சமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு வழிபாடு வரை ஏற்றத்தாழ்வான ஆணாதிக்க வடிவத்தைக் கொண்டு கடவுள்கள் புனர் உற்பத்தி செய்யப்பட்டன. பெண் தெய்வங்கள் மனிதச் சமுதாயம் போல், ஆண் தெய்வங்களின் மனைவிமாராக மாற்றப்பட்டனர் அல்லது உறவுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆண் - பெண் உறவு வழியில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் (இங்கு பால் ரீதியில் ஆண் பெண் பிரிந்த உயிரியல் தொகுதியில்) பெண்கள் மறு உற்பத்தியில் விதிவிலக்கின்றி அனைத்து உயிரினங்களும் ஈடுபடுவது எதார்த்தமான உயிரியல் விதியாக இருக்கின்றது. ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் உலகத்தைப் படைத்தது முதல் உயிரினங்களைப் படைத்தது வரை ஆண் கடவுள்கள் என்பதில் முரண்பாடின்றிக் கூறும்போது, ஆணாதிக்க அமைப்பின் இடைச் செருகல் திட்டவட்டமாக இயற்கைக்கு எதிராக அம்பலமாகின்றது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஆணாதிக்க விளைவுகளே இன்றுள்ள மதங்கள் என்பது இதைத் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. பெண் தெய்வங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆணின் வைப்பாட்டியாக அல்லது அவர்களின் தயவில் வாழும் வகையில் மதங்கள் புனைந்து உருவாக்கிய அனைத்துமே, ஆணாதிக்க மதமாக வக்கரித்து இருக்கின்றன. இந்தப் படைப்புகள் அனைத்தும் இயற்கைக்குப் புறம்பான வகையில் உருவானதாக இருப்பது ஆணாதிக்க வக்கிரம்தான்.
இயற்கையான பெண்ணின் படைப்பாற்றலை ஆணின் கைக்கு மாற்றி உருவாக்கிய அனைத்து மதப்பண்பாடுகளும் விதிகளும் விதிவிலக்கின்றி, ஆணாதிக்கத்தின் வக்கிரத்தால் வீங்கிப்போயுள்ளது. மறுஉற்பத்தியை இயற்கை சார்ந்து எப்படி ஆண் ஈடுபடுவது சாத்தியம் என்ற அடிப்படையான கேள்வியே, மதத்தின் ஆணாதிக்கக் கற்பனைகளைத் தகர்க்கப்போதுமானது.
நான் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பவுத்தம் என்ற நான்கு மதங்களையும் ஆய்வுக்கு எடுத்து, அதன் ஆணாதிக்கத் தன்மையை அம்பலப்படுத்த முனைகின்றேன். மற்றைய மதங்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஆனால் மற்றைய மதங்களின் நூல்கள் தமிழில் எனக்குக் கிடைக்காமையால் அதைச் செய்யமுடியவில்லை. ஆனால் அவைகளில் ஆணாதிக்கம் மேன்மையாகவோ, குறைவாகவோ இன்றி அம்மதங்களும் ஆணாதிக்கத் தன்மையால் புரையோடிப்போயுள்ளது. சமுதாயம் ஆணாதிக்க வடிவில் இறுகிப் போயுள்ளதால், அதில் இருந்து உருவான இன்றைய எந்த மதமும் விதிவிலக்கற்றவை. நாம் தொடர்ந்து தனித்தனியாக நான்கு மதத்தையும் ஆராய்வோம்.
ஆணாதிக்கக் கிறிஸ்தவ மதமும் பெண்ணும்
இயேசுவின் படுகொலைக்குப் பின்னணியாக உள்ள வரலாறு அக்காலத்துக்குரிய வர்க்கப்போராட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. ஏழை மக்களின் துயரங்களைப் போக்க, புதிய மதத் தத்துவங்கள் ஊடாகப் போராடியபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். இவரைப் பின்பற்றி ஏழைகளின் மதமாக வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவ வரலாற்றில், எல்லா முற்போக்குச் செயலையும் சுரண்டும் வர்க்கம் உள்வாங்கி, அதன் உயிராற்றலை அழிப்பது போல், இயேசுவின் வர்க்க அடிப்படை உள்ளடக்கத்தைச் சிதைத்தனர். பைபிள், இயேசுவின் சீர்திருத்தத்துக்கு உட்பட்ட ஆணாதிக்கக் கூற்றுகளையும், சுரண்டும் வர்க்கம் சார்ந்து இயேசுவால் மெருகூட்டப்பட்டதுதான். இதையே இயேசு தந்தார் என்ற பைபிள் எடுகோள், முரண்பாட்டுடன் பலவாக உள்ள நிலையில் இன்றைய நிலைக்கு ஏற்ப நீக்கியும், சேர்த்தும் மறுவாசிப்பு செய்தும் நியாயப்படுத்துவதும் நிகழ்வாக உள்ளது.
இந்தவகையில் பைபிள் பெண்ணை, ஆணாதிக்க வழியில் அடிமைப்படுத்தி நியாயப்படுத்தியது. இயேசுவிடம் இருந்த ஆணாதிக்கத்தில் இருந்து பெண்ணுக்குச் சில சலுகைகளை, அவரின் முற்போக்கான போராட்டத்தில் சீர்திருத்தத்தினூடாக ஆணாதிக்க எல்லைக்குள் வழங்க முற்பட்ட போதும், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட விரும்பவில்லை. இந்தவகையில் பைபிள் ஆணாதிக்கத்தின் ஒத்த முகமாகவே உள்ளது. என்னதான் இன்று அதைமூடிமறைக்க மறுவாசிப்பை மதங்கள் முதல் பின் நவீனத்துவ ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் முயல்கின்ற நிலையில், கிறிஸ்தவ ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தித் தோல் உரிப்பது அவசியமாகின்றது.
உலகில் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியில் சீர்திருத்தங்கள், அதையொட்டிய கோட்பாடுகள் மதங்களாகித் தனிச்சொத்துரிமையின் வாரிசுகளாகின. கிறிஸ்தவ மதம் ஏழைகளின் நம்பிக்கை ஒளியாக, அவர்களின் துயரத்தைக் கிறிஸ்துவின் பரலோகத்தில் விடுதலையாகக் கண்டது. ஆனால் மக்களின் இந்த நம்பிக்கையை ஆளும் வர்க்கங்கள் உள்வாங்கி மதமாக மாற்றியபோது, அதுவே அவர்களை அடக்கும் புதிய வடிவமாகியது. இது சமுதாயத்தின் ஆணாதிக்கத்தைத் தனது உள்ளடக்கமாக்கியது. இம்மதத்தின் பல்வேறு முரண்பட்ட மதப்பிரிவுகள் பெண்ணுக்கு ஒழுக்கத்தைப் புகட்டியது பெண்ணை இழிவாக்கியது பெண்ணை அடிமையாக்கியது.
பெண்பற்றிய இழிவில் இருந்தே திருமண மறுப்பு கிறிஸ்தவத்தில் பிரதானமான ஒருவடிவமாகியது. கிறிஸ்தவக் குருமார் திருமணம் செய்யக் கூடாது என்ற கோட்பாடே ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டதுளூ பெண் எதிர்ப்பில் உருவானதே. இதில் இருந்து பெண் குருமார் என்ற பேச்சே மறுக்கப்பட்டது. குருமார் ஓரினச் சேர்க்கையிலும், கள்ளத்தனமான பாலியல் நடத்தையிலும் ஒரு விகாரத்தனமான ஜந்துவாக (பாம்பு) வளர்ச்சி பெற்றனர். ஆனால் இன்று கிறிஸ்தவ வக்கிரத்தை மறுத்துக் குருமார்கள் திருமணம் செய்வதும், அதைவிட்டு விலகிச்சென்று சாதாரண வாழ்க்கை வாழ்வதும் அதிகரித்துச் செல்லுகின்றது.
பிரேஸிலில்; நடந்த திருமணமான குருமார் சங்கத்தின் நான்காவது மகாநாட்டு அறிக்கையின்படி, உலகில் ஒரு இலட்சம் குருமார்கள் மதத்தின் ஆணாதிக்கக் கடமையில் இருந்து விலகிச் சென்று திருமணம் செய்துள்ளனர். தற்போது ஐந்து குருமாருக்கு ஒருவர் திருமணம் செய்கின்றனர். பிரேஸிலில் மட்டும் 3500 திருமணம் செய்த குருமார் காணப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 1982 இல் இருந்து 400 கிறிஸ்தவக் குருமார் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர். அதேநேரம் 2500 குருமார் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தொல்லைக்குள்ளாக்கினர். இனி நாம் பைபிளின் வழியில் அவர்களின் ஆணாதிக்கப் பெண் எதிர்ப்பு கூற்றில் இருந்து இவைகளைப் பார்ப்போம்.
கிறிஸ்தவத்தின் பழைய, மற்றும் புதிய பைபிளில் எபே 5.22 இல், "மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்."14 எபே 5.23 இல், "கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்."14 எபே 5.24 இல், "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்."14 எபே. 5.33 இல், "...மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவது"14 என்று கிறிஸ்தவம் பெண்ணைப் பக்தியின் பின்னால் கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாகக் கோருவதன் மூலம், தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகின்றது. ஏன் பெண் ஆணுக்குக் கீழ்படிந்து, மதித்து, பயபக்தியாகப் பெண் நடந்து கொள்ள வேண்டும்? இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? இது, இருக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமைக்குள், ஆணாதிக்கத்தைப் பிரதிபலித்தே கிறிஸ்தவ மதம் உருவாகியதைக்; காட்டுகின்றது.
ஆணாதிக்க எதார்த்தம் மீது, கற்பனையான கடவுள் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பாட்டால் இறுக்கியதன் மூலம், பொருள்முதல்வாத எதார்த்தமாகிய பெண்ணின் போராட்டத்தை மட்டுப்படுத்தமுடிந்தது, சிதைக்க முடிந்தது. கடவுளின் பெயரில் பெண்ணை அடங்கி நடக்கக் கோரியதன் மூலம், பெண்ணின் போராட்டத்தைப் பக்தியாக்கி ஆணாதிக்க வன்முறையைச் சீர்திருத்தமுடிந்தது. கடவுளின் பெயரில் நம்பிக்கையை உருவாக்கி, பெண்ணை அடிமையாக இயல்பில் வளர்த்தெடுத்ததன் மூலம், ஆணாதிக்க வன்முறை மட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் பக்தியை, நம்பிக்கையை, அடிமைத்தனத்தை மீறும்போது கொடூரமான ஒழுக்க மீறலாகச் சித்தரித்து வன்முறையை ஏவியது.
ஆண் - பெண் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழ்வதை மறுத்த மதம், பெண்ணை ஆணுக்கு அடங்கி சேவகம் செய்யும்படி நிர்ப்பந்தித்தது. தலைவனின் ஆணாதிக்கத்தை மதித்து, கீழ்ப்படிந்து, பயபக்தியாக அடங்கி நடக்கக் கோருவதே கிறிஸ்தவச் செய்தியாகும். கடவுளுக்கு ஒருவன் எப்படி அடிமையாகப் பயத்தால் தனது நலன் கோரி வழிபடுகின்றானோ, அதேபோல் பெண் கணவனிடம் பயத்தால், அதிகாரப் படிநிலையைச் சொத்துரிமையால் மதிக்கின்றாளோ, அதைக் கடவுளின் சித்தமாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடல், அவளின் செயல்கள் எல்லாம் ஆணுக்கு உட்பட்டவையே, அதை மீறுவது குற்றமாக உள்ளது. ஆணை மேவிய செயல், வார்த்தை, கோரிக்கை கிறிஸ்தவத்துக்கு எதிரானது. அதாவது, இன்று மனிதர்களின் ஜனநாயகம் பற்றிய பார்வையில் பெண் தனது ஜனநாயகத்தைக் கோரும் வரலாற்றில், பைபிள் படிப்பு ஊடாக முரண்பட்ட அனைத்து பழைய, புதிய மதப்பிரிவுகள் கோருவதும், பைபிள் ஆணாதிக்க விளக்கத்தைக் கட்டிக்காப்பதற்கே.
தொடர்ந்தும் தீத்து 2.4 இல், "தேவ வசனம், தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும் தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்;. (கணவனிடம் எல்லா வேளைகளிலும் அன்பு காட்ட வேண்டும்.)15"14 நீதி 31.22.25 இல், "... மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது, வருங்காலத்தைப்பற்றியும் மகிழ்கிறாள். (உங்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்வதுடன் மலர்ந்த முகத்துடனும் காணப்பட வேண்டும்.")15"14 நீதி 31.26 இல், "தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது. (பேசும்பொழுது ஞானமாகத் தயைபொருந்திய வார்த்தைகளைப் பேச வேண்டும்)"15"14
தீத்து 2.5 இல், "தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு."15 நீதி. 31.15 இல், "இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து.... (கணவனுக்குப் பிடித்தமான உணவை உரிய நேரத்தில் பரிமாற வேண்டும்")15"14 எபே 4.26 நீதி. 15.1 இல், "ஒருவரோடொருவர் கோபத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர்"15 என்று கர்த்தரின் பெயரில் கிறிஸ்தவ மதப்பிரிவு பெண்ணைக் கோருகின்றது. கணவனின் சந்தோசத்தைப் பெண் பூர்த்தி செய்ய வேண்டும்;. ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய அழகாகவும், சுத்தமாகவும், மலர்ந்த முகத்துடன் இருப்பதுடன், படுக்கைக்குப் போகும்போது கோபத்துடன் செல்லக் கூடாது எனக் கோருகின்றது. அதாவது பெண்ணின் கடமை ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதில் சார்ந்து உள்ளது என்பதைக் கோருகின்றது. அத்துடன் சுறுசுறுப்பாக வீட்டில் தரித்து, வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்து, கணவனுக்குப் பிடித்தமான உணவைப் பரிமாற வேண்டும் என்று பெண்ணின் கடமை - ஒழுக்கத்தை நிர்ப்பந்திக்கின்றது. ஆணுடன் பேசும்போது அடிமை போல் பேசி மகிழக் கோருகின்றது.
பெண் வீட்டை விட்டு ஆணின் கடமையைச் செய்யாது வெளியில் செல்ல முனையாது, கணவனைப் பராமரித்து உணவு தயாரித்துக் கொடுப்பதும், படுக்கையை அலங்கரிப்பதில் கவனம் கொள்ளவும் கிறிஸ்தவ மதப்பிரிவுகள் கோருகின்றன. பெண்ணின் இருப்பிடம் வீடும் அதற்கு உட்பட்ட கடமையுமே பெண்ணின் ஒழுக்கத்தின் மேன்மை என்பதை ஆணாதிக்க மதம் ஒழுக்கமாக்கிக் கண்காணிக்கின்றது. இது மேலும், இந்து மதத்தைப் போல் அவைகளையே அச்சுப்பிசகாது பெண்ணுக்கு நிபந்தனையாக்கி, அடக்கியொடுக்கி ஆள்கின்றது. அத்துடன் பெண் வெளியில் நடமாடுவது கற்பற்ற பெண்ணின் ஒழுக்கம் என்று விதிந்துரைக்கின்றது. அதனால், பெண் வீட்டில் ஆணின் கடமையைப் பூர்த்தி செய்யக் கோருகின்றது.
நீதி. 31.13,15,21,27 இல், "எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருக்க வேண்டும்"15, நீதி. 31.31 இல், "அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள், அவளுடைய செய்கைகள் வாசல்களின் அவளைப் புகக்கடவது"14 என்று கூறுவதன் மூலம் மதம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கான சேவையாகக் கட்டாயப்படுத்துகின்றது. அதாவது, ஆணுக்குச் சேவை செய்வதைச் சுறுசுறுப்பாகச் செய்யவும், அதற்குப் பரிகாரமாகக் கணவனின் புகழ் உரையூடாகக் கடமையாக்கப்படுகின்றது. வாழ்வின் மீதான ஜனநாயகம், பெண்ணின் கடின உழைப்பைக் கணவனுக்கான சேவையூடாகப் புகழ்ந்து மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவ அமைப்பு தொழிலாளியைச் சலுகைக்குள்ளும், புகழுக்குள்ளும் அடிமைப்படுத்தி ஏமாற்றிச் சுரண்டுவது போல், பெண்ணின் கடின உழைப்பைப் புகழ்ந்தும், பரிசு கொடுத்தும் கட்டிலில் அவள் உணர்ச்சியைச் சூறையாடியும், ஆணாதிக்கம் கோலோச்சுவதைப் பைபிள் கடவுளின் பெயரில் நியாயப்படுத்துகின்றது.
மத்தேயு 19.8 இல், "அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தின் நிமித்தம் மோசே உங்களுக்கு இடம்கொடுத்தார். ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை"14 என்று கூறியதன் மூலம் ஆணின் விவாகரத்து உரிமையை அங்கீகரித்த அதேநேரம், பெண்ணின் உரிமை மறுக்கப்படுகின்றது. முன்பு இப்படி இருந்ததில்லை என்றதன் மூலம், முன்பு ஆண் - பெண்ணின் இறுக்க மற்ற இணைவு இருந்ததைக் காட்டுகின்றது. அதாவது, இறுக்கமான குடும்ப அமைப்பு இல்லாத நிலையில் விவாகரத்தும் அர்த்தமிழந்து இருந்தது. பின்னால் பெண் தெரிவு செய்த ஒருதாரத் திருமணத்தைப் பெண்ணுக்கு மட்டுமாக ஆண் மாற்றிய போது, ஆண் பலதாரத் திருமணத்தைத் தக்கவைத்த வரலாற்றில், ஆணின் விவகாரத்தைக் கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு அதை மறுத்ததை இது காட்டுகின்றது.
ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் மீதான ஆணின் போகத்தை ஊட்டுவதற்கு அதிகாரம், செல்வம் ஆகியன துணைநின்றன. அக்காலத்தில் தாவீது என்பவர் இருவருடையை மனைவிமாரை (1சா.30.5, 2சா11.14-17,27)14 அபகரித்தார். அத்துடன் பல பெண்களை வைத்திருந்ததோடு அவர்களைச் சாகும் வரை விதவைகளாக அடைத்து (1சா20.33)14 வைத்திருந்தான். சாலமோனுக்கோ 700 மனைவியும், 300 மறுமனையாட்டியும் (இரா 11.3)14 இருந்ததைக் கிறிஸ்தவம் நிறுவுகின்றது. இங்கு அப்பெண்களின் பாலியல் தெரிவு ஒருதார மணத்தின் புறவிளைவு என்ன என்பது எமது கேள்வியாகின்றது. அப்பெண்கள் தவிர்க்க முடியாத ஓரினச் சேர்க்கையைத் தெரிந்தெடுத்ததை நிர்ப்பந்தித்தது. இதை மேலும் தூண்ட ஒரு ஆண் பல மனைவியுடன் ஒரே நேரத்தில் கொள்ளும் உறவு, இயல்பில் பெண்களிடையே பாலியல் உறவை இயற்கைக்குப் புறம்பாக ஊக்குவித்தது. ஆண் பலபேருடன் செய்யும் பாலியல் கூத்தும் பெண்ணின் உணர்ச்சி விலங்கிட்ட இந்த இடத்தில்தான், லெஸ்பியன் (ஓரினச் சேர்க்கை) அந்தப் பெண்ணின் தீர்வாகியது. ஆனால் இது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை மறுப்பதாக இன்று உள்ளது. ஏன்?
முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர் மீதான காட்டுமிரண்டித்தனமான சுரண்டலால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தன்னியல்பாகச் சிலர் சேர்ந்து உருவாக்கிய கம்யூன்கள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் எப்படி வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக அராஜகவாதக் கோட்பாடாக மாறியதோ, அதே போல்தான் இதுவும். இன்று பாலியல் ரீதியாக உடலைச் சந்தைப்படுத்தும் கேவலத்தை மறுப்போர், இதற்கு மாறாக, நிர்வாணமாக வாழ்தல் போன்ற கோட்பாட்டை முன்வைத்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடாத செயற்தள எல்லைக்குள் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்கின்றனரோ, அதேபோல் ஓரினச்சேர்க்கை கோட்பாடுகள் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கின்றன
ஆணுக்குப் பெண் அடிமைப்படுதல், மனைவியல்லாத அடிமைப் பெண்களை அக்காலத்தில் பாலியலுக்குப் பயன்படுத்தியதைப் பைபிள் அங்கீகரிக்கின்றது. ஆதி 16.3 இல், ஆபிரகாமுக்கு ஒரு எகிப்திய பெண் இருந்ததையும் அவள் பெயர் ஆகார் என்பதையும் காட்டுகின்றது. பெண்ணைப் பணத்தின் மூலம் அடிமையாக வாங்குதல் அல்லது யுத்தக் கைதிகள் என்ற எல்லைக்குள் பெண் அடிமைப்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றது. அடிமைப் பெண் மீதான பாலியல் ஆதிக்கம் கொண்டு இருப்பது ஆணாதிக்க எதார்த்தமாகியது. பெண்ணின் நிலை என்பதும் அவள் மீது, பாலியல் அதிகாரமும் சுரண்டல் அதிகாரமும் ஆகும். ஒரு மனைவிக்கே இது பொருந்தும்போது அடிமைப் பெண்ணுக்குக் கற்பனைக்கு அப்பாற்பட்ட கொடுமையாக இருக்கின்றது.
மனிதனின் தோற்றத்தை இந்துமத ரிக் வேதம் 10.86.23 இல், "மனிதஉருவில் மாற்றப்பட்ட இந்த விலா எலும்பாகிய பரசுவை முதல் மனிதனாகிய மனுவின் மகளாகவும், அவள் மூலமாகப் பிள்ளைகளைத் (இருபது பிள்ளைகள்) தோற்றுவித்தான்"16 என்கிறது இந்து மதம். இங்கு தந்தைக்கும் மகளுக்குமான, உறவும், பின் சகோதர - சகோதரிக்கான உறவும் கூட ஏற்கப்பட்டதை மறுக்கவில்லை. இன்றைய ஒழுக்கத்தை விட அன்று கற்பனை புனைவான ரிக்வேதத்தில் நடைமுறையை ஒட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டுகின்றது. அத்துடன் இதில் இருந்து சாதி எப்படித் தோன்றியது என்பது அதன் முரண்பாடாகும்.
இதோடு ஒத்த கிறிஸ்தவ விளக்கத்தைப் பார்ப்போம்;. பைபிளில் ஆதியாகமம் 2.21.22 இல், "கடவுளாகிய யெகோவா, மனுஷனுக்கு அயர்ந்த நித்திரையுண்டாகும்படி செய்யவே அவன் நித்திரையாகிப் போனான். அவர் அவன் விலா எலும்புகளிலொன்றையெடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடிவிட்டார். கடவுளாகிய யெகோவா, மனுஷனிலிருந்தெடுத்த விலா எலும்பை மனுஷியாக அமைத்து உருவாக்கி...."16 என்று குறிப்பிட்டதன் மூலம் இந்து, கிறிஸ்தவப் பெண்பிறப்பு பற்றிய ஒற்றுமையைக் காட்டுகின்றது. அத்துடன் ஆணின் அங்கமாகப் பெண் மாற்றப்பட்டு ஆணின் விலாவுக்குட்பட்டு அடிமையாக்கப்பட்டாள். இதில் அடுத்த உண்மை ஒன்றும் அம்பலமாகின்றது. இந்த ஒத்த பார்வை ஊடாக ஆரியர்கள் வந்தேறு குடிகள் என்பது நிறுவப்படுகின்றது. ஆரியர்கள் ஐரோப்பிய தேசத்தில் இருந்து வந்தேறு குடிகளாக இருந்ததும், கிறிஸ்தவத்துக்கு முன்பே பெண்ணுடன் தொடர்பு படுத்தி விலாஎலும்பு பற்றிய புனைவுகள் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு, பெண்ணின் பிறப்பை ஒத்த தன்மையில் மதப்பண்பாடாக்க முடிந்ததை நிறுவுகின்றது.
மனிதனது தோற்றம் பற்றிய புனைவுகள் அவர்கள் வாழ்ந்த சமூகக் கண்ணோட்டத்தின் போக்கில், நீண்ட பிளவின் பின்பும், ஒரே மரபைப் பின்பற்றி வேறுபட்டதை மேலும் இது காட்டுகின்றது. பெண்ணைப் பற்றிய புனைவும், அடிமை ஒழுக்கமும் ஒரே வரலாற்றுப் பின்னணியில் இருந்து கிறிஸ்தவ, இந்து மதங்கள் தொடங்கியதைக் காட்டுகின்றது. இதேநேரம் கிறிஸ்துவ மதம் மனிதத் தோற்றத்தை ஆதியாகமம் 2.7 இல், "கடவுளாகிய யெகோவா, மனிதனைத் தரையினின்றெடுத்த மண்ணினால் உருவாக்கி, சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அப்படியே மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்."16 இப்படியே மனித உருவாக்கத்தை மதங்கள் விதிவிலக்கின்றி கற்பனையாக இட்டுக்காட்டின. பரிணாமக் கொள்கை நிறுவப்படுவதற்கு முன் மனிதத் தோற்றம் அறிவியலுக்குப் புதிராகவே இருந்தது. மதத்தின் விளக்கத்தை மீறுவது அபத்தமாக இருந்தது. மீறியபோது மரணதண்டனை பரிசாகக் கிடைத்தது.
அத்துடன் கிறிஸ்தவம் பெண் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். ஆதியாகமம் 3.15 இல், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் விந்துக்கும் அவள் விந்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்."16 எசாயா 54.1.5, கலாத்தியர் 4.26 இல், "... அவனுடைய விந்து அவனை ஆதரிப்பவர்களே என்பதும் தெளிவாய் இருக்கிறது. அந்த ஸ்திரி கடவுளுடைய ஈடற்ற ஆட்சிக்கு மனைவியைப் போன்ற பற்றையும் கீழ்ப்படிதலையும் தவறாமல் காத்து வருகிற கடவுளாகிய.."16 என்று குறிப்பிட்ட பகுதிகள் பெண்ணின் கீழ்நிலைப் பாத்திரத்தைக் கடவுளின் பக்தன் போல், கணவன் மீது பெண் இருக்கக் கோருகின்றது. அதிகாரப் படிநிலைப்படி கடவுளுக்குக் கட்டுப்பட்ட ஆண், ஆணுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பெண் என்ற போக்கில் கிறிஸ்தவ மதம் ஒழுக்கத்தை நிலை நிறுத்தியது. அத்துடன் ஆணுக்குப் பெண்ணை எதிரிடையாகக் காட்டுவதும், ஆணின் விந்தை எதிர்த்தன்மையில் விளக்குவதும் ஆண் பெண்ணின் ஒருமித்த, சமமான வாழ்க்கையைப் பிளவினூடாக மறுக்கின்றது. ஆண் பெண்ணின் தலையைக் கீழ் நசுக்க, பெண் காலைக் கட்டிப்பிடித்து வாழ வேண்டுகின்றது. பெண் ஆணின் காலில் நசுங்கியிருக்க, ஆண் பெண்ணின் தலையை நசுக்க, பகையையும் முரண்பாட்டையும் பாலியல் விந்து (விந்து தற்போது பைபிளின் மறுவாசிப்பூடாகச் சேர்க்கப்பட்ட பதம். இது கண்டுபிடித்தே 150 வருடம்தான் ஆகின்றது.) வேறுபாட்டின் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆதி-3.16, 2 நாளா 13.21, 1இரா 1.1.3-15, சாமு 20.3 இல், ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்யப் பிறந்தவர்கள். பெண்கள் ஆணுக்கு அடிமை என்ற விளக்கத்தைப் பைபிள் தருகின்றது. ஆணாதிக்கம் பெண்ணின் அடிமைத்தனத்தில் அதிகாரத்தை நிறுவியதை இது காட்டுகின்றது. இது அன்று பைபிளில் இருந்து இன்றுவரையும் இதுவே போக்காக உள்ளது.
"நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப்பட்டிருந்தாயின் இந்தச் சாபமெல்லாம் என்மேல் வரும். சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக்கும் உள்ளாகச் செய்வாராக. அவர் உன் கால்கள் அழுகிப்போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக. சபிக்கப்பட்ட தண்ணீர் உன்வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும், உன் தொடைகள் அழுகவும் கடவன"(இலக்கம் -165)17 பைபிள் பக்கம் 145-இல், 20, 21-ஆம் வரிகள் இப்படி கூறுகின்றது. தனிச் சொத்துரிமை பாலியல் உறவை இப்படித்தான் ஒழுங்கமைத்தது. பெண்கள் மீது கடுமையான ஒழுக்கக் கோவையை விதிந்துரைத்தது. அன்று கிறிஸ்தவ மதம் இதற்காகப் பெண்களைச் சிலுவையில் அறைந்து, நெருப்பில் இட்டது.
ஆனால் கிறிஸ்தவ மதம் உருவாகி, வளர்ச்சி பெற்ற நாடுகளில,; இன்று பெண்கள் இதை மீறியபோது, எந்தச் சாபமும் பெண்களைச் சபித்து அழித்துவிடவில்லை. வக்கிரம் பிடித்த கிறிஸ்தவம் அன்று மக்களைக் கவர்ந்து கொள்ள, பாடகர்களைத் தமது சொந்தப் பாலியல் வக்கிரத்தில் இருந்து உருவாக்கியது. ஆண் பாடகர்களை நலமடித்ததன் மூலம் சிறந்த பாடகராக மாற்றி, கிறிஸ்தவச் சிந்தனைகளை உலகமயமாக்கி, உலகைத் தமது பொருளாதாரச் சூறையாடலுக்குள்ளாக்கினர். மனித அறநெறிகளை எல்லாம் கைவிட்டு உருவாக்கப்பட்ட ஒழுக்கம், ஆணாதிக்க மலட்டுத் தனத்தில் கோலோச்சியது. பெண்களின் இயற்கை உணர்வுகளை நலமடித்து, அதில் சபிக்கப்பட்ட பெண்கள், ஆண்களின் வரலாறு ஆணாதிக்க ஒழுக்கத்துக்கு எதிரானவை.
இந்தப் பைபிள் சாதிக் கட்டமைப்பைத் தனது சமூகத்துக்குள் கொண்டு திருமணத்தைக் கட்டுப்படுத்தியது. இதை நாம் எஸ் 10, நெ.13.23-31, சக 14.21, யோ 4.9-8.48 இல், காணமுடியும். புறச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்வது கர்த்தருக்கு விரோதமானது என்றும், புறச்சாதி மனைவிமாரை விவாகரத்து செய்வதே கர்த்தரின் அருள் பெற உதவும் நற்காரியம் என்றும் விதிந்துரைக்கின்றது. இந்தியப் பார்ப்பனிய இந்து மதத்தில் வளர்ச்சி பெற்ற சாதி வடிவத்திலான பெண்ணுக்கான திருமணத்தடை, கிறிஸ்தவச் சமூகத்தில் சாதிக்குப் பின்னால் சாதியாக வளர்ச்சி பெறவில்லை. எல்லாநாடுகளிலும் இருந்த உழைப்பு பிரிவினையையும், மக்கள் கூட்டங்களிடையே நிலவிய பிளவூடான திருமணத் தடையையும், கிறிஸ்தவப் பைபிள் பின்பற்றி, பெண்களின் பாலியல் தெரிவை மட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றது.
அன்று ஆண்கள் பெண்களுடன் கதைப்பதே இழிவானதென்று ஆணாதிக்கச் சமுதாயத்தால் கருதப்பட்டது. அரு 4.27 இல், இயேசு "ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு அவருடைய சீடர்கள் வியப்படைந்தனர்"14 என்கின்ற கூற்றில் பெண்ணுடன் பேசுவது ஆண்களால் தவிர்க்கப்பட்டது. அது கேவலமாக, சமூகக் குற்றமாக இருந்தது என்பதையும் வேறு காட்டுகின்றது. ஆண் பெண்ணின் பிளவு எந்தளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் இது காட்டுகின்றது. இது இன்றளவில் கூட பல வேறுபட்ட மட்டத்தில் நீடிக்கின்றது. பாலியல் பற்றி அறிந்து கொள்ளல் பால்வேறுபாட்டில் சாத்தியமில்லை. அதன் மொழி கூட பிளவுபட்டு, ஆணாதிக்க எல்லைக்குள் மட்டும் சாத்தியமாகின்றபோது, அதன் அதிர்வுக்குள்; அவர்களுக்கிடையான உறவுகளாகப் பரிணாமிக்கும் சந்தர்ப்பத்தைப் பிளவு தீவிரமாக்கியது. இயேசு போன்றோர் புதிய உபதேசத்தை வழங்கும்போது, பெண்ணுக்குச் சலுகை கொடுப்பது அவசியமாகின்றது. இது இன்றும் புரட்சிகளின் போது பெண்ணின் பங்குபற்றுதலை உறுதி செய்ய வழங்கும் சலுகைக்குள், பெண்ணின் உரிமை பற்றியும், விடுதலை பற்றியும் உறுதி வழங்கப்படுகின்றது. சமணத்துக்கு எதிரான இந்து மதப் போராட்டத்திலும் பெண்கள் நாயன்மாராக உயர்த்தப்பட்டனர். இப்படியே பெண்கள் யாழ் கிடுகுவேலிக்கு வெளியில் வந்து புலிகளுக்காக ஆயுதமேந்துகின்றனர். இப்படி உலகு எங்கும் பல வரலாறுகள் நீண்டு கிடக்கின்றது.
கணவனை இழக்கும் விதவைத்தனத்தைப் பெண்ணின் இழிவாகவே கிறிஸ்தவம் கருதியது. ரூத் 1.20-21.., இசை 54.4, 1.23,10.2, சங் 24.6,யோபு 22.9,24.3 இல், எபிபோ மரபுப்படி கணவனை இழந்தவள் இழிவாக்கப்படடாள். இஸ்ரேலியர் தமது விதவைப் பெண்களை இழிவாக நடத்தியதுடன், கணவனின் பாவத்தில் கலந்தவளாகக் கருதப்பட்டாள். பெண்கள் மீதான ஒருதார மணத்தை, அதன் எல்லையில் இறுகிய வடிவில் கட்டமைக்க ஆண் அற்ற அனைத்து வாழ்விலும் பெண்ணின் சுதந்திரம் மறுப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெண்ணின் சுதந்திரம் ஆணுக்கு உட்பட்டதே. ஆண் பெண்ணின் சுதந்திரத்தை எந்த எல்லைக்குள் கையாள்வது என்பதைக் கடந்தகாலச் சமய ஒழுக்கங்கள் தீர்மானித்துச் சமூகமயமாக்கின. ஆண் அற்ற வாழ்வு பெண்ணுக்குச் சாத்தியமற்றதாக மாறியது. விதவை ஆணின் கட்டுப்பாட்டுக்குள், அதன் எல்லைக்குள் வாழ்வது நிபந்தனையானது. இந்து தர்மம் விதவையை உடன்கட்டையின் மூலம் எரித்தது. கிறிஸ்தவத் தர்மம் பெண்ணின் பாலியலைக் கட்டுப்படுத்தியது. பெண் மீறும் போது சிலுவையில் அறைந்து, நெருப்பிட்டு உயிருடன் கொளுத்தியது.
ஆதி 38.14-19-இல், விதவையின் உடுப்பைக் கட்டுப்படுத்தியது. விதவைக்குரிய உடையை உடுக்கக் கோரியது. அத்துடன் அப்பெண், பணம் படைத்த அதிகார வர்க்கத்தால், பல துன்பத்தைச் (பாலியல் ரீதியாகவும்) சந்தித்திருப்பதையும் அறியமுடிகின்றது. பெண்ணின் சாதாரண உடுப்பு பெண்ணின் பாலியல் மீதானதாக அடையாளப்படுத்தி, ஆணாதிக்கம் விதவையின் பாலியலைக் கட்டுப்படுத்த உடுப்பில் தரம் தாழ்த்தியது. இதையே இந்து தர்மமும் செய்தது. இன்று ஏகாதிபத்தியப் பெண்ணை உடையூடாக அழகுபடுத்தும்போதும் பாலியலை மையமாக வைத்தே நுகர்வுச் சந்தையை விரிவாக்குகின்றது. பெண்கள் தன்னை அழகுபடுத்தும் போதும் இந்தப் பண்பாட்டு எல்லைக்குள்தான் தனது சுதந்திரத்தைப் பற்றிய பிரமையுடன், விபச்சார எல்லைக்குள் தகவமைக்கின்றனர்.
பைபிளின் உள்ளடக்கத்தில் எவை எல்லாம் ஜனநாயக விரோதமானவை என்று இன்றைய சமூகம் கருதுமோ அவை எல்லாம் நீக்கப்பட்டு அல்லது அவை மறுவாசிப்பின் பின் மறைக்கப்பட்டே, புதிய வகையில்தான் விளக்கம் மட்டும் இன்றி பைபிளின் உள்ளடக்கமே எமக்குக் கிடைக்கின்றது. இதற்கு அப்பால் பழைய பைபிள், ஆய்வுகள், தமிழில் எமக்குக் கிடைக்கவில்லை. இருப்பதை மட்டும் கொண்டு இந்த ஆணாதிக்கத்தைப் பார்க்க முடிகின்றது. இதுவே இப்படி இருக்கும் போது முழுமையில் அதன் ஆணாதிக்கத்தையும், அதன் கொடூரத்தையும் புரிந்து கொள்ள முடியும்;. உலகைச் சூறையாடிய வெள்ளை ஆதிக்க இனத்தவர்களின் மதமாகக் கிறிஸ்தவம் இருந்தால், கிறிஸ்தவ மதத் தலைமை வழிகாட்டால் ஊடாகவே ஆக்கிரமிப்புகள் நடந்தால், இதன் கொடூரங்கள் எல்லையில்லாத ஆதிக்கவாதமாக இருந்தது. இது தனது ஒழுக்கத்தை உலக ஒழுக்கமாக்க வன்முறையை ஆதாரமாகக் கொண்டு தனது அதிகார நுகத்தடியில் ஆட்டம் போட்டது. இது ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களைச் சிலுவையில் தீ வைத்துக் கொளுத்தியது.
பைபிளில் எசாயா 47.1,2,3,5,6,..... இல், "பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காருளூ கல்தேயரின் குமாரத்தியே தரையிலே உட்காருளூ உனக்குச் சிங்காசனமில்லைளூ நீ செருக்குக்காரியும் சுகச்செல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை. எந்திரத்தை எடுத்து மாவரைளூ உன் முக்காட்டை நீக்கிவிடுளூ வெறுங்காலும் அம்மணத் தொடையுமாய் ஆறுகளைக் கடந்து போளூ உன் நிர்வாணம் வெளிப்படும்ளூ உன் இலச்சை காணப்படும்ளூ நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிகட்டுவேன். கல்தேயரின் குமாரத்தியே! நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மௌனமாய் உட்காருளூ இனி நீ இராஜ்ஜியங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. நான் என் ஜனத்தின்மேல் கடும் கோபமடைந்து, என் சுதந்திரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம் வையாமல் முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, என்றைக்கும் நாயகியாய் இருப்பேன் என்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதன் முடிவை நினையாமலும் போனாய். இப்பொழுது சுகச்செல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே! நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள். சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடுதியாக ஒரே நாளில் வரும்;. உன் திரளான சூனியங்களின் நிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளின் நிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்;. உன் துன்மார்க்கத்தில் நீ திட நம்பிக்கையாயிருந்து, என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது....."
இவ்வாறு வக்கிரமாகப் பெண்ணைத் திட்டிச் சாபம் இட்டு, தொடரும் இயேசுவின் ஆணாதிக்கம், பெண் என்பதற்காகப் பெண்ணை அதிகாரத்தில் இருந்து இறக்கி, அவளை வீட்டில் இருந்து வேலை செய்யக் கோருவது இன்றுவரை கோலோச்சுகின்றது. அத்துடன் அவளை நிர்வாணமாகவும், விபச்சாரியாகவும் அலையக் கோரி இறைவனின் ஆணாதிக்கம் சாபமிடுகிறது. ஆண் விதவையாவதில்லை என்ற அகங்காரத்தின் ஊடாக, பெண் விதவைத் தனத்தைப் பெண்ணின் இழிவாக்கிக், கொச்சைப்படுத்தி நிரந்தரமாக்குகிறது இயேசு பக்தி மார்க்கம். அதிகாரம், ஆணவம், ஆணாதிக்கத் திமிர், பெண் பற்றிய இழிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றை இதன் மூலம் இயேசு வெளிப்படுத்துகின்றார்.
இயேசுவும், அவரின் பைபிளும் பெண்ணை மிகக் கேவலமாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, பெண்ணைக் கற்பழிக்கவும், கடத்தி பங்கிட்டுக் கொள்ளவும் பின் நிற்கவில்லை. இதை எப்படி கர்த்தரும் பைபிளும் செய்கின்றன என்பதைப் பார்ப்போம். எண் 31.32-40 இல், "படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறு இலட்சத்து எழுபத்தையாயிரம் (6,75,000) ஆடுகள். எழுபத்தீராயிரம் (72,000) மாடுகள், அறுபத்தோராயிரம் (61,000) கழுதைகளும் மீதியாயிருந்தன. புருஷ யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம் (32,000) பேர் இருந்தார்கள். யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்று இலட்சத்து முப்பத்துதேழாயிரத்து ஐந்நூறு (3,37,500). இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்தைந்து......."14 ஐஐ சாமு 12.11 இல், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்"14 என்று இயேசு பிரகடனம் செய்கின்றார்.
இந்த வசனங்களின் பின் பல இன்று மறைக்கப்பட்டு, வெட்டித் திருத்தப்பட்ட நிலையிலும், இதுவே ஆணாதிக்க இயேசுவின் ஆணாதிக்க வன்முறையைக் காட்டுகின்றது. இன்று இவைகளை விமர்சிப்பதற்குப் பதில் மறுவாசிப்பு ஊடாக நியாயப்படுத்தும் ஏகாதிபத்தியத் தத்துவவியல்களை மீறியும் இது அம்பலப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. இன்று பல மறுவாசிப்புகள் எல்லாம் பைபிளைப் பெண்ணியலாகக் காட்டுமாறும், ஆணாதிக்கத்தை மூடிமறைக்குமாறும் பிரச்சாரத்தைக் கட்டமைக்கின்றனர். இயேசுவும், பைபிளும் யுத்தத்தில் மக்களிடமிருந்து பொருட்களை முழுமையாகக் கொள்ளை அடித்ததுடன், கன்னிப் பெண்களைக் கடத்தி வந்தனர். பெண்கள் ஆணின் சொந்தச் சொத்துவடிவில் இருந்ததாலும், கருதியதாலும், பொருட்களைப் போல் பெண்களைக் கொள்ளையடித்தனர். பின் அவைகளைப் பங்கிட்டதுடன் கர்த்தருக்குரிய பங்கும் வழங்கப்பட்டது. பெண்களைப் பிரித்துப் பங்கிட்டுக் கொண்டனர். இந்தப் பெண்கள் மீது கிறிஸ்தவ மதமும், இயேசுவும் அவர் சீடர்களும், செய்தி சொல்வோரும், அதைப் பாதுகாப்போரும் கற்பழிப்பை விதிவிலக்கின்றி நடத்தினர். இதைப் பைபிள் ஆணாதிக்க ஒழுக்க முறையூடாக நியாயப்படுத்துகின்றது. பெண்கள் யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதும், கற்பழிக்கப்பட்டதும் கிறிஸ்தவ அறநெறியாக இயேசு ஏற்றுக் கடைப்பிடித்துடன், தானும் அதில் பங்கு பெற்று அனுபவித்தார். கிறிஸ்தவமும் இந்தக் கொள்கைகளை, ஆணாதிக்கத் திமிர் ஊடாகவே, வன்முறையூடாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
இதன் சட்ட ஒழுங்கு ஆணாதிக்கத் திமிரில் எழுந்தது. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டால் அவன் மனைவி, பெண் குழந்தைகளைக் கைப்பற்றி கற்பழிக்க கர்த்தர் முன்நின்று ஏவுவதுடன் அதைக் கண்காணிக்கவும் பின்நிற்கவில்லை. இந்தவகையில் கைப்பற்றிய அப்பாவிப் பெண்கள் மீதான கற்பழிப்பைச் சூரிய வெளிச்சத்தில், பட்டப்பகலில், இயேசு முன்நிலையில் பலர் பார்க்க நடத்தினர். இது கிறிஸ்தவத்துக்கு மட்டுமல்ல. திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கக் கோரி இறைவனின் பெயரில் தேவாரம் பாடினார். "பெண்ணகத்து எழில் அரசாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்ளமே"18 என்று கோரி, சமணப் பெண்களை இந்து சமயப் போராட்டத்தில் தலைமை தாங்கிக் கற்பழித்தார். இது முஸ்லிம் மதத்திலும் நபிகளின் அனுமதியுடன் நடந்துள்ளதைத் திருக்குர்ஆன் நியாயப் படுத்தியுள்ளது.
மதங்கள் பெண்ணை இழிவாகக் கருதி, அவர்களை ஆண் கைப்பற்றி அனுபவிக்க, கற்பழிக்க பின்நின்றதில்லை. இதை அதன் தத்துவார்த்த நூல்கள் அங்கீகரித்ததுடன், இதன் மேய்ப்பாளர்கள், கடவுளின் அவதாரத்தின் பின் வாழ்ந்தவர்கள் அனுபவித்து சுகம் கண்ட ஆணாதிக்கவாதிகளே. இவர்கள் எப்போதும் பெண்ணைப் பெண்ணாக மதித்ததில்லை. தமது ஆணாதிக்கப் பாலியல் வெறிக்குப் பெண்ணைப் பலியாக்கியவர்கள். இவர்கள் போதித்த தத்துவங்களின் பின்னால் பெண்களின் இரத்தக் கண்ணீரைச் சுவைத்தவர்கள். இதை நாம் எதிர்த்து அம்பலப்படுத்தி அதன் அனைத்து செயல்தள வடிவங்களையும் களத்தில் தகர்க்காத வரை அது ஆணாதிக்கச் சகாப்தமாகவே நீடிக்கும்.
தமிழ் அரங்கம்
Monday, August 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment