தமிழ் அரங்கம்

Wednesday, August 8, 2007

புலியொழிப்பு அற்பவாதிகளும் நாங்களும்

பி.இரயாகரன்
08.08.2007

ற்பவாதிகளோ கோட்பாடின்றி, அரசியல் சதிகளுக்கு பின்னால், சதா ஓடி ஒழித்து விலாங்குகளாக வாழ்பவர்கள். இதையே அரசியலாக, நடைமுறையாக காவடி எடுப்பவர்கள். இந்த அற்பவாதக் கும்பலோ, புலியெதிர்ப்பின் பின் புலியொழிப்பை முன்வைத்தபடி, எம்மைப் பார்த்து முறைக்கின்றது. சதா எமக்கு எதிராக சதியையும், அவதூறையும் உலகெங்கும் பரப்புகின்றது.

இந்த அற்பவாதிகள் தனது தர்க்கவாதத்தில் எமக்கு எதிராக வைப்பதோ, நீங்கள் புலிகளுடனுமில்லை, புலியெதிர்ப்பின் பின்னுமில்லை என்பதே. அதாவது எமது அரசியல் வாதங்கள் மீது விவாதிக்கவோ கருத்துச் சொல்லவோ முடியாது திணறுபவர்கள், இப்படி பதிலளிக்கின்றனர். எந்த விடையம் மீதும், அரசியல் ரீதியாக விவாதிக்க திறனற்றவர்கள். அரசியல் ரீதியாக வலது குறைந்தவர்கள். இதனால் எம்மீது அற்பத்தனமான வழிகளில், அவதூறுகளை முதுக்கு பின்னால் அரசியலாக்க முனைகின்றனர்.

எம்மீது அற்பவாதிகள் வெளிப்படுத்தும் எதிர்வினைகள் ஏன். புலியெதிர்ப்பின் பெயரில் புலியொழிப்பின் பெயரில் அவர்கள் நடத்துகின்ற அரசியல் கூத்துகளையும், துரோகத்தையும், காட்டிக்கொடுப்பையும், அன்னிய சக்திகளுடன் நடத்துகின்ற எடுபிடித்தனத்தையும் நாம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதால் ஏற்படும் ஆத்திரமே, அற்பவாதிகளின் அவதூறுகளாக மாறுகின்றது.

பேய்களுடனும் (பேரினவாதத்துடன்), பிசாசுகளுடனும் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து புலியை ஒழிப்பதை மட்டும் சொந்த வேலைத் திட்டமாக கொண்டவர்கள தான் புலியெதிர்ப்புக் கும்பல். இந்த புலியெதிர்ப்பு புலியொழிப்பு கும்பலின் இந்த மக்கள் விரோத செயல்பாட்டை, நாம் மட்டும் தான் அம்பலப்படுத்துகின்றோம். பாசிச புலிகளால் இதை அம்பலப்படுத்த, அதனிடம் எந்த மக்கள் நலன் சார்ந்த எந்த அரசியலும் கிடையாது. புலிகளிடம் குறைந்தபட்ச அரசியல் நேர்மை கூட இல்லாமல் போன நிலையில், புலியெதிர்ப்புக் கும்பல் தனது இழிவான அரசியல் பிழைப்பை நியாயப்படுத்திவிட முனைகின்றது. தமது அரசியல் துரோகத்தனத்தை, புலியைக் காட்டி முற்போக்கானதாக கூறி அரசியல் செய்ய முனைகின்றது. இந்த துரோகத்தை நாம் மட்டும் அம்பலப்படுத்துவதால், புலியொழிப்பு கும்பல் எம்மைக் கண்டு சினக்கின்றது. முடிந்தவரை அவதூறைப் பரப்பமுனைகின்றது. உண்மையில் எமது கருத்தை கருத்தியல் ரீதியாக விவாதிக்க முடியாததன் விளைவு இது.

இன்று பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்துகின்ற பாசிச வெறியாட்டத்தை, புலியொழிப்பாக வரையறுத்து, அதை பாதுகாக்கிறவர்களில் புலியெதிர்ப்புக் கும்பலும் ஒன்று. அரசு மீதான இவர்களின் கண்டனம் என்பது, ஏகாதிபத்தியத்தின் வரையறைக்கு உட்பட்டது. ஏகாதிபத்தியங்கள் முதல் அதன் பணத்தில் இயங்கும் தன்னார்வக் குழுக்கள், எந்தளவில் எந்த வரையறையில் அரசைக் கண்டிக்கின்றதோ, அந்த எல்லைக்குள் தான் புலியெதிர்ப்புவாதிகள் பேரினவாத அரசைப் பற்றிப் புலம்புகின்றனர்.

ஏகாதிபத்திய வரையறைக்கு வெளியில், மக்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து அவர்களுக்காக அரசை எதிர்த்து போராடுவது கிடையாது. இப்படி புலியொழிப்பை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றவர்களின் இழிதனத்தை நாம் மட்டும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துகின்றோம். புலித்தமிழீழம், புலியொழிப்பு இரண்டையும் மறுத்து, மக்களின் அடிப்படை உரிமையை முன்னிறுத்துவதை, இவ்விரண்டு பிரிவும் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. மக்கள் மட்டும் தான் எதையும் கோரவும், தமது உரிமைக்காக போராடவும் முடியும் என்ற எமது அரசியல் நிலைப்பாட்டை வெறுக்கின்றவர்கள் தான், எம் மீதான தொடர்ச்சியான இடைவிடாத அவதூறைப் பரப்புகின்றனர்.

மக்களா! புலித்தமிழீழத்தைக் கோருகின்றனர். மக்களா! புலியொழிப்பைக் கோருகின்றனர். இதில் மக்களின் அரசியல் பங்களிப்பு எதுவும் கிடையாது. மக்களை மந்தைகளாக இதன் பின் வரக் கோருகின்றனர்.

புலிகள் துரோகி ஒழிப்பை வைப்பது போல், இவர்கள் புலியொழிப்பை வைக்கின்ற போது, எந்த அரசியல் உள்ளடகத்திலும் முரண்படுவது கிடையாது. மக்கள் நலன் எதையும் வேறுபட வேறுபடுத்தி வைப்பது கிடையாது.

புலி ஒழிப்பை கோரும் இவர்கள், அதை எப்படி செய்வது என்பதற்கு சொந்த அரசியல் வழி எதுவும் கிடையாது. மக்களை இதற்காக அணிதிரட்ட, மறுப்பவர்கள் இவர்கள். மாறாக புலி யொழிப்பை ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாத நடவடிக்கைகள் மூலமே சாத்தியமானது என்று கூறிச் செயல்படுவர்கள். இதற்கு நாம் ஒத்துக்கொள்ள மறுப்பதால், எம்மை எதிரியாக காட்டுகின்றனர்.

ஊர் உலகத்தை ஏமாற்ற அரசையும் கண்டிப்பதாக காட்டிக்கொண்டு, புலியொழிப்பை அரசியலாக வைக்கின்றனர். அந்த அரசியல் என்பது சாராம்சத்தில் புலியை ஒழிக்க முனையும், ஏகாதிபத்திய மற்றும் பேரினவாத அரசியல் எல்லைக்கு உட்பட்டதே.

இந்த புலியொழிப்பு புலியெதிர்ப்புவாதிகளோ அற்பவாதிகள் உள்ளடங்கிய ஒரு கொலைகாரக் கும்பல். புலியொழிப்புக்கு வெளியில் இதனிடம் மாற்று அரசியல் எதுவும் கிடையாது. புலியெதிர்ப்பும், புலியொழிப்பும் என்ற இரு கோசமும், இவர்களை ஒரு கும்பலாக்கின்றது.

இந்த கும்பலுடன் புலியெதிர்ப்பிலும் புலியொழிப்பிலும் உடன்படும் பிசாசும், பேயும் அன்னியோன்னியமாக தமக்குள் காதல் செய்கின்றனர்.

இந்த புலியொழிப்புக் கும்பலில் இருப்போர் யார்? முன்னாள் (இன்னாள்) கொலைகார இயக்கங்கள், அதில் இருந்து விலகி விலாங்குகளாக வாழும் அற்பவாதிகள், அரசியல் எதுவுமற்று பொறுக்கி வாழும் கழிசடைகளை உள்ளடக்கிய ஒரு கும்பல். இவர்கள் தான் புலியெதிர்ப்பு புலியொழிப்புவாதிகள். தமக்குள் குத்துவெட்டையும், சதியையும், முதுக்குபின்னால் தூற்றுவதையுமே அரசியலாக கொண்டவர்கள் இவர்கள். அரசியல் ரீதியாக, தமக்கென்று சொந்த கொள்கை கோட்பாடற்றவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் பேய் அல்லது பிசாசிடம் பணம் வாங்கி, அதில் தங்கியும் சார்ந்தும் இயங்குபவர்கள். கணிசமான பிரிவு இரகசியமான கொலைகார, சதிகார கும்பல். கொலைகளைச் செய்வதில் தான் அதன் அரசியலே இயங்குகின்றது. இதற்கு வெளியில் மக்களை வழிகாட்டக் கூடிய அரசியல் எதையும் கொண்டிராத, புலியொழிப்பு கும்பல். இதனால் எமக்கு எதிராக அவதூறை, காழ்ப்பை கொட்டித் தீர்க்கின்றது.

இந்த புலியெதிர்ப்பு புலியொழிப்பு பேர்வழிகள் மக்களிடம் செல்வதில்லை. மக்கள் போராட்டம் என்பது, சாத்தியமற்றது என்பவர்கள். மாறாக பிசாசுடனும், பேய்களுடனும் உறவை வைத்துக்கொண்டு, அந்த உறவை தமிழ் மக்களிடம் புலியல்லாத மாற்று என்கின்றனர்.

இதை மூடிமறைக்க தம்மை ஜனநாயகவாதிகள் என்றும், முற்போக்குவாதிகள் என்றும், கலை இலக்கியவாதிகள் என்றும், தலித்தியவாதிகள் என்றும், பெண்ணியல்வாதிகள் என்றும், ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் என்றும் கூறிக்கொண்டு தான், இந்த இழிவான கடைந்தெடுந்த அரசியல் போக்கிரித்தனத்தை செய்கின்றனர்.

மக்களிடம் செல்லாத, மக்களை அணி திரட்டாத, பேய்களையும் பிசாசுகளையும் எதிர்த்து போராடாத ஜனநாயகம் போலியானது. இது முன்வைக்கும் தலித்தியம், பெண்ணியம், கலை இலக்கியம் அனைத்தும் பிற்போக்கானதும், மனித விரோதத் தன்மையும் கொண்டது. இவர்கள் தம்மையும் தமது நடத்தையையும் முற்போக்கானது என்று கூறிக் கொள்வது, மக்களைச் சாராத சூழ்ச்சியை சதியை அடிப்படையாக கொண்டு குலைப்பதேயாகும்.

No comments: