடுத்து, பா.ம.கவும், விடுதலை சிறுத்தைகளும் தமிழ் பெண்களை குஷ்பு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றஞ் சுமத்தி, அவருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் தொடுத்துள்ளன.
இந்தியாடுடே வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில், ""பெண்கள் மணமாகும்வரை கன்னியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' என்ற கேள்விக்கு 66 சதவீதப் பெண்கள், "ஆம்' என்று பதில் அளித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 82 சதவீதப் பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை 71 சதவீதப் பெண்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு, இந்தப் புள்ளிவிவரங்களே முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விடுகின்றன. ஆனால், பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகளும் போராட்டம் நடத்துவதற்கு வேறு பிரச்சினையே இல்லை என்பது போல, "நீதி' கேட்டு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, வேலைக்குப் போகும் பெண்கள் கூட, மோசமான, பொறுப்பில்லாத கணவனிடமிருந்து மணவிலக்கு பெறத் தயங்கும்போது, கிராமப்புறங்களில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் ""அறுத்துக் கட்டும் பண்பாடு'' ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கணவன் மோசமானவனாக, பெண் பித்தனாக இருந்தாலும், இந்த ஒழுங்கீனத்தைப் பொறுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவனுக்காகவே வாழ்வதுதான் ""கற்புடைமை'' என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது, இது.

""யாருடன் சேர்ந்து வாழ்வது?'' என்று தீர்மானிக்கும் உரிமையை ""கற்பு'' தட்டிப் பறித்து விடுகிறது. ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் "கீழ் சாதிப் பெண்களை' கிராமப்புறங்களில் காண முடியும்.

கறாராகச் சொன்னால், ""கற்பு'' சாதிகளைக் கடந்த தமிழ்ப் பண்பாடு அல்ல. சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் ""கற்பு''. இம்மேல்சாதி பண்பாட்டை, தொன்று தொட்ட தமிழர்களின் கலாச்சாரம் போல ஊதிப் பெருக்கியதில், இந்துத்துவாவாதிகள், திராவிடக் கட்சிகள், தமிழினவாதிகள், தமிழ் சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, ""கீழ் சாதிகள்'' ""இந்து'' என்ற போர்வையில் எவ்வளவு தூரம் பார்ப்பனமயமாக்கப்படுகிறதோ, அதற்கு நேர் விகிதத்தில் ""கற்பு'' என்ற பண்பாடு அச்சாதிப் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது.

பெரியார், அம்பேத்கர் வழிநடப்பவர்கள் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் வன்னியரான இராமதாசிற்கும், தாழ்த்தப்பட்டவரான தொல்.திருமாவளவனுக்கும் இந்த உண்மை தெரியாதா? இந்த உண்மைக்கு நேர் எதிராக அவர்கள் கற்பை தொன்றுதொட்ட தமிழ் கலாச்சாரம், பண்பாடு போல கொண்டாடுவது வரலாற்று மோசடி. பார்ப்பன வேளாளப் பண்பாடான கற்பிற்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், ""கீழ் சாதி'' பெண்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை, அவர்கள் தட்டிப் பறிக்கின்றனர். மேலும், ""கீழ்ச்சாதி''களைப் பார்ப்பன பண்பாட்டில் மூழ்கடிக்கும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் வேலையை இவர்கள் சுலபமாக்கி விடுகிறார்கள்.

""கற்பு'', ""கன்னித்தன்மை'' போன்ற பழைய சமூக கட்டுப்பாடுகள் மதிப்பீடுகளுக்கு எதிராக, ""திருமணத்துக்கு முன்பே உறவு கொள்ளலாம்'', ""கணவன் தவிர்த்த வேறு ஆடவனுடன் உறவு கொள்ளலாம்'' என்பது போன்ற "பாலியல் புரட்சி' கருத்துக்கள் (மேட்டுக்குடி) பெண்கள் மத்தியில் தோன்றுவதற்கு, தாராளமயம்தான் மூலகாரணமாக இருக்கிறது. இதனைப் பாலியல் மருத்துவர்கள் தொடங்கி பெண்ணியவாதிகள் உள்ளிட்டு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவது, ப.சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் மட்டும்தானா? பா.ம.க.விற்கு இதில் கொஞ்சம்கூடப் பங்கு கிடையாதா? கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக மைய ஆட்சியில் பங்கு பெற்று வரும் பா.ம.க., ""தமிழ் பண்பாட்டிற்கு'' எதிராக இப்படிப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவிக்கும் தாராளமயத்தைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது முணுமுணுத்திருக்குமா?

ஒருபுறம் மேட்டுக்குடி பெண்களிடம் ""பாலியல் புரட்சி'' கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தாராளமயம், இன்னொருபுறமோ அடித்தட்டு வர்க்கப் பெண்களின் ""கற்புக்கே'' உலை வைத்து விடுகிறது. தனியார்மயம் தாராளமயம் விவசாயத்தையும், கைத்தொழிலையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டே போவதால், பிழைக்க வேறு வழியில்லாமல், அடித்தட்டு பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுவது தாராளமயத்தின் பின் அதிகரித்திருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

பல்வேறு அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் இறக்கிவிட்டு, பெண்களை அழகுப் பதுமைகளாக மாற்றும் போக்கும் தாராளமயத்தின் பின்தான் தீவிரமாக நடந்து வருகிறது. ஊருக்கு ஊர் அழகிப் போட்டிகள் நடப்பதும், அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் தொடங்கி மணமான பெண்கள் வரை கலந்து கொள்ளுவதையும் தாராளமயத்திற்கு முன் நாம் கேள்விப்பட்டதுண்டா?

எந்த தாராளமயம் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும் உலை வைக்கிறதோ, அதே தாராளமயத்தை கெயில் ஓம்வட் போன்ற தலித் சிந்தனையாளர்கள், ""தாழ்த்தப்பட்ட மக்களை உய்விக்க வந்த வழியாக''க் கொண்டாடுகிறார்கள். தொல்.திருமாவளவனோ பா.ம.க. இராமதாசு மூலம் தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட காத்துக் கொண்டிருக்கிறார். அவர், தி.மு.க. கூட்டணிக்கு நுழைந்து விட்டால், ""தமிழ் பண்பாட்டையும் தமிழச்சிகளின் கற்பையும்'' பாதுகாக்கும் கேடயமாகத் தாராளமயம் மாறிவிடுமா?

எனவே, இவர்கள் ஒருபுறம் தாராளமயத்தை ஆதரித்துக் கொண்டு, மறுபுறம் """கற்பு' என்ற தமிழ் பண்பாட்டிற்காக''ப் போராட்டம் நடத்துவது பித்தலாட்டத்தனமானது

""செக்ஸ் பிரச்சினைகளை'' கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளாக எழுதிவரும் நாராயண ரெட்டி போன்ற மருத்துவர்கள் கூட, ""திருமணத்திற்கு முன் செக்ஸ் போன்ற பாலியல் சுதந்திரங்கள் தேவையில்லாத ரிஸ்க்; ஆபத்தான சங்கதி'' என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இந்தியாடுடே வகையறாக்கள், இப்பாலியல் சுதந்திரத்தை எதிர்க்கும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, ""பழமைவாதிகள், பத்தாம்பசலிகள், கலாச்சார காவலர்கள்'' எனச் சாடுகிறார்கள்.

இந்திய ஓட்டுக் கட்சிகளிலேயே படுபிற்போக்கான இந்து மதவெறி பாசிஸ்டுகளை ஆதரித்து எழுதி வரும் பத்திரிகையான இந்தியாடுடே, இந்தப் பாலியல் சுதந்திரப் பிரச்சினையில், தன்னை கருத்து சுதந்திரத்தின் காவலனாகக் காட்டிக் கொள்கிறது. தாராளமயத்தின் பின், விபச்சாரம், பாலியல் சுற்றுலா சேவைத் தொழிலாக மாறிவிட்டதைப் போல, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இந்தியாடுடே வெளியிட்டுள்ள வக்கிரமான கேள்விகள் கூட கருத்துச் சுதந்திரம் ஆகிவிட்டன.

இந்தியாடுடேயில் கருத்து சொன்ன குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன் ராமதாசு கூட்டணி, அவரைவிட வக்கிரமான கேள்விகளைக் கேட்டுள்ள இந்தியாடுடே பத்திரிகையை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்குள் துடைப்பத்தை வீசிய அக்கூட்டணி, இந்தியாடுடே அலுவலகத்தின் மீது கை வைக்கத் துணியவில்லை.

அவர்கள் இந்தியாடுடேயைக் கண்டு கொள்ளாமல் விட்டதற்கு, ஒரு நடிகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் கிடைக்கும் மலிவான விளம்பரம், இந்தியாடுடேயை எதிர்த்து நடத்தினால் கிடைக்காது என்பது மட்டும் காரணம் அல ;ல அவர்களின் ஓட்டுச்சீட்டு அரசியலுக்கு இந்தியாடுடே போன்ற பிரபலமான பத்திரிகைகளின் ஆதரவு தேவை என்பதால்தான் மௌனமாக இருக்கிறார்கள். இந்தியாடுடேயை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அதில் விருந்தினர் பக்கம் எழுத மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பது கூட திருமாவளவனின் வாய்க்குப் பூட்டு பூட்டியிருக்கலாம்.

தாராளமயம் பெண்கள் மீது எத்தனையோ சுமைகளை ஏற்றி வைத்திருக்கிறது. பெண்களின் செக்ஸ் பிரச்சினை குறித்து வருடத்திற்கு இரண்டு, மூன்று இதழ்கள் கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்தியாடுடே, பெண்கள் மீது தாராளமயம் திணித்துள்ள சுமைகளைப் பற்றி ஒரேயொரு கருத்து கணிப்பாவது நடத்தியிருக்குமா?

இந்தியாடுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல் வாழ்க்கையை விதவிதமாக அனுபவிக்கத் துடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பாலியல் கலாச்சாரத்தை, நடுத்தர வர்க்கப் பெண்களையும் தாண்டி கீழே கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற இந்தியாடுடேயின் வர்க்கப் பார்வைக்கும் முக்கிய பங்குண்டு.

திருமாவளவன் ராமதாசு கூட்டணியைக் கண்டிக்கும் பலரும், ""குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள். குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. இப்படிக் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த அறிவுஜீவிகள் பலரும் மையமான விசயத்திற்குள் நுழையாமல் நழுவிக் கொள்கிறார்கள். மாறாக, பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியாடுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி.

தனிப்பட்ட ரீதியாகப் பார்த்தால் கூட, பாலியல் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் கருத்துக் கூறும் அளவிற்கு குஷ்புவிற்குத் தகுதியும், அனுபவமும் உண்டா? திரைப்படத் துறையில் பாலியல் ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதை அம்பலப்படுத்தி ஒரு வார்த்தை இவர் பேசியதுண்டா? தனது சொந்தப் படத்தில் கூட நடிகைகளை அரைகுறை ஆடையுடன் நடனமாட விடும் ஒரு மேல்தட்டு காரியவாத நடிகையை, ஏதோ பெண்ணுரிமை போராளியை போல, இந்த அறிவுஜீவிகள் தமிழக மக்களின் முன் தூக்கிப் பிடிப்பது கேவலமானது.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட, தனது பாலியல் தேவைகளை இவ்வளவு பச்சையாகப் பேசியிராத மேட்டுக்குடி வர்க்கமும், அவர்களது பத்திரிகைகளும், இப்பொழுது அதைப் பெண்ணுரிமையாக, புதிய சமூக ஒழுங்காகப் பிரகடனப்படுத்துவதற்குக் காரணம், தாராளமயம் புகுத்தியிருக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம்.

தினந்தோறும் புதிது புதிதாகக் கேட்கும் இந்த நுகர்வு வெறி, உணவு, உடை, நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை. பாலியல் உறவுகளிலும் தினுசுதினுசான வகைகளைக் கோருகிறது. அதுதான் வரைமுறையற்று பாலுறவு கொள்ளுதல் என்ற பழைய காட்டுமிராண்டி கால பாலுறவு பழக்கத்தை, நவீன பாலியல் சுதந்திரமாக - பாலியல் புரட்சியாக அறிமுகப்படுத்துகிறது.

குஷ்புவுக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டுள்ள மாற்றுக் குரல்கள், ""கால் சென்டர், கணினி தொழில் நுட்பம் போன்ற வேலைகள் ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பை அதிகரிக்கிறது... இத்தகைய சூழ்நிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது'' எனக் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், இந்த நுகர்வு வெறிப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான்.

குறிப்பாக, தாராளமயத்தின் பின் வந்துள்ள கால் சென்டர் போன்ற தகவல் தொழில் நுட்ப (நவீன மூளை உழைப்பு) தொழிற்சாலைகளில், ஊழியர் சங்கங்கள் இருக்காது; மாறாக, இந்தத் தொழில்கள் மொத்தமாகக் குவிந்துள்ள தொழில் நுட்ப பூங்காங்களுக்குப் போனால், நுகர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் ""ஷோரூம்களை''ப் பார்க்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பதே, அழகிப் போட்டி ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு புதிது புதிதாக அழகிகளும், அழகன்களும் வந்து போன வண்ணம் இருக்கிறார்கள். வேலைப் பளுவில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க, ""அவுட்டிங்'' என்ற மேல்தட்டு ""பார்ட்டி'' கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், மேல்தட்டு வர்க்கத்துக்கேயுரிய எல்லா பண்பாடுகளும், இவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஏற்கெனவே மனதளவில் பணக்காரர்களைப் போலவே வாழ ஆசைப்படும் நடுத்தர வர்க்க இளைஞர்கள், எளிதாக இந்தக் கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.

இந்த நவீன மூளை தொழிற்சாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக, கணவன் மனைவி இடையே பாலுறவில் பல சிக்கல்கள் தோன்றுவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே உறவு சரியில்லாத பொழுது, சோரம் போவது எளிதாகி விடுகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர வர்க்கத்து ஆண்பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பம் இருப்பதால், இந்தக் கலாச்சாரத்தை மனதளவில் முன்னரே ஏற்றுக் கொள்ளும்படி, அவர்களது பழைய பாலியல் கருத்துக்களை மாற்றியமைக்கும் வேலையை இந்தக் கருத்துக் கணிப்புகள் செய்து விடுகின்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்.

பாலியல் புரட்சியோ, ஆண்பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கத் தேவையில்லை என்பதை முன்நிபந்தனையாகக் கொள்கிறது. எனவே, இந்த உறவில் காதல் இருக்காது. காதல் இல்லாத உறவு நெறியுடையதாகவும் இருக்காது.

பாலியல் மருத்துவர்கள் பாலுணர்வை வெறும் உடல்சார்ந்த விசயமாகப் பார்க்கவில்லை. மனத்தின் பல்வேறு உணர்ச்சி நிலைகளின் ஒரு வெளிப்பாடே பாலுணர்வு எனக் கூறுகிறார்கள். ஆனால், பாலியல் சுதந்திரமோ ஆண்பெண் இடையேயான பாலுணர்வை வெறும் உடல் இச்சை சம்பந்தப்பட்ட விசயமாக குறுக்கி விடுகிறது. எனவே, இது அறியவிலுக்கே எதிரானதாகிறது. மேலும், காதல் போன்ற சமூக உறவுகள் இல்லாத காட்டுமிராண்டி காலத்தில், வெறும் பாலுணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆண்பெண் இடையே உறவு இருந்த நிலைக்கு, நாகரிக மனித சமூகத்தை தாழ்த்தி விடுகிறது.

பெண்ணின் கன்னித்தன்மை என்பதே முட்டாள்தனமானது என மருத்துவ அறிவியல் சாடுகிறது. ஏனென்றால், பெண்ணின் ""கன்னித் திரை'' மிதிவண்டி ஓட்டுவது, நீந்துவது போன்ற நடவடிக்கைகளால் கூடக் கிழித்து போய் விடக் கூடியது. குஷ்பு இந்த அறிவியல் அர்த்தத்தில் கன்னித் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது எனச் சொல்லவில்லை.

ஒருவரை நம்பி ஏமாந்து போகும் பெண்களையும், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்ட பெண்களையும் கன்னித்தன்மை இல்லாதவர்களாகக் கூறும் சமூகம், அவர்களை மானம் இழந்தவர்களாக, திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்களாகச் சாடுகிறது. இந்தப் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து, அதன் அடிப்படையில் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என குஷ்பு கூறவில்லை. மாறாக, திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வது தவறில்லை என்ற அடிப்படையில் தான் கூறியிருக்கிறார்.

பாலுறவில் சுய கட்டுப்பாடுடன் இருப்பது அடிமைத்தனமாகாது என லெனின் குறிப்பிடுகிறார். இந்த சுய கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே கலாச்சாரமாகவே காணப்படுகிறது. ஆனால், பெண்ணியவாதிகள் இந்த சுயகட்டுப்பாட்டை மீறுவதுதான் சுதந்திரம் என்கிறார்கள். சுய கட்டுப்பாட்டை மீறி திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளலாம்; கணவன் அல்லாத வேறு ஆண்களுடன் உறவு கொள்ளலாம் என்பவர்கள் திருணத்தையே ஒதுக்கித் தள்ள வேண்டியதுதானே? ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ஏன் வைக்க வேண்டும்?

""திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; திருமணமான பெண்கள், வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்'' என்பதை பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் விடுதலையின் அம்சங்களாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இது, நடைமுறையில், பல பெண்களோடு உறவு கொள்ள அலையும் ஆண்களுக்கு, தனது பெண்டாட்டி, அம்மா, சகோதரிகளின் ""கற்பை''த் தவிர, மற்ற பெண்களின் ""கற்பை''யெல்லாம் துச்சமாக மதிக்கும் ஆண்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகக் கைகொடுக்கும்.

பெரும்பாலான தமிழ் பெண்கள் ""கட்டுப்பெட்டித்தனமாக'' வாழும் போதே, ஆண்கள் வழிதவறிப் போனதற்கு பெண்கள் தான் காரணம், அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் எனப் பழிப்போடும் ஆணாதிக்கத் திமிருக்கு, இப்பாலியல் சுதந்திரம் பெண்களைச் சீண்டுவதற்கும், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில் முடியும்.

எதிர் எதிரான கருத்துக்களான ஆணாதிக்கமும், பெண் விடுதலையும் ஒன்றையொன்று அனுசரித்துக் கொண்டு சமாதான சகவாழ்வு முடியுமா? ஆண்கள், பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம் எனும் பொழுது, பெண்களும் அப்படி இருக்கலாம் என்பது கேட்பதற்கு ""மிகுந்த புரட்சிகரமானதாக''த் தோன்றினாலும், இதற்கும் பெண் விடுதலைக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது; ஒரு சீரழிவு, இன்னொரு சீரழிவை நியாயப்படுத்தி விடாது.

""ஒருவனுக்கு ஒருத்தி'' என்ற நவீனக் குடும்பம், ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடியதுதான். இதைக் காட்டி குடும்பத்தையும், திருமணத்தையும் மறுக்கும் அராஜகவாதத்திற்குப் பதில் குடும்பம் மற்றும் ஆண் பெண் உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்குப் போராட பெண்களைத் தூண்டிவிடுவதுதான் மாற்றுத் தீர்வாக அமைய முடியும். பெண்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை தமது அன்றாட வாழ்க்கையில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.நடைமுறை வாழ்க்கையில், கணவன் வேறாரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தெரியவரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் பஞ்சாயத்துப் பேசியோ, போலீசு நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தோதான் பிரச்சினையைத் தீர்க்கப் போராடுகிறார்களேயொழிய, வீம்புக்காக வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கிடையாது. கணவனின் கள்ள உறவு காரணமாகவோ, பாலியல் சித்திரவதை வரதட்சணை கொடுமை காரணமாகவோ அவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அவனிடமிருந்து பிரிந்து போய் தனியாக வாழுகிறார்கள்; இல்லை, மணவிலக்கு பெற்றுக் கொண்டு மறுமணம் கூடச் செய்து கொள்கிறார்கள்.

பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.

திருமணம், குடும்பம் ஆகியவற்றின் வரலாற்று வளர்ச்சி குறித்து ஆராய்ந்த எங்கெல்ஸ், ""ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண்பெண் சமத்துவம், பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதைவிட, ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்கும் பேருதவி செய்யும்'' என்று குறிப்பிடுகிறார்.

எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற பெண்களின் கவலைகள் மறைய வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற, முதலாளித்துவ சமூகம் மறைந்து போக வேண்டும். இச்சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு பெண்களை அணிதிரட்ட, பாலியல் கருத்துக்களைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ""பெண்கள் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுவது பெண் கல்வி மறுக்கப்படுவது வரதட்சணை சாவுகள்; வரதட்சணைக் கொடுமையால் திருமணம் தள்ளிப் போவது'' எனப் பெண்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளை முன் வைத்தே அவர்களை அணிதிரட்டிவிட முடியும்.

தாராளமயம், மேட்டுக்குடிப் பெண்களைப் ""பாலியல் சுதந்திரத்தை'' நோக்கித் துரத்துகிறது என்றால், அடித்தட்டு வர்க்கப் பெண்களை சமூகப் புரட்சியை நோக்கி நெட்டித் தள்ளுகிறது. தாராளமயத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் வீச்சு அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்களைத் தெருவுக்கு இழுத்து விடுகிறது. சென்னை இராணி மேரி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுத்ததையும்; மணிப்பூர் மாநிலத்தில் வயதான தாய்மார்கள், இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து நடத்திய நிர்வாணப் போராட்டம் இந்தியாவையே உலுக்கி எடுத்ததையும் நாம் மறந்து விட முடியுமா?
அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியில் உருவாகி வரும் இப்புதிய பண்பாட்டை ஆதரித்து இந்தியாடுடே சிறப்பிதழ் வெளியிடாது. குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்; இப்புதிய பண்பாட்டை நாம் தான் அடையாளப்படுத்தி வளர்த்துச் செல்ல வேண்டும்.

ஆனால், இராமதாசும், திருமாவளவனும் ""கற்பு என்ற தமிழ் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக'' அடித்தட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தக் ""கற்புடமை'' பண்பாடு பெண்களை, சமூக உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள விடாமல் தடுத்து, அவர்களை அடுப்படியிலேயே முடக்கிவிடும் நயவஞ்சகம் நிறைந்தது என்பதை நாம் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அதேசமயம், ""கற்பு''க்கு எதிராக இந்தியாடுடே வகையறாக்கள் முன் வைக்கும் ""பாலியல் சுதந்திரமோ'' இளைஞர்களின் சிந்தனையை நஞ்சாக்கக் கூடியது!

நரியைப் பரியாக்கும் திருமாசென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை ஜெயாவின் சோதிட மூடநம்பிக்கைக்காக அகற்றப்பட்ட பொழுது, ""ஆண்களின் சொத்தாசைதான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியது'' எனப் புரட்சிகரமாக வாய்ச்சவடால் அடித்த திருமாவளவன், இப்பொழுது, ""குஷ்பு இருப்பது கற்பைப் போற்றுகிற கண்ணகிகள் நடமாடும் தமிழ்நாட்டில் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.'' (ஜூ.வி. 2.10.05) எனக் கற்பை ஏற்றிப் போற்றுகிறார். ""கற்பு என்பது மானுட சமூகத்தின் பொது ஒழுங்காக வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது'' என இந்தியாடுடே (அக்.12, 2005) யில் முன்னுக்குப் பின் முரணாகப் பிதற்றுகிறார்.
திருமாவளவனுக்கு, முன்பு திருடர் பாதையாகத் தெரிந்த தேர்தல் பாதை, இப்பொழுது தலித்துகளைப் பாதுகாக்கும் ஜனநாயகப் பாதையாக மாறிவிட்டதைப் போல, ஆணாதிக்க கருத்தியலான கற்பும், தமிழ்ப் பண்பாடாக, பொது ஒழுங்காக மாறிவிட்டது.

தங்கர்பச்சானின் ஆண்டைத்தனம்

இராமதாசும், திருமாவளவனும், ""குஷ்புவுக்கு ஒரு நீதி, தங்கர்பச்சானுக்கு ஒரு நீதியா?'' எனக் குமுறிக் கொண்டிருப்பதே, இப்போராட்டத்தின் பிற்போக்குத்தனத்தை மட்டுமல்ல, இவர்கள் நோக்கத்தையும் அம்பலப்படுத்திக் காட்டி விடுகிறது. ""பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்'' என தங்கர்பச்சான் கேவலமாகப் பேசியதால் அவர் நடிகர் சங்கத்தால், குஷ்பு, மனோரமா ஆகிய நடிகைகளின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்'' என்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இதனின் இன்னொரு பக்கத்தை சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புமே திட்டமிட்டே மூடி மறைத்து விட்டார்கள்.

தங்கர்பச்சான் சொந்தமாகத் தயாரித்த ""சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயரின் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு 600 ரூபாய் சம்பள பாக்கியைத் தராமல் தங்கர்பச்சான் இழுத்தடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடியப் போகும் நேரத்தில் கூட தங்கர்பச்சான் இந்த சம்பள பாக்கியைத் தராததால், நவ்யா நாயர் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என நியாயமான முறையில் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கர்பச்சான், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், ""பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்'' எனத் திட்டித் தீர்த்தார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாடல் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், ""கோடி கோடியா ரூபாயைப் போடுறோம். கேவலம், 600 ரூபாய்க்கா ஒரு மேக்கப் போடுற பொம்பளெ ஷýட்டிங்கை கேன்சல் பண்ண வச்சிடுச்சின்னா இந்தத் தமிழ் சினிமா எப்படி உருப்படும்?'' என இந்தத் தமிழ் படைப்பாளி தனது ஆணவத்தைக் கக்கியிருக்கிறார்.

வேலை செய்தவன் கூலி கேட்டால், அதைக் கொடுக்காமல் திமிராகப் பேசுவது ஆண்டைகளின் மனோபாவம். தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரி என்று கேவலப்படுத்தியதற்காக மட்டுமல்ல, அவரின் இந்த தொழிலாளர் விரோத ஆண்டை மனோபாவத்துகாகவும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். தனது திரைப்படங்கள் அனைத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களை விற்பனை செய்து வரும், இந்தப் பிற்போக்கு வியாபாரியைத் தமிழர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், பாட்டாளி மக்கள் பெயரில் கட்சி நடத்தும் இராமதாசும்; மார்க்ஸ் அம்பேத்கர் என வாய்ச்சவடால் அடிக்கும் திருமாவளவனும், தங்கர்பச்சான் தமிழ் படைப்பாளி என்பதற்காகத் தண்டிக்கப்பட்டதாகப் பூசி மெழுகுகிறார்கள்.

இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?

Anonymous said...

டோண்டு மாமா,
இந்த ரயாகரனும் மெண்டல்கேஸ்தான் என்று எழுதியிருந்தேனே அப்புறம் ஏன் இவன் எழுதும் குப்பை விளக்கத்திற்குப் பதில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விட்டுத் தள்ளுங்கள். வேலையைப் பாருங்கள்.

வன்னியன் said...

இராகரனையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி கெட்டவார்த்தைகளால் பின்னூட்டங்கள் வரும்போது எப்படியிருக்குமோ அதேபோல்தான் டோண்டுவையோ காசியையோ சொல்லி பின்னூட்டங்கள் வரும்போதும். இதையேன் இராயகரன் புரிந்துகொள்கிறாரென்று தெரியவில்லை.

முதலில் காசி என்ற பெயரில் வந்த முதலாவது பின்னூட்டம் கேள்வியே அல்ல. இலக்கணப்படிக்கூட அது கேள்வி என்ற வகைக்குள் வராது. ஒருவன், 'நான் கடைக்குப்போய் சாப்பிட்டேன்' என்று சொல்லிவிட்டு, இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்டால் அவனைப் பைத்தியக்காரன் என்றுதானே சொல்வோம். அதேமாதிரியொரு வசனத்தையெழுதிவிட்டு, இந்தக் கேள்விக்கு உன் பதிலென்ன என்று கேட்பது என்ன விசித்திரம். அதுவும் இராயகரனே அதை டோண்டுவைப்பார்த்துக் கேட்கிறார்.

சரி, வந்தது காசியில்லை, வேறொருவர் தான் இப்படி விளையாட்டுக்காட்டுகிறாரென்று தெளிவாகத் தெரிகிறதுதானே? அப்பின்னூட்டத்தை அழித்துவிடுவதில் என்ன சிக்கல்? கேள்வியாக நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதை நீங்களே உங்கள் பெயரில் கேட்கவேண்டியதுதானே இரயாகரன். அதெற்கேன் இன்னொருவரின் பெயரைக் கேவலப்படுத்த வேண்டும்?

மேலும் காசி வந்து கேடடால்தான் அழிப்பேன் என்பது என்ன வாதமோ?
நீங்களே அறிந்தவரையில் காசி இங்கே வலைப்பதிவுகளில் உலாவுவது மிகமிக அரிது. வலைப்பதிவாளர்களிலேயே ஆகக்குறைந்தளவு வலைப்பதிவுத் தொடர்பு கொண்டவர் அவராகத்தானிருக்கும்.
மேலும் உங்கள் வலைப்பதிவின் வாசகர் வட்டம் எல்லாரையும் கொண்டதல்லதென்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஈழம் பற்றிக் கதைப்பதால் நாங்கள் அடிக்கடி வருகிறோம். இதுவே எல்லாரும் வருவார்களென்று எதிர்பார்ப்பதும் சரியன்று. காசியும் உங்கள் வலைப்பதிவுகளுக்கு வந்து பதிவுகளைப் படிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே அது போலிக்காசி என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த சந்தர்ப்பத்தில் அதை அழித்துவிடுவதே முறை. காசி வந்துதான் சொல்ல வேண்டுமென்பது ஏற்புடையதன்று.

குறிப்பிட்ட பின்னூட்டம், டோண்டு மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டவர்களது என்பது வெளிப்படை. குறைந்தபட்சம் டோண்டுவுடன் கருத்து ரீதியாக மோதமுடியாதவர்கள் செய்யும்வேலை. ஒருவனைத் திட்ட, அவனது பெண் உறவுகளைக் கேவலமாகச் சித்திரிப்பதும் துசிப்பதும் என்ற வழமையான பல்லவிதான் இதுவும். இதுகூட அப்பட்டமான ஆணாதிக்கக்கூறுதான். இதைப்பற்றியே பதிவுகள்போட்டவர் தான் நீங்கள். ஆனால் இந்த இடத்தில் நீங்களும் இதையேதான் செய்கிறீர்களென்பது உங்களுக்குப் புரிகிறதா? "உன்ர மகள்களோடு அவன் பாடுத்தான் எண்டுறான். நீ என்ன சொல்லுறாய்?" என்று டோண்டுவை நீங்கள் நிற்க வைத்துக்கேள்வி கேட்பதை வேறு எப்படி எடுத்துக்கொள்வது?

--------------------------
இக்குறிப்பிட்ட கருத்து உங்கள் கட்டுரை சார்ந்தன்று. மாறாக பின்னூட்டங்களில் நடந்த சிக்கலும் அது சம்பந்தமாக நீங்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பானதே.

Sri Rangan said...

திரு.டோண்டு இராகவன் அவர்களை'மாமா'முறைச் சொந்தம் கொண்டாடி உரிமையோடு எழுதும் நபர் நிச்சியம் மஸ்ட் டூ தாம்!

என்றாலும் இப்படி இரயாகரனை மென்டல் என்பது அறிவுடையவர்களுக்கு அழகல்ல!

இரயாகரனின் மிகக் கறாரான பார்வையை நாம்தாம் தவறாக எடுக்கிறோம்.திரு.டோண்டு அவர்களையும் அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட வகையில் தாக்க முடியாது!நாம் தவறாக நடந்தால் அது நமது பொறுப்பு மட்டுமல்ல.அந்தச் சுமூகத்தில் எமக்கு முன் வாழ்ந்தவர்கள் கைமாற்றித் தந்த வாழ்வியல் முறையைப் பற்றியும் நாம் குறைப்படலாம்.

நாமெல்லோரும் இந்த அமைப்பால் ஆட்டுவிக்கப்படும் வெறும் பொம்மைகள்தாம்.

இரயாவினது கருத்து இந்த அடிமை முறைகளை உடைப்பது.எனினும் நான் ஏலவே குறிப்பிட்டமாதிரி திரு.டோண்டுவை -அவரது குடும்பத்தை கேவலாமாக்கி "போலி டோண்டு" எழுதுவது எனக்கு உடன்பாடில்லை.அது போலி டோண்டுவால் நிகழ்ந்த வக்கிரம்தாம்.இரயாவைக் குறைப்படுவது தனிப்பட்ட பெண்களின் வாழ்வைக் கொச்சைப்படுத்தும் போலியின் பின்னூட்டத்தை அகற்றுவதில் ஏற்பட்ட தர்க்கத்துக்கே!

மற்றும்படி அவரது பார்வையில் எனக்கு உடன்பாடுண்டு.

திரு.டோண்டு அவர்கள் கேட்டபோது இதை எதுவித தர்க்கமுமின்றி இத்தகைய எழுத்துக்களை அழித்துவிடாது கருத்தாடும் நிலைக்குப் போனது அவரது கருத்துப்படி சரியானாலும்-மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிப்பது சரியில்லை.பெண்களின் வாழ்வில் விழையாட நாம் யார்?அதுவும் பாலியல் வக்கிரமாக அந்தப் போலி டோண்டு எல்லா இடமும் ஊத்தைகளைக் கொட்டுவது நியாயமாகவில்லை.

மற்றவர்களின் குடும்பத்தைக் கேவலமாக்கி எழுதுவதற்கு எவருக்கும் உரிமைகிடையாது.

கொழுவி said...

சிறிரங்கன்,
மேற்கண்ட அநாமதேயப் பின்னூட்டம் என்னால் இடப்பட்டதன்று. ஆனால் அது என்னுடையது தான் என்று நம்புவதற்கு ஏதுவாக அதில் மாமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்கிறேன். டோண்டுவை மாமா என்று விழித்து சில பின்னூட்டங்கள் என்னால் இடப்பட்டது உண்மைதான். அது விடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. கருத்தளவில் எதிரெதிர் திசையிலிருந்தாலும் சும்மா ஒரு பம்பலுக்காக அவரை நான் மாமாவென்றும் அவர் மருமகன் என்றும் பின்னூட்டங்களில் அழைத்துக்கொண்டதுண்டு. ஆனால் இங்கு இடப்பட்ட பின்னூட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் இரயாகரனை மெண்டல் என்று சொல்லவுமில்லை.

Sri Rangan said...

கொழுவி நன்றி,விளக்கத்துக்கு!

நீங்கள்தாம் விளையாட்டுக்காக அவரை'மாமா'என அழைப்பது,எனவே இக்கட்டுரைபற்றியும்-இரயாகரன்பற்றியும் கொழுவி உணரும் இந்த நிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இரயாகரனின் இந்த உழைப்பு,இங்ஙனம் பார்க்கப்படுவதையெண்ணிக் கவலையடைந்தேன்.இரயா விளையாட்டுத்தனமாக எதையும் எழுதுபவரில்லை.அவரது நீண்ட கட்டுரைகளுக்குள் இந்த மனிதரின் அளப்பெரிய மனிதவுழைப்பு இருக்கிறது!

8மணி நேரம் உடலுழைப்பைச் செலுத்தித் தனது குடும்பத்துக்கு ஊதியம் பெற்றுவிட்டு,மீதமுள்ள நேரத்தை மூளையைக்கசக்கித் தனது மக்களுக்காகவும்,உலக மக்கள் அனைவருக்காகவும் சிந்திக்கும் இந்த மனிதரை'மென்டல்'என்பது அழகாய்த் தெரியவில்லை.

வேலைவிட்டு வந்தபோது உண்மையில் எனக்குச் சற்றுப்போதை!விஸ்க்கி அருந்தியிருந்தேன்.வேலையிடத்தில் இன்று நந்தார் விடுப்புக்கான இறுதி வேலைநாள்.விஸ்க்கிப் போத்தலொன்று உடைத்தார்கள்-காய்ந்தமாடான நான்'கம்பு'வில் வீழ்ந்த கதை...இப்படித் தண்ணியடிச்சவுடன் தனி நபர்களில் அதீத நம்பிக்கையும் வந்துவிடுகிறது.இதுதாம் எனது நாய்க்குணம்!-பார்த்தீர்களா,நாய்க்கு இந்தக் குணமிருக்கா?எனக்கு இன்னும் முறியவில்லை.விடுங்க கொழுவி!தப்பாக எடுக்காதீர்கள்.

நட்புடன்
ஸ்ரீரங்கன்

தமிழரங்கம் said...

நட்புடன் அனைவருக்கும்

குறிப்பாக வன்னியனுக்கு ஒரு சிறு குறிப்பு

காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்யூட்டர் நுனுக்கங்கள், கள்ள வேலைகள் என எல்லாம் தெரிந்து கொண்டு விவாவதத்தில் ஈடுபடுவது கிடையாது. தமிழ் மணம் விவாதங்களை பலதளத்தில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தால் நாம் இதில் பதிவிடுகின்றோம்;. இதில் 95 சதவீதமானவை சமூகத்துடன் தொடர்பற்ற தனிமனித பொழுது போக்குகள்;.

இதற்கு வெளியில் நாம் தனியாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இணையம் ஒன்றை நடத்தி வருகின்றோம். இதுவரை பத்து நூல்கள் எழுதியுள்ளேன். ஒரு சிறு சஞ்சிகை 31இதழ்கள் கொண்ட வந்துள்ளோம். 1000 கட்டுரைகளுக்கு மேலாக எழுதியுள்ளேன். இந்த நிலையில் விவாதத்தில் கருத்து பரிமாற்றத்துகே எமக்கு நேரம் இல்லாதபோது, இதைவிட்டுவிட்டு இது திருட்ட அல்லது போலிய என்று பொழுது போக்காக நாம் இணையத்தில் தேடி அலைவதில்லை.

விவாதத் தளத்தில் எது பொய் எது உண்மை என்ற அலட்டிக் கொள்வதில்லை. என்னை தூசத்தால் துற்றிய போது கூட, அதையிட்டு நாம் கவலைப்படவில்லை. இந்த சமூக போக்கு குறித்து தான் கவலைப்பட்டேன். எமது நிலை என்பது, இது போன்ற பல அவதூறுகளை நேருக்குநேராக சந்தித்து வந்தவர்கள். கல்வெட்டே எனக்கு வெளியிடப்பட்டது. பைத்தியம் என்று ராக்கிங்கு எதிராக போராடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துண்டுபிரரசும் விட்டவர்கள் தான். அதே பல்கலைக்கழக மாணவர் தலைவனாக பின்னால் என்னை அவாகளே தெரிவு செய்து, பல வீரமிக்க போராட்டங்கைள நடத்தியவர்கள். இணையத்தில் ஒலிப் பகுதியில் டதை கேட்கமுடியும். புலியின் வதைமுகாமில் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருந்த தப்பி வந்தவாகள்; நாம். விவாதத் தளத்தில் சம்பந்தப்பட்டவா யார், அவரின் பின்னனி என்ன, அவர் போலியா என்ற ஆராய்வது கிடையாது. விவாதத்தில் ஈடுபடும் போது, அது என் வேலையுமல்ல. வரும் கருத்தை, அதன் உள்ளடகத்தை புரிந்து எற்றுக் கொள்வது அல்லது மறுத்து விவாதிப்பது மட்டும் தான் எனது கடமை.

குறிப்பாக அன்று காசி பெயரில் வந்த செய்தியை பார்த்தவுடன், அதையிட்டு நான் அதிhச்சியடையவில்லை. டோண்டுவின் கருத்து நிலை அதை அனுமதிக்கின்றது. இது சாத்தியமானது. என் டோண்டு அதற்கு விதிவிலக்கு! டோண்டுவின் கருத்தை நான் இன்றும் சரியாகவே புரிந்துள்ளேன். அதை மறுத்தால், அதை புரிந்து கொள்ளாத எனது நிலைக்காக நான் சுயவிமர்சனம் செய்ய முடியும். போலி காசி கூறியதையே, டோண்டுவின் கருத்தை உண்மையாக நடைமுறை வாழ்க்கையில் எற்றுக் கொள்பவர்கள் தமது வாழ்வில் நடைமுறையிலும் கொண்டிருப்பார்கள்.

இது உலகில் அன்றாடம் நடக்கின்றது. டோண்டு ஏன் விதிவிலக்கு!. இந்த வகையில் அவர் தான் ஆதாரித்த கோட்பாட்டின் நடைமுறைவாதி என்றே நான் நம்பினேன். அந்த அடிப்படையில் கேள்வி எழுப்பினேன்;?

இது போன்ற பாலியல் உறவுகள் உலகமயாதல் ஆணாதிக்க உறவு வகைப்பட்டது. தனிமனிதன் சமூகத்தில் இருந்து விலகி தனது குறுகிய வட்டத்தில் தன்னை வக்கிரப்படுத்தும் போது, இது இயல்பாக வெளிப்படுகின்றது. இதை அவர்கள் தமது வாழ்வின் கோட்பாடாக கொள்வர். இதை டோண்டு கோட்பாட்டு ரீதியாக ஆதாரித்த போது, எனது தர்க்கமனவாதம் நியாயமாகவே எழுந்தது. ஆனால் இந்த வகையான ஆணாதிக்க கோட்பாட்டை எதிர்த்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. தனிப்பட்ட பாலியல் உறவுக்குள் நாம் சமூக மற்றமின்றி தலையிடுவதில்லை. சமூக மற்றத்தின் ஊடாகவே சமூகம் தலையிடுகின்றது. அதாவது கடவுளை வழிபடும் தனிமipத உரிமையில் நாம் சமூக மற்றமின்றி தலையிடவதில்லை. ஆனால் மதக் கோட்பாடுகளையே நாம் எதிர்கின்றோம். அது போல் ஆணாதிக்க பாலியல் கோட்பாடுகளையும் எதிர்கின்றோம். தனிமனித விடையங்கள் சமூக உறவுடன் சம்பந்தப்பட்டதால், சமூக மற்றத்துடன் தான் தனிமனித நம்பிக்கைகளையும் மனித உறவுகளையும் மாற்ற முனைகின்றோம். கோட்பாட்டு ரீதியான எதையும் எதிர்கொண்டு விவாதிக்கின்றோம்;. அந்த வகையில் சமூகத்தை விவாதத்தையும், நடைமுறை போராட்டத்தையும் தொடக்குகின்றோம்.

இரண்டாவது விடையம் இதை டோண்டு அவசரமாக ஆட்சேபித்து. அத்துடன் ஆட்சேபிதத் விதம். இதில் ஒரு அதிகார வர்க்கத்தின் சமூகத் தீமிர் இருந்தது. சம்பந்தப்பட்டவர் ஆட்சேபிக்காது, டோண்டு அல்லாத ஒருவர் ஆட்சேபிக்காது டோண்டவே ஆட்சேபித்தது. இதில் அவர் குடும்பம் சார்ந்தது என்ற வகையில், அதை ஆட்சேபித்து இருந்தால், அது நேர்மை. அதை அவர் செய்யவில்லை. இங்கு நேர்மையாக அவரால அனுகமுடியாது. அது அந்த வர்க்கத்தின் குணம்;. பொழுது போக்கு வம்பளப்பவர்கள் தான் இவர்கள். அவர் காசியின் பெயரில் இருப்பதை மட்டும் ஆட்சேபித்தார். முரண் இங்கு தான் உள்ளது. அவர் தானும், தன் குடும்பமும் கூட, தான் சொன்ன கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை சொல்ல மறுத்த போதே, அவரின் நேர்மையினத்தை அம்பலமாக்கும் வகையில் இதை எடுத்துக் காட்டினேன்;.

நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். இதுவரை யாரும் பதலளிக்கவில்லை. போலிக் காசி பெயரால் இடப்பட்ட செய்தி மறுபடி பிரசுரித்தால், டோண்டு அதற்கு பதிலளிப்பரா! கேள்வி இங்கு நேரடியானது. அவர் சொன்ன கருத்துக்கு உட்பட்டது. அது சராம்சத்தில் அவர் கூட அவர் குடும்பத்தின் சார்பாக பதிலளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெண்கள் தான் பதளிக்க வேண்டும்;. உடனே மீண்டும் பார்பான சதி போல் திருத்தம் செய்ய முனைகின்றார். விதவை, விவாகரத்து செய்தோர் போன்ற பெண்கள் திருமணம் செய்யக் கூடாதா என்ற தன்னையே திரிக்கின்றார். எமது விவாதம் குஷ்பு சொன்னது பற்றியது. பெண்ணின் தெரிவு பற்றி பல கட்டுரைகள், எனது இணைத்தில் பார்க்கமுடியும். எனது பதிவின் கீழான கருத்துதளத்தில் காட்டுமிராண்டி சமூகத்தில் பெண் எப்படி வாழ்ந்தாள் என்ற ஒரு பகுதியை இரண்டு தரம், விவாதிக்க துப்பில்லாமல் போட்டு இருந்தனர். அந்தக் கருத்து கூட எனது கட்டுரையில் எடுக்கப்பட்ட எனது கருத்துதான். பெண்கள் சமூகத்தை விரிவாக ஆராய்ந்த 1000 பக்கம் கொண்ட மூன்று நூல்களை எழுதியுள்ளேன்.

நான் ஆணாதிக்க ஏகாதிபத்திய விபச்சார பாலியல் வகையையோ, அடிமைத்தனமான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க வாழ்வை எதிர்த்து போராடும் வகையில் தான், ஆண் பெண் உறவை, அதாவது இணையான வாழ்வியலை முன்னிறுத்தி வருகின்றோம்;.

முன்றாவது சொற்களை எழுதுவது தொடர்பாக. உதாரணமாக கற்பு என்ற சொல்லை பயன்படுத்தினால் அதை ஆணாதிக்கம் என்று கூறுவோர் உள்ளனர். இவைகள் உங்கள் பார்வை. ஆனால் எங்கள் பார்வை வேறானது. இது பற்றி எல்லாம் பல கட்டுரைகள் நான் எழுதியுள்ளேள். இணையத்தில் அவற்றை பார்வையிடலாம். தர்க்க ரீதியான எனது வாதத்ததை எடுத்து மறுப்பின், அவை பற்றி விவாதிக்க முடியும்;. இல்லாது சொற் கோவைகாளால் குற்றம் சாட்டுவது விவாவதமாகிவிடாதது.
பி.இரயாகரன்
23.12.2005

Anonymous said...

காட்டுமிராண்டி சமூகத்தில் பெண் எப்படி வாழ்ந்தாள் என்ற ஒரு பகுதியை இரண்டு தரம், விவாதிக்க துப்பில்லாமல் போட்டு இருந்தனர்.

neer ezudhiyadhe munnuku pinn muranaga irukunnu potta....

neer ezudharadhu unakke puriyudhaanu therilyalenu dondu ezudhiyirundhadhu saridhan.

neer idhu varai ennathe vivadhicheer?
இது எப்படி விபச்சாரம் ஆகும். காசுக்கு உடலை விற்கும் விபசாரியிடமோ,
கிகோலோவுடனோ போவது தான் விபச்சாரம். ஒரு ஆணும், பெண்ணும் அவர்களாக
விரும்பி உறவு கொள்ளும்போது அது எப்படி விபச்சாரமாகிறது?

modhalle indha kelviku padhil sollu.

தமிழரங்கம் said...

காசு கொடுத்து போவது மட்டும் தான் விபச்சாரம் என்ற கூறுவதே, விபச்சாரம்தான். ஏன் காசு கொடுத்து போவதை விபச்சாரம் என், சொல்ல வேண்டும்;. அப்படி ஏன் சொல்ல வேண்டும். அதுவும் விரும்பித்தானே விபச்சாரம் செய்ய (இங்கு ஆணோ பெணோ) செல்லுகின்றானர்;; விபச்சாரம் என்பது பாலியலில் மட்டும் பயன்படுத்தும் சொல்லல்லா? சமூக ஒழுக்கக்கேடு அனைத்தும் விபச்சாரம் தான். விபச்சாரம் என்பது சமூக உறவைக் கடந்து, அனைத்து உறவையும் விபச்சரமாக குறிக்கின்றது. தனிமனித வக்கிரத்தின் விளைவை இது குறிக்கின்றது. இது பாலியலுக்கும் பொருந்தும்;. ஒருவரை ஒருவர் சந்தித்த உடன் விரும்பி உறவு கொண்ட பின், பிரிந்த செல்வது விபச்சாரம் தான்;. சாதாரணமாக டிஸ்கோவில் இதைக் காணலாம். இதையே கொலிவுட் சினிமாவில் காணலாம்;. இந்தத் தேர்வு என்பதும், விருப்பம் என்பதும் தனிமனிதர்கள் தீர்மானிப்பதில்லை. சுற்றியுள்ள சமூக பொருளாதார அமைப்பும், அதில் நீ எந்த நிலையில் வாழ்கின்றாய் என்பது தீர்மானிக்கின்றது. அதில் தான் உள் தேர்வு நிகழ்கின்றது.
பி.;இரயாகரன்
23.12.2005

Anonymous said...

edhu ozukkam? manidhan oru vilangu dhan. aanukuu kadhal, anbu pasam
edhuvum kidayadhu. ellam pennin kandupidippugal. ivatral penn aanai katti vaithirundhirukalam. penngal muzhu poruladhara viduthalai adainthal aanuku muzu viduthalaithan.

munnpinn theriyadhavargalai enaku therindha america penngal date kuda seivadhillai. nanbargalidam visaritharindhu dhan date seigirargal. adhuvum oru neenda kala uravai edhiparthudhan sellgirargal. neer sollum holywood kalacharathai ingeye palar edhirkirargal.

naanum 'it' thurayildhan irukiren. neer solvadhu pola ellam nadakkavillai. adhiga velai nera exploitation mattum undu.idhai edhirka than vendum. sexual harasment indhiyavil ella thuraigalilum undu. kuripaga arasaangathil nirayave undu. ulaga mayamakkalai edhirpavargal ulloor o..ttaigalai mudhalil adayungal. angudhan o..taigal adhigam.
enaku therindha indhiya aanglai vida america aangal penngalai mariyadhaiyudanthan nadathukindranar endra kasappana unmayai solla vendi irukkiradhu.